Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழின விடுதலைக்கு புலிகள் தடை என்றோர் இப்ப என்ன சொல்வர்?

Featured Replies

தமிழின விடுதலைக்கு புலிகள் தடை என்றோர் இப்ப என்ன சொல்வர்?

“பலஸ்தீனத்தின் கண்ணீருக்கும் ஈழத்தின் கண்ணீருக்கும் ஒரே மதிப்புத்தான். சுற்றியிருக்கும் அரபுலகத்தினால் பலஸ்தீனர்களின் விடுதலைக்கு உதவ முடியவில்லை. அல்லது அவர்களால் பலஸ்தீனியர்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை.

அதைப்போல இந்தியாவில் இருக்கும் தமிழர்களாலோ அல்லது உலகம் ழுவதும் உள்ள தமிழர்களாலோ அல்லது இந்தியாவினாலோ ஈழத்தமிழர்களுடைய விடுதலைக்கு உதவவும் முடியவில்லை. அவர்களுடைய விடுதலையைப் பெற்றுக் கொடுக்க முடியவும் இல்லை” எனக் குறிப்பிட்டுத் தமிழகத்தில் இருந்து ஒரு நண்பர் கடிதம் எழுதியிருக்கிறார்.

நண்பரைப்பற்றிப் பின்னர் பார்க்கலாம். இப்போது அவர் கூறியிருக்கும் விசயத்தைப் பார்ப்போம்.

ஈழப்போராட்டம் பலஸ்தீனப் போராட்டம் அதிக ஒற்றுமைகளைக் கொண்டவை. முக்கியமாகக் கண்ணீரையும் இரத்தத்தையும் அதிகமாகப் பெற்றுக்கொண்ட அண்மைய போராட்டங்கள். அல்லது கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் துருத்திக் கொண்டெழுந்த போராட்டங்கள். இவை எழுந்த வரலாற்றுச் சூழல்கூடப் பொதுத்தன்மை கொண்டது.

ஆனால், இவற்றின் பின்னிருந்த தூண்டற்சக்திகளின் தன்மைகள்தான் வேறுபடுகின்றன.

ஆரம்பத்தில் பலஸ்தீனப் போராட்டத்துக்குப் பல நாடுகளின் ஆதரவிருப்பதாகத் தோன்றியது. குறிப்பாக அரபுலகத்தின் ஆதரவு. ஆனால், உலகப் பொருளாதாரத்தில் எண்ணெய்வளத்தையும் அதன் மூலமான செல்வாக்கையும் கொண்டிருக்கும் அரபுலகத்தினால் பலஸ்தீனத்தின் விடுதலையைச் சாத்தியமாக்க முடியவில்லை.

காரணம், சர்வதேச அரசியல். சர்வதேச அரசியல் என்றால், மேற்குலகத்தின் ஆதிக்க அரசியல்.

பலஸ்தீனியர்களின் விடுதலையை மட்டு மல்ல, குர்திஷ்களின் விடுதலையையும் மேற்குலகத்தின் அரசியலே தடுத்துக் கொண்டிருக்கிறது. அரபுலகத்தில் ஆதிக்கம் பெற்றிருப்பது மேற்குலகமே. மேற்குலகத்துடன் ஒத்துப் போகாத நாடுகளும் தலைவர்களும் மேற்கினால் பலியிடப்பட்ட வரலாறே தொடர்கிறது. மேற்கைப் பகைத்த தலைவர்களாற்கூட பலஸ்தீன விடுதலையைச் சாத்தியப்படுத்த முடியவில்லை. குறிப்பாக ஈராக் சதாம்.

ஈரான், மொஹமட் அஹமட் நிஜாத் போன்ற பெரிய தலைகள் இருந்தே பலஸ்தீனத்தினால் விடுதலையடையவும் முடியவில்லை. வெற்றிபெறவும் முடியவில்லை. பிரச்சினையைத் தீர்வுக்குக் கொண்டுவரவும் முடியவில்லை. இதுதான் குர்திஷ்களின் கதையும் நிலையும்.

ஆனால் உலக அரங்கில் நிகழும் அனைத்து அநீதிகளுக்கும் எதிரான குரலை எழுப்பிக் கொண்டிருப்பது இதே மேற்குலகமே.

அதேவேளை இந்த மேற்குலகம் பலஸ்தீனத்தின் பிரச்சினைக்கும் குர்திஷ்களின் அவலத்திற்கும் இன்னும் ஒரு தீர்வைக் கொடுக்கவில்லை. அதிலும் பலஸ்தீனத்தலைவர் யாஸீர் அரபாத் பலஸ்தீனத்தில் போராடிய பல அமைப்புகளுடைய பலத்த எதிர்ப்புகளின் மத்தியிலே மேற்கின் சமாதான முயற்சிகளுக்கு ஆதரவளித்தார். அதன்படி அவர் அமைதிக்கான உடன்பாட்டுக்கும் சென்றார்.

ஆனாலும் பிரச்சினைகள் தீரவில்லை. அமைதி கிட்டவில்லை. கண்ணீர் வற்றவில்லை. பலஸ்தீனர்கள் ஆயுதங்களற்ற நிலையில் இப்பொழுது கற்களைத்தூக்கிக் கொண்டு தெருவில் நிற்கிறார்கள். இப்படித்தான் இன்று அவர்கள் தமது எதிர்ப்பைக் காட்ட வேண்டிய நிலைக்காளாகியுள்ளனர்.

ஏறக்குறைய இதேமாதியான ஒரு நிலை தான் ஈழப் பிரச்சினையிலும் காணப்படுகிறது.

ஈழத்தமிழர்களுக்கு தமிழகத்தின் ஆதரவு இருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால், எம்.ஜி. ராமச்சந்திரனின் அரசுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த தி.மு.க.வோ அ..தி.மு.க.வோ ஈழத் தமிழர்களுக்கான ஆதரவை பயன் பொருத்தமாகச் செய்யவில்லை. பேரளவில் அறிக்கை விடுவார்கள். கண்டனம் தெவிப்பார்கள். மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவார்கள். அதற்கப்பால் தாக்கமுறக் கூடிய அளவில் எத்தகைய நடவடிக்கைகளையும் இவர்கள் செய்ததாக இல்லை.

இதைத் தவிர, அதிகாரமற்ற, தாக்கங்களை ஏற்படுத்த முடியாத தரப்பினர்கள் ஈழ ஆதரவுச் செயற்பாடுகளில் இருக்கின்றனர்.

இந்தத் தரப்பினரின் மிகைச் செயற்பாடுகளும் மிகைக்கோரிக்கைகளும் மிகை நடவடிக்கைகளும் ஏறக்குறையக் கோமாளித்தனமாகப் பார்க்கும் நிலைக்குள்ளாகியுள்ளன. இதை மறுத்துரைக்க யாராவது முற்பட்டால், அவர்களிடம் நாம் ஒரேயொரு கேள்வியைக் கேட்க முடியும். இந்த ஈழ ஆதரவுச் சக்திகளால் இதுவரையில் பயன்விளைவான ஏதாவதொரு காரியத்தைச் செய்ய முடிந்ததா? அதாவது சிறு துரும்பைக்கூட இந்த விசயத்தில் அசைக்க முடிந்ததா?

அப்படியென்றால், அந்தக் காரியம் (அந்தத் துரும்பு) என்ன? தமிழக - ஈழ மீனவர்களின் பிரச்சினையையே தீர்க்க முடியாத நிலையில் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்த முடியாத அளவுக்கே இவர்கள் இருக்கின்றனர்.

இவர்களுடைய கோரிக்கைகளை தமிழக அரசே ஒரு போதும் கணக்கில் எடுப்பதில்லை. எடுத்து ஒரு காரியத்தை ஈழத்தமிழருக்காகச் செய்ததில்லை. அதில் இந்தத் தரப்புகள் வெற்றிகண்டதும் இல்லை.

ஆகவே, தமிழகத்தின் ஆதரவும் பெறுமதியானதாக இல்லை.

பதிலாகப் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு இருக்கிறது. ஆனால், அது எத்தகைய தாக்க விளைவுகளை சர்வதேச அரசியலில் ஏற்படுத்தத்தக்கது? அதை எவ்வாறு புலம் பெயர் தமிழர்களும் ஈழத்தில் தமிழ் மக்களின் தரப்பிற் செயற்படும் கட்சிகளும் பயன் படுத்திக் கொள்கின்றன? என்ற கேள்விகள் எழுகின்றன.

ஏனெனில், புலம்பெயர் தமிழர்களின் பலத்துக்கு நிகராக அல்லது அதற்கும் மேலான பலத்தோடு அரபுலகம் இருக்கிறது. ஆனால், அந்தப் பலத்தினால் பலஸ்தீனர்களாலும் குர்திஷ்களாலும் அரசியலில் வெற்றியடைய முடியவில்லை.

மற்றும்படி அரபுலக மக்களின் அனுதாபம் பலஸ்தீனர்களுக்கிருப்பதைப்போல, உலகமெல்லாம் இருக்கும் தமிழர்களின் ஆதரவும் அனுதாபம் ஈழத்தமிழர்களுக்கும் உண்டு.

ஆனால், இந்த ஆதரவும் அனுதாபம் ஒருபோதும் அரசியல் விளைவுகளாகாது. அப்படி மிகச் சுலபமாக அது நிகழுமானால், வன்னியின் இறுதிப்போரின்போது நடந்த கொலைகள் மற்றும் மனித அவலங்களுக் கெதிராக புலம்பெயர் மக்கள் நடத்திய போராட்டங்கள் நல்விளைவுகளை ஏற்படுத்தி யிருக்குமே. சிறிய அளவிலான தாக்கங்களையாவது ஏற்படுத்தியிருக்குமே.

இப்பொழுது சனல் 4ம் மனித உரிமைகள் கண்காணிப்பகமும் மன்னிப்புச் சபையும் சொல்வதைத்தானே அன்று புலம் பெயர் தமிழர்கள் சொன்னார்கள்.

உலகம் இந்த மாதியான இரத்தக்களரிகளையும் கொலைகளையும் கடந்தே வந்தது. இப்போதும் அது இந்த மாதிரியான அநீதிகளை ஜீரணித்துக்கொண்டே சுற்றுகிறது. இது தான் வரலாறு. இதுவே வரலாறு. நீதியும் நியாயமும் அறமும் அவரவர் நலன் மற்றும் தேவைகள் சார்ந்தே நிர்ணயிக்கப்படுகின்றன.

நீதிக்காகவும் நியாயத்தின் படியும் விசயங்கள் உலக அரசியல் அரங்கில் கையாளப்படுமாக இருந்தால், பலஸ்தீனர்களுக்கும் குர்திஷ்களுக்கும் காஷ்மீரிகளுக்கும் தெலுங்கானாக் காரர்களுக்கும் இன்னும் உலகம் முழுவதும் இருக்கும் விடுதலை விரும்பிகளுக்கும் சுதந்திரம் கிடைத்திருக்கும்.

அரசியலில் உபாயங்களும் மக்களின் திரட்சியான உறுதிமிக்க நிலைப்பாடுகளுமே எப்போதும் வெற்றிக்கான அடித்தளங்களாகின்றன. இதற்கு அந்த மக்களின் அரசியலை முன்னெடுக்கும் தலைமைகளிடத்தில் தெளிவும் அர்ப்பணிப்பான செயற்பாடுகளும் சனங்களோடு இணைந்து வாழும் தன்மையும் தேவை.

என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் காந்தியிடமும் மாவோவிடமும் நெல்சன் மண்டேலாவிடம் மக்களுடன் கலந்து வாழக்கூடிய மன இயல்பிருந்தது. மன ஓர்மம் இருந்தது. அவர்கள் வெளிச் சக்திகளை நம்பியதையும் விடத் தங்களுடைய மக்களை அதிகம் நம்பினார்கள். அதனாலேயே அவர்கள் மக்களுடன் வாழக்கூடியதாகவும் மக்களுடைய மனங்களை அறியக்கூடியதாகவும் தங்களோடு மக்களை வரலாற்றுக்கு அழைத்துச் செல்லவும் முடிந்தது.

நமது காலடியிலேயே அதற்கு ஏராளம் உதாரணங்கள் சாட்சியமாக உள்ளன.

இன்று ஈழத் தமிழர்களுக்குத் தேவை நிதானம். வரலாறு பற்றிய விழிப்புணர்வும் மீள்பார்வையும்.

எதிரிகளைப் பற்றிய தெளிவு, மதிப்பீடு, எதிகளைக் கையாள்வதைப் பற்றிய அறிவு, சிந்தனை, அரசியல் உபாயங்களை வகுத்துக் கொள்ள வேண்டும் என்ற புரிதல் அக்கறை.

வீண் கற்பனைகளும் மிகை மதிப்பீடுகளும் தமிழர்களைச் சுடுகாடுகளுக்கே அழைத்துச் சென்றுள்ளன. இப்போதும் ஏராளம் நம்பிக்கைகளும் கனவுகளும் ஈழத்தமிழர் களைச் சுற்றியிருக்கின்றன. இந்தச் சுற்று வட் டத்தில் அவர்கள் சிறைப்பட்டிருக்கிறார்கள்.

வணிக நலன்களும் அவற்றைப் பெறுவதற்கான அரசியல் அதிகாரம் அந்த அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கான அல்லது அதைப் பேணுவதற்கான அரசியல் உறவுகளுமே உலக அரசியலாகும். இதுவே கடந்த காலத்தின் அரசியல். நிகழ்காலம் எதிர்காலம் இந்த அச்சிற்தான் சுழல்கின்றன. இதில் காய்களை நகர்த்துவதென்பதே முக்கியமானது. அதற்கான மக்கள் பலத்தைப் பெறுவதும் அந்தப் பலத்தை அரசியற் பெறுமானமாக்குவதுமே வெற்றியைத் தரும்.

ஒடுக்கப்பட்ட இனமொன்று தனக்கான அரசியற் பயணப்பாதையை வகுத்துக்கொள்வதொன்றும் இலகுவானதல்ல. அல்லது பென்னாம் பெரிய எஜமானர்களிடம் நட்புக் கொள்வதாலும் அவர்களிடம் இரந்து கேட்பதனாலும் எதுவும் கிடைத்து விடப்போவதுமில்லை. எதுவும் நடந்து விடப்போவதுமில்லை. இதையே நாம் முன்னர் பார்த்த பலஸ்தீனர்களின் நிலையிலும் குர்திஷ்களின் விசயத்திலும் கண்டோம்.

ஈழத்தில் புலிகளால் விடுதலைக்குத் தடை என்றவர்கள் இப்போது என்ன பதிலைச் சொல்லக்கூடும்? அல்லது இப்போது எதுவும் செய்வதற்கில்லை என்பவர்கள் புலிகள் இருந்தபோது என்ன நடந்தது என்பதைச் சொல்ல வேண்டும்.

ஆகவே முடிச்சு வேறுவிதமாகவே அவிழ்க்கப்படவேண்டும். அது தனியே மேற்குலகத்திடம் மட்டும் இல்லை என்பதே இங்கு கவனிக்க வேண்டியது.

இதை போர் நடைபெற்ற இறுதிக் காலங்களில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் பேச்சாளராக கடமையாற்றிய கோடன் வைஸ் அண்மையில் வழங்கியிருந்த நேர்காணல் ஒன்றில் தெளிவாக்கியிருந்தார்.

“பொதுமக்களின் இழப்புகள் பற்றி அனைவரும் அறிந்திருந்தனர் என்றே நம்புகிறேன். அதே நேரம் ஐ.நா பாதுகாப்புப் பேரவையில் இலங்கையை சீனா பாதுகாத்து வந்தது என்பது உங்களுக்குத் தெரியும”; என்றும் இன்னொரு இடத்தில் அவர் கூறும்போது, “இன்றைய சமகாலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக மேற்குலக நாடுகளின் கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் செவி மடுக்கும் நிலை இல்லை. அவர்கள் (மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர்) மிகப் பலமாக உள்ளனர். அதேவேளை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன எனவும் நம்புகிறேன்” (தமிழ் மிரர்).

கோடன் வைஸ் மேற்குலகத்தைப் பாதுகாத்தாலும் உண்மைகளைச் சொல்கிறார். அது முக்கியமானது. இதைக்குறித்துத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

மூலம்: வீரகேசரி – ஐப்பசி 15, 2011

பிரசுரித்த நாள்: Oct 17, 2011 14:28:59 GMT

Edited by akootha

ஈழத்தில் புலிகளால் விடுதலைக்குத் தடை என்றவர்கள் இப்போது என்ன பதிலைச் சொல்லக்கூடும்?

புலம் பெயர் தமிழர்கள்தான் தடையாக உள்ளர்கள் என்று சொல்லக்கூடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தடையும் தடையின்மையும் ஒரு சாக்குப்போக்கே தவிர அங்கு வேறொன்றும் இல்லை. தமிழினத்தை அழிக்க உதவியவர்கள் ஐ. நா. தொடக்கம் உலகளாவிய வல்லரசுகளும் தான் இதில் போர்க்குற்றம் என்பது யார் மீது சுமத்துவது. இலங்கை அரசைவிட மற்றவர்கள் தான் முனைப்பு;ன் முண்டு கொடுத்து இலங்கை அரசைப்பாவித்தவர்கள். இன்று ராஜபக்ஷ இவர்களின் சுத்து மாத்து வித்தையை தெளிவுடன் அறிந்து கொண்டு யுத்தம் முடிவுற்ற கைளோடு சீனாவைப்பக்கபலத்து நிறுத்தி வைத்தமையால் மேற்குலகம், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளால் இலங்கை அரசை மிரட்டலால் அணுகமுடியவில்லை. ஒரு வல்லரசு இருக்கும்போது இன்னொரு வல்லரசு அங்கு கால்பதிக்காது. மொத்தத்தில் இவர்களின் பலவீனம் இலங்கை அரசைப்பலமாக்கியது. இப்பலத்தை உடைக்கக் காலங்கள் ஆகும். அல்லது 3ம் உலக மகாயுத்தம் தான் வெடிக்கும். அதைத்தாங்கும் சக்தி இந்தியாவிடமோ இல்லது மேற்குலகங்களிடமோ இல்லது அமெரிக்காவிடமோ இல்லை. ஆகையால் தமிழர்கள் இலங்கை அரசுடன் இணைந்து சீனாவைப்பலப்படுத்தி பின்னணி விளையாடிய இந்த உலகங்களை பழி தீரத்துவிடுவதே இவர்களுக்குச் சவாலாக அமையும். அரசியல் விளையாட்டில் எதிரி எதிரியுடன் இணையலாம் தவறில்லை. புலிகளை ஒடுக்க இந்தியா, பாகிஷ்த்தான், ஏன் சீனா ஓரணியில் நிற்கவில்லையா? புலிகளும் இலங்கை அரசும் இந்தியாவைக்கலைக்க ஒன்று சேரவில்லையா? அரசியலில் .இதுவெல்லாம் சகசம். அரசியல் காலநிலைகளுக்கேற்பக் காய்களை நகர்த்தி எங்களது குறியில் தவறாது பயணிப்பதே சரியன தேர்வு. பாதைகளை நேரத்திறகேற்ப மாற்றுவதில் தவறுகள் இல்லை. சேரும் இடத்தின் குறி தவறக்கூடாது. நாங்கள் மாறும்போது நம்மை இழுக்க தங்கள் திசை மாறுபவர்களும் அவர்களை எங்கள் கைக்குள் மடக்குவதும் விடுவதும் ஆக பல பயணங்கள் மூலம் எமது பாதை பயணிக்கவேண்டும்.

தமிழின விடுதலைக்கு புலிகள் தடை என்றோர் இப்ப என்ன சொல்வர்?

கையாலாகாததுகள் எதையாவது கண்டுபிடித்துச் சொல்லுங்கள்.

சூடு, சொரணை, மானங்கெட்டதுகளிடம் இப்படியான கேள்விகளைக் கேட்பது வீண்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரகேசரி அண்ணாத்தே வாழைப்பழத்தில் ஊசி ஏற்ற முற்பட்டுள்ளார். தமிழகத்திலும், மேற்குலகிலும் இப்போது ஏற்பட்டுள்ள மாற்றம் ஸ்ரீ லங்காவை வெருட்டியுள்ளது. அதை சரி செய்ய, வீரகேசரியை பாவிக்கிறார்கள் போலும்.

"பலஸ்தீனியர்களின் விடுதலையை மட்டு மல்ல, குர்திஷ்களின் விடுதலையையும் மேற்குலகத்தின் அரசியலே தடுத்துக் கொண்டிருக்கிறது."

இந்த கருத்தில் பலமான ஓட்டை உள்ளது. மேற்குலகு எதிர்க்கவில்லை மேற்குலகில் இருக்கும் யூதர்கள் எதிர்க்கிறார்கள். பாலஸ்தீன விடுதலையை பற்றி இந்த கட்டுரையில் தாக்கியவர்கள் யூதரை பற்றியோ அல்லது இஸ்ரேலின் மேற்குலக உறவை பற்றியோ கூறவில்லை.

" மனித அவலங்களுக் கெதிராக புலம்பெயர் மக்கள் நடத்திய போராட்டங்கள் நல்விளைவுகளை ஏற்படுத்தி யிருக்குமே. சிறிய அளவிலான தாக்கங்களையாவது ஏற்படுத்தியிருக்குமே."

இவர் இங்கு ஒரு மாற்றமும் வரவில்லை என்று எடுத்து விட முயல்கிறார். நமது மக்கள் நடத்திய போராட்டங்கள் பல மாற்றங்களை மேற்குலகில் கொண்டுவந்திருக்கிறது. ஸ்ரீ லங்கா காரர்கள் இப்போது சம்மன் வேண்டாமல் ஓடி ஒழிவதை முழு நேர தொழிலாக கொண்டுள்ளார்கள்.

"என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் காந்தியிடமும் மாவோவிடமும் நெல்சன் மண்டேலாவிடம் மக்களுடன் கலந்து வாழக்கூடிய மன இயல்பிருந்தது"

அடுத்த ஓட்டை. காந்தி, தலித்துகளுக்கு இங்கிலாந்துகார்கள் கோவில் நுழைய சட்டம் நிறைவேற்ற போகிறார்கள் என்று பதறியடித்து சென்று அதை தடுத்தவர். அவர் தனது பார்சி மக்கள் நேரு, ஜின்னா, டாட்டாவுடன் மட்டுமே வாழ்ந்தவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"இதைத் தவிர, அதிகாரமற்ற, தாக்கங்களை ஏற்படுத்த முடியாத தரப்பினர்கள் ஈழ ஆதரவுச் செயற்பாடுகளில் இருக்கின்றனர்."

வீரகேசரி அண்ணாத்தே வெறுப்பில் இருக்கிறார். இவர்களை பத்திரிக்கை என்ன செய்து கிழித்தது? ஈழ ஆதரவாளர்களை இங்கே இழிவு செய்ய முயல்கிறார். வெத்துவேட்டுக்கள் மற்றோரை குறை கூறுகிறார்கள். இப்போது தமிழகத்தில் வரும் அனுதாப அலை பயங்கர தாக்கத்தை வருங்காலத்தில் கொடுக்கும். எழுபது மில்லியன் தமிழகத்தாரை, பதினாறு மில்லியன் சிங்களவன் குறைத்து மதிப்பிடுவானா?

"இந்த ஈழ ஆதரவுச் சக்திகளால் இதுவரையில் பயன்விளைவான ஏதாவதொரு காரியத்தைச் செய்ய முடிந்ததா? அதாவது சிறு துரும்பைக்கூட இந்த விசயத்தில் அசைக்க முடிந்ததா? "

என்ன பயன்? என்ன காரியம்? என்ன விளைவு ? ஒன்றும் சொல்லாமல் கேள்வி கேட்கிறார்கள். தலை காயுது. சிறு துரும்பு என்று விட்டு ஈழத்தவரின் மீன் பிடி பிரச்சினையை கொண்டுவருகிறார். புலிகளின் பூட்ஸ் தொடக்கம், ராக்கெட் லோஞ்சர் வரை யார் செய்து கொடுத்ததது என்று இந்த அறிவாளிக்கு தெரியுமோ?

"ஏனெனில், புலம்பெயர் தமிழர்களின் பலத்துக்கு நிகராக அல்லது அதற்கும் மேலான பலத்தோடு அரபுலகம் இருக்கிறது. ஆனால், அந்தப் பலத்தினால் பலஸ்தீனர்களாலும் குர்திஷ்களாலும் அரசியலில் வெற்றியடைய முடியவில்லை."

ஆனால், அரபுலகத்திலும் பார்க்க யூதர்கள் பலமானவர்கள் என்பதை இந்த அறிவாளி தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான். இந்த கட்டுரையே மேற்குலக தமிழர்களை குழப்ப எழுதப்பட்டுள்ள ஆதாரம் இல்லாத ஒரு குப்பை.

"அதற்கான மக்கள் பலத்தைப் பெறுவதும் அந்தப் பலத்தை அரசியற் பெறுமானமாக்குவதுமே வெற்றியைத் தரும்"

ஐயா...சாமி....போதும். இப்ப தான் இருபது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஏழு கோடி தமிழர் வேஸ்ட் என்று கூறிவிட்டு பின் ஈழத்தமிழர் மக்கள் பலத்தை பெற வேண்டுமாம்.

பின் அரசியல் தலைமை...அது இது என்று குழப்ப தொடங்குகிறார்.

"அல்லது பென்னாம் பெரிய எஜமானர்களிடம் நட்புக் கொள்வதாலும் அவர்களிடம் இரந்து கேட்பதனாலும் எதுவும் கிடைத்து விடப்போவதுமில்லை"

அண்ணாத்தே, நாங்கள் நட்பு கொள்ளவில்லை. ஒன்றாக வாழ்கிறோம். மற்றும் நாம் ஒன்றும் இரந்து கேட்கவில்லை. தமிழ் ஈழம் வந்தால் எஜமானர் இன்னும் எப்படி பலன் அடைவார் என்று சொல்லித்தான் அலுவலை குடுக்கிறம்.

நீங்கள் கட்டுரைஎன்று காசை வேண்டி சனத்தை எமாத்திரத்தை விடுங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.