Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரொபேர்ட் ஓ பிளேக் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கை..

Featured Replies

இலங்கைக்கு மீண்டும் வருகைதந்ததையிட்டும் பழைய நண்பர்களைக் காணக்கிடைத்ததையிட்டும் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். கடந்த இரு தினங்களாக கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் பரந்தளதவிலான சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தேன்.

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=2695:2011-09-14-07-33-29&catid=1:latest-news&Itemid=18'>http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=2695:2011-09-14-07-33-29&catid=1:latest-news&Itemid=18

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிவிவகார அமைச்சர் ஜிஎல் பீரிஸ் , ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளை கொழும்பில் நான் சந்தித்திருந்தேன். யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு யாழ் இராணுவத் தளபதி அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் , மற்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களையும் நான் சந்தித்திருந்தேன். ஊடக சுதந்திரத்திற்கான அமெரிக்காவின் ஆதரவை தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகை அலுவலகத்திற்கும் விஜயம் செய்திருந்தேன்.

2009ம் ஆண்டு மே மாதத்தில் நான் புறப்பட்டுச் சென்றதை விடவும் இந்நாடு மிகவும் மாறுபட்டுள்ளது. இடம்பெயர்ந்தவர்களில் அனேகர் மெனிக் பாமில் இருந்து சென்றுள்ளனர். ஏனையோர் மிதிவெடி அகற்றல் பூர்த்தியாவுடன் அங்கிருந்து புறப்படுவர். வடக்கில் முக்கியமான உள்ளுராட்சித் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. 8000ற்கு அதிகமான முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கும் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் மிதிவெடிகளை அகற்றுவது தொடர்பிலும் கணிசமான பணிகள் இடம்பெற்றுள்ளன.

வடக்கு மக்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கும் வழமை நிலைமைக்குக் கொண்டுவருவதற்கும் துணைபுரியும் வகையில் அமெரிக்கா அதன் உதவித்திட்டங்களை முன்னுரிமைப்படுத்தியுள்ளது. வடக்கு கிழக்கில 20,000 தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்காக தனியார் துறையினருடன் இணைந்து 202 கோடி இலங்கை ரூபாவை நாம் முதலீடு செய்கின்றோம்.

இடம்பெயர்ந்தவர்களும் ஏனையோரும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச்செல்ல வசதியாக மிதிவெடியகற்றும் பணிகளுக்கு தொடர்ச்சியாக நாம் ஒத்துழைப்பு வழங்கிவருகின்றோம். வடக்கில் இடைத்தங்கல் வீடுகளை அமைப்பதற்காக கடந்த வருடத்தில் 15.4 கோடி இலங்கை ரூபாவை நாம் பங்களிப்புச்செய்துள்ளோம். உலக உணவுத்திட்டத்தின் இலங்கைக்கான பிரதான பங்களிப்பாளர்களாக விளங்குகின்ற நாம் கடந்த 12மாதங்களில் 55 கோடி இலங்கை ரூபாவை வழங்கியுள்ளோம்.

இருந்த போதிலும் சமாதானம் , ஜனநாயகம் மற்றும் சுபீட்சத்துடன் கூடிய இலங்கையை உறுதிசெய்துகொள்வதற்கும் யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்துவதற்கும் இன்னனும் பெருமளவு பணிகள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளன.

அதிகாரப்பகிர்வு மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பான முக்கியமான பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்கத்தரப்பிலிருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்தும் அறியக்கிடைத்ததையிட்டு முதலில் நான் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.

அடுத்ததாக நிபுணர் குழு அறிக்கையினை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிவைப்பதான அறிவிப்பினையும் சர்வதேச மனிதாபினமான சட்டங்களை மீறியவர்களுக்கு எதிரான பொறுப்புக்கூறும் கடப்பாடு முழுமையானதும் சுயாதீனமானதும் நம்பத்தகுகந்ததுமான பொறுப்புக்கூறுல் ஆகியவற்றை உள்ளடக்கியதான முழுமையான தேசிய நல்லிணக்க நடைமுறைக்கான தேவையை ஐநா மனித உரிமைகள் பேரவை வலியுறுத்திநிற்கின்றது. நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது கவனம் செலுத்தும் என நாம் நம்புகின்றோம்.

இறுதியாக, மனித உரிமைகளையிட்டு நான் கரிசனை கொண்டுள்ளேன். நல்லிணக்க செயற்பாடுகளிலும் வடக்கில் மீளத்திரும்பிச்செல்கின்ற மக்களின் வாழ்க்கையை இயல்புநிலைக்கு கொண்டுவருவதிலும் மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் காணப்படவேண்டியது மிகவும் முக்கியமானதொரு பாகமாக விளங்குகின்றது. துணை இராணுவப்படைத்தரப்பினரின் ஆயுதங்களைக் களைவதன் அவசியம் தொடர்பாக நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினேன். இந்த விடயத்தில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. மர்ம மனிதர்கள் தொடர்புடைய சம்பவங்களுக்கும் முடிவுகாணப்படவேண்டியது அவசியமாகும.; இந்த விடயம் பாதுகாப்புத்தொடர்பான நிச்சயமற்றதன்மை

அதிகரித்துச் செல்லக் காரணமாகியுள்ளதாக யாழ்ப்பாணத்தில் பலர் என்னிடம் எடுத்துககூறினர். வடக்கில் தமிழ் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த வேண்டியது அவசியமாகும். அப்படியானால் இவ்வாறான பணிகளை மேற்கொள்வதற்கான தேவை இராணுவத்தினருக்கு இனிமேலும் ஏற்படாது. ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்களையிட்டு அமெரிக்கா ஆழ்ந்த கவலைகொண்டிருக்கின்றது.

http://akkinikkunchu.com/new/

to: "Blake, Robert O" <BlakeR2@state.gov>

Hon. Robert Blake

Assistant Secretary,

SOUTH AND CENTRAL ASIAN AFFAIRS.

Sri Lanka: Grateful for your visit

Tamils around the world are grateful to you for your comments on your visit to Sri Lanka. Your views on Rights and Political devolution are much appreciated.

Thanks

Yours sincerely

இலங்கைக்கு மீண்டும் வருகைதந்ததையிட்டும் பழைய நண்பர்களைக் காணக்கிடைத்ததையிட்டும் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். கடந்த இரு தினங்களாக கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் பரந்தளதவிலான சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தேன்

2009ம் ஆண்டு மே மாதத்தில் நான் புறப்பட்டுச் சென்றதை விடவும் இந்நாடு மிகவும் மாறுபட்டுள்ளது. இடம்பெயர்ந்தவர்களில் அனேகர் மெனிக் பாமில் இருந்து சென்றுள்ளனர். ஏனையோர் மிதிவெடி அகற்றல் பூர்த்தியாவுடன் அங்கிருந்து புறப்படுவர். வடக்கில் முக்கியமான உள்ளுராட்சித் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. 8000ற்கு அதிகமான முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கும் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் மிதிவெடிகளை அகற்றுவது தொடர்பிலும் கணிசமான பணிகள் இடம்பெற்றுள்ளன.

உலக உணவுத்திட்டத்தின் இலங்கைக்கான பிரதான பங்களிப்பாளர்களாக விளங்குகின்ற நாம் கடந்த 12மாதங்களில் 55 கோடி இலங்கை ரூபாவை வழங்கியுள்ளோம்.

இருந்த போதிலும் சமாதானம் , ஜனநாயகம் மற்றும் சுபீட்சத்துடன் கூடிய இலங்கையை உறுதிசெய்துகொள்வதற்கும் யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்துவதற்கும் இன்னனும் பெருமளவு பணிகள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளன.

அதிகாரப்பகிர்வு மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பான முக்கியமான பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்கத்தரப்பிலிருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்தும் அறியக்கிடைத்ததையிட்டு முதலில் நான் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.

வடக்கில் தமிழ் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த வேண்டியது அவசியமாகும். ..... ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்களையிட்டு அமெரிக்கா ஆழ்ந்த கவலைகொண்டிருக்கின்றது.

202 கோடி இலங்கை ரூபாவை நாம் முதலீடு செய்கின்றோம்.

http://akkinikkunchu.com/new/

எதை எதையோவெல்லாம் கலந்து பேசி பழைய கள்ளை புதிய மொந்தையில் பரிமாறுகிறார்.

என்னவோ இரண்டரை வருடம் சிங்கள சினேகிதங்களை காணமல் தவிச்சு போனதாக நடிகிறார்.

லசந்தாவிற்கு முன்னர் எத்தனையோ தமிழ்ப்பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டார்கள். இவருக்கு அது தெரிந்திருக்கவில்லை. ஒபாம தான் முதன் முதலில் ஒரு தமிழ் ஆசிரியர் திஸ்ஸநாயகத்தை பற்றி பேசினார். உலகநாடுகள் எத்தனையோ தமிழ் ஊடகப்பரிசுகளை இடுக்கனில் இருந்து தொழில் செய்வோருக்கு வழங்கியிருக்கு. இவர் அக்கறைப்படுத்தவில்லை. ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு வழங்கியிருகிறர்கள். இவர் காலத்தில் தமிழருக்கு ஒன்றும் கிடைக்கவிலை. இபோது உயிருடன் தப்பிவிட்ட உதயன் ஆசிரியருக்காக உருகுகிறார். ஆனால் உள்ளே வைத்து சுடப்பட்டவர்களை நாம் மறக்கவில்லை.

ஒபாம தேர்தலில் வென்ற போது, யார் வந்தாலும் அமெரிக்காவின் கொள்கைகள் இலங்கை சம்பந்தமாக மாறாது என்று, திரும்ப திரும்ப, கூறியவர். எந்த காலத்திலும் தமிழருக்கு தனிநாடு கிடையாது என்று அறுதியிட்டு கூறியவர். போர்க்குற்ற விசாரணையை தமிழர்களின் கட்சிகள் கேக்கவிலை, புலம்பெயர்ந்த கூட்டத்தின் ஆட்டம் என்ற பிதற்றிய கூட்டத்திற்கு தலமை தாங்கியவர். கில்லரி கிளின்ரன் சென்னையில், ஈழத் தமிழர் விடையம் பற்றி பேசமாட்டா என்றவர். சுனாமி நேரம், இலங்கை தலமை நீதிபதி சரத் என் சில்வாவுடன் சேர்ந்து தெற்கில் மட்டும் உலக உதவிகள் பயன் பட செய்தவர். இப்போ ஐ.நா அறிக்கை மனித உரிமைகள் சபைக்கு போகமுதல், ஒடோடிவந்து, தனது பக்கம் இலங்கை நண்பர்களைத் திருப்ப முயன்று தோல்வி கண்டவர்.

இவர் எத்தனையோ முறை தனது சிங்கள ராசாகளுக்கு காலை கழுவிவிட்டு தனது அலுவல்களுக்கு காத்திருக்க இவரின் பட்சமான ராசாக்கள் இவருடைய காலை வாரிவிட்ட கதைகளை விக்கிலீக்ஸ் திரும்ப திரும்ப அம்பலப்படுத்திக்கொண்டிருக்கு. இவருக்கு இலங்கையில் என்ன நடக்கப்போகுது என்பது தெரியாவிட்டாலும், அரசாங்க அமைச்சின் அடுத்த நகர்வு என்ன என்று கேட்டு தெரிந்து கொள்ள விருப்பமில்லாதவராக இருக்கிறர்.

இவர் தான் தனது சிங்கள நண்பர்களை மிரட்ட இலங்கைகு வரவில்லை என்று கூறிவிட்டு, மர்ம மனிதர்களைக்கண்டு மிரண்டு போயிருக்கிற தமிழ் கட்சிகளை மிரட்டி, ஐக்கிய இலங்கையை காப்பாத்த திரும்பவும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து வைத்திருக்கிறார். வக்கில்லாத கூட்டமைப்புக்கு, பதில் தராவிடில் திரும்ம வர மாட்டோம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டு, பிளேக்கின் மிரட்டலுக்கு பயந்து, பதிலைப்பற்றி கதையாமல் திரும்ப போகவேண்டிய கதி.

இவர் ஒரு சுத்த தி.மு.க(திருத்த முடியாத.....). சுசான் ரைஸ் ஐ.நா விற்கு போகும் வரை இவரை நமக்கு தேவையில்லை.

Bye Bye சாமி Bye bye

Edited by மல்லையூரான்

ஓ பிளேக் நிச்சயம் தமிழர்களின் நண்பன் அல்ல. அதை இன்றிய சிங்களமும் நன்றாக தெரிந்தே உள்ளது, அதன் பலனை அவரே இன்று அறிகின்றார் - அரசியலில் நிரந்தர நண்பன் இல்லை. எனவே நாம் மனம் தளர தேவையில்லை. தொடர்ந்து பயணிப்போம்.

ஓ பிளேக் நிச்சயம் தமிழர்களின் நண்பன் அல்ல. அதை இன்றிய சிங்களமும் நன்றாக தெரிந்தே உள்ளது, அதன் பலனை அவரே இன்று அறிகின்றார் - அரசியலில் நிரந்தர நண்பன் இல்லை. எனவே நாம் மனம் தளர தேவையில்லை. தொடர்ந்து பயணிப்போம்.

சரியென்று ஒத்துகொள்கிறேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.