Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடாபி-இராச்சியத்தில் இருந்து பூச்சியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடாபி-இராச்சியத்தில் இருந்து பூச்சியம்,

24Share

LIBIYA13.jpg

கடைசியில் கேணல் கடாபியை சுட்டுக் கொன்று விட்டார்கள்,இரத்தம் தோய்ந்த நிலையில் மேற்சட்டை கூட இல்லாது ஒரு தெரு நாயை இழுத்து வருவது போல ஒரு நாட்டின் 42 வருட ஆட்சியாளரை இழுத்துவரும் காட்சியை முதல் தடவையாக அல் ஜெசீரா தொலைக் காட்சி ஒளி பரப்பிய வேளையில் சரியாக நான் எனது நண்பனின் வீட்டில் இருந்தேன்,தொலைக் காட்சியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த எனது நண்பனின் தந்தையால் அக் காட்சிகளை ஜீரணிக்க முடியவில்லை

KADAPI25.jpg

KADAPI24.jpg

ஏன் நம்பக் கூட முடியவில்லை,அவரைப் பொறுத்த வரை கேணல் கடாபி ஒரு ஹீரோ,ஒரு ஆதர்சனம் அவரிற்கு மாத்திரமல்ல சுதந்திரம் வேண்டி நின்ற இளமை துடிப்புள்ள,சுய மரியாதையை உள்ள அறுவதுகளின்[1960s ]வாலிபர்களிற்கு கடாபி ஒரு அதிசயம்,ஒரு முன்ணுதாரணம்.

LIBIYA22.jpg

LIBIYA23.jpg

LIBIYA24.jpg

k10.jpg

k1.jpg

k2.jpg

k3.jpg

k4.jpg

k5.jpg

k6.jpg

k7.jpg

k8.jpg

k9.jpg

லிபியாவின் மிகவும் பிற்ப்படுத்தப் பட்ட கரையோர கிராமமான 'Sirte' யில் நாடோடி தாய்,தகப்பனிற்கு பிறந்த கடாபியின் பிறந்த திகதியை கூட குறித்து வைக்கும் வழக்கம் அந்த நாடோடிக் கூட்டத்திற்கு இருக்கவில்லை,பிறந்த ஆண்டு 1942 என பொதுவாக கூறப்பட்டாலும்,பிறந்த திகதி இன்னமும் சரியாக அடையாளம் காணப்படவில்லை,சிலர் அவருடைய பிறந்த திகதி ஜூன் மாதம் ஏழு எனக் குறிப்பி டுகின்றனர்,செம்மறி ஆடுகளையும்,ஒட்டகங்களையும் மேய்த்து நாடோடி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த தாய் தகப்பனிற்கு பிறந்த ஒரு சாமானியனிலும் சாமானியனால் ஒரு நாட்டைக் கைப்பற்றக் கூடியதாக இருந்தது என்பது அறுவதுகளின் வாலிபர்களிற்கு ஒரு பெரிய அதிசயம்

LIBIYA20.jpg

நான் சரணடைகிறேன் என்னை சுட்டுக் கொல்லாதீர்கள் என வெறிநாய்கள் போல சூழ்ந்திருந்த புரட்சிப்படைப் போராளிகளிடம் இரத்தம் தோய்ந்த முகத்துடன் அவர் உயிர்பிச்சை கேட்பதை பார்த்த போது எனக்கே ஏதோ செய்தது.அந்தக் காட்சிகளை வைத்த கண் வாங்காமல் பார்த்த அவர் ஒரு சம்பவத்தை நினைவு கூறினார், 1976 ம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சியின் போது இலங்கைக்கு விஜயம் செய்த கேணல் கடாபியை உலகை மாற்ற வந்த இளம் தலைவன் என எமது தமிழ் பத்திரிகைகள்.முதல் ஆங்கிலப் பத்திரிகைகள் ,கூடவே சிங்களப் பத்திரிகைகளும் போட்டுத் தாக்கின.ஆம் அறுவதுகளின் ஆரம்பத்திலும் எழுவதுகளிலும் கடாபி ஒரு விடி வெள்ளி யாகவே பலராலும் பலசந்தர்ப் பங்களிலும் நினைவு கூறப்பட்டார்

libiya4.jpg kadapi in srilanka

உலகிலேயே மிகக் கொடுமையான விடயம்,தீவிரமாக நம்பி இருந்த ஒன்றின் பிம்பம் உடைதல் ஆகும். ரஜனியை ஒரு சூப்பர் ஸ்டார் ஆக ஒரு அமானுஷ சக்தி உள்ள சூப்பர் மான் ஆக திரையில் பார்த்துப் பழகிய எனது பெங்களுர் கன்னட நண்பனிற்கு சுமார் மூன்று மாதங்கள் முன்பு ரஜினி சுகவீனம் காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுளார் என்பதனை நம்ப முடியவில்லை.ரஜினி சாதாரண மனிதர் போல நோய் வாய்ப் பட்டு விட்டார் என்பதனை சில பல வாக்கு வாதங்களிற்கு பின்னால் தான் எனது நண்பனால் ஏற்றுக் கொள்ள முடிந்தது,சரியாக அதே நிலையை தான் நான் எனது நண்பனின் தகப்பனிடம் அவதானித்தேன்,கடாபியை கொலை செய்து விட்டார்கள் என்பதை விடா கடாபியை கொலை செய்ய முடியுமா?,என்கிற ஆச்சரியத்தில் "ஷாக் அடித்தவர் போலக் காணப்பட்டார்.

LIBIYA9.jpg

LIBIYA10.jpg

தேவ துதான் போல கடாபியை கொண்டாடிய லிபிய மக்கள் கடைசியில் அவரை ஒரு தெரு நாயை அடித்துக் கொல்வது போல அடித்துக் கொன்று விட்டனர்.1969 ல் மன்னர் இட்ரிஸ் யை இரத்தம் சிந்தாப் புரட்சி மூலம் ஆட்சியில் இருந்து அகற்றி கடாபி ஆட்சியில் ஏறிய போது லிபிய மக் கள் தெருவெங்கும் வந்து வெடி கொளுத்தி ஆரவாரப் பட்டனர்.லிபியாவை மீட்க மீட்புனர் வந்து விட்டதாக ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.சரியாக 42 ஆண்டுகள் கழித்து அவரை தெருநாயை அடிப்பது போல அடித்தே கொன்று விட்டனர்.இந்த தலை கீழ் நிலைக்கு என்ன காரணம் ?

1]அமெரிக்காவின் சதியா?

2 ]UN இன் இயலாமையா?

3]அல்லது லிபியாவின் எண்ணை வளத்தை கூட்டுக் கொள்ளை அடிக்க நேசநாடுகள் எனும் போர்வையில் அமெரிக்காவும் பிரிட்டனும் போட்ட கூட்டுச் சதியா ?

மேற்குறிய கூற்றுகளில் உண்மை இருப்பினும் கடாபியின் தோல்விக்கு மிகப் பெரிய காரணமானவர் காடபியே தான்,அதிகாரம் தந்த போதை கண்ணை மறைத்து தனது நாட்டு மக்களையே அதிகா ரத்தால் அடக்கி வைத்திருக்கலாம் என தப்புக் கணக்கு போட்டபோது தான் கடாபி எனும் சர்வதிகரியின் வீழ்ச்சி ஆரம்பம் ஆனது

கடாபியை பற்றி செய்தி வெளியிட்ட நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை அவரை The erratic, provocative dictator என விளித்திருந்தது.எதிர்வு கொள்ள முடியாத எந்தவித திட்டமிடலும் இல்லாத ஆத் திரமூட் டுகின்ற சர்வாதிகாரி என தமிழ் படுத்தலாம்,அமெரிக்கப் பத்திரிகையின் மிகைப் படுத்தப்பட்ட விளித்தல் என அதனை தவிர்க முடியாத அளவிற்கு ஒரு எதிர்வு கொள்ள முடியாத ஒரு சர்வாதிகாரியாகத்தான் கடாபி வரலாற்றில் அடையாளம் காணப்பட் டுள்ளார்

லிபியாவில் பெயருக்கு கூட ஜன நாயகம் இருந்திருக்கவில்லை.பெயருக்கு கூட பாராளுமன்றம் இருந்திருக்கவில்லை எங்கேயும் எதிலும் கடாபி தான்,கடாபியின் குடும்பத்தினர் தான் ஆதிக்கம் செலுத்தினர்.லிபியா உண்மையில் ஒரு வறிய நாடு அல்ல,மற்றைய அரபிய நாடுகளுடன் ஒப்பிடும் போது லிபியாவினதும் அதன் மக்களினதும் வாழ்க்கை தரம் உயர்வாகவே இருந்து வருகிறது.ஆனால் லிபியாவில் மருந்துக்கு கூட கருத்து சுதந்திரம் இருக்கவில்லை.இராணுவ புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய ஒருவர்,லிபிய தேசத்தை லிபிய பிரைவேட் கம்பனியாக மாற்றி சுரண்டுவதை லிபியாவின் பெரும் பலான பிரசைகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை,எதிர்த்துக் கேள்வி கேட்டவர்கள் அல்லது சுதந்திரம்,மனித உரிமை,பேச்சு உரிமை எனக் கதைத்தவர்கள் கேட்டுக் கேள்வி இல்லாமல் கொல் லப் பட்டனர்,கடாபி சிறிதளவு இரக்கம் காட்டியவர்கள் கூட ஆயுள் கைதிகளாக லிபிய சிறைகளுக்குள் அடைக்கப் பட்டனர்.1969 இல் மன்னர் இடிரிஸ் இற்கு எதிரான புரட்சியில் கடாபியின் பக்கம் நின்ற லிபிய மக்களின் நிலை தான் சட்டியில் இருந்து அடுப்புக்குள் விழுந்ததாக போய் விட்டது.

நிலப் பரப்பு அளவில் லிபியா ஒரு பெரிய நாடு.ஆபிரிக்க கண்டத்தில் நாலாவதும் உலக அளவில் 17 வது பெரிய நாடு ,ஆனால் லிபியாவின் மக்கள் தொகை மிக குறைவு வெறும் 6.6 மில்லியன்,எனேன்றால் லிபியாவில் மக்கள் வாழக் கூ டியபிரதேசத்தின் அளவு மிக குறைவு.லிபியாவின் 90 ௦ வீதமான நிலபரப்பை சகாரா பாலை வனம் ஆக்கிரமித்து இருக்கிறது .ஆனால் ஒபெக் நாடுகளில் ஏழாவது மிகப் பெரிய எண்ணெய் வள இருப்பு உள்ள நாடு லிபியா,ஆபிரிக்க நாடுகளில் நம்பர் ஒன்.ஒபெக் நாடுகளின் எண்ணை வளத்தின் 4.4 வீதமான எண்ணை வளத்தை லிபியா தன்னகத்தே கொண்டிருந்தது.லிபியாவிடம் ஏறத்தாள 44 பில்லியன் பரல் எண்ணை வளம் 2010 ௦ ஜனவரி கணக்கின் படி கை வசம் இருக்கிறது.ஆபிரிக்க நாடுகளில் அதியுயர் எண்ணை வளம் உள்ள நாடு லிபியாதான்.

லிபியாவின் எண்ணை வளத்தால் வருகின்ற வருமானம் சரியான வகையில் லிபிய பிரசைகளிற்கு போய் சேர்ந்து இருக்குமாயின் "லிபியா தி கிரேட்" ஆக இருந்திருக்கும் ,மாறாக கடாபியும் கடாபியின் அன்பர்களும் தின்றது போக எறிந்த எலும்பு கணக்காகவே லிபிய மக்களிற்கு அதன் எண்ணை வளம் போய் சேர்ந்தது,லிபியா செல்வந்த நாடுகளில் ஒன்று என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை ஆனால் லிபிய மக்கள் செல்வந்தர்களா?,,ஒரு வரியில் பதில் சொல்வது ஆயின் இல்லை,மூன்றில் ஒரு பங்கு லிபியர்கள் வறுமைக் கோட் டிற்கு கீழாகவே வாழ்ந்து வருகின்றனர்.ஒரு பக்கம் வறுமை{மற்றைய ஆபிரிக்க நாடுகளின் வறுமையுடன் லிபிய மக் களின் வறுமையை எந்த வகையிலும் ஒப்பிட முடியாது,மற்றைய ஆபிரிக்க நாடுகளில் நிகழ்வதுடன் ஒப்பிடும் போது லிபியா எவ்வ ளவோ மேல்] மறு பக்கம் அடக்கு முறை என மத்தளம் போல அடி பட்டுக் கொண்டிருந்த மக்களின் வயிற்றில் லீட்டர் கணக்கில் பால் வார்க்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடை பெற்றன அந்த சம்பவங்களின் தொடக்கப் புள்ளியாக அமைந்தவர் mohamed Bauazizi எனப்படும் ஒரு துனிசிய நாட்டுப் பிரசை.

லிபியாவின் அண்டை நாடாக அமைந்த துனிசியா,ஒரு வறிய நாடு,லிபியா போல் எண்ணை வளத்தால் ஆசிர்வதிக்கப்பட்ட நாடு அல்ல,துனிசியாவை 1987 நவம்பர் மாதம் 7 ம் திகதி முதல் பென் அலி எனும் சர்வதிகாரி ஆண்டு வந்தார்,ஏற்கனவே துனிசியா ஒரு வறிய நாடு போதா குறைக்கு பென் அலி அண்ட் கோவின் ஆட் டத்தால் துனிசிய நாடே திவால் ஆகும் நிலைக்கு சென்று விட்டது, வேலை இன்மை,ஊழல்,விலைவாசி உயர்வு என எத்தனை சோதனைகளை தான் துனிசிய மக்கள் தாங்குவது,ஆனால் துனிசிய ஆட்சியாளர் பென் அலியோ இது எதனையும் பற்றி சிறிது கவலை இல்லாதவராக சர்வாதிகாரிகளுக்கு உள்ள வரைவிலக்கணப் படி தனது மனைவி "Leila ' உடன் ஆடலிலும் பாடலிலும் தனது காலத்தை கழித்து வந்தார்.

2010 டிசம்பர் மாதம் 17 ம் திகதி,வாழ்க்கை வெறுத்துப் போன "Mohamed Bouazizi" எனும் இருபத்தி ஆறு வயதான துனிசிய பிரசை தன்னைத் தானே பொது இடத்தில எரியூட்டிக் கொண்டு இறந்து போக வெடித்தது "துனிசிய புரட்சி".மக்களின் போராட்டவேகத்திற்கு முகம் கொடுக்க முடியாமல் பென் அலியும் அவர் கோவும் சவுதி பிரான்ஸ் உட்பட நாடுகளிற்கு தப்பி ஓட துனிசியாவில் மக்கள் ஆட்சி.துனிசியாவை தொடர்ந்து அதன் அயல் நாடான எகிப்திலும் மக்கள் புரட்சி,அயல் நாடுகளில் மக்கள் புரட்சியும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களும் அடங்கி கிடந்த லிபிய மக்களின் சுதந்திர தாபங்களை உசுப்பிவிட ஒரு சுபமுகூர்த்த வேளையில்[15 February 2011] லிபியாவில் வெடித்தது மக்கள் புரட்சி.இதையும் வழமை போல தனது படை பலம் மூலம் அகற்றி விடலாம் என நினைத்து இருந்த கடாபிக்கு,அவருடைய சொந்த விசுவாசமான படைகளே புரட்சிப் படைகளுடன் சேர்ந்து தனக்கு எதிராக போராடும் போது தான் நிலைமையின் தீவிரம் உறைத்தது.தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத கடாபி ஆபிரிக்க கூலிப் படைகளை வைத்து தந்து சொந்த நாட்டு மக்களிற்கு எதிராக விமான தாக்குதல்கள் தொடக்கம் இன் னபிற தாக்குதல்களையும் நடத்த சம்பவத்தில் வலன்டியராக புகுந்தது நோட் டோ படையணி எனும் பெயரில் ஆன அமெரிக்க வல்லாதிக்கம்.

அமெரிக்காவிற்கும்,அதன் நேச நாட்டுப் படையணிகளுக்கும் உண்மையில் லிபிய மக்களில் அவ்வளவு கரிசனம் என நினைத்தால்,யூ ஆர் ராங்.அமெரிக்காவிற்கு கடாபி மேலான கடுப்பு இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல,லிபியாவில் எண்ணை வளம் தொடர்பான ஆராட்சி ஆரம்பித்து சரியாக மூன்று வருடத்தில் அதாவது 1959 ம் ஆண்டு லிபியாவில் எண்ணை வளம் இருப்பதாக கண்டறியப்பட்டது.லிபியாவின் எண்ணை வளத்தை இராணுவ தளம் என்கிற பெயரில் லிபியாவில் இருந்த அமெரிக்காவும் பிரிட்டனும் கொள்ளை அடித்துக் கொண்டு இருந்தன அப்போதைய மன்னர் இட்ரிஸ் கண்டும் காணாமல் அதனை விட்டு வந்தார்,அந்த வேளையில் தான் 1969 செப்தெம்பர் மாதம் இரத்தம் சிந்தாப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த கடாபி,அமெரிக்காவின் சத்தம் இல்லாத கொள்ளையை சரியான முறையில் அடையாளம் கண்டு ஒரு வருடத்துக்குள் லிபியாவின் எண்ணை வளத்தை சுரண்டி கொண்டு இருந்த அமெரிக்க மற்றும் பிரிட்டன் படையணிகளை,வயலுக்கு வந்தாயா?,ஏற்றம் இறைத்தாயா எனக் கேட்டு கெட் அவுட் சொல்லி கலைத்து விட,காண்டாகி விட்டது அமெரிக்கா.

1988 டிசம்பர் மாதம் 21 ம் திகதி அமெரிக்கா விமானமான PAN AM FLIGHT 103,243 பயணிகளையும் 16 விமான சிப்பந்திகளையும் ஏற்றியவாறு அயர்லாந்துக்கு மேலாக பறந்து கொண்டிருந்த போது கடாபியின் கைப்பிள்ளைகள் சிலர் வைத்த குண்டில் வெடித்து சின்னாபின்னம் ஆனது,விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விமானத்தில் இருந்தவர்கள் நிலத்தில் இருந்தவர்கள் என மொத்தம் 270 ௦ பேர்களின் உயிர்களை காவு கொள்ள கடுப்பின் உச்சிக்கு போனது அமெரிக்கா,அப்போதைய அமெரிக்கா ஜனாதிபதியான ரோனல்ட் றீகன் கடாபியை "mad dog of the Middle East " என அழைக்க அமெரிக்காவிற்கும் கடாபிக்கும் ஆன உறவு கிட் டத் தட்ட வங்குரோத்து நிலைக்கு சென்று விட்டது.விபத்தில் பலி ஆனவர்களுக்கு கடாபி 2003 இல் 27 பில்லியன் அமெரிக்கா டாலர் இழப் பீடாக கொடுக்க முன் வந்ததை தொடர்ந்து தான் அமெரிக்கா விற்கும் லிபியாவிற்குமான உறவுகள் ஏதோ பரவாயில்லை நிலைக்கு வந்தது.

லிபியாவில் அடிக்க கூடியதை அடித்து சுருட்டக் கூடியதை சுருட்டியபின் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் லிபியாவை அந்தோ எனக் கைவிடும் காலம் வெகு தொலைவில் இல்லை

பின் லேடன் கொல்லப்பட்ட போது நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஒபாமா "அமெரிக்கா எதை நினைக்கிறதோ அதை செய்து முடிக்கும்" என ரஜினி படம் கணக்காக பஞ்ச் அடித்து இருந்தார் ,சுருங்க சொன்னால் அமெரிக்கா நினைத்ததை சாதித்து விட்டது.ஆனால் ஈராக்கைப் போல லிபியாவில் அமெரிக்கா போரை ஆரம்பிக்கவில்லை,லிபியாவில் போரை ஆரம்பித்தது லிபியா மக்கள்,கடாபியின் பாசையில் சொன்னால் "எனது மக்கள்",அடக்கு முறைகளால் மக்களை அடக்கி ஆளும் ஆ ட்சியா ளர்களால் நீண்ட காலம் கோலோச்ச முடியாது என்பதுக்கு கடாபி ஒரு மிக சிறந்த உதாரணம்.

ஒரு தான்தோன்றித் தனமான சர்வாதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வர இன்னொரு தான் தோன்றி தனமான சர்வாதிகாரத்தா ல் தான் முடியும் என்பது தான் வாழ்கையின் நகை முரண்களில் ஒன்று.

லிபியாவில் இன்னும் எட்டு மாதங்களில்,பொது தேர்தல் நடை பெறப் போவதாக,தற்போதைய இடைக் கால அரசு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.லிபியா மக்களுக்கு மிக நீண்ட காலத்துக்கு பின்பு தமது கருத்துகளை சுதந்திரமாக தெரிவிக்க ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.லிபியா மக்கள் தமது உண்மையான சுதந்திரத்தை மிக விரைவில் அனுபவிப்பார்கள் என நம்புவோம்,தான் மனதார நம்பும் ஒரு கருத்தை எங்கேயும் எந்த வித அழுத்தங்களும் இல்லாமல் ஒருவனால் எப்போது கூற முடிகிறதோ அங்கே தான் உண்மையான சுதந்திரம் இருப்பதாக நான் தீவிரமாக நம்புகிறேன்,இது லிபியாவிற்கும் பொருந்தும்,இலங்கைக்கும் பொருந்தும்,தமிழீழத்துக்கும் பொருந்தும்

கடாபி மீதும் லிபியா மீதும் மேற்குலகத்தால் முன் வைக்கப்பட்ட மிகப் பெரிய குற்றச் சாட்டு,லிபியா உலகெங்கும் உள்ள சுதந்திர போரடங்களுக்கு தன் னிச்சையாக ஆதரவு தருகிறது என்பதாகும்.கடாபி வந்த பணத்தில் பெரும்

பாலான விடுதலை அமைப்புகள் இயங்கின சில உதாரணங்கள்

1] பாலஸ்தீன விடுதலை இயக்கம் [PLO]

2]IRA எனப்படும் IRISH REPUBLICAN ARMY

3]RED BRIGADES-ITALY

4]ETA-SPAIN

5]FARC-COLOMBIA

6]RED ARMY FACTION எனப்படும் தென் ஜேர்மானிய விடுதலை அமைப்பு[RAF]

மேற் கூறிய விடுதலை அமைப்புகளுக்கு பிரதான நிதி ஆதரமாக லிபியாவும் கடபியும் தான் இருந்து வந்துள்ளனர்,ஆனால் இலங்கை அரசுக்கு எதிரான எமது சுதந்திர போராடத்தின் போது[கடைசி ஈழப் போர்] இலங்கை அரசுக்கு பிரதான ஆயுதம் வழங்கும் நாடுகளில் ஒன்றாக இருந்தது லிபியா என்பதில் இருந்து எமது நியாயமான போராடத்தை உலக அளவிற்கு என்ன லட்சணத்தில் கொண்டு சென்றுளோம் என்பதை அறிந்து கொள்ளலாம்

http://aruliniyan.bl.../blog-post.html

துக்ககரமான விடயம் . என்ன செய்வது உலகம் அப்படி. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பா.தங்களின் பொருளாதாரம் நிலைத்து நிற்கவேண்டுமல்லவா.

  • கருத்துக்கள உறவுகள்

சிலந்தி வலைக்குள் பூச்சிகள் தான் சிக்குகின்றன.வண்டுகள் அல்ல.

துக்ககரமான விடயம் . என்ன செய்வது உலகம் அப்படி. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பா.தங்களின் பொருளாதாரம் நிலைத்து நிற்கவேண்டுமல்லவா.

ஆமாமா,,, துக்கம்தான்!

ஒரு சர்வாதிகாரியா இருந்துகிட்டே, அவன ஒருவழிபண்ணப்பார்த்த ,,

அமெரிக்க சர்வாதிகாரிகளோட......

ஒரு சர்வாதிகாரியா இருந்துக்கிட்டே,, ஐநா.வால & நேட்டோவால......தனக்கு ,,

ஆப்பு அடிக்கபோறாங்கன்னு தெரிஞ்சப்புறமும்கூட,,,,,,,,,

ஒரு போராளியாவே ஒருகாலம் இருந்த ,,இந்த நாய்..............

அவனையபோலவே ஒருகாலம் ,,, அடக்குமுறைல வாழ்ந்த ........

எங்களை அழிக்குறதிலமட்டும்,,, தன் எதிரிகளோடயே ஒத்துப்போச்சே,,,

இந்த ஈனப்பிறவியின் மரணம் ,, என்னைய பொறுத்தவரை ரசனைக்குரியதே!! :)

  • கருத்துக்கள உறவுகள்

இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட புதிய லிபியாவின் எதிர்காலம்

khaddafidood.jpgகடாபியின் ஆட்சியைக் கவிழ்த்த புரட்சியாளர்கள், அங்கே இதுவரை என்னென்ன புரட்சிகளை செய்துள்ளனர்? கறுப்பின மக்களை இனச்சுத்திகரிப்பு செய்துள்ளார்கள். கறுப்பினப் பெண்களை தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்து, பாலியல் அடிமைகளாக நடத்தியுள்ளனர். பலதார மண சட்டத்தை அமுல் படுத்தி பெண்ணுரிமைக்கு சமாதி கட்டியுள்ளனர். புரட்சிப் படையினால் விடுதலை செய்யப்பட்ட புதிய லிபியாவில், இன்னும் பல அதிர்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கின்றன.

"எனது மரணத்தை விட, லிபியாவின் எதிர்காலம் குறித்து தான் அதிகம் கவலைப் படுகிறேன்." - கடாபி இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் கூறியது. கடாபியின் பாதுகாப்பு அதிகாரி மன்சூர், அல் அராபியா தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் இருந்து. கடந்த சில மாதங்களாக, லிபியாவில் யுத்தம் காரணமாக பெருமளவு மக்கள் கொல்லப்பட்டதையிட்டு கடாபி வருத்தமடைந்திருந்தார், என்றும் மன்சூர் மேலும் தெரிவித்தார். அப்போது இடைமறித்த அல் அராபிய செய்தியாளர், "50000 பேரை சாதாரணமாக கொன்று குவித்த ஒருவர், தனது செயலுக்கு வருந்துவதாக கூறுவது ஆச்சரியமளிக்கிறது." என்றார். அதற்கு பதிலளித்த மன்சூர், "அல் அராபியா போன்ற ஊடகங்களே இவ்வாறான பொய்களை பரப்பி வந்துள்ளன." என்று சாடினார்.

தகவல் தொடர்பு சாதனங்களால் ஆளப்படும் உலகில், போரில் முதல் பலியாகும் உண்மையைக் கண்டறிவது எளிதான காரியமல்ல. லிபியாவில் கிளர்ச்சி ஆரம்பமாகிய முதல் நாளில் இருந்தே, அனைத்து லிபியர்களும் கடாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதைப் போன்ற பிரமையை ஊட்டி வளர்த்தன. அரசுக்கு எதிராக கலகம் செய்தவர்களை அடக்குவதற்கு கடாபி இராணுவத்தை அனுப்பிய பொழுது, அது "லிபிய இராணுவமல்ல, மாறாக கூலிப்படை." என்று அறிவித்தார்கள். கடாபியிடம், "ஆப்பிரிக்க கருப்பினத்தவர்களைக் கொண்ட கூலிப்படை இருப்பதாகவும், அவர்களே ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள் மீது அடக்குமுறை பிரயோகிப்பதாகவும்," மதிப்புக்குரிய ஊடகங்கள் கூட செய்தி வாசித்தன. கறுப்பர்களுக்கு எதிரான லிபியர்களின் இனவெறி சர்வதேச ஊடகங்களிலும் எதிரொலித்தது.

கடாபியின் மரணத்திற்குப் பிறகு லிபியா எப்படி இருக்கின்றது? அநேகமாக, ஊடகங்கள் லிபியா குறித்து செய்தி அறிவிப்பதை இனிமேல் நிறுத்தி விடலாம். லிபியர்கள் எந்த விதக் குறையுமற்று, சுதந்திரமாக, சுபீட்சத்துடன் வாழ்வதாக நாமும் நினைத்துக் கொள்ளலாம். ஆனால், பிரச்சினைகள் இனிமேல் தான் பூதாகரமாக வெளிக்கிளம்ப இருக்கின்றன. அரபு மொழி பேசும் வட ஆப்பிரிக்க நாடுகளில் லிபியா மிகக் குறைந்தளவு சனத்தொகையைக் கொண்டுள்ளது. இருப்பினும், 140 இனக்குழுக்களைக் கொண்ட சமுதாயத்தில் ஒற்றுமையைக் கட்டுவது சுலபமான காரியமல்ல. 40 க்கும் குறையாத கிளர்ச்சிக் குழுக்கள், கடாபிக்கு எதிராக போரிட்டன. இசுலாமிய மத அடிப்படைவாதிகள், முன்னை நாள் அரச படையினர், இனக்குழுக்களை பாதுகாக்கும் ஆயுததாரிகள் என்று பலதரப் பட்டவர்கள். கடாபியின் கொடுங்கோல் ஆட்சி மீதான வெறுப்பு மட்டும் இவர்களை போராடத் தூண்டவில்லை. தாராளமயப் படுத்தப் பட்ட "கடாபியின் இஸ்லாத்தை" கடும்போக்காளர்கள் அங்கீகரிக்கவில்லை. அதே போல, கடாபியின் "ஆப்பிரிக்க சகோதரத்துவம்" இனவெறியர்களின் கண்களை உறுத்திக் கொண்டிருந்தது.

கறுப்பின ஆப்பிரிக்கர்களையும் சகோதரர்களாக மதித்து, "ஆப்பிரிக்க ஒன்றியம்" உருவாக்க பாடுபட்ட கடாபியின் கொள்கைக்கு நேர் எதிரானவர்கள், இந்தப் புரட்சிப் படையினர். லிபியாவிற்கு தெற்கில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் கறுப்பினத்தவர்கள் வாழவில்லை. "லிபியாவின் எல்லைகளுக்குள் வாழும் கறுப்பின பிரஜைகள் குறித்து," இனி உலகம் கேள்விப் படப் போவதில்லை. ஏனெனில் அவர்கள் யாவரும் "புரட்சிப் படையினரால்" இனச் சுத்திகரிப்பு செய்யப் பட்டு விட்டனர். சில அக்கறையுள்ள மனித உரிமை ஆர்வலர்கள் விசாரித்த பொழுது, "கருப்பர்கள் எல்லோரும் நைஜருக்கு அகதிகளாக சென்று விட்டனர்." என்று பதிலளிக்கப் படுகின்றது. லிபியப் பிரஜைகளான கறுப்பினத்தவர்கள் மட்டும் இனச் சுத்திகரிப்பு செய்யப் படவில்லை. லிபியாவில் பல ஆப்பிரிக்க நாட்டவர்கள், கூலியாட்களாக, அகதிகளாக வாழ்ந்தனர். இவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு மில்லியன் அளவில் இருக்கும். வளைகுடா நாடுகளைப் போல, ஆப்பிரிக்க கூலிகளின் உழைப்பில் லிபியப் பொருளாதாரம் செழித்துக் கொண்டிருந்தது. அவர்களை விட, கடல் கடந்து ஐரோப்பா செல்வதற்காக வந்து குவிந்த ஆப்பிரிக்க அகதிகளுக்கும் லிபியாவில் தற்கால புகலிடம் கிடைத்தது.

"லிபியப் புரட்சி" ஆரம்பமாகிய அன்றிலிருந்து, லிபியாவில் சட்டம், ஒழுங்கு குலைந்து விட்டது. யார் வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அராஜக சூழல் நிலவியது. "புரட்சிப் படையினர்" கடாபியின் விசுவாசிகளை மட்டும் வேட்டையாடவில்லை. கரு நிற மேனியைக் கொண்ட மக்களையும் நர வேட்டையாடினார்கள். போர் ஆரம்பமாகியவுடன், அயல் நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்தவர்களில் பெரும்பான்மையானோர் கறுப்பினத்தவர்கள். தற்போது போர் ஓய்ந்த பின்னர், அங்கு நடந்த அக்கிரமங்கள் மெல்ல மெல்ல வெளிவருகின்றன. "புரட்சிப் படையினரின்" முகாம்களை துப்புரவு படுத்தவும், கடினமான பணிகளை செய்யவும் கறுப்பின ஆண்கள் அடிமைகளாக வேலை வாங்கப் பட்டுள்ளனர். போரிட்டுக் களைத்த "புரட்சிக் காரர்களின்" பாலியல் இச்சையை தீர்த்துக் கொள்வதற்கு கறுப்பின பெண்கள் பயன்பட்டுள்ளனர்.

பிரத்தியேக "அகதி முகாம்களில்" தனியாக பெண்களை அடைத்து வைத்திருந்துள்ளனர். "அகதி முகாம்" என்று அழைக்கப்பட்ட வதை முகாம்களை பார்வையிட, செஞ்சிலுவை சங்கத்தினர் வந்து போவதுண்டு. முகாம் பொறுப்பாளருடன் "பாதுகாப்பு ஏற்பாடுகளை" பற்றி மட்டும் பேசி விட்டு செல்வார்கள். முகாம்களை அண்டி வாழும் குடியிருப்பாளர்கள், அங்கு நடந்த அக்கிரமங்களை விபரிக்கின்றனர். "மாலை நேரங்களில் நீங்கள் இங்கே நின்றால் அந்தக் காட்சிகளைக் காணலாம். புரட்சிப் படையினர் துப்பாக்கி வெட்டுகளை தீர்த்துக் கொண்டே சத்தமிட்ட படி வருவார்கள். பெண்களை அள்ளிக் கொண்டு செல்வார்கள்."

துப்பாக்கிகளுடன் திரியும் "புரட்சிப் படையினர்" மட்டும் இவ்வாறான அத்துமீறல்களில் ஈடுபடுவதில்லை. சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்ட நிலையில், சாதாரண இளைஞர்களும் ஆப்பிரிக்க பெண்களை பாலியல் பண்டமாக நுகர்கின்றனர். புரட்சிப் படையினர் லிபியாவில் கொண்டு வந்த புரட்சி இது தான். அகதி முகாமை, இலவச விபச்சார விடுதியாக மாற்றிய சாதனை, புரட்சி அல்லாமல் வேறென்ன? கடாபியின் ஆட்சிக் காலத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்த கமேரூன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்தார். "அப்போதெல்லாம் வேலை செய்யும் இடங்களில், சில எஜமானர்கள் அடிப்பார்கள். சிலர் சம்பளம் கொடுக்க மாட்டார்கள். ஆனால், இன்றுள்ள நிலைமை மிக மோசமானது. எல்லா லிபியர்களும் நிறவெறியர்களாக காணப்படுகின்றனர். ஆப்பிரிக்கர்கள் எல்லோரும் லிபியாவை விட்டு வெளியேறி விட்டனர்."

Tawergha.pngபுரட்சிப் படையினரின் மற்றொரு மகத்தான சாதனை குறித்து, இதுவரை எந்த ஒரு ஊடகமும் வாய் திறக்கவில்லை. கடற்கரையோரமாக அமைந்துள்ள மிஸ்ராத்தா நகரில் இருந்து 25 கி.மி. தொலைவில் உள்ளது தவேர்கா (Tawergha ) எனும் சிறு நகரம். போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், மிஸ்ராத்தா சர்வதேச கவனத்தைப் பெற்றிருந்தது. மிஸ்ராத்தா நகரில் புரட்சிப் படையினரின் கை ஓங்கி இருந்ததால், கடாபியின் படைகள் சுற்றி வளைத்து தாக்கிக் கொண்டிருந்தன. மிஸ்ராத்தா நகர மக்களின் அவலம் குறித்து, ஊடகங்கள் தினசரி செய்தி வாசித்தன. "சர்வதேச சமூகமும்" ஐ.நா. அவையை கூட்டுமளவு கண்டனம் தெரிவித்தன. இறுதியில் நேட்டோ விமானங்களின் குண்டுவீச்சினால் மிஸ்ராத்தா முற்றுகை விலக்கிக் கொள்ளப் பட்டது. மிஸ்ராத்தா முற்றுகைக்கு பழிவாங்குவதற்காக, புரட்சிப் படையினர் தவேர்கா மீது பாய்ந்தார்கள். தவேர்கா நகரில் நுழைந்த புரட்சிப் படையினர், கிரனேட் குண்டுகளை வெடிக்க வைத்தனர். ஆண்கள், பெண்கள், வயோதிபர், குழந்தைகள் எல்லோரையும் பிடித்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.

தவேர்கா நகரில் வாழ்ந்த மக்கள், "கறுப்பு லிபியர்கள்" என்பது குறிப்பிடத் தக்கது. லிபிய பிரஜைகளான இவர்கள், சஹாரா பாலைவனவாசிகளான துவாரேக் இனத்தை சேர்ந்தவர்கள். இவர்களது மூதாதையர், நாடோடிகளாக வாழ்ந்தவர்கள். சஹாரா பாலைவனத்தின் வணிகப் போக்குவரத்து, அவர்களது பரம்பரைத் தொழில். கடாபியின் ஆட்சிக் காலத்தில், அந்த இனத்தவருக்கென ஒரு சிறப்புப் படையணி உருவாக்கப் பட்டது. இரு தசாப்தங்களுக்கு முன்னர், சாட் நாட்டுடன் எல்லைத் தகராறு காரணமாக போர் மூண்டது. தென் எல்லையில், ஒரு கறுப்பு ஆப்பிரிக்க நாட்டுடனான மோதலின் போது, துவாரக் சிறப்பு படையணியினர் ஈடுபடுத்தப் பட்டனர். இறுதியாக நடந்த, உள்நாட்டுப் போரில், கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்கு, கடாபியின் விசுவாசத்திற்குரிய துவாரக் படைகள் பயன்படுத்தப் பட்டன. குறிப்பாக, மிஸ்ராதா யுத்தத்தில் அவர்களின் பங்களிப்பு கணிசமான அளவில் இருந்துள்ளது.

தவேர்கா நகரத்தை சேர்ந்த கறுப்பின படையினரின் செயலுக்கு பழிவாங்குவதற்காகவே, அந்த நகர மக்களை வெளியேற்றியதாக "புரட்சிப் படையினர்" தெரிவிக்கின்றனர். தமது ஊரை சேர்ந்தவர்கள் கடாபியின் இராணுவத்தில் பணியாற்றியதை ஒப்புக் கொள்ளும் தவேர்காவாசிகள், "கிளர்ச்சியாளர் மனதில் ஊறியுள்ள, கறுப்பின மக்கள் மேலான இனவெறி காரணமாகவே" தாம் வெளியேற்றப் பட்டதாக கூறுகின்றனர். போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களை விசாரித்து வந்த, "சர்வதேச மன்னிப்புச் சபை" யை சேர்ந்த ஆர்வலர் ஒருவரும், தவேர்கா மக்களின் வெளியேற்றம் குறித்து ஆராய்ந்துள்ளார்.

சுமார் இருபதாயிரம் தவேர்காவாசிகள், திரிபோலியில் உள்ள அகதிமுகாமில் தங்க வைக்கப் பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. சில மனித உரிமை ஆர்வலர்களும், ஊடகவியலாளர்களும், அங்கு சென்று விசாரித்துள்ளனர். அவர்கள் அங்கு சென்ற வேளை, முகாம் வெறிச்சோடிப் போய்க் கிடந்தது. புரட்சிப் படையினரைக் கேட்டால், "அந்த மக்கள் யாவரும் நைஜருக்கு சென்று விட்டார்கள்." என்று அலட்சியமாக கூறுகின்றனர். மேற்கொண்டு எந்த வித தடயமும் கிடைக்காத நிலையில், தவேர்கா மக்களுக்கு என்ன நடந்தது என்ற மர்மம் நீடிக்கின்றது. இறுதி யுத்தம் நடந்த சியேர்ட் நகரில், மனிதப் புதைகுழிகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. கடாபிக்கு விசுவாசமானவர்கள், சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப் பட்டிருப்பதாக, மனித உரிமை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அது போல, தவேர்கா நகரில் வாழ்ந்த, 20000 கறுப்பின மக்களும் எங்காவது கொன்று புதைக்கப் பட்டிருக்கலாம்.

லிபியாவின் புதிய ஆட்சியாளர்கள் புரிந்துள்ள போர்க்குற்றங்கள் பற்றிய விபரங்கள், மெல்ல மெல்ல வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடாபியும், அவரது மகன் முத்தாசினும் உயிருடன் பிடிபட்டு, பின்னர் கொலை செய்யப்பட்ட விடயம், வீடியோ காட்சிகளாக உலகெங்கும் வலம் வந்தன. இது குறித்தும், நூற்றுக் கணக்கான கடாபி விசுவாசிகளின் படுகொலை குறித்தும் விசாரணை தேவை என்று, மனித உரிமை ஸ்தாபனங்கள் அழுத்தம் கொடுக்கின்றன. மேற்குலகம் அவற்றை எல்லாம் கண்டும் காணாதது போல நடந்து கொள்கின்றது. புதிய அரசானது, இஸ்லாமிய மத அடிப்படைவாத போக்கில் செல்வதையும், யாரும் பெரிது படுத்தவில்லை.

இருப்பினும், எதிர்காலத்தில் காட்சிகள் மாறலாம். எண்ணெய் வளத்தை பங்கு போடுவதில் தகராறு ஏற்பட்டால், போர்க்குற்ற விசாரணை சம்பந்தமான சர்ச்சைகள் எழலாம். இரண்டு வருடங்களுக்கு முன்னர், புலிகளை அழிப்பதற்கு சிறிலங்கா அரசுக்கு பக்கபலமாக நின்ற மேற்குலக நாடுகள், பின்னர் தமது நண்பர்களை போர்க்குற்ற விசாரணைக்கு அழைத்து அழுத்தம் கொடுத்தன. இலங்கையில் நாம் ஏற்கனவே கண்ட காட்சிகள், லிபியாவில் நடந்து முடிந்துள்ளன. வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த புலித் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் போன்றே, கடாபியின் முடிவும் அமைந்திருந்ததை, மனித உரிமை நிறுவனங்கள் சுட்டிக் காட்டியுள்ளன. மேற்கத்திய நாடுகளுடன் முறுகல் நிலை தோன்றினால், அவர்கள் மீதும் குற்றச்சாட்டுகளை அடுக்குவதற்கு புதிய லிபிய அரசு தயாராகி வருகின்றது.

புலம்பெயர்ந்த நாடுகளில் இயங்கி வந்த "லிபிய இஸ்லாமிய போராட்டக் குழு", கடாபிக்கு எதிரான கிளர்ச்சியில் முன்னணிப் பங்கு வகித்துள்ளது. இஸ்லாமிய மத அடிப்படைவாத கொள்கை கொண்ட, அல் கைதாவுடன் இணைந்து போராடிய, அந்த அமைப்பின் முக்கிய தலைவர் தாய்லாந்தில் பிடிபட்டார். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் கீழ், அமெரிக்கர்களால் கடத்தப்பட்டு, சி.ஐ.ஏ.யினால் இரகசியமாக சித்திரவதை செய்யப்பட்டார். பின்னர், சி.ஐ.ஏ. தனது கைதியை கடாபியின் கையில் ஒப்படைத்தது. அந்த "சர்வதேச பயங்கரவாதி" வேறு யாருமல்ல, கடாபிக்கு எதிரான புரட்சிப் படையின் தலைமைத் தளபதி பெல்ஹாஜ்! மேற்குறிப்பிட்ட விபரங்கள் அடங்கிய ஆவணங்கள், கைவிடப் பட்ட பிரிட்டிஷ் தூதரகத்தில் கண்டெடுக்கப் பட்டன. அந்த ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு, வழக்குப் தொடுக்கப் போவதாக, பெல்ஹாஜ் சூளுரைத்துள்ளார். லிபியாவின் புரட்சியாளர்களுக்கும், மேற்குலகுக்கும் இடையிலான தேனிலவு விரைவில் முறியலாம். அப்போது லிபியாவில் எழும் நெருக்கடிகள், இன்றுள்ளதை விட மிக மோசமாக இருக்கும்.

மேலதிக தகவல்களுக்கு:

1.Ethnic Hatred Rooted in Battle for Misrata Underlines Challenges the Nation Faces After Gadhafi

2.MI6 role in Libyan rebels' rendition 'helped to strengthen al-Qaida'

3.Libyan rebels round up black Africans

4.African women say rebels raped them in Libyan camp

5.Empty village raises concerns about fate of black Libyans

http://kalaiy.blogspot.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.