Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த புலி ஆதரவாளர்களே சுற்றுலாப் பயணிகள்போல வந்து கிறிஸ் பூதங்களாகினர்:திவயினவின் தொடர் கண்டுபிடிப்புகள்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[sunday, 2011-08-28 09:55:24]

marmam_190811_150.jpg

நாட்டில் நடைபெறும் கிறிஸ் பூதம் தொடர்பான சர்ச்சையின் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு செயற்பட்டு வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் சுற்றுலா கைத்தொழிலுக்கு பங்கம் ஏற்படுத்தும் நோக்கில் கிறிஸ் பூத வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. இராணுவ முகாம்களில் உள்ள படையினர் கிறிஸ் பூதங்கள் போன்று தோன்றி சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் பொருட்களை கொள்ளையிடுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை 36 வீதமாக உயர்வடைந்துள்ள காரணத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு இந்த சதித் திட்டத்தை தீட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த புலி ஆதரவாளர்கள் சுற்றுலாப் பயணிகளைப் போன்று வடக்கு கிழக்கிற்குச் சென்று கிறிஸ் பூதங்களாக மாறி குழப்பத்தை ஏற்ப்படுத்துவதோடு அது தொடர்பான பிரச்சாரங்களையும் மேற்கொண்டுள்ளனர்.

புலம் பெயர் தமிழ் மக்களின் இந்த நாச வேலை குறித்து பிரதிக் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். பிரிட்டன் தமிழ் பேரவை மற்றும் கனேடிய புலிகள் அமைப்பு ஆகியன இணைந்து இந்தப் போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அண்மையில் பிரிட்டனிலிருந்து இலங்கை சென்ற தாய் மற்றும் மகளை புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=49008&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இனி ஊருக்கு போனா, பூதம் என்று சொல்லி உள்ள பிடிச்சு போட்டுடுவாங்களா? என்ன கொடுமை சரவனா...........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் இருந்து போகின்ற தமிழர்கள் பலரை சிறையில் போடா திட்டம் தீட்டியுள்ளார்கள்

தமிழர்களே ஸ்ரீலங்காவுக்கு விடுமுறைக்கு போகாதீர்கள்.

"கனடா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த புலி ஆதரவாளர்களே சுற்றுலாப் பயணிகள்போல வந்து கிறிஸ் பூதங்களாகினர்"

சிங்களம் சொல்வது உண்மை என்றே நான் நினைக்கின்றேன் :D :D

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை வந்தது எல்லாம்.... ஆண் கிறீஸ் பூதமாய் தான் இருக்குது.smiley-devil06.gifsmiley-devil05.gif

"கனடா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த புலி ஆதரவாளர்களே சுற்றுலாப் பயணிகள்போல வந்து கிறிஸ் பூதங்களாகினர்"

சிங்களம் சொல்வது உண்மை என்றே நான் நினைக்கின்றேன் :D

நீங்களோ இதை நகைச்சுவையாய் எடுத்துள்ளீர்கள். நகைச்சுவை தேவை தான்.

ஆனால் சிங்களவன் பொய்களை உண்மையாக்கி இனப்படுகொலைகளை எவ்வித தயக்கமும் இல்லாமல் செய்து வருகிறான்.

தமிழ் அரசர்களை, தமிழர் வரலாற்றை திரித்து சிங்களவர்கள் தாம் பொய்யாக எழுதியாக மகாவம்சத்தின் வெற்றியால், வரலாற்றுணர்வற்ற தமிழர்களையே ஏமாற்ற வைத்ததென்ற நம்பிக்கையில், தொடர்ந்தும் பொய்களைக் கூசாது கூறிவருகின்றனர்.

சிங்கள அரச பயங்கரவாதிகள் தாம், அயலக காட்டுமிராண்டிகள் செய்த தமிழின கொலைகளை புலிகள் மீது போட்டு வெற்றியடைந்துள்ளார்கள். காரணம் நாளடைவில் பெரும்பாலான தமிழர்கள் ஆதாரங்களைக் கோராமல், தாமே காலத்துக்குக் காலம் புதுப்புதுக் காரணங்களைத் தேடி அவற்றை புலிகள் செய்ததாக அளவளவாவி மகிழும் போக்குடையவர்கள். இந்தப் போக்கை யாழ் களத்திலும் அவ்வப்போது காணலாம்.

இதில் ஆதாரங்கள் இல்லாமல் தமது கற்பனை அடிப்படையில் புலிகள் மேல் சேறு வீசி அரசியல் செய்யும் டக்லஸ், ஆனந்தசங்கரி, சித்தார்த்தன், சம்பந்தன் போன்றவர்களும் இதில் அடக்கம்.

ஆனால் காட்டுமிராண்டிச் சிங்களவனோ தான் செய்த கொலைகளுக்கு என்ன ஆதாரம் என்று கேட்டு காலத்தை ஓட்டுகிறான். ஒரு காட்டுமிராண்டிச் சிங்களவனும் பகிரங்கமாக சிங்கள அரச பயங்கரவாதிகளின் கொலைகளை பேசுவதில்லை, ஒத்துக்கொள்வதில்லை.

இதுவும் நியாயம் நிறைந்த கட்டுக்கோப்பான தமிழர் போராட்டம் பயங்கரவாத முத்திரையுடன் பின்னடையவும், அநியாயம் நிறைந்த சிங்களப் பயங்கரவாதிகளின் தாறுமாறான தமிழினப் படுகொலைகள் தொடரவும் முக்கிய காரணமாகி வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

திவியன "மாதன முத்தா" கதைகளை அவிழ்த்து விடுவதில் வல்லவர்கள்.மகிந்த அரசின் ஊது குழலும் இவர்களே.

”கனடா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த புலி ஆதரவாளர்கள் சுற்றுலாப் பயணிகளைப் போன்று வடக்கு கிழக்கிற்குச் சென்று கிறிஸ் பூதங்களாக மாறி குழப்பத்தை ஏற்ப்படுத்துவதோடு அது தொடர்பான பிரச்சாரங்களையும் மேற்கொண்டுள்ளனர

ஏன் இப்டி எல்லாம் பண்ணிட்டு , ”ஆர்மி காம்புக்குள்ள” ஓடிபோய் ஒளியுறீங்க ,

கனடா & லண்டன் காரனுங்களே?

அதிகரிச்சு வர்ற சிங்களதேச சுற்றுலாத்துறை வருவாயை ..

ஆர்மியோட சேர்ந்து ..கெடுக்குறீங்களே! :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.