Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச நெருக்கடிகளில் இருந்து அரசாங்கத்தைக் காப்பாற்ற கூட்டமைப்பு முயற்சி! - தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டு!!

Featured Replies

சர்வதேச நெருக்கடிகளில் இருந்து அரசாங்கத்தைக் காப்பாற்ற கூட்டமைப்பு முயற்சி! - தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டு!!

சர்வதேச நெருக்கடிகளில் இருந்து சிறிலங்கா அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்குச் சென்றதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகவியலாளர் மகாநாடு நேற்று முன்தினம் (17-09-2011) யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற போதே, அக்கட்சியின் உபதலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த 16ஆம் திகதி மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்ததைத் தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் அக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் கூட்டத் தொடரில் சர்வதேச சமூகத்தினால் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களில் இருந்து சிறிலங்கா அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சர்வதேச நெருக்கடியில் இருந்து சிறிலங்கா அரசாங்கத்தைக் காப்பாற்ற துணைபோயுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சுயநிர்ணய உரிமையைக் கைவிட்டு, 20 வருடங்களுக்கு முன்னர் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒற்றையாட்சி அரசமைப்பிற்கு உட்பட்ட மாகாண சபையை ஏற்றுக் கொள்ளுவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.

nஐனிவாவில் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் கூட்டத் தொடர் நடைபெற்றுவரும் இன்றைய சூழ்நிலையில் அரசாங்கத்துடனான பேச்சுக்களுக்கு கூட்டமைப்பு சென்றமையானது சிறிலங்கா அரசாங்கம் மீது பிரயோகிக்கப்படும் சர்வதேச அழுத்தங்களில் இருந்து அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காகவேயாகும்.

தேர்தல் காலத்தில் தேசியம் பேசி வாக்குகளைப் பெற்று பதவியைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சுயநிர்ணய உரிமையை முற்றாகக் கைவிட்டு, 13வது திருத்தச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபையை ஏற்று அதற்கு அதிகாரங்களைப் பெறும் பேச்சுக்களிலேயே ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு ஏற்றவகையில் 13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று தீர்வு காண அரசாங்கம் இணங்கியுள்ளதாக சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து கூட்டறிக்கை வெளியிடுவதன் மூலம் மக்களை ஏமாற்றுகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரின் போது நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள

போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், அத்தகைய விசாரணை ஒன்றில் இருந்து சிறிலங்கா அரசாங்கத்தைக் காப்பாற்ற முயலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த 60 வருடங்களாக தமிழ் மக்கள் மீது இன அழிப்பை மேற்கொண்டு வந்துள்ள சிறிலங்கா அரசாங்கத்தை காப்பாற்ற முயல்கின்றது.

தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையை மறுதலிக்கும் 13வது திருத்தச் சட்டத்தையும், அதன் அடிப்படையிலான மாகாண சபையையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி முற்றாக நிராகரிக்கின்றது.

எதிர்காலத்தில் இடம்பெறும் மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடப் போவதில்லை. ஏனெனில் தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் செயற்படும் எந்தவொரு தரப்பும் 13வது திருத்தச் சட்டத்தையும், அச்சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாண சபையையும் நிராகரிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த ஊடகவியலாளர் மகாநாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், கட்சியின் உபதலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் உபதலைவரும் முன்னாள் நாடாhளுமன்ற உறுப்பினருமான திருமதி. பத்மினி சிதம்பரநாதன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உப தலைவர்களில் ஒருவருமான ஆனந்தராஐர மற்றும் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

http://ponguthamil.c...0D-9592A0662F8D}

இந்த செய்திகளின் முக்கியத்துவம் என்ன என்பது தெரியாது. ஆனால் கூட்டமைப்பு பாலைக் குடிக்கும் போது பனையின் கீழேயா இருக்கிறோம் என்பதை கவனித்திருந்திருக்கலாம். பேச்சுவார்த்தையின் திகதியை அரசாங்கத்திற்கு சாதமாக அமைய விட்டிருக்கவிடில் இந்த குற்றச்சாட்டுகள் எழ மாட்டா.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

தெரிந்தோ தெரியாமலோ இவர்கள் செய்யும் காரியங்கள் ஒவ்வொன்றும் சிங்கள அரசுக்கு அனுகூலமாகவே அமைந்துவிடுவதைத் தவிர்த்து சாணக்கிய அரசியலுடன் இராஜதந்திரத்துடன் நகர்வுகளை மேற்கொள்ள முடியாத இந்த புத்திகெட்ட தலைமைகளை என்னென்று சொல்வது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.