Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரின் தலை விதி புலம்பெயர் தமிழர்களின் கைகளில்தான் உள்ளது

Featured Replies

தமிழரின் தலை விதி புலம்பெயர் தமிழர்களின் கைகளில்தான் உள்ளது

இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு எதிராகவும், புலம்பெயர் தமிழர்களுக்கு எதிராகவும், ஒரே நேரத்தில் பிரசாரப் போரினைப் பிரகடனப்படுத்தியுள்ளதுடன் மேற்படி இரு சக்திகளுக்கும் எதிராக இராஜதந்திர நகர்வுகளிலும் இறங்கியுள்ளது.

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுகள் குறித்த நெருக்குவாரங்கள் உலக அரங்கில் அதிகரித்து வருகின்றன. மறுபுறம் போர்க் குற்றச்சாட்டு தொடர்பாக புலம்பெயர் தமிழர்களால் பல மேற்கத்தைய நாடுகளில் உள்ள நீதிமன்றங்களில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவும் இறுதிக் கட்ட யுத்தத்தில் பணியாற்றிய இராணுவ உயர் அதிகாரிகளுக்கெதிராகவும் வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.

இவை தொடர்பாக அராங்கம் தான் அலட்டிக் கொள்ளவில்லை என்பது போல கடந்த காலங்களில் செயற்பட்டு வந்தது. அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச அரங்கில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை அவ்வப்போது மறுதலித்து வந்தது. இந்த மறுதலிப்புகள் சர்வதேச அரங்கில் எடுபடாது போகவே தற்பொழுது இது குறித்து கடுந்தொனியிலான தாக்குதலில் இலங்கை அரசாங்கம் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளது.

வெளிநாடுகளில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகங்களை இந்த நடவடிக்கைகளுக்கென முடுக்கி விட்டுள்ளது. இலங்கைத் தூதரக அதிகாரிகளுக்கு உதவுவதற்கென இலங்கையிலிருந்து நிபுணத்துவம் பெற்றவர்களை அனுப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்குமப்பால் ஜனாதிபதி நேரடியாகவே இந்த விடயங்கள் குறித்து வெளிப்படையாக கருத்துகளை முன்வைக்கத் தொடங்கியுள்ளார். பத்திரிகை ஆசியர்களையும், இலத்திரனியல் ஊடக முக்கியஸ்தர்களையும் கடந்த வியாழக்கிழமை (13.10. 2011) அலரி மாளிகையில் சந்தித்தபொழுது சர்வதேச சமூகத்திற்கு மிகத் தெளிவாக ஒரு செய்தியைத் தெவித்துள்ளார்.

“வடக்கில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டது நானே. அதற்கான பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கின்றேன். நாம் எந்தக் குற்றத்தையும் இழைக்கவில்லை. எனக்கு எதிராக எவரும் வழக்குத் தொடரலாம். எதையும் எதிர்நோக்கும் பலமும் நேர்மையும் எனக்கு உண்டு. ஜனாதிபதியாக நான் இருக்கும் வரையும் ஏதும் செய்ய முடியாது” என்று மிகத் திட்டவட்டமாகவும் தெளிவானதுமான செய்தியை உலக அரங்கிற்கு விட்டுள்ளார்.

அதாவது போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நாடுகளுக்கு எதிராக தான் முகம் கொடுக்கத் தயார். நீங்கள் செய்வதைச் செய்து பாருங்கள் என்பதே ஜனாதிபதியின் பிரகடனமாக இருக்கின்றது.

சிங்கள மக்களிடமும் பேரினவாத சக்திகளிடமும் தொடர்ந்தும் கதாநாயகனாக இருப்பதற்கு இந்த வாசகங்கள் உதவலாம். ஆனால் ரஷ்யாவையும் சீனாவையும் துணைக்கு வைத்துக் கொண்டு சர்வதேச சமூகத்துடன் எவ்வளவு காலத்திற்கு இலங்கை அரசாங்கம் மோதப் போகின்றது என்பதே கேள்விக்குறியாகும்.

அதேவேளையில், புலிகளின் பணத்தை எடுத்துக் கொண்டு செயற்படும் பத்திரிகைகளுக்கு ஊடாகவே செய்யாத குற்றத்திற்காக எனக்கு பிடியாணை அனுப்பபடுகின்றது என்றும் ஜனாதிபதி குற்றச் சுமத்துகின்றார்.

போர்க் குற்றச்சாட்டுகள் மற்றும் இலங்கைக்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகளுக்கு புலம்பெயர்ந்த புலிகளே காரணம் என்பதே இலங்கை அரசாங்கத்தின் பெரும் குற்றச்சாட்டாக இருக்கின்றது.

இந்த இரு விடயங்களுக்கு எதிராக முகம் கொடுக்கவென இலங்கை அரசு மில்லியன் கணக்கான பணத்தை இறைத்துக் கொண்டிருக்கின்றது. போர்க் குற்றச்சாட்டுகள் மற்றும் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராக எழுந்துள்ள நெருக்கடிகள் ஒருபுறமிருக்க இலங்கை அரசாங்கம் இவைகளிலிருந்து ஓரளவாவது மீட்சி பெற முறையான அதிகாரப்பரவலாக்கலை மேற்கொள்ள வேண்டும்.

இது தொடர்பாக குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை குறித்து பத்திகை ஆசியர்கள் வினவியபொழுது கூட்டமைப்பினருக்குமிடையிலேயே கருத்தொற்றுமை இல்லை. நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் அவர்கள் தமது கருத்துகளை முன் வைக்கலாம் என்று தெவித்தார். இது பற்றி கூட்டமைப்பே பதில் கூற வேண்டும்.

பேச்சுவார்த்தையின் ஆரம்பத்திலேயே கூட்டமைப்பு ஏனைய தமிழ்க் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு தீர்வுப் பொதியை முன் வைத்து பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்குமாக இருந்தால் இன்று இந்த ஒரு நிலை உருவாகியிருக்காது.

விடுதலைப் புலிகள் இருக்கும் வரை சிங்கள சக்திகளுடன் இணைந்து அவர்களை விமர்சித்த ஒரு சில தமிழ்ச் சக்திகள் இன்று அரசாங்கத்துடன் இருக்கின்றன அல்லது அரச ஆதரவில் இருக்கின்றன.

இவர்களால் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை ஏன் அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொடுக்க முடியாதிருக்கின்றது என்ற தமிழ் மக்களின் வினாக்களுக்கு இவர்களே பதில் கூற வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் தீர்வை முன்வைத்து விடுதலைப் புலிகளை தமிழ் மக்களுக்கு தேவையற்ற ஒரு சக்தியாக மாற்றுங்கள் என்ற குரல்கள் அவ்வேளையில் தமிழ் மக்களிடமிருந் எழுந்த போது இது குறித்து சிங்கள ஆட்சியாளர்களோ, சிங்கள தலைமைகளோ செவிசாய்க்கவில்லை. இன்றும் அதே ஒரு நிலைமைதான் மீண்டும் தோற்றம் பெற்றுள்ளது.

புலிகள் இல்லாத மண்ணில் கூட முறையான அதிகாரப் பரவலாக்கலுக்கு ஆட்சியாளர்களோ, சிங்களத் தலைமைகளோ தயாராக இல்லை என்பதே அவர்களது கொள்கையாக இருக்கின்றது.

தென்னிலங்கைச் சக்திகளுக்கு இன்று தேவைப்படுவதெல்லாம் தமிழர்களின் உரிமை குறித்து நீதியாகவும் நியாயமாகவும் புலம்பெயர்ந்த தமிழர்கள் அஹிம்சை வழியில் தொடுத்துள்ள போரினைத் துவம்சம் செய்வதேயாகும்!

அதாவது தமிழினத்தை முற்று முழுதாக வெற்றி கொண்டு அவர்களின் அரசியல் அபிலாஷைகளைத் தகர்த்தெறிவதை முழுநோக்கமாகக் கொண்டதாகவே இலங்கைத் தரப்பின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

பேச்வார்த்தை என்று காலங் கடத்தும் பயணத்தில் தமிழர் தரப்பை துணைக்கு வைத்துக் கொண்டு வடக்கு, கிழக்கின் இன்றைய புவியியல் தோற்றத்தை மாற்றியமைத்து தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை சிதறடிக்கும் வேலைத்திட்டங்கள் மிக வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. இது தமிழ் மக்களுக்கு நன்றாகவே தெரியும். தமிழ்த் தலைமைத்துவங்களுக்கு இது புரிந்தால் சரி.

அதேவேளையில் புலம்பெயர் தமிழ்ச் சக்திகளை சிதறடித்து விடுவதற்கான வேலைத்திட்டங்கள் கூட மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புலம்பெயர் தமிழர்கள் இதற்கு பலிக்கடாவாக இருந்தாலே போதும். ஏனெனில் தமிழரின் தலை விதி உங்களின் கைகளில்தான் உள்ளது.

மூலம்: வீரகேசரி – ஐப்பசி 15, 2011

கடந்த மூன்று தசாப்தங்களாக தமிழ்த் தேசியம் வீழ்த்தப்படாமல் இருந்தமைக்கும் 2009 மேக்கு பின் தமிழ்த் தேசியம் புதிய வழிமுறைகளில் போராட முனைவதும் காரணங்கள் எதிரெதிரானவை.

இலங்கை அரசுக்கெதிராக புலம் பெயர் தமிழர்கள் முன்னெடுக்கும் போராட்ட வழிமுறைகளுக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்டாயப்படுத்தி உள்ளிணைப்பது அதிக பயன் தராத அரசியல் வழிமுறையாகும். கூட்டமைப்பினர் ’பிளான் - பி’ குறித்த செயல்பாடுகள் முழுமையாக இறங்க அனுமதிப்பதன் மூலம் புலர் பெயர் தமிழர் ’பிளான் - ஏ’ குறித்து அதிக கவனம் செலுத்த முடியும்.

குறிப்பிட்ட கால பகுதிக்குள் ‘பிளான் - ஏ’ அடையமுடியாது போகினும் கூட்டமைப்பு முன்னெடுக்கும் ‘பிளான் - பி’ ஆவது குறைந்த பட்சம் தமிழ் தேசியத்தின் தொலைதூர இலக்கை தக்க வைக்க பேருதவியாக இருக்கும்.

அதாவது 2002/06 யுத்த நிறுத்த கால கட்டத்தில் நாம் முன் இழைத்த அரசியல் தவறு மீண்டும் நிகழ்ந்து விடா வண்ணம் அவதானமாக அரசியல் நகர்வுகள் முனெப்போதையையும் விட தற்போது அதிகம் அவசியம்.

புலம் பெயர்தேசத்திலும் பிலான் பி, சி யுடன் அணிகள் அலைகின்றன.

சமீபத்தில் சுமத்திரன், எரிக்சோல்கையும். சந்திப்பின்போது உடன் இருந்த இருவர் கே.பி யின் பிளானைக் காவித்திரிபவர்கள் என்ற தகவலும் இருக்கின்றது.

.... விநாயகனே, வேரறுக்க வந்தவனே ... ஆயுதபூசையன்று, ஓர் சிறுவன், இவ்வாறு ஆலயத்தில் பாடிக்கொண்டிருந்தான் .. கொஞ்சம் யோசிக்க, அச்சிறுவன் பாடியது சரியென்று தென்பட்டது! ... விருட்சம் சரிந்து, புலத்தில் கொஞ்சமாவது அதன் வேருகள் தப்பிப்பிழைத்திருக்க ... அதையும் அறுத்தெறிய வந்திருக்கிறான்! ... அரோகரா!

  • தொடங்கியவர்
அதேவேளையில் புலம்பெயர் தமிழ்ச் சக்திகளை சிதறடித்து விடுவதற்கான வேலைத்திட்டங்கள் கூட மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புலம்பெயர் தமிழர்கள் இதற்கு பலிக்கடாவாக இருந்தாலே போதும். ஏனெனில் தமிழரின் தலை விதி உங்களின் கைகளில்தான் உள்ளது.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்ம்மா...சிங்களவன் எடுத்துவிட உடனே பதற தேவை இல்லை.

ஸ்ரீ லங்கா காரர்களால் ஒன்றும் அசைக்க முடியாது. முன்பென்றால், உலகத்தமிழர் அமைப்பு தான் ஒன்றாக் இருந்தது. ஸ்ரீ லங்கா ஹை கொமிசன் காரன் உலகத்தமிழர் அமைப்புக்கு எதிராக ஏதாவது செய்து சாதித்துவிட்டேன் என்று மார் தட்டுவான்.

ஆனால் இப்போதோ, ஆயிரெத்தெட்டு தமிழ் அமைப்புக்கள் சிறு சிறு குழுக்களாக(பிளட்டூன்) ஸ்ரீ லண்கவை தாக்குகின்றன. மற்றும் தமிழர் இல்லாத பல அமைப்புகளும் ஸ்ரீ லங்காவை தாக்குவதால் அவர்கள் பதறி போய் இருக்கிறார்கள்.

மற்றும், தலை சும்மா கடந்த சில வருட உரைகளில் மேற்குலக இளையோரை உசுப்பிவிடவில்லை. அவருக்கு மேற்குலக இளையோரின் போராட்டங்களை ஊழல் புரையோடி போய் இருக்கும் ஸ்ரீ லங்கா சீனியர் சிட்டிசனுகளால் உடைக்க முடியாது என்றும் தெரியும்.

முன்பு கூறியது போல், ஸ்ரீ லங்கா காரருக்கு இப்போது சம்மன் பீதி அடித்துவிட்டது. கொழும்பில் இருந்து மட்டும் சும்மா தாம் தோம் என்று அறிக்கைவிட்டு அரசியல் நடத்துகிறார்கள்.

நாம் ஒருவருக்கும் பயப்படாமல் உண்மையை பரப்பினாலே போதும்.

"இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு எதிராகவும், புலம்பெயர் தமிழர்களுக்கு எதிராகவும், ஒரே நேரத்தில் பிரசாரப் போரினைப் பிரகடனப்படுத்தியுள்ளதுடன் மேற்படி இரு சக்திகளுக்கும் எதிராக இராஜதந்திர நகர்வுகளிலும் இறங்கியுள்ளது" - வீரகேசரி.

இந்த திரி பழைய பிளான்ஸ் A, B, C, எல்லாம் தோற்ற பின்னர் பிளான் D யையும் பிளான் E யையும் பரீட்சித்து பார்க்க என்று பயன்படுத்த படுகிறது போலிருக்கிறது.

"அதாவது 2002/06 யுத்த நிறுத்த கால கட்டத்தில் நாம் முன் இழைத்த அரசியல் தவறு மீண்டும் நிகழ்ந்து விடா வண்ணம் அவதானமாக அரசியல் நகர்வுகள் முனெப்போதையையும் விட தற்போது அதிகம் அவசியம்."

தமிழர்கள் தமது பிரச்சனையை ஐந்தாவது தலைமுறையாக சிங்களவர்களுடன் பேசுகிறார்கள். மறதி காரணமாக இவை நினைவுக்கு வருவதில்லை. 2002/06 மட்டும் நினைவில் இருக்கிறது. அதை புலிகள் குழப்பினார்கள் என்பது வாதம். ஆனால் பேச்சு வார்த்தைகள் உடைந்து போனதின் காரணம் இலங்கை அரசும் பிளேக்கும் சேர்ந்து பேச்சு வார்த்தையை அமெரிக்காவில் வைத்ததுவே., புலிகளின் சிறிய போர் வெற்றியை வைத்து கொண்டு பேச்சு வார்தைகளை வெல்ல விடாமல் தடுக்க பிளேக் அமெரிக்க அதிகாரங்களை பாவித்து, அதற்கு பரிசாக இலங்கையிடமிருந்து வாளைக்குட்டிகள் நட காடு கரம்பைகளைப் பெற்றார் என்பதும், அதே நேரம் சீனா இலங்கையிடமிருந்து துறைமுகங்களைப்பெற்றது என்பதிலுமிருந்து தெரிய வேண்டும் பேச்சு வார்த்தைகள் முன் போயிருந்தால் புலிகளுக்கு என்ன கொடுக்கபட்டிருக்கும் என்பதும்.

"குறிப்பிட்ட கால பகுதிக்குள் ‘பிளான் - ஏ’ அடையமுடியாது போகினும் கூட்டமைப்பு முன்னெடுக்கும் ‘பிளான் - பி’ ஆவது குறைந்த பட்சம் தமிழ் தேசியத்தின் தொலைதூர இலக்கை தக்க வைக்க பேருதவியாக இருக்கும்."

வீரகேசரியின் கட்டுரையை படித்தால் தெரியும் ஏன் அது எழுதபட்டிருக்கிறது என்பது. புலம் பெயர் மக்களின் கணிசமான வெற்றிகளால் தள்ளாடிப்போயிருக்கிற மகிந்தா தனது அடியாட்களை எப்படி தொழிலில் முடுக்கியிருக்கிறார் என்பதை பற்றித்தானே அது பேசுகிறது. புலம் பெயர் மக்கள் ஏற்கனவே தாம் நினைத்ததில் பெரும் பகுதியை அடைந்து விட்டர்கள் என்று தானே கட்டுரை கூற முற்படுகிறது. இனி என்ன அதில் ஒரு குறிப்பிட்ட காலம்? வழமை போல் மகிந்தாதான் கூட்டமைபை காலமுடிவில்லாமல் பேச்சு வார்த்தை என்று நீட்டுகிறார், ஏன் எனில் அவருக்கும் போற்குற்ற விசாரணையை பார்த்துவிட்டு தான் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட மனம் வரும் போலிருக்கு.

"இலங்கை அரசுக்கெதிராக புலம் பெயர் தமிழர்கள் முன்னெடுக்கும் போராட்ட வழிமுறைகளுக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்டாயப்படுத்தி உள்ளிணைப்பது அதிக பயன் தராத அரசியல் வழிமுறையாகும். கூட்டமைப்பினர் ’பிளான் - பி’ குறித்த செயல்பாடுகள் முழுமையாக இறங்க அனுமதிப்பதன் மூலம் புலர் பெயர் தமிழர் ’பிளான் - ஏ’ குறித்து அதிக கவனம் செலுத்த முடியும்."

தமிழர் கூட்டமைப்பு புலிகளால் ஏற்படுத்த பட்ட கூட்டு. புலிகளின் ஆதரவாளர்கள் புலம் பெயர் மக்கள். இலங்கை முஸ்லீம் மக்கள் தங்களை தமிழர்கள் என்று கூற விரும்பாமலிருக்கிறார்கள். புலம் பெயர் மக்கள் இவர்கள் போல் அல்ல, புலம் பெயர் மக்கள் தாயகத்திலிருந்து இன்னமும் தப்பித்து சுதந்திரம் உள்ள இடங்களில் வாழ வெளியேறிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழரே. ஈழத்தில் வைத்து வெளியேறமுன் கூட்டமைப்புக்கு வாக்களித்து விட்டு வந்தவர்கள்தான் இவர்கள். இதில் எங்கே கூட்டமைப்பை புதிதாக புலம் பெயர் மக்கள் இழுத்து விழுத்த இருக்கு. அந்த புலம் பெயர் மக்களைத்தள்ளி வைத்து கூட்டமைப்பு செய்து முடிக்க முயலும் பிளான் B தான் என்ன?. கூட்டமைப்பல்லவா காணிப்பதிவுகள் முறையீட்டை இலங்கை கோடுகள் தள்ளிவிட, புலம் பெயர் மக்களின் உதாரணத்தை பின் பற்றி இனிமேல் வெளிநாடுகளிடம் தான் முறையிடவேண்டும் என்று தொடங்கியிருக்கிறது.

"கடந்த மூன்று தசாப்தங்களாக தமிழ்த் தேசியம் வீழ்த்தப்படாமல் இருந்தமைக்கும் 2009 மேக்கு பின் தமிழ்த் தேசியம் புதிய வழிமுறைகளில் போராட முனைவதும் காரணங்கள் எதிரெதிரானவை."

தமிழ் தேசியம் பொன் அருணசலம் காலத்தில் உதித்து மெல்ல மெல்லமாக வளர்ச்சிடைந்து விட்டது. இனி வீழ்ச்சி இல்லை. எல்லாக்காலத்திலும் ஆயுதமில்லா போராட்டம், மற்றைய வழிமுறைகளுடன் சமாந்தரமாக இருந்துகொண்டேதான் இருந்தது. அது எப்போதுமே புது வழியாக இருக்கவில்லை. அதனால் அங்கே முரண்பட்ட காரணம் ஒன்றும் இருக்க முடியாது. அப்படி இருந்தாலும் அந்த போராட்டத்தை முன் எடுக்கும் புலம் பெயர் மக்கள் தான் அந்த காரணத்தை விளக்க வேண்டும். தமிழரல்லாத அந்த போராட்ட எதிரிகள் தாம் விரும்பியதை காரணமாக கூற முடியாது.

இந்த பிளான்களில் மிகவும் சிக்கலான விடயம் இந்த பிளான்ஸ் ஐ புலம் பெயர் மக்களுக்காவும் கூட்டமைப்புக்கவும் வகுப்பவர்கள் தாங்கள் சொல்லி அனுப்ப வேண்டிய ஏவலாளர்களிடம் சொல்ல முன்னரே மறந்தும் போய்விடுகிறார்கள் போலுள்ளது. இதனால் ஏவலாளர்கள் கூட்டமைப்பிடமும், புலம் பெயர் மக்களிடமும் அவர்களுக்காக பிளான்ஸ் A,B, C, D, E, F, .............. எல்லாம் இருந்தாகவோ, அல்லது ஏற்படுத்தபட்டிருப்பதாகவோ கூறமுடியுமே தவிர அந்த பிளான்ஸ் யோ, அதை ஆக்கியவர், ஆணையிட்டவர், எடுத்து செல்பவரையோ எதையுமே ஒளிவு மறைவின்றி சொல்ல முடியாத மூடு மந்திரம். தேர்தலில் தமிழ்மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களிக்கும் போது புத்தீசல்கள் மாதிரி “தமிழ் தேசியத்தின் தொலைதூர இலக்கை தக்க வைக்க” எல்லாம் கூட பிளான்ஸ் வரைய பட்டிருப்பதை தமிழ் மக்கள் கனவில் கூட கண்டிருக்க மாட்டர்கள். கூட்டமைப்பு தமிழகளுக்கு என்ன வாக்குறுதி கொடுத்தது என்பது பற்றி தான் நினைக்க வேண்டுமேயொழிய இந்த பிளன்ஸ் ஐ பற்றி அல்ல. தமிழ்த் தேசியம் பொன் ஆருணாசலம் காலத்திலிருந்து இருக்கிறது. ஆனல் தமிழ் தேசியம் “தமிழர் அரசு” கட்சி தொடங்கிய காலம் தொட்டு இன்றுவரை வீழ்த்த படாமலிருப்பது, R.G. செனநாயக்க முதல் சம்பிக்க ரணவாக்க போன்ற “பல காரணகளால்” என்பது மட்டும் எதோ உண்மைதான்

இந்த பிளான்ஸ் பற்றி எழுதுபவர்கள் எழுதிய முதல் வரியை இரண்டாம் வரி தொடங்கு முன்னரே மறந்து விடுகிறார்கள். இந்த நிலையில் எழுதிய பந்தி, அந்த தனி கருத்துகோவை, முழுத்திரி, யாழில் முன்பு எழுதிய திரிகள், பத்திரிகைக்கு பத்திரிகை, என்றேல்லாம் போய் வர, இந்த பிளான்ஸ் எல்லாம் படும் பாடு வாலியின் வாலில் சுருள்பட்டுப்போன இராவணன், வாலி மலைக்கு மலை பாய பட்ட பாடு போலதான்னிருக்கு.

இந்த மறதியால் தான் புலத்திற்கு பிளான்ஸ் ஐ எடுத்துவருபவர்கள் ஒருவருக்குள் ஒருவர் முரண்படவேண்டி வருவதும். உதாரணத்திற்கு பிளான் Dயும் பிளான் Eயும் ஒன்றுடன் ஒன்று முரணுவது உண்மையில் மறதியால் வந்ததே: இல்லாத ஒரு பிளான் A யில் புலம் பெயர் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்று வைக்கப்படுகிறது. ஆகவே, கூட்டமைப்பின் இல்லாத பிளான் B யை கூட்டமைப்பு நிறைவேற்றி முடிக்க இது தடுதலாக இருக்கபோவதாக கூறி குளப்பியடிக்க வரும் பிளான் தான் D. பிளான் E சுமந்திரனை கூட்டமைப்பிலிருந்து பிரித்து எடுத்து, K.P. யுடன் சோடிகட்டி, இருவரையும் புலம் பெயர்மக்களின் தலைவர்களாக்கி, புலம் பெயர்மக்கள் இவர்களின் சங்கைத்தான் ஊதுபவர்களாக்கி, சங்கை ஊதக் கேட்கேக்கை புலம் பெயர் மக்கள் எல்லாம் ஒருவரோடு ஒருவர் தொடர்ந்து மோதிக்கொள்வதாக கனவு கண்டு, அதன் பின் புலம் பெயர் மக்களைப்பார்த்து எள்ளிநகையாடி இதோ பாருங்கள் “ நீங்கள் எல்லோரும் உங்களுக்குள் மொதிக்கொள்ளும் மடையர்கள்” ஆகவே உங்களுக்கு இனி எதும் இல்லை பொய்விடுங்கள் என்று கூற வருவது”. (இந்த பிளான் E டக்கிளசையும், பிள்ளையானையும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக சித்தரித்து காட்டிவிட்டு, வடக்கிலும் கிழக்கிலும் கூட்டமைப்புடன் தேர்தலில் மோதி மூக்குடைபட்டு, கடைசியில் டகிள்சையும், பிள்ளையானையும் உண்மையான தமிழ் மக்கள் அல்ல என்று தாங்களே கண்டு பிடித்த அதே தண்ட வாளத்தில் ஒடும் ரயில்). என்ன முரண்பாடு பிளான் D யிற்குள்ளும் பிளான் E யிற்குள்ளும். புலம் பெயர் மக்கள் பிள்ளையான், டக்கிளஸ் மாதிரி துரோகிகளும் முட்டாள்களும் என்றால் எதற்காக இவர்களிடம் இருக்கும் Paln A பற்றி பயம் வந்தது. பிளான் A பற்றி பயம் இல்லவிட்டால் பிளான் D எதற்காக இப்போ வெளியே வந்தது. தங்களுக்குள் இருக்கும் முரண் பாடுகளை மறந்ததால் வந்த பேதமைமையால் அல்லவா தமிழர்களின் முரண்பாடுகளைப்பற்றி பேசுவது. இலங்கையில், நடந்தவை நடப்பவையை அறியாதவர்கள் இவர்கள்.

புலம் பெயர் மக்களிடம் இருப்பது பிளான் A அல்ல. குற்றவாளிகளை கூண்டில் ஏற்ற வேண்டும் என்ற சங்கல்பம். கூட்டமைப்பிடம் இருப்பது Paln B அல்ல. பேச்சுவார்த்தை என்ற பேரில், இன்னொருதடவை கிளித்து குப்பை தொட்டிக்குள் போடும் ஒப்பந்தம் ஒன்று எழுதாமல் தமிழ் மக்களுக்கென்று ஒரு அரசியல் அமைப்பை உருவாக்குவது. இவை இரண்டும் ஒன்றில் ஒன்று சார்ந்தவையும் சேர்ந்து போபவையுமே. கூட்டமைப்பின் அரசியல் தீர்வு முதல் வந்தால் ஒவ்வொரு போர்க்குற்றவாளியும் தனிய தனிய தண்டிக்கபட்டு நட்ட ஈடு காணும் வரை தமிழ் கோடுகளில் வழக்குகள் தாக்கல் செய்யப்படும். புலம் பெயர் மக்களின் போர்குற்ற முன்னேடுப்புகள் முதல் சென்றால் கிளித்து குப்பைக்குள் போடமுடியாத அரசியல் அமைப்பு அதிலிருந்து பெறப்படும்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.