Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

கின்னஸ் சாதனை சிறுவன் கிஷன்


Recommended Posts

பதியப்பட்டது

kishan9xa.jpg

நிருபர்களின் கேள்விகளுக்கு சரமாரியாக பதில் சொல்லும் அந்த சிறுவனை பார்த்தால் யாருக்கும் ஆச்சர்யம் வரும். மழலை மேதைகள் லிஸ்டில் இடம் பிடித்திருக்கும் மாஸ்டர் கிஷன், சென்னையில் நிருபர்களை சந்தித்தபோது கரிகால் சோழன் கதைதான் நினைவுக்கு வந்தது. சிறுவன்தானே என்று கரிகாலனை ஒதுக்கியவர்கள் அந்த மன்னனின் அறிவுத்திறனுக்கு முன் தலை வணங்கினார்களே, அதுதான் நடந்தது அன்றைக்கும்!

தன் 9-வது வயதில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒரு படத்தையும் இயக்கி வருகிறார் கிஷன்.

இந்த சிறுவனை பற்றி கேள்விப்பட்டு ஆர்வத்துடன் முன் வந்து கிஷன் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜாக்கிஷெராப்! நான்கு வயதில் நடிக்க ஆரம்பித்தவர் கிஷன். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறாராம். பிறகு தன் ஆறாவது வயதில் பாட தொடங்கி, ஹீரோ என்ற திரைப்படத்திற்கு இசையமைத்து அப்படத்தின் டைட்டில் பாடலையும் தானே பாடியிருக்கிறார். இவர் பாடிய பல பக்தி பாடல்கள் கேசட்டுகளாக வெளிவந்து விற்பனையில் சாதனை படைத்திருக்கிறது.

இதற்கு முன்பு சிட்னி லிங் என்ற நெதர்லாந்து நாட்டை சேர்ந்த சிறுவன்தான் ஒரு திரைப்படத்தை இயக்கி உலக சாதனை புரிந்திருக்கிறார். இந்த படத்தின் மூலமாக அந்த சாதனையையும் முறியடித்திருக்கிறார் கிஷன்.

ஹிந்தியில் இப்போது உருவாகிக் கொண்டிருக்கும் இந்த படத்தை தமிழிலும் தயாரிக்கவிருக்கிறார் ஸ்ரீராமுலு. நேரடியாக படப்பிடிப்பு தளத்திற்கு சென்று கிஷன் இயக்குகிற அழகை கண்ணார ரசித்துதான் இந்த முடிவுக்கே வந்திருக்கிறார் ஸ்ரீராமுலு! தமிழில் இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது. தமிலும் நடித்து தர சம்மதித்திருக்கிறார் ஜாக்கிஷெராப்!

பிரஸ்மீட்டில், ஸ்கூலில் உங்க வயசு பசங்க கூட விளையாடுவீங்களா? என்று கிஷனிடம் கேட்டபோது, எப்பவாவது விளையாடுவேன். விளையாடுவதைவிட தினம் ஒரு படம் பார்ப்பதுதான் எனக்கு இஷ்டம் என்று சொன்ன கிஷன், தமிழில் சூர்யா அங்கிளை வச்சு ஒரு படத்தை இயக்கணும். அதுதான் என் ஆசை என்று சொல்ல, மூக்கில் விரல் வைக்காத குறையாக அதிசயித்தார்கள் பத்திரிகையாளர்கள் அத்தனை பேரும்!

தமிழ்சினிமா.கொம், :idea:

யப்பா....... :shock:

Posted

ஆஹா :shock: வாழ்த்துக்கள் சிறுவனுக்கு. :lol: எப்படி இப்படி? :oops: :shock: :shock: :?:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறுவனுக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அடடா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ம்ம்..... நானும் என்னை வைத்து ஒரு படம் எடுக்கலாம் என்றால் ஒரு கதையும் மாட்டுப்படுதில்லையே!! இந்தப் பையன் கெட்டிக்காரன் தான் :wink:

Posted

ம்ம்..... நானும் என்னை வைத்து ஒரு படம் எடுக்கலாம் என்றால் ஒரு கதையும் மாட்டுப்படுதில்லையே!! இந்தப் பையன் கெட்டிக்காரன் தான் :wink:

காலம் கடந்த பேராசை.. இருந்தாலும் பறவாயில்லை றை பன்னுங்க,, உங்க பேரக்குழந்தைக்கு படம் எப்படி எடுக்கிறது எண்ட ரெக்னிக்கை சொல்லிக்குடுத்தால் சிலவேளை ரெக்கோர்ட் உடைக்க வாய்ப்பு இருக்கு... பேரப்பிள்ளையால உங்க ஆசை நிறைவேறும்,, :wink: :P :P

  • கருத்துக்கள உறவுகள்
Posted

றெக்கோட் உடைக்கின்றதோ? தெரியாமல் தான் கேட்கின்றேன். உமக்கு அடிக்கின்றது, நொருக்கின்றதை விட்டால் எதுவும் தெரியாதோ? :twisted:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்படிக் கஸ்டம் என்றால் பிறந்த ஆண்டைப் பிந்திப்பதிந்தாவது செய்து காட்டுவது தான். :wink:

Posted

ம்ம்..... நானும் என்னை வைத்து ஒரு படம் எடுக்கலாம் என்றால் ஒரு கதையும் மாட்டுப்படுதில்லையே!! இந்தப் பையன் கெட்டிக்காரன் தான் :wink:

தம்பி சோக்கான கதையொண்டு என்னட்டை இருக்கு விருப்பமெண்டால் சொல்லும் அனுப்பி வைக்கிறன் படத்திலை நீர்தான் ஹீரோ ஆனா என்ன படம் முழுக்க பொதி சுமந்துதான் நடிக்கவேணும் சம்மதமோ???????????

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தம்பி சோக்கான கதையொண்டு என்னட்டை இருக்கு விருப்பமெண்டால் சொல்லும் அனுப்பி வைக்கிறன் படத்திலை நீர்தான் ஹீரோ ஆனா என்ன படம் முழுக்க பொதி சுமந்துதான் நடிக்கவேணும் சம்மதமோ???????????

குடும்பச் சுமையா?

சுமைதாங்கியே இன்று அழுகின்றது போல நல்ல பாட்டெல்லாம் இருந்து என்றால் நடிக்க தயார்.

:wink: :P

Posted

நான் நினைக்கிறன் அந்த ஹீரோ வாய் திறந்து பேச மாட்டார் என்று. அப்படி தானே முகத்தார்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் நினைக்கிறன் அந்த ஹீரோ வாய் திறந்து பேச மாட்டார் என்று. அப்படி தானே முகத்தார்?

ஆகா. அதுவும் நல்லாயிருக்குமே! விக்ரம்-சூர்யா நடித்த படம் என்னாது? :roll: அதிலே வரும் விக்ரம் மாதிரியா? அவருக்கு அதால விருது கிடைச்சதல்லவா!! :roll:

Posted

அதுதான் மதன் டயலோக் பிரச்சனையில்லை சாப்பாடுதான்(பேப்பர்) கொஞ்சம் பழகவேணும் சூட்டிங் முடியும் மட்டும் ஏனெண்டால் படம் இயற்கையாக இருக்கவேண்டும் அல்லவா.....?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதுதான் மதன் டயலோக் பிரச்சனையில்லை சாப்பாடுதான்(பேப்பர்) கொஞ்சம் பழகவேணும் சூட்டிங் முடியும் மட்டும் ஏனெண்டால் படம் இயற்கையாக இருக்கவேண்டும் அல்லவா.....?

பேப்பர் தோசையா? ஏன் அது எல்லாம்? படத்தில் வேணும் என்றால் காட்டுங்கோ? ஆனால் எனக்கு ஒரு நாளைக்கு மச்சம் இல்லாவி;ட்டால் உள்ள இறங்காது. ஆமா!!

Posted

பேப்பர் தோசையா? ஏன் அது எல்லாம்? படத்தில் வேணும் என்றால் காட்டுங்கோ? ஆனால் எனக்கு ஒரு நாளைக்கு மச்சம் இல்லாவி;ட்டால் உள்ள இறங்காது. ஆமா!!

தம்பி இப்பிடியான உம்மன்ரை கேள்விகளுக்காகத்தான் படத்திலை வாய்பேச முடியாத ஒரு ஹீரோவாப் போட்டிருக்கு... சரியா........

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தம்பி இப்பிடியான உம்மன்ரை கேள்விகளுக்காகத்தான் படத்திலை வாய்பேச முடியாத ஒரு ஹீரோவாப் போட்டிருக்கு... சரியா........

அப்படிப் புத்திசாலித்தனமான கேள்வியோனை! இருந்தாலும் பகிரங்கமாக வாழ்த்தக் கூடாது. எனக்கு தற்புகழ்ச்சி இல்லை கண்டியளோ? :wink: :P

அது சரி. நீங்கள் நகைச்சுவைப் பாத்திரத்துக்கு ஒத்து வாறியளாமே!!

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.