Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துரியோதனன் அமைத்த அரக்கு மாளிகையும் வன்னியின் அபிவிருத்திக் காட்சியும்

Featured Replies

துரியோதனன் அமைத்த அரக்கு மாளிகையும் வன்னியின் அபிவிருத்திக் காட்சியும்

வெளியழகும் அகோரமான உட்பகுதியும் கொண்டமைந்த மெழுகிலான கட்டிடத்தை அரக்கு மாளிகை என்று கூறுவர். பாண்டவர்கள் வனவாசம் செல்லும் கால் அவர்களை தீயிட்டு அழிக்கும் நோக்குடன் துரியோதனன் அமைத்துக் கொடுத்தது அரக்குமாளிகை என்பது இதிகாசம் கூறும் கதை. யாழ்.குடாநாட்டில் டெங்கு பரவுவது கூட எங்கள் அரக்கு நிலைத் தூய்மை என்பது உணர்தற்குரியது. வீட்டு முற்றம் தூய்மையாக இருக்க, கோடிகள் நுளம்பின் உற்பத்தி மையங்களாக இருக்கும். இதன் காரணமாக நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இங்கு அரக்குமாளிகை என்ற விடயம் பிரஸ்தாபிக்கப்படுவதன் நோக்கம், வன்னிப் பெருநிலப்பரப்பின் சமகால நிலைமையை வெளிப்படுத்துவதாகும். வன்னிப் பெருநிலப்பரப்பில், ஏ-9 வீதி திருத்தப்படும் ஆரவாரம், வன்னியில் பெரும் அபிவிருத்தி நடைபெறுகின்றது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், வன்னி மக்கள் யுத்தத்தில் இழந்த எதனையும் பெறமுடியாத சோகத்தில் மூழ்கி இருப்பது மட்டுமன்றி அங்குள்ள வளங்கள் சூறையாடப்படும் வேதனையை சகிக்க முடியாதவர்களாக விம்மி வெதும்பிக் கொள்கின்றனர்.

பெரும்பான்மை இனத்தவரின் ஆக்கிரமிப்பு, படைத்தரப்புகள் கபளீகரம் செய்துள்ள நிலப்பரப்பு, மீள்குடியமர அனுமதிக்கப்படாத வாழ் விடங்கள் மற்றும் பயிர் செய் நிலங்கள் என்ற பெருந் துன்பத்திற்குள், எரிகின்ற வீட்டில் எடுப்பது கொள்ளி என்பது போல ஆட்கள் இல்லாத இடங்கள் எங்கும் குறிப்பிட்ட பகுதியினர் சென்று இரும்பு, செப்பு உள்ளிட்ட உலோகங்களை சேர்த்து தென் பகுதிக்குக் கொண்டு செல்கின்றனர். பூர்வீகமாக வாழ்ந்த எங்கள் மண்ணில் நடப்பதெல்லாம் அநீதி என்ற பெருமூச்சில் வன்னி மக்கள் தெருப்புழுதியை சுவாசித்து தறப்பாளின் கீழ் குந்தியிருந்து சீவியம் நடத்துகின்றனர்.

இதற்கு மேலாக வன்னி நிலைமை பற்றி அறிய வருபவர்கள், அமைச்சர்கள், அரச நிர்வாகிகள், பாராளுமன்றப் பிரதிநிதிகளோடு சந்தித்து விட்டுச் செல்கின்றனர். ஆனால், உண்மை தெரிந்தவர்கள், இழப்பின் வலியை அனுபவித்துக் கொண்டு இருப்பவர்கள் மெளனமாக வெறுத்துப் போய் இருக்கின்றனர். வெளியில் அபிவிருத்தி போன்ற தோற்றம், உள்ளே பெருந்துன்பச்சுமை, இந்த அரக்கு நிலைதான் வன்னியின் தற்போதைய நிலைமை.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=23981

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் அகூதா! சற்று உன்னிப்பாக அவதானித்தால், வன்னி வீதித்திட்டங்களில் அநேகமாகப் பெரும்பான்மை இனத்தவரே வேலை செய்கின்றனர்! மிகவும் கீழ்நிலை வேலைகளில், சில தமிழர்கள் உள்ளனர். உதாரணமாக, வாகனங்களை நெறிப்படுத்தல் போன்றவை. மற்றும்படிக்கு, வெளி நாட்டு உதவிகளைப்,பெரும்பான்மையினருக்கு போய்ச் சேரும் வகையில், இந்தத் திட்டங்கள் செயல் படுத்தப் படுகின்றன! அத்துடன் மேல் நாடுகளில் மக்டோனால்ட்ஸ் இருப்பது போல ,இடைக்கிடை ஓர் புத்தரும், ஆமைத்துறுவும் அமர்த்தப் படுகின்றனர். பெர்ய மூளைகள், இதன் பின்னால் இயங்குகின்றன என்பது மட்டும், வெள்ளிடை மலையாகத் தெரிகின்றது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.