Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் பொதுமக்கள் - சிங்களப்படையினர் மோதல்

Featured Replies

செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 23, 2011

Navanthurai.jpg

யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் நேற்று இரவு படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே திடீரென ஏற்பட்ட முறுகல் நிலை அடிதடியாக மாறியதில் இருவர் காயமடைந்தனர். இராணுவ வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டன. அங்கு கூட்டம் கூடிய மக்களை பொலிஸாரும் இராணுவத்தினரும் விரட்டி விரட்டிக் கொட்டன்களால் தாக்கினர்.

பதிலுக்கு பொதுமக்கள் கற்களாலும் கையில் கிடைத்த பொருள்களாலும் படையினரைத் தாக்கினர். இதனை அடுத்து கூட்டத்தைக் கலைக்க படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரவு 9 மணியளவில் சென். நீக்கலஸ் சனசமூக நிலைய மைதானத்தில் மக்கள் திரள ஆரம்பித்தனர். ஓட்டோ ஒன்றில் வந்த நபர்கள் சிலர் திருட முயற்சித்தார்கள் என்றும் வீட்டவர்கள் சுதாகரித்துக் கொண்டதும் தப்பிச் சென்றனர் என்றும் பரவிய தகவல்களை அடுத்தே மக்கள் அங்கு திரண்டனர் என்று கூறப்படுகிறது.

மக்கள் பதற்றத்துடன் திரண்டதை அடுத்து உடனடியாக அந்த இடத்துக்கு படையினர் அனுப்பப்பட்டனர். அவர்களுக்கும் அங்கு கூடியிருந்த இளைஞர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்தச் சமயத்தில், தப்பிச் சென்ற திருடர்கள் இராணுவ முகாமுக்குள் புகுந்தனர் என்று செய்தி பரவ ஆரம்பித்ததால் பதற்றம் அதிகரித்து படையினர் மீது மக்கள் கற்களை வீச ஆரம்பித்தனர். இராணுவத்தினர் வந்த வாகனமும் அடித்து நொருக்கப்பட்டது. இதனை அடுத்து அந்தப் பகுதிக்கு மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்ததும் பொதுமக்களைக் கொட்டன்களால் தாக்க ஆரம்பித்தனர். சிதறி ஓடிய மக்களை அவர்கள் விரட்டி விரட்டித் தாக்கினர்.

"யாரோ சிலர் வீட்டுக்குள் நுழைய முயன்றார்கள் என்றும் பிடிக்க முயன்ற போது தப்பிச் சென்றுவிட்டார்கள் என்றும் கேள்விப்பட்டு இங்கே வந்தோம். இராணுவத்தினரும் பொலிஸாரும் வந்தனர். பின்னர் அவர்கள் எங்களைத் திடீரெனத் தாக்க ஆரம்பித்தனர்'' என்று தப்பியோடிக் கொண்டிருந்த போது ஒருவர் தெரிவித்தார்.

வீதியில் நின்றவர்களையும் பெண்களையும் பொலிஸார் கண்மூடித்தனமாக தடிகளாலும் கொட்டன்களாலும் தாக்கினர். பொலிஸாரிடம் இருந்து தப்பியோட முற்பட்ட பெண் ஒருவர் மதிலுடன் மோதுண்டதில் காயமடைந்தார். குழப்பத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பலரைப் பொலிஸார் பிடித்து வாகனத்தில் ஏற்றியதைக் காணமுடிந்தது. இராணுவத்தினர் பெண்களைத் தகாத வார்த்தைகளில் ஏசியபடி அவர்களைத் தாக்கினர் என்று பெண்கள் தெரிவித்தனர்.

."எங்களைத் துரத்தி வந்த பொலிஸார் ஒவ்வொருவராகப் பிடித்து வாகனத்தில் ஏற்றினர். என்னையும் பிடித்து ஏற்றப்பார்த்தனர். அவர்களின் கைகளில் இருந்து பறித்துக் கொண்டு இருட்டுக்குள் ஓடிமறைந்து ஒருவாறு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்'' என்றார் ஒருவர். ஆனால், "நாவாந்துறைப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டுள்ளன. மேலதிக விவரங்கள் தெரியவில்லை'' என்று யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். எவராவது கைது செய்யப்பட்டனரா என்ற கேள்விக்குப் பதிலளிக்க அவர்கள் மறுத்து விட்டனர். "நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது. காலையிலேயே விவரங்கள் தெரியும்'' என்று பலாலி இராணுவத் தலைமையகம் தெரிவித்தது.

Navanthurai004.jpg

Eelanatham

Edited by உமை

  • தொடங்கியவர்

நேற்று இரவு விடு வீடாகச்சென்ற படையினர் 100 பேர் வரையில் பொதுமக்களை கைதுசெய்துள்ளனர். காவலரண்களை தாக்கியதாக குற்றம் சுமத்தபப்ட்டே இவர்கள் க்கைது செய்யப்பட்டுள்ளனர். for more photos on http://www.flickr.com/photos/eelanatham/

Edited by உமை

மீண்டும் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தாமல், அழிவுகளை சந்திக்காமல் அவர்கள் அரசியல் உரிமைகளை வெல்வதற்கு உதவவேண்டியது எமது எல்லோரினதும் கடமை.

இந்த 'மர்ம மனிதன்' விவகாரம் ஒரு மக்கள் எழுச்சியை ஆரம்பிக்கலாம். ஆனால், அதில் இறுதியில் தமிழ் மக்கள் மட்டுமே மீண்டும் பலிகடாக்களாக ஆக்கப்படலாம். இதில் ஏமாறக்கூடாது. அதேவேளை இதை சர்வதேசப்படுத்துவது, உண்மைகளை சொல்ல வேண்டியது கூட்டமைப்பு, சர்வதேச தமிழர் அமைப்புக்களின் கடமை.

1.gif

நேற்றைய தினம் யாழ் நாவாந்துறையில் தமிழ் பெண்கள் தனியாக இருந்த வீடு ஒன்றுக்குள் நுளைந்த சிலர் தூக்கத்தில் இருந்த பெண்களோடு தவறான முறையில் நடந்துகொள்ள முயற்சித்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் எழுப்பிய கூக்குரலில் ஊர்மக்கள் திரண்டு அவ்வீடு நோக்கிச் சென்றுள்ளனர்.

இதனை அடுத்து அந்த மர்ம நபர்கள் அருகில் உள்ள இராணுவ முகாமுக்குள் ஓடி மறைந்துள்ளனர். அவர்களை தம்மிடம் ஒப்படைக்கும்படி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அவர்கள் அருகிலுள்ள படைமுகாமுக்குள் புகுந்து கொண்டதாக தகவல் பரவியதை அடுத்து- பதற்றமடைந்த பொதுமக்கள் நேற்றிரவு 9 மணியளவில் நாவாந்துறை சென். நீக்கலஸ் சனசமூக நிலைய மைதானத்தில் ஒன்று கூடினர்.

உடனடியாக அங்கு பெருந்தொகைப் படையினரும் சிறிலங்கா காவல்துறையினரும் அனுப்பப்பட்டனர். அப்போது சிறிலங்காப் படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் ஆத்திரம் கொண்ட பொதுமக்களில் சிலர் சிறிலங்கா படையினர் மீது மக்கள் கற்களை வீசியதுடன், அவர்கள் வந்த வாகனத்தையும் அடித்து நொருக்கினர்.

இதையடுத்து மேலதிக படையினரும், காவல்துறையினரும் வரவழைக்கப்பட்டு பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டது. வேடிக்கை பார்த்தவர்கள், வீடுகளுக்குள் இருந்தவர்கள் என்று கண்ணில் பட்ட அனைவரும் சிறிலங்கா படையினரால் தாக்கப்பட்டனர்.

பெண்களும் கூட பொல்லுகளால் தாக்கப்பட்டனர். தாக்குதலில் இருந்த தப்ப முயன்ற பெண் ஒருவர் மதிலுடன் மோதிக் காயமடைந்தார். பின்னர் இரானுவத்தினருக்கும் பொதுமக்களுக்குமிடையே நடந்த மோதலின் போது இரானுவத்தினரால் 120 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் மற்றும் அவர்களது பிள்ளை குட்டிகளையும் சேர்த்து இராணுவ முகாமில் அடைத்துவைத்த இலங்கை இராணுவம் தற்போது அவர்களை நீதிமன்றின் முன் நிறுத்தவிருப்பதாகக் கூறி அவர்களை அழைத்துச்சென்று சாலை ஓரத்தில் இருத்திவிட்டுள்ளார்கள். அவர்களைச் சுற்றி ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் இருக்கின்றனர்.

பொதுமக்களின் வீடுகளுக்குள் நுளைந்த இராணும் அலுமாரிகளை அடித்து நொருக்கியதோடு, வெளியே நின்றிருந்த தமிழர்களின் மோட்டார் சைக்கிள்களையும் எட்டி உதைத்து சேதப்படுத்தியும் உள்ளனர். இதற்கு மேல் பிள்ளைகள் மற்றும் கைக்குழந்தைகள் என்று கூடப் பாராமல் அவர்களையும் அவர்களின் தாய்மார்களையும் ரோட்டு ஓரமாக இருத்திவைத்துள்ளனர். ஏதோ கொலைக்குற்றம் புரிந்தவர்கள் போல இவர்களை நடத்திவருகின்றனர்.

மேலதிக படங்கள்.....

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=2538:2011-08-23-10-08-51&catid=1:latest-news&Itemid=18

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.