Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிக்கட்ட போர் நடைபெற்றபோது தோல்வியில் முடிந்த அமெரிக்காவின் மனிதநேய முயற்சிகள்: விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[Wednesday, 2011-09-07 11:32:57]

WikiLeaks.150.jpg

வன்னியில் இடம்பெற்றிருந்த இறுதிக்கட்ட போரின் போது பொதுமக்களின் இழப்புகளைத் தவிர்ப்பதற்காக எஞ்சியுள்ள போராளிகள் சரணடைவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள நடுநிலையாளர் ஒருவரை சிறிலங்காவை ஏற்க வைப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்ட மனிதநேய முயற்சி தோல்வியில் முடிந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

2009 மே 17ம் நாள் சிறிலங்காவுக்கான அப்போதைய அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிய தகவல் பரிமாற்றக்குறிப்பு ஒன்றிலேயே இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளதாக அது தெரிவித்தள்ளது.

சிறிலங்காவின் நிலைமை தொடர்பாக அனுப்பப்பட்ட இந்த அறிக்கையில், மே 17ம் நாள் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச போர் முடிந்து விட்டதாக அறிவித்துள்ளதாகவும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அதனை மே 19ம் நாள் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அன்றைய நாள் முழுவதும் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம உள்ளிட்ட சிறிலங்கா அதிகாரிகளுடன் தான் தொடர்பில் இருந்ததாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு வலயத்துக்குள் அதிக எண்ணிக்கையான மக்கள் இன்னமும் இருப்பதாக மன்னார் ஆயர் தன்னிடம் தொடர்பு கொண்டு கூறியதாகவும், பிளேக்கின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் எஞ்சியுள்ள புலிகள் சரணடையத் தயாராக இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் விடுதலைப் புலிகள் கேட்டுக் கொண்டதாக நோர்வே தூதுவர் தன்னிடம் கூறியதாகவும் பிளேக் தனது அறிக்கையில் கூறியுள்ளார். பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் எஞ்சியுள்ள போராளிகளை சரணடைவதற்கான நடுநிலையாளர் ஒருவரை ஏற்க வைப்பது தொடர்பாகவே தான் சிறிலங்கா அதிகாரிகளுடன் அன்றைய நாள் முழுவதும் தொடர்பில் இருந்ததாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.

மே 17ம் நாள் அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவை நடுநிலையாளராக ஏற்றுக் கொண்டு விடுதலைப் புலிகளை சரணடைவதற்கு ஏற்பாடு செய்ய முன்வருமாறு கோத்தாபய ராஜபக்சவை சந்தித்து வேண்டுகோள் விடுத்ததாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் போர் முடிந்து விட்டது என்று கூறி கோத்தாபய ராஜபக்ச அந்த நடுநிலை முயற்சியை ஏற்க மறுத்து விட்டதாகவும், ஆனால் சரணடையும் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு படையினருக்கு தான் அறுவுறுத்தியிருப்பதாக அவர் கூறியதாகவும் பிளேக் அனுப்பிய குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை அன்றையநாள் போர் வலயத்தில் இருந்து சடலங்களையும். காயமடைந்தவர்களையும் மீட்க அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவை அனுமதிக்குமாறு சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் பசில் ராஜபக்சவை தான் கேட்டுக் கொண்டதாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார். தனது வேண்டுகோளை நிராகரித்த பசில் ராஜபக்ச, சிறிலங்கா அரசாங்கமே அதனைப் பார்த்துக் கொள்ளும் என்று கூறிவிட்டதாகவும் பிளேக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=49459&category=TamilNews&language=tamil

மொத்தத்தில் அமெரிக்கா இந்தியா இரண்டுமே ஏமாற்றின, ஆனால் அமேரிக்காவுக்கு கொஞ்சம் என்றாலும் மனச்சாட்சி இறுதியில் இருந்தது ஆனால், இந்தியாவுக்கு இன்றுவரை இல்லை.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் அமெரிக்கா இந்தியா இரண்டுமே ஏமாற்றின, ஆனால் அமேரிக்காவுக்கு கொஞ்சம் என்றாலும் மனச்சாட்சி இறுதியில் இருந்தது ஆனால், இந்தியாவுக்கு இன்றுவரை இல்லை.

உண்மை அகூதா....

இந்தியா ராமர் பாலத்தை ஆராய்ச்சி செய்யத்தான்... லாயக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் "கப்பல் வந்து ஏத்திக்கொண்டு போகும்" என்று மக்களுக்குச் சொல்லப்பட்டது உண்மை போலத்தான் இருக்கு!

இலங்கைக்கு இந்தியா உறுதியான ஆதரவை வழங்கியிருக்காது போனால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் முக்கிய தளபதிகளையும் நேட்டோ பறவை வான் வழியாக மீட்டுச் சென்றிருக்கும் என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை இராணுவத்துக்கு இந்தியா உறுதியான ஆதரவை வழங்கியதால் தான் நேட்டோவின் கனவு பலிக்காது போனதாக வும் அவர் கூறியுள்ளார்.

தென்மாகாணத்தில் உள்ள வலஸ்கல என்ற இடத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கிளிநொச்சியைக் கைப்பற்றிய பின்னர் இலங்கை இராணுவத்தின் எட்டு படைப்பிரிவுகள் முல்லைத்தீவு நோக்கி முன்னேறிச் சென்றபோது, பிரபாகரனையும் அவரது குடும்பத்தினரையும் முக்கிய தளபதிகளையும் வான்வழியாக மீட்க சில வெளிநாட்டு சக்திகள் திட்டமிட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அதிஸ்டவசமாக இந்தியா துணை நின்றதால் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் டலஸ் அழகப்பெரும மேலும் கூறியுள்ளார். இலங்கைக்கு எப்போதுமே ஒரு உண்மையான நண்பனாக இந்தியா இருப்பதாகவும் அதன் மூலமே விடு தலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றி கொள்ள முடிந்தது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://mykathiravan....a-news/?p=14383

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.