Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லியாம் பொஃக்ஸ் இலங்கையுடன் இரகசிய ஆயுத ஓப்பந்தம்: சனல் 4 (காணொளி இணைப்பு)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

c4.JPG

பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளர் லியாம் பொஃக்ஸ் அவர்கள் மேலும் சிக்கலில் மாட்டியுள்ளார். அவரும் அவரது நண்பருமான அடாம் ரிட்டியும் கடந்த 10 வருடங்களாக இலங்கை சென்றுவருவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது ரிட்டியைப் பாவித்து இலங்கை அரசானது ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயற்சித்திருப்பதாக அதிர்ச்சியான தகவல் ஒன்றை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இருந்து கிடைக்கப்பெற்ற இரகசிய மற்றும் காத்திரமான தகவல் இது எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையைச் சேர்ந்த அதி முக்கிய நபர் ஒருவர் கொடுத்த வாக்குமூலத்தை வைத்தே சனல் 4 இத் தகவலை வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசின் மிக நெருங்கிய நண்பரான லியாம் பொஃக்ஸ் அவர்கள் தன்னுடன் தனது நண்பரையும் எப்போதும் அழைத்துச் செல்வது வழக்கம் என்று சொல்லப்படுகிறது. அத்தோடு அவர் நணபர் பல தடவை பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலகத்துக்கு வியஜம் செய்வது, அந் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு மிகுந்த ஆபத்தாக உள்ளதாக பிரித்தானியப் பத்திரிகைகள் ஏற்கனவே செய்திகளை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தலைமை அமைச்சர் டேவிட் கமரூன் அவர்கள் லியாம் பொஃக்ஸை அழைத்து பேசியுள்ளார். இருப்பினும் டேவிட் கமரூன் அவர்கள் தனது அமைச்சரவையில் உள்ள லியாம் பொஃக்ஸ்சுக்கு ஆதரவாகவே செயல்பட்டார்.

ஆனால் தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மிகப் பாரதூரமானவையாக உள்ளது. லியாம் பொஃக்ஸின் நண்பர் அடாம் ரிட்டி அவர்கள் இலங்கையில் தங்கிருந்த கால கட்டத்தில் அவர் செலவுகளை இலங்கை அரசே பொறுப்பேற்றதாக சனல் 4 தொலைக்காட்சி தற்போது குற்றஞ்சாட்டியுள்ளது.

அரச முறைச் சுற்றுப் பயணத்தில் லியாம் பொஃக்ஸ் செல்லும் போது அவர் நண்பரான அடாம் ரிட்டியை இவர் அழைத்துச் சென்றது தவறு என்ற கருத்துக்களும் ஏற்கனவே முன்வைக்கப்படமை குறிப்பிடத்தக்க விடையமாகும். எது எவ்வாறு இருப்பினும் தற்போது லியாம் பொஃக்ஸுக்கும் மேல் பிரயோகிக்கப்படும் ஊடக அழுத்தம் நீடித்தால் அவர் நிச்சயம் பதவி விலக நேரிடும் என நம்பப்படுகிறது. அது நடந்தால் தமிழர்களுக்கு மேலும் பலம் ஓங்கும் என்பதில் ஐயமில்லை.

சனல் 4 (காணொளி இணைப்பு) பார்க்க கிழே உள்ள இணைப்பை அழுத்தவும் :

http://bcove.me/jkvqrrlg

http://www.vannionli...11/10/4_12.html

Edited by தமிழ் அரசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆத்தாடி ..... கதை அப்படி போகுதோ

யம்மா ...... எம்மாம் பெரிய புறம்போக்கு நீயி மருவாதையோட பதவிய றிசைன் பண்ணிட்டு கன்னுகேட்ட தூரம் ஓடிடு மவனே சொல்லிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எத்தனை தலைகளோ, பாகி மூன்?

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: :rolleyes: :rolleyes:

என்னும் வெளிவராத எத்தனை உண்மைகள் புதைந்துள்ளதோ ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.