Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செப்டம்பர் மாதம் இராணுவ அதிகாரிகள் மீது போர்க்குற்ற விசாரணை

Featured Replies

செப்டம்பர் மாதம் சிறிலங்கா அரசாங்கமானது சில இராணுவ அதிகாரிகள் மீது போர்க்குற்ற விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு செய்திகள் கூறுகின்றன. இது தொடர்பில் இந்திய ஊடகக்ங்களும் குறிப்பிட்டுள்லன.இது ஜெனீவா மனித உரிமை கூட்டத்தொடரில் ஐக்கிய நாடுகள் சபை தமக்கு எதிரான மனுக்களை சமர்ப்பிப்பதனை தடுக்கும் நாடகங்களில் ஒன்றாக இருக்கும் என கூறபப்டுகின்றது.

.

ஏற்கனவே சில இராணுவ சிப்பாய்களும் , அதிகாரிகளும் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் பொன்சேகாவுக்கும் எதிரணிகளுக்கும் ஆதரவான ஆட்களாகவும் இருக்கலாம். அல்லது ஏற்கனவே இராணுவத்தை விட்டு ஓடி வெளி நாட்டுக்குச்சென்றவர்களாகவும் இருக்கலாம்.

ஈழநாதம்

இது பற்றி ஆங்கில ஊடகங்களில் ஏதாவது செய்தி வந்துள்ளனவா? ஆம் எனில் தயவு செய்து இங்கே இணைத்தால் உதவியாக இருக்கும்.

நன்றி

கதையைக் கட்டி காரியத்தை நகர்த்த முயல்வது யார்?

மிகவும் மன வேதணையுடன் நான் இங்கு சில விடயங்களை யாழ் கழ உறவுகளிற்க்கும் நிர்வாகத்திற்க்கும் கூற விரும்புகின்றேன்.

எமது ஊடகங்களில் தற்பொழுது அதிகமாக படிக்கப்படுகின்ற விடயங்கள் „நம்பப்படுகின்றது, தகவல்கள் தெரிவிக்கின்றன, அறியக்கூடியதாக உள்ளது….“ இப்படி தொடர்ந்து கொண்டே போகலாம்.

இந்த வார ஆரம்பத்தில் இங்கு ஒரு நபர் ஒரு செய்தியை இணைத்திருந்தார் ஜகத் டாயஸ் தூதுவர் பதவியிலிருந்து திரும்பி அழைக்கப்படபோவதாக.

இந்த ஜகத் டாயஸ் விடயத்தில் மும்முரமாக நிற்கின்ற வெளிநாட்டு அமைப்புகளிற்க்கு இந்த செய்தி புதியதாகவே இருந்தது. எனவே இதை உறுதிப்படுத்தும் நடிவடிக்கையில் இறங்கினார்கள். இச் செய்தியை வெளியிட்ட இணையத்தளங்கள் அதனை இன்னும் ஊறுதிப்படுத்தவில்லை. நானும் தேடிப் பார்ததில் எதுவும் கிடைக்கவில்லை. யாழ் களத்திலும் பதிலில்லை.

நாம் வியாபாரத்திற்காக (அல்லது வேறு என்னத்திற்காகவோ) செய்கின்ற இப்படியான செயல்களால் எமக்காக குரல் கொடுக்கின்ற வெளிநாட்டு அமைப்புகளே எம் மீது அவநம்பிக்கை ஏற்படும் படி நடந்து கொள்கின்றோம்.

இப்படி உறிதிப்படுத்தப்படாத தகவல்களை எப்படி யாழ் இணையம் அனுமதிக்கின்றது?

இன்று இந்த போர் குற்ற விசாரணை செய்தி. நாளை…. ???

உறுதிப்படுத்தாவிடினும் பரவாயில்லை. எங்கிருந்து பெற்றார்கள் என்பதை குறிப்பிட்டாலே ஓரளவு உதவியாக இருக்கும். ஆனால் கடசியில் அது போய் „நம்பப்படுகிறது“ என்று முடிந்து விடும். இப்படியான செய்திகளை ஆங்கில், சிங்கள ஊடகங்களோ அல்லது இணையத்தளங்களோ மொழிபெயர்த்து வெளியிடாமல் இருப்பதற்க்கு இந்த „நம்பகத்தன்னை“மையும் ஒரு கரணமாக இருக்கலாம்.

சிறு தகவல்: ஜகத் டாயஸ் diplomatic பட்டம் மீளப்பெற்றால் அவரை சுவிசில் வைத்து மட்டுமே கைது செய்ய முடியும் (சிறீலங்கா சென்றால் அது முடியாது). அதன் பின்னர் அவர் சுவிசை தவிர ஏனைய அனைத்து நாடுகளிற்க்கும் தங்கு தடையின்றி பயணிக்கலாம்.

இலங்கைப் படையினர் சிலர் போரின்போது பொதுமக்களைக் கொன்றார்கள் - இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகர்

இலங்கைப் படையினர் சிலருக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்யுமாறு இலங்கையின் படிப்பினைகள் மற்றும் மீள் இணக்கம் தொடர்பான ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாக இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்தார்.

இந்தியாவின் NDTV க்கு அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

கிழக்கு மாகாணம் தொடர்பாக இந்த நடவடிக்கையை ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாகவும், ஆனால், அந்த வழக்கு விசாரணையை பகிரங்கப்படுத்தப்போவதில்லையெனவும் அவர் கூறினார். அந்தப் படையினரில் சிலர் பொதுமக்களைக் கொன்ற குற்றவாளிகளெனக் கண்டறியப்பட்டுள்ளதாக ரஜீவ விஜேசிங்க கூறினாரென என்டிரிவி குறிப்பிடுகிறது.

வெள்ளைக் கொடிகளை ஏந்திச் சரணடைய முற்பட்ட விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை செய்யப்படவேண்டுமெனவும், அத்தகைய பரிந்துரையை ஆணைக்குழு வழங்கவேண்டுமென விரும்புவதாகவும் ரஜீவ விஜேசிங்க தெரிவித்தார்.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=9152

  • தொடங்கியவர்

Sri Lanka to probe alleged war crimes by security forces

Thu, Sep 1, 2011, 01:09 pm SL Time, ColomboPage News Desk, Sri Lanka.

RajivaWijesinha.jpg

Sept 01, Colombo: The Sri Lankan government may indict some army personnel in coming months for alleged human right violations during the war that ended the three-decades long terrorism in the country.

An Indian media report said that the Sri Lankan government has indirectly admitted that some of its army personnel may have committed human rights violations in the final phase of the war.

கருத்துக்கந்தசாமிக்கு

இராணுவத்தினர் சிலர் போர் குற்றங்களில் சம்பந்தப்பட்டதாக நான் கூறவில்லை: ரஜீவ விஜேசிங்க

இலங்கை இராணுவ வீரர்கள் போர்க் குற்றங்களில் சம்பந்தப்பட்டுள்ளனர் என தான் ஏற்றுக்கொண்டதாக வெளியான செய்திகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நல்லிணக்க ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க மறுத்துள்ளார்.

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின்போது, பொதுமக்களை கொலை செய்ததில் எவரும் குற்றவாளியாக காணப்பட்டதாக நான் கூறவில்லை. உண்மையில், பொதுமக்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதல் குறித்த பொதுவான குற்றச்சாட்டுகள் பொய்யானதாக இல்லாவிட்டால், அவை இலகுவாக மிகைப்படுத்தப்பட முடியும் என்றே கூறினேன் என அவர் டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.

எல்.ரி.ரி.ஈ இற்கு எதிரான யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்களை கொலை செய்த குற்றச்சாட்டில் இராணுவத்தினர் சிலர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ரஜீவ விஜேசிங்க கூறியதாக இந்தியாவின் என்.டி.ரி.வி. செய்தி வெளியிட்டிருந்தது. இது தொடர்பிலேயே ரஜீவ விஜேசிங்க இவ்வாறு கூறினார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/27248-2011-09-01-15-35-40.html

Sri Lanka to probe human rights violations by its army personnel

Over two years after Sri Lanka's war against the LTTE, the Mahinda Rajapakse government has for the first time indirectly admitted that some of its army personnel may have indulged in human rights violations in the final phase of the war. They add that these army personnel may therefore be indicted in coming months. According to Rajiva Wijesinha, Adviser on Reconciliation to the Lankan President, some of these army personnel have been found guilty of killing civilians during the final phase of the war against the LTTE, and accordingly action will be taken against them.

http://www.ndtv.com/...onnel-130496

இந்த குத்து கரணத்தை NDTV க்கு அனுப்பவேண்டும்.

இந்த ஆளிடம் BBC ஆமிகளின் படங்களைக் காட்டி ஏன் அவர்களை கைது செய்ய முடியாது என்று கேட்ட போது Are you kidding? என்று நிரூபரைக் கேட்டவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.