Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் எரிவாயு: மஹிந்தவின் அரசியல் வண்டியை ஓட்ட போதுமா?

Featured Replies

மஹிந்தவிற்கு சர்வதேச அழுத்தங்கள் மற்றும் பொருளாதார மந்தங்களினால் ஏற்பட்ட அழுத்தம், அனைத்துலக உதவி வழங்கும் நாடுகளின் நெருக்கடிகளால் காஸ் (செல்வாக்கு அல்லது சக்தி) சிறிது சிறிதாக குறைந்து செல்கின்றது.

தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தினை ஒடுக்கிவிட்டேன் என எத்தனை நாளைக்குத்தான் அரசியல் வண்டியை ஓட்டுவது. ஆதலால் அபிவிருத்தி என்ற பெயரில் கடன்களை மீற்றர் வட்டிக்கு எடுத்து துறைமுகம், வீதி, விமான ஓடுபாதை என கட்டிக்கொண்டு இருந்தார். ஆனால் இந்த அபிவிருத்தி எல்லாம் கடன் கொடுப்பவர்களிற்கான வியாபார நல வசதிகளை கொடுக்க கூடிய திட்டமே தவிர அது உள் நாட்டில் மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தக்கூடிய திட்டங்களாக அல்ல என்பதனை அதிகரித்து செல்லும் அத்தியாவசியப்பொருட்களின் விலையேற்றமே கோடிட்டுக்காட்டும்.

தவிர அனைத்துலக நிதி வழங்குனர்கள் நாணையத்தின் பெறுமதியினை குறைக்குமாறு வேறு அழுத்தம் கொடுக்கின்றார்கள். கிறீஸ் நாட்டிற்கு சர்வதேச நாணைய நிதியம் விதித்த வேண்டுகோளான வரி அதிகரிப்பு மற்றும் நாணைய பெறுமதியினை வீழ்ச்சியடைய செய்தல் ஆகியன அந்த நாட்டில் மட்டுமல்ல ஐரோப்பிய ஒன்றியத்தினையே ஒரு கலக்கு கலக்கியது நினைவிருக்கலாம்.

அதுபோலவே இப்போது மஹிந்த இராஜபக்‌ஷவிற்கும் சர்வதேச கடன்வழங்குனர்கள் நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்த சூழலில்தான் மஹிந்த நேற்று முந்தினம் மன்னாரில் எரிவாயு கண்டு பிடிக்கப்பட்டுவிட்டதாகவும் இனி சிறிலங்கா செல்வந்த நாடாக வரப்போகின்றது எனவும் ஒரு பெரும் காஸ் ஒன்றை அடித்தார். இது ஒரு பொருளாதார காஸ் என கூறலாமா அல்லது இது ஒரு அரசியல் காஸ் (Economic Gas or Political Gas) என கூறலாமா?

ஏனென்றால் மன்னாரில் கண்டு பிடிக்கப்பட்டதாக கூறப்படும் எரிவாயு படுக்கை வாணிப நோக்கில் அது பயன்படுமா என்பது ஒரு கேள்வியாக இருக்கின்றது. இந்த சூழலில் முழுமையான ஆய்வு ஒன்று வராத நிலையில் ஏன் மஹிந்த இந்த காஸ் தகவலை வெளியிட்டார்? பிரச்சினை இதுதான்; மஹிந்த இராஜபக்‌ஷவிற்கு தன் மீதான பொருளாதார , அரசியல் அழுத்தங்களை குறைக்க இந்த எரிவாயு படுக்கை தொடர்பான செய்தி மிகவும் உதவும் என எதிர்பார்த்திருப்பார்.

இந்த அறிவிப்பினால் வெளி நாடுகளுடன் பேரம்பேசி தன் மீதான அழுத்தத்தினை குறைக்கலாம். கடன்பெறும் வல்லமையினை அதிகரிக்கலாம்.சிறிலங்காவின் வாணிப சுட்டெண்ணை அதிகரிக்கலாம். இவ்வாறு பல்வேறு நலன்களை பெற முடியும்.

கான் நிறுவனமும் எண்ணெய் அகழ்வும்

மஹிந்த இராஜபக்‌ஷவின் இந்த துணிச்சலான அறிவிப்பிற்கு எரிவாயு கிணறுகளை அகழ்ந்துகொண்டிருக்கும் கேன் இந்தியா எனும் நிறுவனம் ஏன் பச்சைக்கொடி காட்டியது?

இது ஒரு சுவாரஷ்யமான சம்பவம். கேன் இந்தியா எனும் எண்ணெய் அகழ்வு நிறுவனம் கேன் எனும் ஸ்கொட்டிஸ்நிறுவனத்தின் ஓர் துணை நிறுவனமாகும். இந்த தாய் நிறுவனமான கேன் (CAIRN) எனும் அமைப்பு எடின்பேர்க்கினை தளமாக கொண்ட நிறுவனம். இந்த நிறுவனம் கிறீன்லாந்தில் எண்ணெய் அகழ்வுப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. ஆனால் அங்கு அது தோண்டிய கிணறு எல்லாவற்றிலும் எரிவாயுவோ அல்லது எண்ணெய்யோ இல்லை. இதனை வரண்ட கிணறு (Dry Well) என கூறுவார்கள்.

இதனால் இந்த நிறுவனத்தின் பங்குகள் சரியத்தொடங்கின 400 மில்லியன் வரை நட்டம் அடைந்தன. இந்த சூழலில்தான் இராஜஸ்தான் மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் எண்ணெய் அகழ்வுபற்றி கேன் நிறுவனம் சிந்திக்கத்தொடங்கியது. ஆகவே இந்தியாவில் உள்ள வேடாந்த எனும் நிறுவனத்துடன் கூட்டுச்சேர்ந்தது கேன் அமைப்பு.

கூட்டுச்சேர்ந்தவுடன் கேன் இந்தியா என்ற நிறுவனத்தினை உருவாக்கியது. இதில் சுமார் 40 விழுக்காடு பங்குகளை இந்திய நிறுவனத்திற்கு கைமாற்றியது கேன் நிறுவனம் இதன் பெறுமதி 6 பில்லியன் டொலர்கள். தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த கேன் நிறுவனத்திற்கு நல்லதொரு செய்தி தேவைப்பட்டது. அதுபோல மஹிந்த இராஜ பக்‌ஷவிற்கும் நல்லதோர் செய்திதேவைப்படுகின்றது. ஆகவே தான் மன்னார் எண்ணெய் அகழ்வு மூலம் இதனை அடைய முற்பட்டனர். மன்னாரில் தோண்டபப்ட்ட எண்ணெய் கிணறு ஒன்றில் எரிவாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது ஒரு ஆரம்ப கட்டம். முதலீட்டார்களை சந்தோசப்படுத்துவதற்காக இந்த ஆரம்ப செய்தியினை அதாவது இந்த கிணறு ஒரு வரண்ட கிணறு அல்ல ( Not Dry Well) என்ற செய்தியினை கூறி உள்ளது.

இந்த செய்தியானது வாணிபத்தில் வரட்சியில் உள்ள கேன் நிறுவனத்திற்கும் அரசியலில் வரட்சியினை எதிர்கொண்டு இருக்கும் மஹிந்தவிற்கும் நல்ல ஓர் செய்தியாக இருந்தததனால் இருவரும் ஒரு புரிந்துணர்வில் செய்தியினை நன்றாக பயன்படுத்தியுள்ளனர் எனலாம்.

ஈழநாதம்

மகிந்தர் 'சிங்களம் ஒரு செல்வந்த நாடாக' இந்த கண்டுபிடிப்பின் மூலம் வர உள்ளதாக பறையடிக்கின்றார். ஆனால் அந்த நிறுவனமோ முழுமையாக இல்லாமல் மகிந்தவுக்காகவே பாடியுள்ளது என்பது உண்மைபோலவே உள்ளது - காரணம் - இது ஒரு பாரிய செல்வம் கொழிக்கும் கண்டுபிடிப்பு என்றால் அதன் பங்கு கிடுகிடு என உயர்ந்திருக்கும், உயரவில்லை. மாறாக அது விழுந்துள்ளது.

http://www.cairnindia.com/IR/Pages/ShareChartBSE.aspx?UIDV=20&&Section=1

ஒரு பங்கின் விலை - 270 இந்திய ரூபாய்கள், இன்று IR 2.30 ரூபாவால் குறைந்தது

எரிவாயு கதை ஒரு தேர்தல் வெடிக்குண்டு: ரணில்

அரசாங்கம் குறிப்பிடும் எரிவாயுக் கதை ஒரு தேர்தல் வெடிகுண்டாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கண்டி மத்திய சந்தைக் கட்டிடத்தின் முன் இடம்பெற்ற ஐக்கியதேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்,

http://www.virakesar...asp?key_c=34158

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.