Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலத்து மக்களால் தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்க முடியும்: டாக்டர் ஜமுனானந்தா

Featured Replies

புலம்பெயர் மக்களால் தமிழர் தாயகத்தில் தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்க முடியும் . அதன் மூலம் பல்கலைக்க்ழகம் கிடைக்காத மாணவர்களுக்கு நல்ல கல்வியினை வழங்கமுடியும்.

.

எடுத்துக்காட்டாக உலகெங்கும் சிதறி வாழும் தமிழ்க் கல்வியலாளர்களின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் தனியார் பல்கலைக்கழகமொன்றை அமைக்க முடியும் என்று கலாநிதி யமுனானந்தா தெரிவித்துள்ளார்.

.

யுத்தத்தின்போதும், யுத்தத்தின் பின்னைய சூழலிலும் பல கல்வியலாளர்கள், மருத்துவர்கள் தமது பிரதேசத்தைவிட்டுப் புலம்பெயர்ந்து சென்றுவிட்டனர் என்று குறிப்பிட்ட யாழ் மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி கலாநிதி யமுனானந்தா, இவர்களில் பலர் உலகில் மிகச்சிறந்த பேராசிரியர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும், விரிவுரையாளர்களாகவும் பல முன்னணிப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பிக்கின்றனர் என்று தெரிவித்தார்.

.

இவ்வாறு சிதறிப்போயுள்ள தமிழ்க் கல்வியலாளர்களது சக்தியை ஒரு புள்ளியில் குவித்து அவர்கள் மூலம் யாழ்ப்பாணத்தில் வாழும் அடுத்த சந்ததியினருக்கு கல்வியூட்டுவதற்கு உறுதியான தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

.

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கத்தினரின் ஏற்பாட்டில், விஞ்ஞானபீடத்தின் பௌதீகத்துறை விரிவுரை மண்டபத்தில் நேற்று நடைபெற்ற இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பாக அறிவூட்டும் கருத்தரங்கில் உரையாற்றும்போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

.

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுபவர்களில் பொதுவாக 5 சதவீதமானோரே பல்கலைக்கழக அனுமதியைப் பெறுகின்றனர். 90 சதவீதமானவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதி இருந்தும் அவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பை வழங்க அரச பல்கலைக்கழகங்களில் போதிய இடவசதி இல்லை.

.

இதனால், தனியார் பல்கலைக்கழங்கள் இங்கே அவசியமாகத் தேவைப்படுகின்றன´ என்று சுட்டிக்காட்டிய அவர், கல்விச்சேவையின் செலவுகளை விலை நிர்ணயம் செய்து வழங்க முடியும் என்றும் தெரிவித்தார்.

மூலம்

புலம்பெயர் மக்களால் தமிழர் தாயகத்தில் தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்க முடியும் . அதன் மூலம் பல்கலைக்க்ழகம் கிடைக்காத மாணவர்களுக்கு நல்ல கல்வியினை வழங்கமுடியும்.

அண்மையில் படித்த பல ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை இல்லை என்ற ஒரு செய்தி வந்தது. எனவே, முதலில் வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதே முக்கியமாக தெரிகின்றது. அதற்கு அங்கு ஒரு அடிப்படை அரசியல் உரிமைகள் இருந்தாலே அதுவும் சாத்தியமாகலாம்.

Edited by akootha

அண்மையில் படுத்த பல ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை இல்லை என்ற ஒரு செய்தி வந்தது. எனவே, முதலில் வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதே முக்கியமாக தெரிகின்றது. அதற்கு அங்கு ஒரு அடிப்படை அரசியல் உரிமைகள் இருந்தாலே அதுவும் சாத்தியமாகலாம்.

இந்த அரசியல் சூழ்நிலையில் புலத்து மக்கள் தாயகத்தில் எதற்கும் இறங்க முடியாது. இந்த படிப்பாளிகள் தமது பதவிகளை பந்தகாரர்கள் பறித்தெடுக்க தமது வாழ்வாதாரத்திற்காக வெளியே ஓடியவர்கள். அவர்கள் திரும்பும் போது தொண்டர்களாக மட்டும் தான் திரும்பலாம் என்றிருக்காமல், அவர்கள் நிர்வகித்த பொது பள்ளிகளிலும் அவர்களின் இடங்கள் திருப்பி அளிக்கப்பட வேண்டும். முதலில் நம்மிடம் பறிக்க பட்ட காணிகள் திருப்பி வாங்க படவேண்டும். புலத்து மக்கள் முதலிட மறுப்பதை சம்பந்தர் வெளிநாடுகளுக்கு, இலங்கை மீது தமிழர்களுக்கு இருக்கும் அவநம்பிகையின் உதாரணமாக காட்ட வேண்டும். வன்னியில் புலத்தவர் போய் தொழில் நுட்ப கல்லூரி தொடங்கியதையும் காட்டலாம்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது வெளிநாட்டு புத்தி ஜீவிகளை மடக்கும் முயற்சி. அல்லது அண்ணன் டக்கி திட்டம் போட்டு, அத்திவாரம் போடுகிறார் போலும்.

எத்தனை நாள் தான் ஆள் கடத்தி காசு பார்ப்பது? தமிழன் என்றால் கல்வியை காட்டி ஈசியாக காசு பார்க்கலாம்.

இங்கிருந்து போவோர் கொட்டன், பொல்லு, கம்புகளை எடுத்து செல்லவும். இது மாணவர்களை தண்டிக்க இல்லை. இரவு சன நாயக கிரீஸ் பூதங்களை கையாள தேவை படும்.

பதற வேண்டாம். யாழ்பாணத்து சன நாயக அரசியலில் இதெல்லாம் சகசம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.