Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணை கட்டி விட்டதைப்போல்.. கார்த்திகை 27

Featured Replies

பரிஸில் புலனாய்வுதுறையை சேர்ந்த வினாயகம்( இவர் முன்னால் தட்டிவானில் கிளினராக இருந்தவர் மாலாவியிலும்) 96 ஆண்டு கைதடியில் பெரிய புலனாய்வு பயிற்சிமுகாம் இருந்தது அங்கை முதல்நால் பயிற்சி ஆரம்ப நாளில் பொட்டு அம்மான் , கபிலம்மான் கூட வந்தவர் ( கஜன் . திருகுமறன்)( மறைமுகமாக சீக்ரெட் பிடிப்பவர் இப்ப பரிஸில இவர் ஒரு வெளியில் ஊரில் செய்வது போல பந்தம் எல்லாம் கொழுத்தி மாவீரர்நாள் கொண்டாட போகிறார்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அவர்களுக்கு!

தங்கள் கட்டுரை வாசித்தேன். அதில் உள்ள பல கருத்துக்களை நான் வரவேற்கிறேன். மாவீரரர்தினம் ஒரு இடத்திலேயே சிற்பாக நடக்க வேண்டுமென்பதில் எல்லோருக்கும் ஒரே கருத்துத்தான்.

"பல்லாயிரம்போராளிகளின்குருதியில்நனைந்துமென்மேலும்சிவப்பாகிப்போனதமிழீழதேசியக்கொடிமாவீரர்நாள்மண்டபவாயிலில்பட்டெளிவீசிப்பறக்கமாவீரர்களின்நினைவுகளைசுமந்துமண்டபத்தில்நுளையும்போதுமாவீரன்எங்கள்தலைவனின்புன்னகைபடங்கள்வரவேற்கஆண்டுதோறும்வழைமைபோலகார்த்திகை 27 மதியம்கடக்கும்நேரம் "தாயகக்கனவுடன்சாவினைத்தழுவியசந்தணப்பேழைகளே "என்கிறபாடல்ஒலிக்கமண்டபத்தில்மாவீரர்களதுபடங்கள்மீதும்அவர்களதுநினைவிடங்களின்மீதும்மலர்களைஅள்ளித்தூவிமனம்விட்டுஅழுதுஅவர்களிற்குஅஞ்சலிசெலுத்தநாங்கள்வரவேண்டும்"

மாவீரர்கள் எம்மக்களின் சொத்துக்கள். சீட்டுப்போடடுப் (பணத்துக்கல்ல..) உயிர்கொடுக்கச் சென்ற உத்தமர்கள். அந்த மாவீரரர் பெயரால் தங்களையும் தங்கள் குடும்பங்களையும் வாழவைக்க நினைப்பவர்கள் எப்போதும் நின்மதியாக வாழ முடியாது.

இப்போது தங்கள் இருப்புகளை தக்கவைக்க துடிக்கும் கூட்டத்திடம் ஆள் அணி, பணம், அதிகாரத் திமிர் நிறைந்துள்ளது, நான் கையசைத்தால் செயற்பட பல பிரதிநிதிகள் இருக்கிறார்கள். ஆதலால் நாங்கள்தான் செய்வோம். பொதுமக்களிடம் வேண்டிய காசுக்கு யாருக்கும் கணக்கு காட்ட வேண்டியதில்லை… என்பவர்கள் பற்றி என்ன செய்யலாம்?

"புதியதொருகட்மைப்பினைகட்டியமைத்துபோராட்டத்தைஅடுத்தகட்டத்திற்குநகர்த்தப்போவதாககூறும்இவர்கள்.முதலில்பொதுக்கூட்டங்களைகூட்டிமக்கள்முன்தோன்றியோ .அல்லதுஊடகங்களானவானொலிதொலைக்காட்சிகளில்பங்குபற்றியோஇறுதியுத்தத்தின்போதுநடந்தசம்பவங்கள்பற்றிபுலம்பெயர்தேசத்துதமிழர்களிள்மனங்களில்தத்தளிக்குபலநூறுகேள்விகளிற்குபதில்கொடுத்துமுதலில்அவர்களிற்குதெளிவைக்கொடுக்கவேண்டும். அதன்பின்னர்அடுத்தகட்டத்திற்குபோராட்டத்தினைஎப்படிநகர்த்துவதுஅல்லதுநகர்த்தலாம்எக்கிறஆலோசனைகள்பகிரங்கமாககலந்துரையாடப்படல்வேண்டும்"

புதியவர்கள், சில கூட்டங்களைக் கூடியதாகவும், மேற்கண்ட தன்மையுள்ளவர்கள் அக் கூட்டத்திற்கு பெருந்தொகையாகச் சென்று, புதியவர்களை கீழ்த்தரமாகப் பேசி, அடிக்கச் சென்றதாகவும் ஒரு செய்தி. இதேவேளை நாடுகடந்த தமிழீழக் கூட்டம் நடைபெற்ற இடங்களுக்கே இவர்கள் சென்று அடாவடித்தனம் பண்ணியவர்கள். இந்த நிலையில் புதியவர்கள் என்ன செய்ய முடியும்? தப்பி வந்த பல போராளிகளின் முழுவிபரங்களும் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டு வந்தது நீங்கள் அறிந்திருக்கக்கூடும். அங்கு உயிரைக் கொடுக்க முன்நின்றவர்கள் புலம்பெயர்ந்த வந்து வாழும் நாட்டில், தங்கள் வதிவிட உரிமையையாவது காப்பாற்ற வேண்டியது கட்டாயமல்லவா?

"எனவே மாவீரர் வணக்க நிகழ்வினை யார் ஒழுங்கு செய்தாலும். கொத்துறொட்டிக்கடை புடைவைக்கடை ஏசியன் சாமான் கடை என்று எதுவுமில்லாமல் வியாபார நோக்கமற்று"

எல்லா மாவீரர்தினத்துக்கும் போக்கோ… வியாபார நோக்கமில்லாமல் நடைபெறும் இடத்தைப் பாராட்டுங்கோ.

வணக்கம் செண்பகன் புதிதாக இறுதி யுத்தம்வரை பங்கேற்றுவிட்டு வெளிநாடு வந்ததாக கூறிக்கொள்பவர்கள் தாராளமாய் மாவீரர் தினத்தினை ஏற்பாடு செய்யலாம் அதில் எந்தத் தவறும் இல்லை ஆனால் நான் கேட்டபோல பலரிடமும் உள்ள பல சந்தேககங்களை தெளிவு படுத்தினால் நிச்சயம் நாங்களும் அவர்கள் பின்னால் செல்வோம். பிரான்சில் ரி.ஆர் ரி வானலையில் நடந்த பகிரங்க விவாதத்தின்போது புதிய மாவீரர் ஏற்பாட்டு அணியின் சார்பாக தமிழரசன் என்பவர் (யெர்மனியில் இவரது பெயர் கரிகாலன்) கலந்து கொண்டபொழுது நான் பல சந்தேகங்களை அவரிடம் கேட்டிருந்தேன் எதற்குமே சரியான பதில் இல்லை சந்தேகங்கள்.

1)இறுதிவரை தலைவருடன் நின்றாக கூறுகிறவர்கள் தலைவருடன் உண்மையாகவே நின்றிருந்தால் அவரிற்கு என்ன நடந்தது அவர் எங்கே அந:த இறுதிக்கணங்கள் எப்படியானது என்பதை விளக்கவேண்டும்.

2) தற்சமயம் புதிய குழுவினரை பிரான்சிலிருந்து வழிநடத்தும் வினாயகத்தின் மனைவி பிள்ளை திருகோணமலை இராணுவ முகாமிலேயே தடுத்து வைக்கப் பட்டிருக்கின்றனர். அவரது சகோதரர் இலங்கை புலனாய்வு பிரிவினருடன் சேர்ந்து இயங்குவது பகிரங்கமானது. திருகொணமலை இராணுவ முகாமிலிருக்கும் தனது மனைவி பிள்ளையுடன் தொடந்தும் தொடர்பில் இருப்பவர் வினாயகம். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உண்டு அப்படியான ஒருவரால் புலம்பெயர் தேசங்களில் சுதந்திரமாக தமிழ்மக்களின் அடுத்த கட்ட போராட்டத்தை வழிநடத்தமுடியும்.

3) வினாயகத்தின் அரசியல் தஞ்ச கோரிக்கை பிரான்ஸ் அகதிகள் அமைப்பினால்O.F.P.R.A நிராகரிக்கப் பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் அவர் மேன்முறையீடு செய்யவும் முடியாதென தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரம் இவர் சர்வதேச காவல்துறையால் தேடப்படுவோர் பட்டியலிலும் உள்ளார் இப்படியான ஒருவரால் எப்படி இன்னமும் ஜரோப்பா முழுவதும் சுதந்திரமாக நடமாட முடிகின்றது. எந்தகடவுச்சீட்டில் நடமாடுகிறார்.

4)புதியகுழு மக்களிடம் மாவீரர் தினத்திற்கு பணம் சேகரிப்பதில்லை அதே நேரம் கொத்து றொட்டிபோடுவதில்லையென அறிவித்திருக்கிறார்கள் நல்ல விடையம். புதிதா வந்தவர்கள் இன்னமும் அகதி அந்தஸ்த்து அங்கீகரிக்கப்படாதவர்கள் ஒழுங்கான வேலைகூட கிடையாது இவர்கள் எப்படி மண்டப செலவுகளை சமாளிக்கிறார்கள். மண்டபம் எடுக்காமல் திறந்தவெளியில் நிகழ்வுகளை நடத்தினாலும் பணம் சேகரிக்கபடாது என்று அறிவித்து விட்டு பிரான்சில் 20யுரோ றிக்கற் அடித்து விற்பதற்கான ஏற்பாடு எதற்கு அந்தப் பணம் யாரிற்கு

5)புலிகள் அமைப்பானது ஜரோப்பாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகவே உள்ளது அப்படியிருக்க புலிகள் அமைப்பில் இறுதிவரை இருந்து ஆயுதமேந்தி போராடிவிட்டு வந்தவர்கள் புலிகளின் பெயராலேயே மாவீரர் தினத்தை இங்கும் முன்னெடுப்தால் சட்ட சிக்கல்கள் வந்து இனிவரும் காலங்களில் மாவீரர் தினத்தையும் ஜரோப்பாவில் தடைசெய்யும் நிலைவராதா

6)மாவீரர் குடும்பங்கள் பற்றிய விபரங்கள் முன்னரே அனைத்துலசெயலகத்தினடரிடம் உள்ளது அனால் இப்பொழுது புதிதாக வந்தவர்கள் மாவீரர் குடும்பங்களை கொளரவிக்கவேண்டுமென திரும்ப திரும்ப அனைத்து நாடுகளிலும் அவர்களது விபரங்களை சேகரிக்கின்றார்களே அது எதற்கு நிங்கள் மாவீரரை கௌரவித்தாலே போதுமானது அவர்களது குடும்ப விபரங்கள் உங்களிற்கெதற்கு

7)புதிதாக வந்தவர்கள் உண்மையில் அடுத்தகட்ட போராட்டத்தை வழிநடத்துவதானால் செய்ய வேண்டிய வேலைகள் ஆயிரம் உள்ளது மக்களை சந்தித்து கூட்டஙகள் வைத்து குழம்பிப் போயுள்ள மக்களை மீளவும் ஒருங்கிணைக்கவேண்டும் ஜரோப்பிய அரசுகளிற்கு இறுதி யுத்தத்தில் நடந்த மனிதப் படுகொலைகளை அதன் நேரடி சாட்சிகாளக நீங்கள் மாறி விபரங்களை வெளியிடவேண்டும் ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு மாவீரர் தினத்தை நடத்துவதிலும் பழைய பொறுப்பளர்களிடமிருந்து சொத்துக்களை பறிப்பதுமட்டுமே நோக்கமாக கொண்டு செயற்படுவதும் ஏன்

இப்படி பல கேள்விகளை கேட்டிருந்தேன் ஆனால் பதில் என்னமோ ஜெகோவின் சாட்சிகள் மாதிரி

திரும்ப திரும்ப மாவீரரை மதிக்கவேண்டும் தலைவர் வழிநடக்கவேண்டும் என்று மட்டுமே தமிழரசன் சொல்லிக்கொண்டிருந்தார் அலுப்படித்து விட்டது. இனியும் தமிழரசன் எங்கையாவது கதைக்கவந்தால் அவரின்ரை சொந்த விபரங்களையம் அவரது அகதி விண்ணப்ப விபரங்களையும் சொல்லி அவரை திட்டி அனுப்பத்தான் இருக்கிறன்.

Edited by sathiri

வினாயகம் புலிகளின் புலனாய்வு பொறுப்பாளர் ஆனால் இப்ப பிரச்சனைக்கு உரியவர்..ஆனால் புலம் பெயர் செயற்ப்பாட்டளர்களும் வெருட்டி வேலைவாங்கிற வேலைகளை விட்டு விட்டு மீண்டும் பழையமாதிரி நடப்பாக மக்களுடன் நெருங்கி பழக வேண்டும்....

நீங்கள் சந்தித்தவரை நானும் சந்தித்தேன். அவரின் உரையாடலில் இருந்தும் வேறு சிலரின் உரையாடலில் இருந்தும் இங்குள்ள பல செயற்பாட்டளர்களின் நடவடிக்கையிலிருந்தும் கடந்தகாலங்களில் ஏற்பட்டுள்ள, நான் நேரடியாக அவதானித்த விடயங்களிலிருந்தும் ஏற்கனவே செயற்பட்டவர்கள் உண்மையானவர்கள் இல்லை என்பது என் முடிவு. உண்மையாக மாவீரரை நேசிப்பவராக இருந்தால், காத்திகைப் பூ பொறிக்கப்பட்ட மாவீரர் தின விளம்பரச் சுவரொட்டிகளை எப்படிக் கிழிப்பார்கள். மாவீரராகள் இவர்களுக்கு என்ன கொடுமை செய்தார்கள். இப்படியானவர்களை ஆதரிக்க முடியுமா? நெஞ்சு பொறுக்குதில்லை…

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.