Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவை நோக்கி சிறிலங்காவைத் தள்ளும் மேற்குநாடுகள் – இந்தியா கவலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ ஞாயிற்றுக்கிழமை, 04 செப்ரெம்பர் 2011, 09:20 GMT ] [ தா.அருணாசலம் ]

wikileaks.jpgசிறிலங்காவின் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக மேற்கு நாடுகள் செய்யும் விமர்சனங்களால் சிறிலங்கா, சீனாவை நோக்கித் தள்ளப்பட்டு விடும் என்று இந்திய கவலை கொண்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

புதுடெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்குப் பரிமாற்றப்பட்ட இரகசிய குறிப்புகளை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்தச் செய்திக்குறிப்பு ஒன்றிலேயே, இந்தியாவின் கவலை தொடர்பாக கூறப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவரே அமெரிக்க இராஜதந்திரிகளிடம் இவ்வாறு கூறியுள்ளார்.

போர் முடிவுக்கு வந்த பின்னர் மனிதஉரிமைகள் விவகாரங்கள் சிறிலங்காவை சீனாவை நோக்கித் தள்ளியுள்ளதாகவும், சீனா மற்றும் ஈரானின் செல்வாக்கை பிராந்தியத்தில் திறந்து விட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச்செயலர்களில் ஒருவரான ரி.எஸ்.திருமூர்த்தி என்ற அதிகாரியே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை சீனாவின் தலையீட்டை முறியடிக்க இந்தியா முயற்சிக்கவில்லை என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரி திருமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20110904104615

சிங்களப் பயங்கரவாதிகளிடம் பிச்சைப்பாத்திரம் ஏந்தும் ஜனநாயகக் காட்டுமிராண்டிகள், எவ்வளவு காலத்துக்கு சீன என்ற பூதத்தைக் காட்டி தமது திருகுதாளங்களை மறைக்கப் போகிறார்கள்?

சீனாவைக் காட்டி தமது பிச்சைப் பிழைப்பை நடத்தும் ஹிந்திய ராஜதந்திரக் காட்டுமிராண்டிகளை நம்பி சீனாவைப் பார்த்து ஏமாறும் ஏனைய இந்தியர்களும் தாம் ஏமாளிகள் என்பதை தொடர்ந்தும் நிரூபிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமை மீறல் விவகாரத்தை அமுக்க எவ்வளவு முயன்றிருக்கிறார்கள் என்பதை இச்செய்தி விளக்குகிறது..! இந்தியா அவமானப்பட்டு ஒரு மூலையில் ஒதுக்கப்படும் என்று யாரோ சொன்ன ஞாபகம்..! தூரநோக்கு தொலைநோக்கு எல்லாம் அப்போது வெளிப்படையாகத் தெரியவரும் என்றும் யாரோ சொன்ன ஞாபகம்..! பொறுத்திருந்துதான் காண்போமே..! :rolleyes:

இந்தியா தன்னைத்தனே சுட்டுக்கொள்வதற்கு மறையவர்களை குறைசொல்வதில் எந்த சாணக்கியமும் கிடையாது.

இந்திய வல்லரசின் தீர்மானங்களையே மேற்குலகம் ஏற்று அனுசரித்து வந்துள்ளது. இந்தியாவே சீனாவுடன் போட்டிபோடு ஆயுதங்களை சிங்கள நாட்டிற்கு வழங்கியது, பொருளாதார உதவிகளை வழங்குகிறது. ஆனால், தனது அரசியல் செல்வாக்கை இழந்து வருகின்றது. இந்த அணுகுமுறையை மற்றாமல் குறைகளை சொல்வதில் பிரயோசனம் இல்லை.

இந்த திருகுதாளமூர்த்தி முழு பூசனிக்காயை சோற்றுக்குள் மறைகிறார்.

கணவனில் தொடங்கி மனைவி வரை பாசிச சிங்கள ஸ்ரீலங்காவுடன் சேர்ந்து செய்து வரும் தமிழர் எதிர்ப்பு நடவடிக்கைகளை, கைக்குண்டுக்கு பொன்முலாம் பூசி அருமையான கைவண்ணம் நிறைந்த கலை வேலைப்பாடுகள் என்று விற்று வருகிறார்கள். நம்பி வாங்கிய அமெரிக்க, யப்பான், நோர்வே, E.U., போன்ற எல்லாநாடுகளின் கைகளிலும் இது வெடிக்க ஆரம்பித்திருக்கிறது. அதுதான் அவர்கள் இப்போ மனிதர்கள் இறக்கும் போது சற்றலட்டை வைத்து பார்த்து விட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பின் மனித உரிமைகள் விவகாரங்கள் பற்றி பேச தொடங்குகிறார்கள்.

யப்பான், அமெரிக்கா சற்று பிந்தித்தான் உணர்ந்தாலும் இந்தியாவின் படப்பாயங்களை நன்கு கண்டுகொண்டுவிட்டன. E.U மட்டும். நோர்வேயோ, இந்தியாவோ காட்டிய பாதையை நம்பாமலே தான் பின்பற்றினார்கள். நோர்வே இந்தியாவுடன் சேர்ந்து உழைத்து இப்போ முகமூடி கிழிபட்டுப்போயிருக்கு. எல்லா நாய்களுக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு சிங்களத்தை பாவித்து சீனா மரதிலிலேறிவிட்டது.

சோனியா முசோலினியின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை தமிழர்கள் சந்தித்த அழிவு, ரஜீவ் காந்தியின் ஆதிகத்தில் சந்தித்ததென்பவை இரண்டும் தான் தமிழர்கள் சந்தித்த மிகப்பெரிய அழிவுகள். இந்தியா இலங்கையுடன் சேர்ந்து தமிழர்களை அழிப்பதை இந்தியா நிறுத்தவேண்டும் என்று சொன்னால், இலங்கை மனம் நோகுமே, இதனால் சீனாவுடன் சேர்ந்துவிடுமே என்று ஏமாற்ற பார்க்கிறார்கள் இந்தியர்கள்.

இலங்கை சீனா பக்கம் சார்ந்திருப்பதும், இந்தியாவை தாழ்வாக நடத்துவதும் ஒன்றும் புதிதல்ல. இலங்கை இந்தியாவுடன் எப்பவுமே உண்மை நட்புடன் இருந்ததில்லை. தமிழர்களை ஏளனமாக “இந்திய கள்ளத்ததோணிகள்” என்று பச்சை குத்தி கப்பலேற்றிய அதே காலங்களில்த்தான் சீனாவைக்கொண்டு அந்தநாளைய மிகப்பெரிய கட்டடமான பண்டாரநாயக்கா நினைவு மண்டபத்தை கட்டுவித்தது சிங்களம். சீனாவின் சிறந்த கட்டடக்கலை அம்சமாக இது இன்னமும் இலங்கையில் வீற்றிருக்கிறது. இப்படி ஒரு சந்தர்ப்பம் இலங்கையில் இன்னமும் இந்தியாவிற்கு கிட்டவில்லை. இந்தியா சீனாவின் நண்பனான பாகிஸ்தானுடன் போர் புரியும் போது இலங்கை பாகிஸ்தானின் போர் விமானங்கள் வந்து எண்ணை நிரப்ப அனுமதித்திருந்தது. இலங்கை சிறிய நாடாக இருந்தும் இந்தியா இலங்கையின் எதிரிகளுடன் போய்ச்சேராலாமே என்பதை கணக்கில் எடுக்காமல் துணிந்து நின்று தான் பாகிஸ்தானுக்கு உதவியது. இலங்கைக்கு இந்தியாவுடன் இருப்பது போன்று பாகிஸ்தானுடன் இன, மத, மொழி, கலாசார, சரித்திர, பூகோள தொடர்புகள் எதுவும் இல்லை. ஏன் குறைந்தபட்சம் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் எதையும் சாராத பிரத்தியேக நட்புறவுதன்னும் இருப்பதாக ஒருவரும் அறிந்ததில்லை. அவ்வாறிருக்க ஏன் இலங்கை பாரதூரமான ஒரு அலுவலை பார்த்தும் பாராமல் செய்தது என்ற கேள்விக்கு வைக்க கூடிய ஒரே பதில், இந்தியாவுக்கு எதிராக நடந்து கொள்ள தக்கதொரு நல்ல சந்தர்ப்பத்தை தவறவிட்டால் அதன் உண்மை நண்பனான சீனா மனம் வருந்துமே என்பதற்காகவே இலங்கை பாகிஸ்தான் விமானங்களுக்கு எண்ணை நிரப்பியது. அது வேறு, ஆனால் இந்தியா பாகிஸ்தானை தாக்கும்போது, பாகிஸ்தான் அதன் நண்பன் சீனாவுடன் மேலும் ஒட்டாகிவிடும் என்பதை பற்றி எப்போதாவது சிந்தித்திருக்கா? அது உண்மையும் கூடவே. அமெரிக்கா போன்ற வல்லரசுகள் எதிர்க்கவும், சீனா விடாப்பிடியாக பாகிஸ்தானை, இந்தியாவுக்கு சரிக்கு சரியான அணுவாயுத வல்லரசாக மாற்றி அமைத்ததிற்கு காரணம் இந்தியா இன்னொருதடவை, பாகிஸ்தானை தொட்டுவிட்டு இலகுவில் தப்பி போய்விடாமலிருப்பதற்கே.

சோனியா முசோலினி, தான் தமிழ் நாட்டு தேர்தலில் தோற்றவுடன் 11 வருடங்கள் நிலுவையிலிருந்த கருணைமனுவை தள்ளுபடி செய்து உலகறிந்த அப்பாவிகளை தூக்கிலிட ஆணையிட்டா. அவ ஏன் தேர்தலில் தோற்றா என்றால், தான் இலங்கைத் தமிழர்கள் மீது ரசயானக்குண்டுகள் வீசியபோது, அதனால் மனம் நொந்து எதிர்ப்பு தெரிவித்த இந்தியதமிழர்களை பொலிஸ் வன்முறைகளைப்ப்பாவித்து அடக்கி ஒடுக்கியமையால்த்தான். சோனியா முசோலினி, ரசாயனக்குண்டுகளைத்தமிழர் மீது போட்டதும், அடக்குமுறை சட்டங்களைப்பாவித்து தமிழ்நாட்டை ஒடுக்கியதும், 11 வருடகருணணை மணுவை நிராகரித்து தூக்காணை கொடுத்ததும், இவவது கணவர் தான் முதுகு நோக அடிவாங்கிய பின்னரும் சிங்களத்தின் மனம் நோகாமலிருக்க திரும்பி வந்து தமிழர்களைத்தாக்கி அழித்ததும் இந்தகுடும்பத்தின் தமிழர் எதிப்பு கொள்கைகளையே காட்டுகிறது. இதற்கும், சோனியா முசோலினியின் சேவகனான திரு துரோகமூர்த்தி சொல்லும் விளக்கம் - சிங்களம் மனம் நொந்து சீனாவுடன் சேர்ந்துவிடும் - என்ற கதைக்கும் தொடர்பில்லை.

சோனியாவின் அடிவருடியான இந்த கேவலம், தாங்கள் சீனாவுக்கு எவ்வளவு பயம் என்பதை வெட்கம் மானமின்றி வெளியே கூறுகிறான். போதாததிற்கு, சீனாவின் மிரடடலிற்கு பயந்தோடிப்போய், தங்களிலும் 50 மடங்கு சிறிய சிங்களத்தின் பாதங்களை வருடி, சிங்களத்தின் மனம் நோகாமல் பார்த்துக்கொள்வதை விட தங்களுக்கு வேறு வழி இல்லையெங்கிறான். அதிலும் அவமானமான விடயமென்னவென்றால், மேற்குநாடுகள் தங்கள் சுதந்திரப்போக்கில் சிங்களத்தை கண்டிக்க பார்த்தால், மாமியாரின் கோபத்தை மருமகள் சுரணை இல்லாக்கல்லான அம்மியிடம் காட்டுவது போன்று சிங்களம் தன்னையல்லவா எட்டி உதைக்கப்போகிறதென்று குலை நடுங்குகிறான். என்னே வாங்கும் பிசைக்கான ரோசம் கெட்ட பேடித்தன விளக்கத்தை இந்த மனிதன் முன் வைக்கிறார்.

இந்தமாதிரி சீனாவுக்கு பயமென்றால் ஏன்தான் ஒரு பிரயோசனமுமில்லாமல் போய் சிங்களத்தின் காலில் விழவேண்டும். போய் சீனாவின் காலில் விழுவதுதானே. கச்ச தீவை இலங்கைக்கு கொடுத்து இலங்கையின் காலில் விழாமல், அருணாசலப்பிரதேசத்தை சீனாவிற்கு கொடுத்து சீனாவின் காலில் விழு. அப்படி செய்து சீனாவை மனம் நோகாமல் பார்த்துக்கொண்டாயானால், உலகின் முதலாளி அமெரிக்கா தொடக்கம், ஆப்பிரிக்காவின் ஏழைநாடுகள் வரைக்கும் பணம் கடன் கொடுக்கும் செட்டி சீனா உனக்கும் ஏதாவதொரு எலும்புத்துண்டை விட்டெறிந்தாலும் எறியும்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.