Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணிப்பதிவு, நில அபகரிப்பு, திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்திற்கு எதிராகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உண்ணாவிரதம்!

Featured Replies

வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் நிலவுகின்ற பல்வேறு பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவதுடன், வடக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள காணிப் பதிவு, நில அபகரிப்பு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் என்பவற்றுக்கு எதிராத் தமிழ்தேசிய கூட்டமைப்பு உண்ணாவிரதம் ஒன்றினை நடத்துவதற்குத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

வவுனியாவில் கூடிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் பிரதிநிதிகள் இன்றைய நிலையில் தமிழ் மக்கள் வடக்கு கிழக்குப் பகுதிகளில் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலநதுரையாடியுள்ளனர்.

இப்பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தினதும், சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை வவுனியா நகரசபை மண்டபத்தில் இந்த அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொள்வது என இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

1. முல்லைத்தீவு மாவட்டத்தில் எல்லைகளை மாற்றி, வெலிஓயா என்னும் புதிய பிரதேச செயலாளர் பிரிவை உருவாக்குவதன் மூலம் அந்த மாவட்டத்தின் இனவிகிதாசாரத்தை மாற்றி இனங்களுக்கிடையில் கசப்புணர்வையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தும் செயற்பாட்டை உடன் நிறுத்துக.

2. போரினால் சின்னாபின்னமாக்கப்பட்டு உறவுகளையும் சொத்துக்களையும் இழந்து நிற்கும் நிலையில், காணிப்பதிவு என்னும் போர்வையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மோசடியான நில அபகரிப்புச் செயற்பாடுகளை உடன் நிறுத்துக.

3. வடக்கு-கிழக்கு மாகாணங்களில் இலட்சக்கணக்கான தமிழ் பேசும் மக்கள் காணி, வீடுகள் அற்று நிர்க்கதியான நிலையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவ குடியேற்றங்கள் மற்றும் பெரும்பான்மையின மக்களின் குடியேற்றங்களை ஏற்படுத்துவதன் ஊடாக இன ஒற்றுமையைக் குலைக்கும் செயற்பாட்டினை உடன் நிறுத்துக.

அன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ள உண்ணாவிரதம் மாலைவரையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதம் தொடர்பான கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.

http://www.pathivu.com/news/18771/57//d,article_full.aspx

சிங்கள அரசின் நிலப்பறிப்பு நடவடிக்கையில் ஒன்றான முல்லைத்தீவினை இருகூறாக்கும் திட்டத்திற்கும் மற்றும் சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அந் நடவடிக்கைகளைள அரசின் கவனத்திற்குக் கொண்டுவரும் நோக்கிலும் எதிர்வரும் 17 ஆம் திகதி வவுனியாவில் தமிழ்க் கட்சிகள் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தை இருகூறாக்கி வெலிஓயா என்னும் புதிய பிரதேச செயலாளர் பிரிவை உருவாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளளப்பட்டு வருவதுடன் தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில அபகரிப்பை அரசு செய்து வருவதாகவும் அத்துடன் தமிழர் பகுதிகளில் காணி மீள் பதிவு நடவடிக்கை மேற்கொள்ளளப்பட்டு வருவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் இவை தொடர்பில் அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டும் இந்த உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபை மைதானத்தில் எதிர்வரும் 17ம் திகதி காலை 7 மணிக்கு இவ் உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழ் கட்சிகள் மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். மூலம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.