Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் சமூகத்தின் மீது இலங்கை கொண்டுள்ள பெருங்கோபம்

Featured Replies

ஈழ விடுதலைப் போரின் ஆரம்பக் கல்லாக 1983 ஆம் ஆண்டை மேற்கோள் காட்டி வரைவது பொதுவான விடயமாக இருந்தாலும் அந்த ஆண்டு இடம்பெற்ற இனக் கலவரத்தின் பின் சகல ஆயுதப் போராட்டக்

குழுக்களும் இந்தியாவின் தமிழ்நாட்டை தமது தளமாகக் கொண்டன.தமிழ் ஈழவிடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, மாணவர் ஈழப் புரட்சிகர இயக்கம், தமிழ் ஈழமக்கள் விடுதலைக் கழகம், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள், ஈ. என். டி. எல். எவ். போன்ற குழுக்கள், அமைப்பாக உருவாக்கப்பட்டு ஈழப்போர் என்ற பொது இலட்சியத்துடன் போராட முற்பட்ட வேளை மக்கள் இந்த அமைப்புக்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்தார்கள்.

இவற்றுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடுகளும் குழுவாதம் இருந்த போதிலும் 1985 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் திகதி போர் நிறுத்தம் செய்யப்பட்ட போது யாழ். குடாநாட்டில் ஆயுதப் போராளிகள் அதிகளவில் இருந்தனர். இவர்கள் மீது மக்கள் கொண்ட நம்பிக்கைகள் உச்சம் பெற்றிருந்தன.

இலங்கை தமிழர் சமவுரிமைப் பிரச்சினை காலத்துக்குக் காலம் ஒவ்வொரு தரப்பிலும் தங்கியிருந்த வரலாற்றை நாம் பார்த்திருக்கிறோம். இலங்கை சுதந்திரமடைந்த பின் சிங்கள தேசிய எழுச்சி தமிழர்களுக்கெதிரான சட்டங்களையும் இன ஒழிப்பையும் மேற்கொண்ட வேளை இந்திய அகிம்சாவாத அருட்டுணர்வின் காரணமாக சத்தியாக்கிரகப் போராட்டத்தையும் உண்ணாவிரதப் போராட்டத்தையும் தமிழர் நம்பியிருந்தனர்.

1970 க்குப் பின் தேசிய அரசுப் பேரவை உருவாக்கப்பட்ட வேளையில் பகிஷ்கரிப்பையும் கறுத்தக் கொடியேற்றலும் தேசியக் கொடி மறுப்பும் உரிமைகளை பெறும் உத்திகளாக கையாளப்பட்டன. இது சற்றும் மாறுபட்ட போராட்டமாக மாற்றப்பட்டு பாராளுமன்ற ஜனநாயகத்தின் மூலம் உரிமைகளை தமிழர் பெறடியும் என்ற நப்பாசை வலுக்கொண்டு அது 1977 வரை நீடித்து நின்றது.

இதற்கிடையில் பல்கலைக்கழக தரப்படுத்தல், தொழில் வாய்ப்பின்மை, இனக் கலவரங்கள் சிங்களக் குடியேற்றங்கள் போன்ற இன்னோரன்ன கெடுபிடிகள் தமிழர் தம் போராட்ட உத்திகளை இன்னொரு திசைக்கு இழுத்துக் கொண்டு வந்தது. 1983 ஆம் ஆண்டின் இன வெடிப்புக்கள் இதற்கு தூபம் போட்டன. ஆளுக்கொரு திசையில் நின்று விடுதலை அமைப்புக்கள் தமது போராட்டங்களைத் தொடங்கின.

இந்த அமைப்புக்களுக்கிடையே ஏற்பட்ட முறிவுகளும், பனிப்போர்களும், சகோதரப் படுகொலைகளும் உள்ளார்ந்த முரண்பாடுகளும் அனர்த்தமான நிலையிலும் பொடியன்கள் எங்கள் உரிமைகளை வென்று தருவார்கள் என்ற மேலாண்மைக் கனவுகளோடு தமிழ் மக்கள் காத்திருந்தார்கள்.

இந்தியா விமானத்தின் மூலம் வடபகுதியில் நிவாரணப் பொருட்களைப் போட்டதுடன், இந்தியாவின் உதவியின்றி எதையும் சாதிக்க முடியாது எங்களின் ஆபத்பாந்தவர்களாக தமிழகம் இந்தியாவுமே இருக்க முடியும். அவர்களின்றி அணுவும் அசையாது என்ற நம்பிக்கைத் திசைக்கு திரும்பினார்கள் தமிழர்கள். பொடியன்களை இதுவரை நம்பி இருந்தவர்கள் இந்திய தாசர்களாக மாறிக் கொண்டார்கள். இதற்கு வலுவூட்டுவது போல் 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் அமைந்தது. இந்திய அமைதிப் படை ஈழ மண்ணில் காலடி எடுத்து வைத்த வேளை நாங்கள் சுதந்திரம் அடைந்து விட்டோம் என்ற பள்ளைப் பாடினார்கள் வட கிழக்கு வாழ் தமிழர்கள். இந்த ஆனந்தம் பள்ளும் படிப்படியாக மங்கிக் கொண்டு போன நிலையில் மீண்டுமொரு புதிய பணாமமாக வடகிழக்கு இணைக்கப்பட்ட மாகாணம் ஆட்சி பீடம் ஏறுதலும் மாகாண சபைப் பிறப்பும் தமிழ் மக்களுக்கான கனவு சாம்ராச்சியத்தின் முதல் முடிசூடப்பட்டுவிட்டது.

மாகாண சபை என்னும் சுயராச்சியத்தின் முன் மொழிவு அல்லது குட்டி ராச்சியம் கொண்டு வரப்பட்டுவிட்டது. இந்தியா எங்களை உரிய வரை கோட்டுக்கு அழைத்துச் செல்லும் என்று நம்பினார்கள். அந்த நம்பிக்கை 1990 ஆம் ஆண்டுடன் அஸ்தமனத் திசைக்குள் நுழைந்து கொண்டது. குறித்த ஒரு இயக்கம் தன்னைச் சுதாரிகத்துக் கொண்டு வன்னியைத் தளமாக்கி போராடிய காலம், இவர்களின் தியாகங்கள் சமர் யுக்திகள், அதனூடான சாதனைகள் எங்கள் தேசத்துக்கு விடிவைத் தரும் என்று நம்பினார்கள் நம்மவர்கள். நாங்கள் எங்களது கனவுப் பாதையினால் நடந்து சென்று தாகமயப்பட்ட தாயகத்தை நிறுவியே தீருவோம் என்று புளகாங்கிதமடைய வைத்த போராட்ட வெற்றிகள் எங்களை வலுக்கொள்ள வைத்ததுடன் நம்பிக்கைகளை ஊட்டி நின்றன.

சம பலமுள்ளவர்களாக நாங்கள் இருக்கின்ற போது சர்வதேசம் எங்களை அங்கீகரிக்கும். சமமாக மதிக்கப்படுவோம். இந்திய துணைக் கண்டம் எங்களை வஞ்சித்து விட்டது. தனது இந்து சத்திர வல்லாதிக்க கனவுகளுக்குள் எங்களை சிக்க வைக்க கபட நாடகம் ஆடுகிறது என்ற அவநம்பிக்கைகள் காரணமாக தமிழர்கள் மேற்குத் திசையை நோக்கிப் பறந்தார்கள். சமாதானப் பேச்சுவார்த்தைகள் தமிழர்களை வரவேற்று நின்றன. சர்வதேச சமூகம் கைகொடுக்கும் அதற்கான மார்க்கம் சமாதானப் பேச்சுவார்த்தைக் குதிரையில் ஏறிக் கொண்டு நோர்வேயின் எரிக் சொல்ஹெய்ம் ஜப்பான் அகாசியும் சாரதிகளாக தேரை யோட்டிச் சென்றார்கள்.

மறுபுறம் போராட்ட வடிவங்கள் புதிது புதிதாக வகுக்கப்பட்டன. சர்வதேசம் என்ற கோதாவில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையென்னும் தேரோட்டமே வெற்றியைத் தர முடியும், அதற்குரிய பூர்வாங்க நெறிறைகளை நாங்கள் மேற்கொள்கிறோம் என்று டோக்கியோவுக்கும் ஜெனீவாவுக்கும் ஒஸ்லோவுக்கும் அழைத்த வேளைகளில் எல்லாம் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட்டுவிட்டது. தமிழர் தம் பிரச்சினை முடிவுக்கு வரப் போகிறது. தீர்வு எனும் முடிவு மையம் கொண்டு விட்டது என்று மக்கள் நம்பினார்கள். பேச்சு வார்த்தையே உண்மையான மார்க்கம். உரிமைக்கான வழியென நம்ப வைக்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்புக்களும் கனவுகளும் 2006 ஆம் ஆண்டின் மணலாறு வீழ்ச்சியுடன் விடு தலைப் புலிகள் மீது சர்வதேசம் கொண்ட கடுங்கோபம் காரணமாக, சர்வதேச சக்திகள் விடுதலைப் புலியமைப்பை தடை செய்தமை இவ்வமைப்பை தோற்கடிக்க சர்வதேச சக்திகள் மேற்கொண்ட கைகோர்ப்புகள் 2009 ஆம் ஆண்டின் வன்னிப் போரில் புலிகள் அழிக்கப்பட்டார்கள் என்ற செய்தி தமிழ் பேசும் சமூகத்தையும் புலம் பெயர் வாழ் தமிழர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

இந்த முடிவின் பின் எல்லாம் இழந்த நிலையில் அநாதரவற்றவர்களாக கேட்பாருமில்லை உதவுவாருமில்லை என்ற நிலையில் இடிவிழுந்த சுவர்களாகி இருந்தவர்கள் தான் தமிழர்கள். மறுபக்கம் வாரி வாரி வழங்கி தாயக மண் மீட்கப்பட வேண்டுமென்று கனவு கண்டவர்களான புலம் பெயர்ந்தவர்கள் திக்குத் தெரியாத திசைவாதிகளாக ஆக்கப்பட்டார்கள். தாயக மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இனி புலம் பெயர்ந்தவர்களை நம்ப முடியுமா? என ஏங்கியிருக்க, புலம் பெயர்ந்தவர்களோ சர்வதேச சமூகத்தை நாடி ஓட வேண்டிய ஒரு சூழ்நிலை நெருக்கடியில்தான் புலம் பெயர் சமூகத்தின் மூலமே, தமிழர் தம் பிரச்சினையை முன்னெடுக்க முடியும். சர்வதேச மயப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை துளிர்விடத் தொடங்கியது. எந்த திக்கும், திசையும் தெயாத நிலையில் அந்தரித்துக் கொண்டிருந்த தமிழர் தம் தரப்புக்கு அனாதரட்சகர்களாக, விடிவுகால நட்சத்திரங்களாக தெரிந்தவர்கள் தான் இந்த புலம் பெயர் தமிழர்கள். இந்தப் புலம் பெயர் தமிழர்கள் யார்?

அவர்கள் எங்கிருக்கிறார்கள். அவர்களால் எதைச் சாதிக்க முடியும் என்ற வாதப் பிரதிவாதங்களை ஒருபுறம் இருக்க வைத்து விட்டு இவர்கள் பற்றிய ஒரு வரலாற்றுப் பார்வையை சுருக்கமாக நோக்குவது நன்று. வடக்கு கிழக்கு தமிழர் தம் வாழ்வில் கறைபடிந்த அத்தியாய ஆண்டு 1983 ஆம் ஆண்டு. வீடு இழந்து, வாசல் இழந்து, குடியிழந்து, கிராமம் இழந்து, உயிர்களை, உடை மைகளைப் பறிகொடுத்து சொந்த மண்ணில் நிம்மதியாக வாழ முடியவில்லையே என்ற பயங்கரத்துடன் ஓடத் தொடங்கியவர்கள் தான் இந்த புலம் பெயர் தமிழர்கள்.

ஐந்து கண்டங்களிலுள்ள ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகள் அவுஸ்திரேலியா என எந்தத் திசைகளில் எல்லாம் இந்த வடகிழக்குப் பறவைகள் பறக்க முடியுமோ அந்தத் திசைகளில் எல்லாம் பறந்து நிம்மதியை நாடி ஓடினார்கள். வரலாற்று ஆசிரியர் ஒருவர் கூறியதைப் போல, இரண்டாம் உலகப் போர் மக்களுக்கு அளவற்ற இன்னல்களையும் இழப்புக்களையும் தந்தது.

50 மில்லியன் மக்கள் உயிர் இழந்தார்கள். எண்ணற்ற நகரங்களும் கிராமங்களும் தரைமட்டமாகின. 437 கோடிக்கு மேற்பட்ட மக்கள் அகதிகளாக்கப்பட்டார்கள். இத்த கையதொரு நிலையைத்தான் இருக்கும். 1983 ஆம் ஆண்டுக்குப் பின்னைய காலம் உருவாக்கி நின்றது. பேரினவாத தேசிய எழுச்சியைத் தொடர்ந்து அகதிகள் என்ற பட்டத்துடன் உலகிலுள்ள 30 க்கு மேற்பட்ட நாடுகளில் இலங்கைத் தமிழர் தஞ்சம் கோரி அங்குள்ள அரசுகளிடம் அகதி அந்தஸ்து வேண்டி சுதேச மண்ணை விட்டு ஓடியவர்களே புலம் பெயர் சமூகம் என்ற காரணப் பெயரை பெற்று நிற்கின்றார்கள்.

அண்மைக் கால தளமொன்றின் புள்ளி விபரத் தரவுகளின்படி அமெக்காவில் இரண்டு இலட்சம் பித்தானியாவில் மூன்று இலட் சம் கனடாவில் ஐந்து இலட்சம் அயர்லாந்தில் மூவாயிரம் அவுஸ்திரேலியாவில் ஒரு இலட்சம் இத்தாலியில் 5 ஆயிரம் டென்மார்க்கில் 15 ஆயிரம், ஜேர்மனியில் 40 ஆயிரம், பிரான்ஸில் 30 ஆயிரம், நோர்வேயில் இரண்டு இலட்சம் பேரும் சுமாராக வாழ்வதாகச் சொல்லப்படுகிறது.

இவர்களின் பலத்திலேயே எதிர்கால நகர்வுகள் அமையப்படவிருக்கின்றன. சர்வதேச சமூகத்தினரை இலங்கைத் தமிழர் பக்கம் பார்க்க வைக்கக் கூடிய கைங்கரியத்தை இன்றைய நிலையில் செய்யக் கூடியவர்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள், இவர்கள் கையில் பந்து ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற நிலையில் இவர்களை நம்பி வாழ வேண்டிய சந்தர்ப்பம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது என்பது உண்மையே.

வன்னி இறுதிக்கட்டப் போரில் ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள், இனவழிப்புக்கள், கொடூரங்கள் துவாம்ஷங்களை சர்வதேசத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர்கள் புலம் பெயர் சமூகம் என்பதை எல்லாத் தரப்பினரும் ஏற்றுக் கொள்கிறார்கள். சனல் 4 காட்சிகள், மனித உரிமை மீறல் சம்பவங்கள் பற்றிய விபரங்கள், ஐ.நா சபை அறிக்கைகள், ஏனைய ஆவண வெளியீடுகள், பதிவு செய்யப்பட்ட சாட்சியங்கள் என்ற ஆதாரங்களை சர்வதேச சமூகத்துக்கு கொண்டு சென்றவர்கள் புலம் பெயர் சமூகமென வந்து கட்டிக் கொண்டு சொல்லப்படுகிறது. புலம் பெயர்ந்தவர் வட்டத்திலுள்ள புத்திஜீவிகள், கல்விமான்கள், விரிவுரையாளர்கள், பேராசியர்கள், இயங்கி வருகின்ற சர்வதேச அமைப்புக்கள், பேரவைகள், இணையத்தளங்கள், பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள் என்ற ஒட்டு மொத்த அமையங்கள் மேற்காட்டப்பட்ட நடவடிக்கைகளில் கணிசமான பங்களிப்பை செய்துள்ளதாக கருதப்படுகிறது.

இவைகளே தேசம் கடந்த ஈழப் பிரகடனத்தை கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்ட போது அத்தகைய முன்னெடுப்புக்கள், இலங்கை அரசுக்கு புதியதொரு சவாலாக இருந்தது. இந்த தேசம் கடந்த பிரகடன செய்திகள் சர்வதேசத்தின் புதிய பரிமாணங்களுக்கும் சட்டங்களுக்கும் ஏற்றவையாக இருந்து விட்டால் தமிழர் பிரச்சினைக்கு இப்படியொரு தீர்வு ஆவது வந்து விடும் என்ற நப்பாசை தலை தூக்கி நின்ற வேளையில், இந்த முன்னெடுப்புக்கு புலம்பெயர்ந்தவர்கள் பின்னணி வகிக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டு அரசாங்கத்தால் அடுக்கடுக்காக வைக்கப்பட்டது. இந்தத் தேசம் கடந்த பிரகடன அலை ஓய்ந்து கொண்டிருக்கையில், ஒன்றன் பின் ஒன்றாக சனல் 4, கொலைக்கள காணொளி, ஐ. நா.வின் குற்ற அறிக்கை போன்றன உலகத்தை இலங்கை அரசின்பால் திரும்பிப் பார்க்க வைத்தது.

ஐ. நா. தொடக்கம் அமெரிக்கா வரை கொலைக் களத்தின் கொடூரக் காட்சிகள் கண்ணீரை வரவழைத்த நிலையில் இக்காண் ஒளிக் காட்சியை உலகமயப்படுத்தியவர்கள் யார்? என்ற அதிர்ச்சிக்குள் இலங்கை அரசு மூழ்கிக்கிடந்தது. இதுவரை பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு நின்ற ஐரோப்பிய சமூகம் இலங்கையின் நட்பு நாடுகளும் தலையில் கை வைத்து அதிர்ந்து போய் நின்றன.

இத்தகைய வேளையில் தான் ஜனாதிபதியவர்கள் இங்கிலாந்து பல்கலைக்கழக மன்றமொன்றின் அழைப்பின் பேரில் உரையாற்ற சென்ற வேளை நடந்த சம்பவம், புலம் பெயர் சமூகத்தின் தேசவிரோத செயல் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் பயங்கரவாத ஆய்வு தொடர்பான விசேட நிபுணர் பி.ரொஹான் குணவர்த்தன ஒரு கருத்தை முன் வைத்தார். ““சர்வதேசத்தில் ஊடுருவியுள்ள புலிகளின் வலையமைப்பு இன்னும் இலங்கைக்கு சவாலாகவே உள்ளது. அரசியல் துறை, ராஜதந்திர வட்டாரங்கள் உட்பட சகல துறைகளிலும் புலிகளின் சர்வதேச வலையமைப்பு, ஊடுருவியுள்ளது. இதனை எதிர்கொள்ள வெளிவிவகாரத் துறையில் விசேட பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். புலம்பெயர் தமிழர்களுக்கான தனித்துறையொன்று வேண்டுமென'' வலியுறுத்தியுள்ளார்.

சனல் 4வீடியோ கொலைக்களப் பார்வை உக்கிரம் அடைந்து போன நிலையில் மறுகோணத்தில் ஐ. நா.வின் போர்க் குற்ற அறிக்கை வெளிவந்தது. இந்த அறிக்கையின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? இந்த அறிக்கை வெளிவர மூலகர்த்தாக்களாக விளங்குகிறவர்கள் எங்கே உள்ளனர் என அரசு தேடற்பட்டது. இலங்கைக்கு எதிராக ஐ.நா. வின் போர்க் குற்ற அறிக்கையை தயாரித்தமை அதனை ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் கையளித்தமை தொடர்பாக இதன் பின்னணியில் புலம் பெயர் தமிழர்கள் உள்ளனர். இதைக் கூறியவர் வேறு யாருமில்லை வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரீஸ், நாட்டின் அரசியல் பொருளாதார மற்றும் பாதுகாப்பு என்பவற்றை சீர்குலைக்கும் நோக்கில் புலம் பெயர் தமிழர்கள் தமது செயல்பாட்டை ஆரம்பித்துள்ளனர் என பீரீஸ் அடித்துக் கூறியுள்ளார்.

இதிலிருந்து புலம் பெயர் சமூகத்தின் மீது இலங்கை அரசு கொண்டுள்ள கடுங்கோபம் உணர்த்தப்படுகிறது. இதற்குக் காரணம் புலம் பெயர் தமிழர் சமூகம் சர்வதேச நாடுகளில் வசித்து வரும் செல்வாக்கும், அதிகார பலமாக இருக்கலாம். இதற்கு ஆதாரமாக இரண்டொரு உதாரணங்களைக் கூறமுடியும். உலக வரலாற்றில் முதல் தடவையாக கனடாவின் தேசியப் பாராளுமன்றத்தில் உறுப்பினராக இலங்கையைச் சேர்ந்த ராதிகா சிற்சபேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை உலகத்தார் கண்களுக்கு ஆச்சரிய குறியை உண்டாக்கியிருக்கிறது.

மூன்று மொழிகளில் பேசும் திறன் கொண்ட ராதிகா பாராளுமன்றத்தில் இலங்கை தமிழர் பிரச்சினை சம்பந்தமாக தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றிய உரை ஓட்டோவாசண் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், ““எனது பிறந்த நாட்டில் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்படும் போர்க் குற்றம் குறித்து சுயாதீனமான விசாரணையை நான் பார்க்க விரும்புகிறேன். உள்நாட்டு யுத்தத்தின் இறுதியின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக தெவிக்கப்படும் விடயம் குறித்து விசாரணை நடத்துவதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு தேவைப்படுவதாக'' என்ற துணிச்சலான கருத்தை ஸ்காபிரோ ரூச் ரிவர் தொகுதியின் உறுப்பினரான ராதிகா தெவித்துள்ளார்.

அண்மைக் காலத்தில் இலங்கை பற்றிய பார்வையில் கனடாவின் போக்கு மாறி வருவதை ஆய்வாளர்கள் தெரியப்படுத்தி வருகிறார்கள். கடந்த வாரம் வெளிவந்த நோர்வே நாட்டின் உள்ளூராட்சி தேர்தலில் 11 இலங்கைத் தமிழர்கள் வெற்றி பெற்றிருப்பது இதுபோன்று பிரான்ஸ் பாஸ் கவுன்சிலர் தேர்தலில் பல இலங்கைத் தமிழர் வெற்றி பெற்று அங்கத்தவர்களாக இருப்பதும் புலம் பெயர் தமிழர்களின் செல்வாக்கை எடுத்துக் காட்டுவதாக அமைகிறது. இதற்கும் புறம்பாக, 63 சிறிய தீவுகளைக் கொண்ட 5 மில்லியன் சனத்தொகை உடைய சிங்கப்பூரில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தர்மன் சண்கரத்தினம் என்பவர் துணைப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை வியப்புத் தருகின்ற விடயமாகும். இவரின் மூதாதையர்கள் யாழ். ஊரெழுக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

இத்தகையதொரு சர்வதேச புலம் பெயர் வட்டவலைக்குள் சர்வதேசம் அகப்பட்டு விட்ட காரணத்தினால்தான் சர்வதேசம் இலங்கைபால் கொண்டுள்ள கடும் போக்கு வாதம் தமக்கு எதிராகியுள்ளது'' என இலங்கை அரசு எண்ணுவதுடன் இதன் காரணகர்த்தாக்களாக விளங்குபவர்கள் புலம்பெயர் தமிழர்கள் என்ற வாதம் தலைதூக்கி நிற்கிறது.

இதற்கு ஆதாரமாக சிலவற்றை எடுத்துக் காட்டுவது சிறப்பாக அமையும். அண்மையில் ஜனாதிபதி புலம் பெயர் சமூகத்துக்கு பகிரங்க அழைப்பொன்றை விடுத் துள்ளார். ““தமிழர் தம் மறுவாழ்விலும் அபிவிருத்தியிலும் கலந்து கொள்ள புலம் பெயர் சமூகம் முன் வர வேண்டும் என்று கேட்டுள்ளார். இது எதைக் காட்டுகின்றதென்றால் அச் சமூகத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென்ற அவன் ஆர்வத்தைச் சுட்டிக்காட்டுகிறது. இதேவேளை ““இலங்கைக்கு எதிராக சர்வதேச சமூகத்தை திசை திருப்பிக் கொண்டிருப்பவர்கள் புலம்பெயர் சமூகமென்ற மாயாவாதமும் இலங்கைத் தரப்பில் நிலவி வருவதும் உண்மையே.

தமிழர் தம் பிரச்சினைக்கு தீர்வு கொண்டு வரக் கூடிய நெருக்குவாரத்தை சர்வதேச சமூகத்தினூடாக இலங்கை அரசுக்குக் கொடுக்கக் கூடியவர்கள் புலம் பெயர் தமிழர் என்ற நம்பிக்கை வாதம் இப்பொழுது தமிழர்கள் மத்தியில் வேர்விட்டு நிற்கின்றது என்பதற்கு பல ஆதாரங்களை எடுத்துக் கூற டியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கை யில், ““எப்பொழுதுமே இல்லாத வகையில் சர்வதேச சமூகம், ஐ. நா. சபை, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஐரோப்பிய நாடுகள், இலங்கை பல்லின நாடு என்றும் அங்கு தமிழர் சமவுரிமை பெற்று வாழ்வதற்கு உரித்துடையவர்கள். அவர்கள் உரிமை மதிக்கப்பட வேண்டும்.

பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான அரசியல் தீர்வு ஒன்று காணப்பட வேண்டுமென சர்வதேச சமூகம் கொடுத்த அழுத்தம் காரணமாகவே தமிழர் தரப்புக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஆரம்பமானது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் ““ புலம் பெயர் சமூகம்'' என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஆதாரமாக இன்னுமொரு உதாரணத்தையும் எடுத்துக் காட்ட முடியும். கடந்த ஜூலையில் இந்தியப் பிரதமரை சந்தித்து உரையாடிய உலகத் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் சேதுராமன் பிரதமடம் ““இலங்கைப் பிரச்சினை ஐ. நா.சபையில் வாக்கெடுப்புக்கு வரும் போது தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா நிற்க வேண்டும். 13 ஆவது சட்டத் திருத்தம் தரும் அனைத்து உரிமைகளையும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா பெற்றுத் தர வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இதுபோன்றே உலக நாடுகளில் வாழும் புத்திஜீவிகள், பேராசியர்கள், கல்விமான்கள், அரசியல்வாதிகள், கனடிய தமிழ்க் காங்கிரஸ், உலகத் தமிழர் பேரவை, பித்தானிய தமிழ்ப் பேரவை, அவுஸ்திரேலிய தமிழ் அமைப்புக்கள், சுவிஸ் தமிழ் அமைப்புக்கள் என எண்ணற்ற அமைப்புக்களும் நபர்களும், மனித உரிமை தாபனங்கள், தன்னார்வ நிறுவனங்களும் இலங்கைப் பிரச்சினைக்கு துரிதமான தீர்வு காணப்பட வேண்டுமென சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம் முஸ்தீபும் கொடுத்துக் கொண்டிருக்கிற நிலையில்தான் ஜனாதிபதி யாழ். கொக்காவிலில் நிறுவப்பட்ட பல்நோக்கு கோபுர திறப்பு விழாவில் 6.6.2011 ஆற்றிய உரை சர்வதேச சமூகத்துக்கும் புலம் பெயர் சமூகத்துக்குமான கருத்தாகக் கொள்ளப்படுகிறது.

அரசியல் தீர்வு காணும் விவகாரத்தில் தலையிட எந்தவொரு வெளிநாட்டவர்க்கும் இடமளிக்கப் போவதில்லை என அழுத்தமாகக் கூறியுள்ளார். இத்தகையதொரு சமநிலையற்ற தன்மையில்தான் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டுமென ஒரு பக்கதரப்பினரும் மறுபக்கதரப்பினர் சர்வதேச விசாரணை சட்ட திருத்தம் தீர்வுத் திட்டம், நீதிமன்றில் நிறுத்தல் என்றெல்லாம் வாதங்கள் புரிந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் புலம்பெயர் சமூகமொன்றின் ஆதரவே விடிவுக்கான வழிசமைக்கும் என்ற நம்பிக்கை வாதம் நம்பிக்கையாக வளர்ந்து நிற்பது தவிர்க்க முடியாததாகவுள்ளது.

http://akkinikkunchu.com/new/

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டொன்று இயக்க காசை திருடியதற்காக இங்கு சிலர் கூறுவதை போல் புலம் பெயர் சமூகம் வேறு ஈழத்தமிழர் வேறல்ல.பலரின் உறவுகள்,நண்பர்கள் ,பெற்றோர்,சகோதரர்கள்,சகோதரிகள் என பலர் தாயகத்தில் வாழ்கிறார்கள்.தாயகத்தில் வாய் திறந்து தமது சொந்த கருத்தை தெரிவிக்க முடியாத போது அவர்களின் குரலாக புலம் பெயர்ந்த மக்கள் செயற்படுகிறார்கள்.

Edited by nunavilan

பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான அரசியல் தீர்வு ஒன்று காணப்பட வேண்டுமென சர்வதேச சமூகம் கொடுத்த அழுத்தம் காரணமாகவே தமிழர் தரப்புக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஆரம்பமானது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் ““ புலம் பெயர் சமூகம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏதோ கொஞ்சம் மரியாதை உள்ளது :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ கொஞ்சம் மரியாதை உள்ளதுbiggrin.gif

அதாலை.... தான், கொஞ்சக் கருத்தாவது எழுத பொயின்ற்ஸ் கிடைக்குது.laugh.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.