Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவுக்கு நெருக்கடி கொடுக்கும் 69 பக்க அறிக்கை – அனைத்துலக மன்னிப்புச்சபை வெளியிட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

images10-150x150.jpg

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றி குறித்த சிறிலங்கா அரசின் விசாரணைகள் குறைபாடுகளைக் கொண்டது- அத்துடன் அது அனைத்துலக போர்க்குற்றவிசாரணைகளுக்குப் பதிலீடாக அமையாது என்று அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகளை விமர்சித்து அனைத்துலக மன்னிப்புச்சபை 69 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

“அவர்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்?“ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், இறுதிக்கட்டப் போரின் போது குறைந்தது 10,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதற்கான நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் உதவிப் பணியாளர்களின் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

குடிசனச் செறிவு மிக்க இடங்கள் மீது சிறிலங்கா இராணுவம் எறிகணைத் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டும் இந்த அறிக்கையில், போராளிகள் அல்லாதோரை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியதாக விடுதலைப் புலிகள் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசினால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு போரின் இறுதிக்கட்டம் தொடர்பாக செய்த மீளாய்வு- அதிகாரம், தொகுப்பு மற்றும் நடைமுறை என ஒவ்வொரு மட்டத்திலும் தவறுகளைக் கொண்டது என்றும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னாள் அரசாங்க அதிகாரிகளை அதிகமாகக் கொண்ட இந்த ஆணைக்குழு சட்டவிரோத படுகொலைகள், காணாமற்போதல்கள் உள்ளிட்ட ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட வன்முறைகள் தொடர்பான சான்றுகளை விசாரிக்கத் தவறிவிட்டதாகவும் அனைத்துலக மன்னிப்புச்சபையின் இந்த அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் நம்பகமானது என்றோ, அனைத்துலக விசாரணைகளுக்கு மாற்றீடானது என்றோ அனைத்துலக சமூகம் ஏமாந்து விடக் கூடாது என்றும், அது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை சவால்களின்றித் தொடர இடமளித்து விடும் என்றும் அனைத்துலக மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக் பணிப்பாளர் சாம் சபாரி தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நாளை காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ள ஊடகச்சந்திப்பு ஒன்றில் இந்த அறிக்கையை அனைத்துலக மன்னிப்புச்சபை அதிகாரபூர்வமாக வெளியிடவுள்ளது.

http://www.tamilthai.com/?p=26124

Edited by தமிழ் அரசு

Amnesty slams Sri Lanka over 'flawed' war probe

The Sri Lankan Government's inquiry into its military victory over Tamil rebels was flawed and no substitute for an international war crimes investigation, a leading human rights watchdog says.

Amnesty International has issued a 69-page report slamming the work of the government's Lessons Learnt and Reconciliation Commission (LLRC).

The report cited eyewitness testimony and information from aid workers suggesting that at least 10,000 civilians were killed in the final military offensive which crushed the separatist Tamil Tiger rebels in May 2009.

It accused the Sri Lankan army of shelling areas it knew to be densely populated by civilians, and also condemned the rebels for using non-combatants as a human shield.

'Flawed at every level'

The report titled "When will they get justice?", said the LLRC, set up by the Sri Lankan Government to review the final stages of the offensive, was "flawed at every level: in mandate, composition and practice".

Highlighting the number of ex-government officials on the commission, Amnesty said it had failed to investigate evidence of systematic violations, including illegal killings and enforced disappearances.

"The international community must not be deceived into viewing the LLRC as a credible replacement for an international inquiry -- this would allow war crimes and crimes against humanity to go unchallenged," said Amnesty's Asia-Pacific director, Sam Zarifi.

The defeat of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) ended nearly four decades of fighting which had claimed up to 100,000 lives.

The Sri Lankan Government maintains that not a single civilian was killed by its security forces.

However, an April report by a panel commissioned by UN Secretary General Ban Ki-moon noted "credible allegations" of war crimes committed by both sides.

http://www.radioaustralianews.net.au/stories/201109/3311543.htm?desktop

வரவிருக்கும் அறிக்கையை சாதகமாக எடுத்து தமிழ் பிரதிநிதிகள் சுறுசுறுப்பாக தமது கடமைகளைச் செய்வார்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.