Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த நாடு எம் அனைவரினதும் நாடு - கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாடு எம் அனைவரினதும் நாடு - கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ஜனாதிபதி

30 செப்டம்பர் 2011

முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பது தொடர்பில் இலங்கை உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பத்தாயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இருபது மாத காலத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் போராளிகளுக்கு தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 1800 முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை சமூகத்துடன் இணைக்கும் விசேட நிகழ்வு ஒன்று, அலரி மாளிகையில் இன்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வேறும் நாடுகளில் புனர்வாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளுக்காக குறைந்தபட்சம் ஐந்து ஆண்டு காலம் தேவைப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளை சில உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தரப்பினர் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் அதனை பாரியளவில் பிரச்சாரம் செய்யும் நோக்கில் இவ்வாறு கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

பிழையாக வழிநடத்தப்பட்ட 1800 இளைஞர் யுவதிகள் சட்டத்தை மதிக்கும் நாட்டுப் பிரஜைகளாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களில் முன்னாள் போராளிகள் பங்கேற்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நாடு எம் அனைவரினதும் நாடு - கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ஜனாதிபதி

இலங்கையின் வடக்கு தெற்கு என சகல பகுதியும் ஒரே பார்வையிலேயே பார்க்கப்படுவதாகவும், இந்த நாடு எம் அனைவரினதும் நாடு என்றும் இதனைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு பெற்ற 1800 முன்னாள் போராளிகளை சமூகத்துடன் இனைக்கும் வைபவம் இன்று புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் ஜனாதிபதயின் தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

போராட்டக்காரர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பது தொடர்பில் சர்வதேசம் ஏற்றுக்கொண்ட சர்வதேச நியதிகளுக்கு அமைய இவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டதாக ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டார்.

அத்துடன் மற்றைய நாடுகளை விட தாம் இதனை மிக விரைவில் செய்து முடித்துள்ளதாகவும் அவர் கூறினார். அன்று நீங்கள் துப்பாக்கியை எடுத்து போராடினீர்கள் ஆனால் இன்று தொழில் பயிற்சி வழங்கப்பட்டுள்ள சாதாரண மனிதர்களாக புனர்வாழ்வு மையங்களில் இருந்து விடுதலையடைகிறீர்கள் என்றும் கூறினார்.

அவர்களுக்கு சமூகத்தில் ஏனையவர்கள் அனுபவிக்கின்ற அனைத்து வசதிவாய்ப்பக்களையும் பெற்று எதுவித பிரச்சினைகளும் இன்றி வாழமுடியும் என்றும் குறிப்பிட்டார்.

அன்று சிதைக்கப்பட்ட வீதிகள் உட்பட அடிப்படை வசதிகள் மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சகல வீடுகளுகும். மின்சராம் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். என்றும் கூறினார்.

பிரிந்து இருப்பதற்கும் பதிலாக நாம் அனைவரும் ஒன்றாக ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புதற்கு அணித்திரண்டு செயற்படுவோம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/67977/language/ta-IN/article.aspx

இவர்களின் முகங்களை பார்க்கும் பொது இவர்கள் உண்மையில் விடுபட்ட அறிகுறி இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கறுப்பி இணைப்பிற்கு, அவர்களை பார்க்கவே சந்தோஷமாக இருக்கு, இனி சமுதயத்தில் என்ன பிரச்சனையை எதிர் நோக்கப் போகின்றார்களோ, இவர்கள் எல்லோரும் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்

நம்மை காக்க தம்முயிரை தியாகம் செய்ய வந்த இந்த தியாகிகள் உயிரோடு இருப்பதையிட்டு மகிழ்ச்சி. இந்த நேரத்தில் இவர்களை உயிரோடு மீட்க தம்முயிரைத் தியாகம் செய்த நடேசன், புலித்தேவன், ரமேஸ் போன்ற தலைவர்களின் தியாகங்களுக்கு சிரம் தாழ்த்தி, அவர்களை நினைவு கூருகிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.