Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குறையா, நிறையா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ராஜவன்னியன் பகிர்வுக்கு, "தமிழ் பேசி, மற்ற நேரம் வேற்று மொழி பேசும் தமிழரிடம் மறக்காமல் சொல்... உன் மொழி, தமிழ் மொழியென்று"

  • கருத்துக்கள உறவுகள்

குறையா, நிறையா?

ஒரு ஏழை ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காக தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.

இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே மீதமிருக்கும்.

குறையில்லாத பானைக்கு தன் திறன் பற்றி மிகவும் பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும், கேலியும் செய்து கொண்டே இருக்கும்.

இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொறுக்க முடியாத பானை, அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.

"ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்"

அதற்கு எஜமானன் கூறினான்....

"பானையே! நீ ஒன்று கவனித்தாயா..? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை மீது நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"

இதைக் கேட்ட பானை, கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது.

குறைகள் எங்குதான் இல்லை?

-உபநியாசத்தில் ரசித்தது...

.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கொசுறு...

தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ...

சிரிக்கும்போது மட்டும் இ..ஈ..

சூடு பட்டால் மட்டும் உ...ஊ..

அதட்டும்போது மட்டும் எ..ஏ...

ஐயத்தின்போது மட்டும் ஐ...

ஆச்சரியத்தின்போது மட்டும் ஒ...ஓ...

வக்கணையின் போது மட்டும் ஒள...

விக்கலின்போது மட்டும் ...? என்று தமிழ் பேசி, மற்ற நேரம் வேற்று மொழி பேசும் தமிழரிடம் மறக்காமல் சொல்... உன் மொழி, தமிழ் மொழியென்று!

- ep.jpg ஆர்குட் குழுமத்தில் ரசித்தது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலத்தில் உலா வரும் தொழிற் பெயர்களுக்கு, பொருத்தமான தமிழர்கள் இவர்கள்தான்..

Doctor - வைத்தியநாதன்

Dentist - பல்லவன்

Lawyer - கேசவன்

North Indian Lawyer - பஞ்சாபகேசன்

Financier - தனசேகரன்

Cardiologist - இருதயரஜ்

Pediatrist - குழந்தை சாமி

Psychiatrist - மனோ

Sex Therapist - காம தேவன்

Marriage Counselor - கல்யாண சுந்தரம்

Ophthalmologist - கண்ணாயிரம்

ENT Specialist - நீலகண்டன்

Diabetologist - சக்கர பாணி

Nutritionist - ஆரோக்கிய சாமி

Hypnotist - சொக்கலிங்கம்

Mentalist - புத்தி சிகாமணி

Exorcist - மாத்ருபூதம்

Magician - மாயாண்டி

Builder - செங்கல்வராயன்

Painter - சித்திர குப்தன்

Meteorologist - கார்மேகம்

Agriculturist - பச்சையப்பன்

Horticulturist - புஷ்பவனம்

Beggar - பிச்சை

Landscaper - பூமிநாதன்

Barber - கொண்டையப்பன்

Bartender - மதுசூதன்

Alcoholic - கள்ளபிரான்

Exhibitionist - அம்பலவாணன்

Fiction writer - நாவலன்

Makeup Man - சிங்காரம்

Milk Man - பால் ராஜ்

Dairy Farmer - பசுபதி

Dog Groomer - நாயகன்

Snake Charmer - நாகமூர்த்தி

Mountain Climber - ஏழுமலை

Javelin Thrower - வேலாயுதம்

Pole vaulter - தாண்டவராயன்

Weight Lifter - பலராமன்

Sumo Wrestler - குண்டு ராவ்

Karate Expert - கைலாசம்

Kick Boxer - எத்திராஜ்

Musician - இசைச் செல்வன்

Bowler - பாலாஜி

Spin Bowler - திருப்பதி

Female Spin Bowler - திருபுர சுந்தரி

Driver - சாரதி

Attentive Driver - பார்த்த சாரதி

.......................

.......................

..உங்களுக்கு உதிக்கும் பொருத்தமான தமிழ்ப் பெயர்களை பதியுங்களேன்.. :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.