Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈ.பி.டி.பி., இராணுவப் புனலாய்வுப் பிரிவே இத் தாக்குதலை நடத்தியது – சிறிதரன் எம்.பி கண்டனம் (Video & Photo in)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

univer_jaff_03-150x150.jpg

தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்க வல்லவர்களும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றார்கள் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் தாக்கப்பட்ட சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்.

அதுமட்டுமன்றி மேற்படி சம்பவத்தினை எதிர்த்து தனது கண்டனத்தையும் வெளியிட்டு தமிழ் மக்களின் பிரதிநிதி என்பதை நிலைநாட்டியுள்ளார் சிறிதரன்.

அந்த வகையில் இச் சம்பவம் தொடர்பில் அவர் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்தவை வருமாறு,

http://youtu.be/OXXkWL3jKXQ

தமிழ் மக்கள் வெகுஜன ரீதியாக தங்களது குரல்களை வெளிப்படுத்துவதற்கு தமிழ் பகுதிகளில் எந்தவித உரிமையும் இல்லை என்பதை யாழ். பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவர் மீதான தாக்குதல் எடுத்துக்காட்டுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ். பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவர் தாக்கப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதைப் பார்வையிட்ட பின்னர் ஊடகவியலாளரிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சமூகத்திற்கு மத்தியில் எழுச்சியை இல்லாமல் கட்டுப்படுத்துவதற்காக தமிழீழமா கேட்கிறார் என்று கேட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை சின்ன விடையமாக பார்க முடியாது எனவும், மாணவன் மீதான தாக்குதல் ஈபிடிபி அல்லது இராணுவப்புலனய்வவைத் தவிர யாருமே செய்ய முடியாது. இந்த யாழ்ப்பாண மண்ணில் இவர்களைத் தவிர யாரும் செய்யமுடியாது இது. நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது.

மர்ம மனிதர்களின் பிரச்சனைகளிலும் தமிழ் மக்களின் காணிபறிப்புத் தொடர்பாகவும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கதைத்து இருக்கிறார்கள்.

அதேவேளை மர்ம மனிதர் விவகாரம் தொடர்பாக போரட்டங்கள் நடத்தியிருக்கின்றார்கள். மர்ம மனிதர்கள் பிரச்சனைகள் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் இந்த விடையத்தைக் கையாண்டு இருக்கின்றனர்.

இதன் காரணமாக இந்த மாணவன் தாக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் கடந்த உள்ளுராட்சித் தோர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கச் சொல்லி மக்களுக்கு அறிக்கை விட்டதுடன் இந்த மாணவன் அதில் இவர் கையெழுத்து ஈட்டவர்.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கச் சொல்லி அறிக்கை விட்டவர். இதனால் இவர் தாக்கப்பட்டிருக்கலாம்.

இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இது ஒரு எதேச் சதிகாரச் செயல். தமிழ் சமூகத்தை இன்னுமொரு அடக்குமுறைக்குள்ளும், வாய்பேச முடியாத மௌனிகளாக வைத்திருப்பதற்கு அரசாங்கம் செய்யும் செயல்.

இது மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலான நிலைதான் இன்று தோன்றியிருக்கிறது. இது விடயம் தொடர்பாக எங்களுடைய சமூகம் உன்னிப்பாக கவணித்துக் கொண்டு இருக்கிறது.

எமது கட்சியும் இந்த விடையம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள இருப்பதாகவும்

தழிழ் மக்கள் வெகுஜன ரீதியாக தங்களது குரல்களை வெளிப்படுத்துவதற்கு எந்த தமிழ் பகுதிகளிலும் உரிமையும் இல்லை என்பதை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது என்றார்.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமைகளை அவதானித்துள்ளனர்.

univer_jaff_03.jpg

univer_jaff_05.jpg

univer_jaff_01.jpguniver_jaff_04.jpg

univer_jaff_02.jpg

http://www.tamilthai.com/?p=28590

இதெல்லாம் கனகாலத்துக்கு போகாது மாணவன் மனது வைச்சால்

ஈ.பி.டி. பி. காடையர்களும் சிங்களப் பயங்கரவாதிகளும் சேர்ந்து செய்த தாக்குதல் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வலுவான ஆதாரங்கள் உரிய மேலை நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்-பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் தாக்கப்பட்டது தொடர்பாக மறைக்கப்பட்ட உண்மைகள் மக்கள் பார்வைக்கு.

t-thaninaadu%20%281%29.jpgயாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் சுப்பிரமணியம் அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை 15-2011 அன்று யாழ் கந்தர்மடம் பகுதியில் உள்ள பழம் வீதியில் வைத்து சிறீலங்கா இராணுவ புலனாய்வுத்துறையினரால் தாக்கப்பட்டுள்ளார்.

பழம் வீதியில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உப அலுவலகத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், உபதலைவரும் வெளிவிவகார குழுத் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் உபதலைவர்களில் ஒருவரான திருமதி பத்மினி சிதம்பரநாதன் அவர்களையும் சந்தித்து உரையாடிவிட்டு தனது தங்குமிடத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது வீதியில் காத்திருந்த சிலர் இவர் மீது இரும்புக் குழாய்கள் மற்றும் கொட்டன்களால் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

அலறல் சத்தம் கேட்டு அயலில் உள்ள பொது மக்கள் வெளியே வந்து குவியத் தொடங்கியதும் தாக்குதலாளிகள் பதற்றமடைய அவர்களது பிடியில் இருந்து விடுபட்டு தப்பி ஓடிய தவபாலசிங்கம் அவர்களை ஒரு மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்று இரண்டு தாக்குதலாளிகள் மீண்டும் தாக்க முற்பட்டபோது அவ்விடததிற்கு விரைந்து சென்ற ஏனைய மாணவர்களும் செல்வராசா கஜேந்திரன் மற்றும் பொது மக்களது தலையீட்டால் தாக்குதலாளிகளால் அவர் மீது மீண்டும் தாக்குதல் மேற்கொள்ள முடியாத நிலையில் தப்பி ஓடியுள்ளனர்.

தவபாலசிங்கம் மீட்கப்பட்டு பழம் வீதியில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் அவர்களது வீட்டில் வைத்து முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது வாகனத்தில் யாழ் போதனா வைத்திசாலைக்கு அழைத்துச் செல்லப்ப்பட்டிருந்தார்.

தவபாலசிங்கம் அவர்கள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவராக மாணவர்களால் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். எனினும் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கல்வி அமைச்சின் அழுத்தங்கள் காரணமாக பல்கலைக்கழக துணை வேந்தர் அவரது தெரிவை ஏற்றுக் கொள்ள மறுத்தமையினால் பலமாதங்களாக உத்தியோக பூர்வமாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உருவாக்கப்படாத நிலை காணப்பட்டது. எனினும் துணை வேந்தரது நடவடிக்கைக்கு மாணவர்கள் கடுமையான எதிர்ப்பினை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த இரண்டு ஒன்றரை மாதத்திற்கு முன்னர் மாணவர் ஒன்றியம் உத்தியோக பூர்வமாக அமைக்கப்பட்டது.

எனினும் அந்த மாணவர் ஒன்றியம் உத்தியோக பூர்வமாக அமைக்கப்படுவதற்கு முன்னர் தவபாலசிங்கம் பதவியை ஏற்கக் கூடாது என்றும் மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட தெரிவை நிராகரிக்க வேண்டும் என்றும் அவருக்கு இராணுவப் புலனாய்வுத் துறையினராலும், ஈபிடிபி அமைப்பினராலும் தொடர்ச்சியான மிரட்டல்கள் விடுக்கப்பட்டது. எனினும் அவர் மிரட்டல்களுக்குப் பணியாது உறுதியாக நின்றமையினால் வேறு வழியின்றி அவரது தெரிவை ஏற்க வேண்டிய நிற்பந்தம் நிர்வாகத்திற்கு ஏற்பட்டது.

உத்தியோக பூர்வமாக பல்கலைக்கழக துணைவேந்தரால் அவரது தெரிவு ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்னதாகவே அவர் மாணவர்களது நலன்சார் வேலைத்திட்டங்களையும், பொது மக்கள் நலன் சார் வேலைத்திட்டங்களையும் தமிழ் தேசியம் சார் வேலைத்திட்டங்களையும் ஆரம்பித்திருந்தார். தமிழீழ நினைவு நிகழ்வுகள் பலவற்றை பல்கலைக்கழகத்திற்குள் நாடத்துவதில் அவர் முன்னின்று செயற்பட்டுள்ளார். ஓவ்வொரு செற்பாடுகளும் ஈபிடிபி அடிவருடிகளாலும் இராணுவ புலனாய்வு பிரிவுடன் வேலை செய்பவர்களாலும் உடனுக்குடன் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு நிகழ்வுகளின் பின்னரும் அவருக்கும் மேலும் சில மாணவர்களுக்கும் இராணுவப் புலனாய்வாளர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவங்கள் தொடச்சியாக இடம் பெறறுள்ளது. எனினும் அவர்கள் அந்த மிரட்டல்களுக்கு அஞ்சாது தொடர்ந்தும் தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையல் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பயப்பீதியை ஏற்படுத்தியிருந்த கிறீஸ்பூதம் மற்றும் மர்ம மனிதர்கள் தொடர்பான விடயங்களில் இராணுவத்தினருக்குள்ள நேரடித் தொடர்புகளை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டி எதிர்ப்புப் போராட்டத்தையும் பல்கலைக்கழகத்தினுள் மேற்கொள்ளப்படுவதற்கு காரணமாக இருந்துள்ளனார்.

இதனைத் தொடர்ந்து இவருக்கும் இன்னும் சில மாணவர்களுக்கும் இராணுவப் புலனாய்வாளர்களால் தொலைபேசியூடாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த மிரட்டலுக்கும் இவர்கள் பணியவில்லை. இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர் ஒருவர் கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் கூறியுள்ளார்.

“நீ பல்கலைக்கழகத்தினுள் மேற்கொண்ட பல நினைவு நிகழ்வுகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வீடியோ காட்சிகள் உள்ளது. நீ இன்னமும் கனகாலம் இருக்க மாட்டாய்” என்று வெளிப்படையாகவே அச்சுறுத்தியுள்ளார். அச்சுறுத்திய அந்த மாணவர் ஈபிடிபி அமைப்பின் அடிவருடி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மிரட்டலுக்கும் தவபாலசிங்கமும் அவருடன் இணைந்து செயற்படும் மாணவர்களும் பணியவில்லை.

கடந்த 9 ஆம் திகதி புதிய மாணவர்களை வரவேற்றும் விருந்துபசார விழா பல்கலைக்கழகத்திற்னுள்ள இடம் பெற்றுள்ளது. அதன்போதும் சிறு நகைச் சுவை நாடகங்களில் இராணுவக் கெடுபிடிகள் மற்றும் அடக்குமுறைகள் பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர். அந்நிகழ்வின் பின்னரும் தொலைபேசியூடாக தொடர்பு கொண்ட இராணுவப் புலனாய்வுத் துறையினர் கடுமையாக மிரட்டியுள்ளனர். அதன் பின்னரும் இவர்கள் அடிபணிய மறுத்து விட்டனர்.

இந்நிலையிலேயே இன்று அவர் மீது கொலை வெறித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்பகுதி பொது மக்களது தகவலின்படி தாக்குதலாளிகள் சுமார் இரண்டு மணி நேரமாக அவ்விடத்தில் காத்திருந்துள்ளனர். தொடச்சியாக அவ்விடத்தில் சில இளைஞர்கள் நீண்ட நேரம் நிற்பதனை அவதானித்துள்ளனர். அவர்களின் சிலர் சிங்களத்தில் உரையாடியுள்ளனர். சிலர் தமிழில் உரையாடியுள்ளனர். கேற்றப்போல் சந்தியில் உள்ள இராணுவக் காவலரண் அமைந்துள்ள இடத்தில் இருந்து சுமார் 50 மீற்றர் துரத்திலேயே தாக்குதல் இடம்பெற்றுள்ளது. பட்டப்பகலில் துணிச்சலுடன் தாக்குதல் நடாத்தியுள்ளனர். மோட்டார் கைக்கிள்களில் வந்திருந்த எட்டுப்பேர் வரையான அணி ஒன்றே இத்தாக்குதலை நடாத்தியதாக சம்பவத்தை நேரில் கண்ட பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

பொது மக்கள் திரண்டதும் தாக்குதல் நடத்தியவர்கள் சிலர் அங்கிருந்து தப்பிச் செல்லும்போது கெற்றப்போல் சந்தியில் உள்ள இராணுவக் காவலரணைத் தாண்டியே சென்றனர். ஆதன்போது இராணுவத்தினர் அவர்களை தடுத்து நிறுத்த முற்படாது வேடிக்கை பார்த்து நின்றனர்.

தாக்குதல் நடைபெற்று சுமார் 15 நிமிடத்தில் அவ்வீதியால் சென்ற யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுப் பொலீசார் அவ்விடத்தில் இருந்த மோட்டார் சைக்கிளை பொறுப்பேற்று அருகில் உள்ள வீட்டில் நிறுத்தினர். அதன் பின்னர் காயமடைந்தவரை பார்வையிடுவற்காக பத்மினி சிதம்பரநாதன் அவர்களது வீட்டுக்குச் சென்றனர்.அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு இரண்டு பதினைந்து மணியளவில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் சம்பவம் தொடர்பாக வாக்கு மூலம் எடுப்பதற்கு பொலீசார் சமூகமளிக்க முன்னதாக அரச புலனாய்வுப் பிரிவினர் சிவிலுடையில் வைத்தியசாலைக்குச் சென்று வாக்குமூலம் எடுக்க முயன்றுள்ளனர். ஆந்த முயற்சி அங்கிருந்த சட்டத்தரணி ஒருவரது தலையீட்டை அடுத்து அந்த முயற்சியை கைவிட்டுச் சென்றனர். அவர்கள் ;அங்கிருந்து சென்ற பின்னர் வைத்தியசாலைக்குச் சென்ற யாழ் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிசார் சம்பவம் தொடர்பாக யாழ் பொலிஸ் நிலையத்திற்கு வந்து முறைப்பாடு செய்யுமாறு தவபாலசிங்கத்தின் நண்பர்களை வற்புறுத்தியுள்ளனர். எனினும் தாம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்றால் தம்மை மிரட்டி உண்மையை மூடி மறைக்க பொலீசார் முற்படுவர் என்ற அச்சம் காரணமாக மாணவர்கள் அங்கு செல்ல மறுத்துவிட்டனர்.

சட்டப்படி வைத்தியசாலைக்கு நேரில் சென்று வாக்கு மூலம் பெறவேண்டிய பொலீசார் உண்மையை மூடி மறைத்து சம்பவத்தை திரிபு படுத்த மேற்கொள்ளும் முயற்சி பற்றி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உடனடியாக கொழும்பிலுள்ள இராஐதந்திரிகளது கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தார். அதன் பின்னர் மாலை 7.00 மணியளவில் வைத்தியசாலைக்குச் சென்ற பொலீசார் அவரது வாக்கு மூலத்தைப் பதிவு செய்யுள்ளனர்.

பொலீசாரதும், அரச புலனாய்வுப் பிரிவினரதும் நடவடிக்கைகளை நோக்கும்போதும், தாக்குதல் நடைபெற்ற இடம் தாக்குதலாளிகளில் சிலர் தப்பிச் சென்ற வழி என்பவற்றையெல்லாம் நோக்கும் போது இத்தாக்குதல் சம்பவமானது இலங்கை அரசாங்கத்திற்கும் அதன் படைகளுக்கும் தெரியாமல் ஒருபோதும் இடம் பெற்றிருக்க முடியாது என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இத்தாக்குதலை நடத்தியவர்கள் இராணுவ புலனாய்வுத் துறையினர் என்றே தான் சந்தேகிப்பதாக தவபாலசிங்கம் அவரிடம் வாக்குமூலம் பெறச் சென்றிருந்த பொலீசாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இத் தாக்குதல் சப்பவம் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தெரியாமல் ஒருபோதும் இடம் பெற்றிருக்க முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இராணுவப் புலனாய்வுத் துறையினர் தாக்குதல் மேற்கொண்டதாக பிபிசி சிங்கள சேவைக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளனார்.

மர்ம மனிதர்களாம் கிறீஸ் மனிதர்களாலும் பொது மக்கள் பாதிக்கப்பட்டபோது அதற்கெதிராக பல்கலைக்கழக மாணவர்கள் குரல் கொடுத்து அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என மக்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். அந்தக் கடமையை மாணவர்கள் நிறைவேற்ற முற்பட்டமைக்காக தவபாலசிங்கம் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவருக்கும் சக மாணவர்களுக்கும் ஏற்பட்டுள்ள ஆபத்தில் இருந்து அவரையும் சக மாணவர்களையும் பாதுகாக்க அவர்களுக்காக அனைத்து மக்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=10284:2011-10-16-21-00-57&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

http://www.eelamdaily.com/news/2624/57//d,full_news.aspx யாழ்- பல்கலைகளக மாணவர் ஒன்றியத் தலைவர் மீது தாக்குதல் - பின்னணி என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

ஈ.பி.டி.பி. ஒட்டுக்குழுக்கள் தமிழ்மக்களின் இன்றைய அவலத்தில் இப்படியான தாக்குதல்களை செய்வது, வன்மையாக கண்டிக்கப் பட வேண்டிய செயல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.