Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பரவி விட்ட புற்றுநோய்??????? ......

Featured Replies

நெல்லை அண்ணை.. ஃபோன் பண்ணினது நீங்கள்தானே..! :icon_mrgreen:

நானும் வானொலி கேட்டேன், நிகழ்ச்சியில் குறும்தகவல், மற்றும் மின்னஞ்சல் ஊடாகத்தான் நேயர்கள் பங்குபற்றியிருந்தார்கள். யாரும் தொலைபேசியூடாக பங்குபெற்றவில்லை.

.. நேற்றைய தினம் லண்டனில் இருந்து இயங்கும் IBC வானொலியில் ... மாவீரர்தினம் 2011 ... பலர் ஒரே கருத்தை கூறினார்கள் ... மாவீரர்தினம் ஒன்றாகத்தான் நடக்க வேண்டும் என்று!! ... அதில் ஒரு நேயர் இந்த இரு கும்பல்களையும் பற்றி குறிப்பிடுகையில் ..

... ஒரு கும்பல் மகா கள்ளவர்கள், மற்றைய கும்பல் (புதுக்கும்பல்) துரோகக்கும்பல்! ... என்று விழித்தார்.

உண்மைதான்!

... முன்னையோரில் முன்னிற்பவர்களில் பலர் மகா திருடர்கள், கீழுள்ளதுகள் பாவங்கள், ஏதோ த.தே என்று தம்மை அர்ப்பணிக்கிறார்கள்!

... இரண்டாவது புதுக்கும்பலில் முன்னிற்பவர்களில் பலர் மர்ம மனிதர்கள் மட்டுமல்ல இவர்களும் யமனை பச்சடி போட்ட திருடர்கள்!!! பலர் அதில் முன்னிலையில், அதுவும் யுத்த நிறுத்த காலங்களில், முன்னையோரால் இழுத்து உள்வாங்கப்பட்டவர்கள், நேற்றுவரை முன்னையோருடன் சேர்ந்து சுருட்டியவர்கள் ... இன்று தாம் தூயவர்களாம்? கணக்கு காட்டப்போகிறார்களாம்?

... கேட்கிறவங்கள் கேணையர்கள் என்றால் ....!

நெல்லையன் சகோதரம்..............

உண்மையா மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துறவன் , அடுத்தவன் என்ன செய்யுறான்னு நோண்டி பார்க்க , தன் நேரத்தை செலவிடமாட்டான்!

இங்கே நீங்க ஆவேசபடுறது மாவீரர் புகழ்பாட இல்ல!!,, உங்க மனசில எதிரியா இருக்குறவங்கள ஒரு கை பார்க்க!

எங்கயோ ஒரு இடத்துல , ரதி எழுதினது ஞாபகத்துக்கு வருது.........

உண்மையா மாவீரர்களையும் மக்களையும் நேசிக்க,, பந்தி பந்தியா தலைப்புக்கள எல்லாம் தேவையே இல்ல............

கோயில்ல போயி ஒரு விளக்கு ஏத்தி வையுங்க,, அதனால அவங்க ஆத்மா சாந்தியடையுதோ இல்லையோ,,

அவங்கபேரை சந்தி சிரிக்கவைக்க விடாம பண்ணலாம்!! :)

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

.... மாவீரர்களுக்கு ......,

.... அவங்கபேரை சந்தி சிரிக்கவைக்க விடாம பண்ணலாம்!! :)

போன வருடத்துக்கு முதல் வருடம் .... ராமின் வாணவேடிக்கை!

போன வருடம் .......................................... கேபியின் பூரிசுகள்!!

இம்முறையும் ................................................. ***னாம்!!!!!!!!!!???????????????

..... ஆண்டவா :o

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்

.... பல பல விடைகளற்ற கேள்விகள், ... எம்மை மீட்க மீண்டும் ஐரோப்பாவில் வந்து தவழ்ந்து ... இறுதிவரை தலைமையுடன் இருந்து விட்டு வந்து ஐரோப்பிய தேசமெங்கும் திரிபவர்களை நோக்கி ...

... இவர்களது தங்கு தடையற்ற ஐரோப்பா எங்கிலுமான பயணங்கள் ... மேலும் அடிக்கடி இந்திய பயணங்களும் என்றும் சிலர் அடித்துச் சொல்கிறார்கள் ... , எவ்வித தடைகளுமற்ற ஐரொப்பா தழுவிய அரசியல்(????) வேலைப்பாடுகள் தொடர்பாக ...

... இவர்களுடன் நெருங்கிய சிலர் கூறுகையில் ... இல்லை, அவர்கள் தாம் புலிகள் என்றுதான் இங்கு அரசியல் அடைக்கலம் கேட்டார்கள், இந்த நாடுகளும் (ஐரோப்பிய நாடுகள்) அவர்களது விண்ணப்பங்களை ஏற்று, அகதி அந்தஸ்தை அளித்து, புத்தகமும் கொடுத்து விட்டார்கள். அதனால் அவர்கள் இலகுவாக திரியக்கூடியதாக உள்ளது????

... இவர்களை பற்றி இன்னும் சிலர் ... இவங்கள் இங்கு வந்தது இந்திய புத்தகத்தில், பாண்டுச்சேரி பிறப்பிடமாக காட்டி பிரான்ஸ் ஊடாக வந்து திரிகிறார்கள்????

...ஆனால் சில ஊடகவியலாளர்களோ ... இந்த மேற்குலகு இன்று சிறிலங்காவிற்கு பல அழுத்தங்களை கொடுத்தாலும், விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு தொடர்பாக ஏறக்குறைய இந்திய கொள்கையையே கொண்டிருக்கின்றன. அவர்களது பார்வையில் விடுதலைப் புலிகள் ஆகிய பயங்கரவாத அமைப்பு, மீண்டும் ஓர் ஆயுத போராட்டத்தை புலம் பெயர் மக்கள் ஆதரவுடன் ஆரம்பிக்கக்கூடிய வல்லமை இன்னும் கொண்டுள்ளது. அதை மீண்டும் அரும்பும் நிலையிலேயே கிள்ளி எறிய வேண்டிய தேவை, அதற்கு மேல் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பின் மேற்குலக கட்டமைப்புகளை உடைத்தெறிய வேண்டிய செயற்பாடுகளில் அது பின்னிற்கப்போவதில்லை. ... 9/11 இற்கு பின்னம் சர்வதேச நாடுகள் தமக்குள் செய்து கொண்ட உடன்பாட்டில், எம்மை அழித்தொழித்தார்கள். அவ்வழித்தொழிப்பு கூட்டில் ஐரோப்பா என்ன, அமெரிக்கா, சீனா, இந்தியா என்று கை கோர்க்காத நாடுகள் இல்லை என்கிறார்கள். அக்கூட்டு இன்னமும் தொடர்கிறது, பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் எனும் பெயரில்!!! .. இந்த புலிக்கெதிரானமேற்குலகின் பாச்சலுக்கு, இந்திய உதவியுடன் அழைத்து வரப்பட்டு, அவர்களுக்கு கொப்பி, புத்தகங்கள் வழங்கப்பட்டு, நாடு நாடாக சென்று தவழ நல்லாசி வழங்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன் ஓர் ஊடகவியலாளர் கூறினார் .. நாங்கள் இங்கத்தயான் கொப்பி, புத்தகங்களோடு இருந்தும், வாழ்க்கையில் இரும்பு, துரும்புகள் தொட்டுக்கூட இல்லாமல் இருந்தும் ... இன்னமும் கூட நாலெழுத்து எழுதும் போது, நாற்பது தரம் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் நேற்று தவழ்ந்தவர்கள் பறக்கிறார்கள் என்றார்.

அதற்கு மேல் இங்கு முன்பு தேசிய செயற்பாட்டாளர்களாக இருந்த (20, 30 வருடங்களுக்கு முன் தொடங்கி) .. பல படிப்புக்களை படித்தவர்களுக்கு கூட ... இன்றுவரை கொப்பி, புத்தகம் மறுக்கப்பட்டிருக்கிறதாம். ஆனால் நேற்று வந்து ஐரோப்பாவில் தவழ்ந்த , தலைமையோடு இறுதிவரை இருந்தவர்களோ ...?????????????????

Edited by Nellaiyan

சங்கீதனுக்கு வெளிநாடொன்றிற்கு சென்று திரும்புகையில் ....... ஆப்பா?

  • கருத்துக்கள உறவுகள்

சங்கீதனுக்கு வெளிநாடொன்றிற்கு சென்று திரும்புகையில் ....... ஆப்பா?

அவன் சங்கீதன்.அல்லது தயாபரன். ஜேம்ஸ். தும்பன்(புலவர் எனும் பெயர்) .கரிகாலன். தமிழரசன்.சுரேஸ். சீர்மாறன் ஆகியோர் அம்புகள் வில்லு parice ல் இருக்கும் விநாயகம் எல்லாரும் சேர்ந்து BTF, அனைத்துலக செயலகம் தமிழர், தேசியம் எல்லாருக்கும் பெரிய ஆப்பு விழப்போது பின்பு நாங்கள் நினைச்சாலும் எழும்பி நிற்க முடியாது மகிந்தா LONDON ல் நின்று பைலா ஆடுவான் பார்த்துகொன்டு நிற்க வேன்டியதுதான்

Edited by purmaal

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

பரமேஸ்வரன் அறிக்கை - தேசியத்திற்கு எதிராக செயற்படுவோர்களது செயற்பாடுகள் உடைத்தெரியப்படும்

[பிரித்தானியாவில் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் அவர்கள் சமகாலத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் குழப்பங்களுக்குசில விளக்கங்களோடு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.]

இன்று தோன்றியுள்ள இறுக்கமான காலகட்டத்தில் எதிரி மிக தந்திரமாக எமக்குள்ளேயே நடமாடத் தொடங்கியுள்ளான்.

அவன் எம்மை விட தேசியப் பற்றுள்ளவனாக தன்னை அடையாளப்பபடுத்திக்கொண்டு பல சந்தர்ப்பவாதிகளை தம்முடன்இணத்துக்கொண்டு செயற்படத் தொடங்கியுள்ளான். அவனது குறிக்கோள் புலம் பெயர் மக்களை பல குழுஉடைத்துப்போடுவதுதான். தேசியத்திற்கு எதிராக செயற்படும் அனைவரும் மிக விரைவில் மக்கள் முன் நிறுத்தப்படுவார்கள் பலவிடயங்களில் நாம் வெகு நாட்களாக பொறுமைகாத்து வருகின்றோம்.

ஆனால் துரோகங்கள் வெளிப்படையாக அரங்கேறுகின்றன. தெரிந்தும் தெரியாமலும் தேசத்தின் ஒற்றுமைக்கு எதிராக நிற்பவர்கள்அனைவரும் ஒதுங்கிக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். கால ஓட்டத்தில் அனைவருடைய முகங்களும் வெளிச்சத்திற்கு வரும் அப்போது அவமானப்பட்டு நிற்க வேண்டாம் என அறிவுறுத்துகின்றோம். பொய்கள் பல காலம் தாக்குப்பிடிக்க முடியாது உண்மைகள்உடைத்துக்கொண்டு வெளிவரும் நாட்கள் தொலைவில் இல்லை.

உண்மையான போட்டிகள் என்பது எதிரியை வீழ்த்துவதில்தான் இருக்க வேண்டும். தமிழர்கள் முளுவதும் பரந்து வாழும் அனைத்துநாடுகளிலும் எதிரி மாற்றத்தை விரும்புகின்றான். அதை நிறைவேற்ற பலர் தெரியாமலும் சிலர் தெரிந்தும் களம் இறங்கியுள்ளார்கள்.அவன் விரும்பும் மாற்றத்தை நிறைவேற்றினால் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் எதிரி தப்பிவிடுவான். எம்மை வைத்தேஎமது கண்னை குத்த எதிரி தீர்மானித்து விட்டான். யார் யாரே விட்ட பிழைகளை சாதகமாக்கிக்கொண்டு உலகெங்கிலும் எமதுதேசியத் தலைவரால் வளர்த்தெடுக்கப்பட் கட்டமைப்பை அனைத்து நாடுகளிலும் உடைத்தெரிய எதிரி வெறிகொண்டுவலைவீசுகின்றான்.

எதிரி மிகச்சரியாக கணக்குப்போட்டு எவனை விலைக்கு வாங்க வேண்டும் எவனை அடித்து வழிக்கு கொண்டுவர வேண்டும் என்பதுபல துரோகிகள் ஊடாக அறிந்து வைத்துள்ளான். அவைகள் அப்பட்டமாக அரங்கேற்றப்படுகின்றன. செயற்பாட்டாளர்கள் பிழைவிட்டிருந்தால்?! நன்றாக அறிந்துகொள்ளுங்கள் பிழைகள் என்றும் திருத்தக்கூடியவைகள். ஆனால் எதிரியின் வஞ்சக வலைக்குள்விழுந்து துரோகிகளாகி விடாதீர்கள் வீழ்ந்துபோனால் காலம் என்றும் உங்களை மன்னிக்காது.

தமிழர்களின் பொது எதிரியாக சிங்களத்தை வீழ்த்த இன்று தேசியம் பேசுபவர்களிடம் ஏதாவது தொலைநோக்கு அல்லது குறுகியநோக்கு திட்டங்கள் உண்டா? இனி ஜனநாயகம் இனி எல்லாம் வெளிப்படை என ஒக்காலமிடும் இவர்களிடம் எதிரிக்கு எதிரானவெளிப்படையான திட்டம் என்ன? எதிரியை அழிக்க, குற்றவாளிக் கூண்டில் ஏற்ற இவர்களிடம் உள்ள திட்டங்கள் என்னென்ன?எவருக்காவது தெரியுமா? கணக்கு, அதற்கு இருக்கா கணக்கு, இதற்கு இருக்கா கணக்கு!. மக்களிடம் பணம் சேகரித்தேன்விடுதலைப்புலிகளுக்கு கடந்தகாலங்களில் பணம் ஒரு ரூபாய் அனுப்பினதாக ஒப்புக்கொண்டாலும் அவன் நாளை சிறைதான் செல்லவேண்டும், பணம் என்றால் பிணம் கூட எழும்பி வரும் என எதிரியின் கணக்கு அதனாலேயே செயற்பாட்டாளர்கள் மீது பண மோசடிஎன அவனது திட்டத்தை யார் யார் ஊடாகவே செயற்படுத்த முனைகின்றான்.

ஒரு நாட்டில் ஒரு செயற்பாட்டாளர்கள் அல்லது இருவர் என்றால் சிரிது யோசிக்கலாம் ஆனால் சொல்லி வைத்தாற் போல்உலகின் அனைத்து நாடுகளிலும் ஒரே பாணியையே கையாளப்படுகின்றது. கணக்கு கேள் காட்ட மாட்டார்கள் காரணம் பணம்விடுதலைப்புலிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது, கணக்கு காட்டினால் சிறை காட்டாவிட்டால் துரோகி பணத்தை அடித்துவிட்டான் எனஓரங்கட்டிவிடாலம் இதுதான் இதுவேதான் எதிரியின் தந்திரமாக கணக்கு மக்களே பல ஆண்டுகள் கடந்த பின்பே எதிரியின்சூட்சுமத்தை புரிந்துகொள்ள முடியும் எவ்வளவு சொன்னாலும் சில விடயங்கள் மட்டும் விளங்கவே விளங்காது.

இறுதியாக மக்களே சற்று நிறுத்தி ஆழமாக உங்களுக்குள்ளேயே அக்கேள்விகளை கேளுங்கள். குழப்பி விடுவதற்கு பலர் வருவார்கள்அவதானமாக இருங்கள். அழுத்தமாக கூறுவதானால் பழைய செயற்பாட்டாளர்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் புதிதாகஎவரையும் அனுமதிக்காதீர்கள், ஆதரிக்காதீர்கள் அதுவே நீங்கள் தேசியத்திற்கு செய்யும் நன்மை. யார் உண்மையாகவேலைத்திட்டங்களுடன் வருகின்றார்கள் என மட்டும் பாருங்கள் எதிரிக்கு வெளிப்படையாக திமிராக எவன் சவால் விடுகின்றார்கள்என மட்டும் பாருங்கள் அத்திட்டங்களுக்கு மட்டும் முளுமையாக அறிந்துகொண்டு உதவி செய்யுங்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகள் தலைமைச் செயலகம் என்பது தேசியத் தலைவரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த செயலகமே. அதை வேறுபெயர்களில் எவரும் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். அப்படி பயன்படுத்துபவர்களை தேசத்திற்கு எதிரானவர்களான மட்டுமேபாருங்கள்.

மேலும் பல ஆதாரங்களுடன் உங்கள் முன் விரைவில் வருவேன்.

நன்றி

என்றும் உங்களுடன்

சு.பரமேஸ்வரன்

11/11/2011

ஒலிப்பதிவினைக் கேட்க கீழ்வரும் இணைப்பில் அழுத்தவும்.

play-button.gif?w=28&h=30இந்தக்குரலுக்குரியவன் புதிய மகசீன் சிறையில் கைதியாக இருக்கிறான். எங்களுக்காக போராளியானவன் இப்ப இவனுடைய உலகம் இருளப்போற நிலமையில இருக்கு.

1998 தாக்குதலொன்றில் கண்கள் இரண்டும் பாதிப்புற்றது இவனுக்கு. பத்துவருடம் பார்வையோடு உலாவக்கூடிய வாய்ப்பை மருத்துவம் கொடுத்தது. ஆனால் யுத்தம் முடிஞ்சு இவனும் சரணடைஞ்சு இப்ப சிறையில இருக்கிறான். ஒரு கண் முழுமையாக பார்வை இல்லாமல் போயிட்டுது. மற்றக்கண்ணும் பார்வை குறைஞ்சு கொண்டிருக்கு.

இவனுடைய வீட்டிலிருந்து எல்லாச் சகோதரங்களும் போராளிகளாக இருந்தவையும் மாவீரரானவையும் தான் கூட. மாத்தளனில் இவனது அம்மா உடல்சிதறி இறந்துவிட்டார்.

இப்போ தனது குடும்பம் தெருவுக்கு வந்துவிட்டததையெண்ணியழுகிற இவன் தன்னுடைய குடும்பத்துக்கு ஒரு உதவியைக் கேட்கிறான். அடிப்படை மனிதவுரிமை வழக்குப் போட இவனிட்டை 30ஆயிரம் ரூபாவை (200€)இல்லை. இந்த உதவியை யாராவது கொடுத்தால் வெளியுலகத்தை இவனால் பார்க்க முடியும்.

தனது கண்பார்வை மீளப்பெறவும் வழக்குக்காகவும் உதவிகளை வேண்டுகிற இவனுக்கு உதவ விரும்புவோர் தொடர் கொள்ளுங்கள். உங்கள் உதவியை நீங்கள் நேரடியாகவே செய்யலாம்.

இத்தால் நான் தெரிவிப்பது என்னவென்றால் எங்களது தேசியத் தளபதி பரமேசுவரன் அண்ணாச்சி தனது கம்புறக்கர் வழக்கில் வெண்ட காசிலை 1000 பவுண்சை இந்த போரளிக்கு அனுப்பி வைப்பார் என்டு என்ரை நண்பன் நெல்லியான் உறுதி தாறார்

  • 0

இன்னம் ஒரு 50 போராளிகளின்ரை விபரம் தாங்கோ சாந்தி அக்கா எங்கடை பரமேசுவரன் அண்ணாச்சி தனக்கு கிடைச்ச காசிலை 50 ஆயிரம் பவுன்சை மாவீரர் குடு ம்பங்களை பராமரிக்க ஒதுக்கிறது எண்டு முடிவு செய்திட்டார்.அவராலை போராளிகளும் போராளி குடும்பங்களும் வாழ வழியில்லாம் துன்பப்படுறதை பார்க்க முடியேல்லை?என்டு என்ரை நண்பன் நெல்லியான் உறுதி தாறார்

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையனின் கருத்துக்கள் சரிந்த எழுத்தில் இருப்பதால்.... வாசிக்க, கஸ்டமாய் இருக்கு.

  • தொடங்கியவர்

இன்னம் ஒரு 50 போராளிகளின்ரை விபரம் தாங்கோ சாந்தி அக்கா எங்கடை

athiyan, ... 50 போராளிகளுக்கு உதவுவதற்கும், இங்கு புதிதாக தோன்றி மாவீரர்நாள் நடத்துவதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா???

... இல்லை 50 போராளிகளுக்கு உதவுவதற்கும், தலைமைச் செயலகத்துக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா???

... உந்த புதிதாக தோன்றிய தலைமைச்செயலகம் பற்றி பல கேள்விகள் கேட்கப்பட்டு விட்டது!! ஏதாவது பதில்கள் தந்தார்களா???? வெளிப்படைத்தனமையுடன் செயற்பட வந்தவர்கள் என்பவர்கள்!!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.