Jump to content

புலிகளை அழித்த சரத் பொன்சேகாவை கூட்டமைப்பு ஏன் ஆதரித்தது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

புலிகளை அழித்த சரத் பொன்சேகாவை கூட்டமைப்பு ஏன் ஆதரித்தது?

tna18-08-2011-150x150.jpg

சரத்பொன்சேகாவுக்கும் சம்பந்தனுக்கும் இரகசிய ஒப்பந்தம் ஒன்று இருந்ததாக விக்கிலீக்ஸ் புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்ட சரத் பொன்சேகா, ‘தமிழ் மக்களுக்கு அனைத்தையும் கொடுப்பதற்கு சரத்பொன்சேகா இணங்கிவிட்டார். அதற்கான உடன் படிக்கையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கைச்சாத்திட்டும் விட்டார்” என்பது ஆளும் கட்சியின் தேர்தல் பிரசாரமாக இருந்தது. இதனை எதிர்க்கட்சிகள் மறுத்து வந்த போதிலும், ‘விக்கிலீக்ஸ்” தற்போது வெளியிட்டுள்ள இரகசியத் தகவல்கள் இது உண்மை என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றது.

2010 ஆம் ஆண்டு ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் உச்சக் கட்டத்தில் ‘பொன்சேகா சம்பந்தன் இரகசிய உடன்படிக்கை” என்ற பிரச்சாரமே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியி ருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

தேர்தல் கள நிலைமையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் இது அமைந்திருந்தது. இது அரசாங்கத்திற்கு சார்பான பிரச்சாரமாக அமைந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்குத் தலைமை தாங்கியவர் என்ற முறையில் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிப்பதா? என்ற கேள்விதான் தமிழர்கள் மத்தியில் முதலில் எழுந்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டது.

இருந்த போதிலும் இறுதிக்கட்டத்தில் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை எடுப்பதற்கு இந்த உடன்படிக்கையும் காரணமாக இருந்துள்ளது.

பொன்சேகா கையொப்பமிட்ட இந்த உடன்படிக்கையின் பிரதி ஒன்று சம்பந்தனால் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு அப்போது வழங்கப்பட்டது.

சரத் பொன்சேகாவுடன் தான் பேச்சுக்களை நடத்தியிருப்பது தொடர்பாக சம்பந்தன் அப்போது பொதுக்கூட்டங்களில் தெரிவித்த போதிலும், சரத் பொன்சேகா கைச்சாத்திட்ட உடன்படிக்கை ஒன்று தன்னிடம் தரப்பட்டிருப்பதாக பகிரங்கமாகத் தெரிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

சம்பந்தனுடன் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் நடத்திய சந்திப்பு, 2010 ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவை ஆதரிப்பதென சம்பந்தன் அறிவித்த பின்னர் ஏற்பட்டிருந்த அரசியல் கள நிலைமைகள் தொடர்பாக அமெரிக்க தூதரகம் வோஷிங்டனிலுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிவைத்த இரகசிய கேபிள் தகவலை விக்கிலீக்ஸ் இப்போது அம்பலமாக்கியுள்ளது.

அதிகளவில் அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்வதற்கும் அதற்குத் தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்வதற்கும் சரத் பொன்சேகா இந்த உடன்படிக்கையின் மூலமாக இணக்கம் தெரிவித்திருந்தார்.

இந்த உடன்படிக்கையில் எதிரணிகளின் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்ட சரத் பொன்சேகாவும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் கைச்சாத்திட்டிருந்தார்கள்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் பேகர் இன மக்களினால் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் நியாயமான அதிகாரப்பரவலாக்கலை வழங்குவதற்கு இந்த உடன்படிக்கையில் உறுதியளிக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கும் பொன்சேகாவுக்கும் இடையில் சிங்கள வாக்குகள் பிளவுபட்டிருக்கும் நிலையில் தமிழர்களுடைய ஆதரவு மிகவும் பெறுமதியுடையதாக இருக்கும் என்ற தனது கருத்தையும் அமெரிக்க தூதுவர் முன்வைத்திருக்கின்றார்.

இவ்வாறான ஒரு தீர்மானத்தை எடுக்கவேண்டியிருந் தமையையிட்டு தான் கவலையடை வதாகவும் அமெரிக்கத் தூதுவரிடம் தெரிவித்த சம்பந்தன், இருந்தபோதிலும் இடம்பெயர்ந்த மக்களை விடுவித்ததைத் தவிர வேறு எதனையும் ராஜபக்ஷ செய்யவில்லை எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

http://www.tamilthai.com/?p=29530

Posted

எதிருக்கு எதிரி நண்பன் என்பது நீண்டகால அரசியல் தத்துவம். அந்தவகையில் சம்பந்தர் செய்தது சரியே.

Posted

முதல் எதிரியின் எதிரியோடு மோதுவதற்க்காக முதல் எதிரியோடு கூட்டுச் சேர்ந்ததுபோன்ற தப்பான நிகழ்வுகள் பல எங்கள் வரலாற்றில் உண்டு. இந்த இராஜதந்திர வரலாற்றுத் தவறுக்கு எல்லா பிரதான இயக்கங்களும் பலியாகி இருக்கின்றன. கூட்டமைப்பு பொன்சேகா தேர்தல் உடன்பாடு இத்தகைய தவறல்ல.

ஒரு இனக்கொலைக்கும் படுதோல்விக்கும் முகம்கொடுத்து எல்லாம் அழிந்த கையறு நிலையில், போராட்டம் தோல்வியில் முடிந்திருந்த நிலையில் இந்தக் கூட்டு அமைந்தது. எதிரிக்கு எதிரான இந்தக்கூட்டில் கிடைத்த ராஜதந்திர நன்மைகள் பல. மகிந்தவை வடகிழக்கு மாகாணத்தில் தோற்க்கடித்ததன் மூலம் தமிழர்கள் வடக்கு கிழக்கென பிழவுபடவில்லை. மகிந்த அரசிடம் சரணாகதி அடையாமல் கூட்டமைப்பின் கொள்கைகளோடு ஓரணியாக நிற்க்கிறார்கள். என்பதை உலகிற்க்கு உணர்த்த முடிந்தது. மேலும் ஒரு இனக்கொலை சூழலில் அரசுக்கு எதிராக நிலைபாடு எடுக்க அவசியமான அரசியல் வெளியையும் இப்படித்தான் உருவாக்க முடிந்தது. அதன் பின்னர்த்தான் புலம் பெயர்ந்த தமிழர்களது நடவடிக்கைகளுக்கு சர்ர்வதேசரீதியான இராசதந்திர அர்த்தம் கிடைத்தது. இதனால்தான் புலம் பெயர்ந்ததமிழர்களது போராட்டத்திற்க்கு பயன் கிடைக்க ஆரம்பித்தது. புலம் பெயர்ந்த தமிழர் போராட்டங்கள் கழத்தில் உருவான அரசியல் வெளியை மேலும் அகலப் படுத்தியது. திருகோணமலையில் சம்பந்தர் தோற்று திருகோணமலை தமிழர்கையைவிட்டு முழுமையாகப் போயிருந்தால் எல்லா இராஜ தந்திர முயற்ச்சிகளுக்கும் பேரிடியாக அமைந்திருக்கும் எனினும் அதிஸ்ட்டவசமாக திருமலையில் எதிரியின் கனவு பலிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதை விக்கி லீக் வெளியிட்டதாலேயே "ரகசிய உடன்படிக்கை என்று அழைக்கிறார்களா? சம்பந்தர் இரண்டு தரப்புகளுடனும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தது ரகசியம் அல்ல. இறுதியில் பொன்ஸை ஆதரிக்குமாறு தமிழர்களைக் கேட்டுக் கொண்டதும் ரகசியம் அல்ல. ஒரு உடன் படிக்கை (அதிலயும் சம்பந்தர் கையெழுத்திட இல்லையாம் என்று நேற்றைய செய்தியில் இருந்தது!) செய்து கொண்ட பிறகு தான் தமிழர்களிடம் பொன்ஸுக்கு வாக்குக் கேட்டார் என்று அப்பவே இந்தத் தமிழ் ஊடகங்களுக்கு விளங்காமல் போனது ஏன்? வாழைப்பழத்தை உரிச்சு வாய்க்குள் வைத்தால் மட்டுமே "சட்டென்று" புரிந்து கொள்கிற கற்பூரக் கணக்கில் தான் எங்கட "வெட்டி ஒட்டும்" தமிழ் இணைய செய்தியாளர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு சான்று இந்த "ரகசிய உடன்படிக்கை" செய்தி!

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்குரார்ப்பண 19 இன்கீழ் மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் இந்தியா சம்பியனானது Published By: VISHNU   22 DEC, 2024 | 06:41 PM (நெவில் அன்தனி) மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றுவந்த 6 நாடுகளுக்கு இடையிலான அங்குரார்ப்பண 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.  இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியன ஒரு குழுவிலும் இலங்கை, பங்களாதேஷ், மலேசியா ஆகியன மந்றைய குழுவிலும் மோதின. முதல் சுற்று முடிவில் ஒரு குழுவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் மற்றைய குழுவில் முதலிரண்டு பெற்ற அணிகளை இரண்டாம் சுற்றில் எதிர்த்தாடின. இரண்டாம் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன. இரண்டாம் சுற்றில் இந்தியாவிடம் இலங்கை தோல்வி அடைந்தது. நேபாளத்துடனான போட்டி மழையினால் கைவிடப்பட்டதால் அத்துடன் இலங்கை வெளியேறியது. கோலாலம்பூர் பேயுமாஸ் கிரிக்கெட் ஓவல் விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணிக்கு எதிரான  இறுதிப் போட்டியில் 41 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது. ட்ரிஷா, அணித் தலைவி நிக்கி ப்ரசாத் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கொங்காடி ட்ரிஷா 52 ஓட்டங்களைப் பெற்றார். நிக்கி ப்ரசாத் 12 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் வினோத் மிதிலா 17 ஓட்டங்களையும் ஆயுஷி ஷுக்லா 10 ஓட்டங்களையும் பெற்றனர். பங்களாதேஷ் பந்துவீச்சில் முஸ்தபா பர்ஜானா ஈஸ்மின் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நிஷிட்டா அக்தர் நிஷி 23  ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 118 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் மகளிர் அணி 18.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 76 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீராங்கனை பஹோமிடா ச்சோயா 18 ஓட்டங்களையும் 4ஆம் இலக்க வீராங்கனை ஜுவாரியா பிர்தௌஸ் 22 ஓட்டங்களையும் பெற்றனர். மற்றைய வீராங்கனைகள் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளையே பெற்றனர். இந்திய பந்துவீச்சில் ஆயுஷி ஷுக்லா 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சொணம் யாதவ் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாருணிக்கா சிசோடியா 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகி, தொடர் நாயகி ஆகிய இரண்டு விருதுகளையும் கொங்காடி ட்ரிஷா வென்றெடுத்தார். https://www.virakesari.lk/article/201909
    • மண் அகழ்வுக்கு எதிராக தென்மராட்சியில் போராட்டம் December 22, 2024  09:34 pm யாழ்ப்பாணம் - தென்மராட்சி  - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் மண் அகழ்வு   இடம்பெற்றுள்ளமையை  கண்டித்து  பிரதேச மக்கள் இன்று(22) போரட்டத்தில் ஈடுபட்டனர். கரம்பகத்திலுள்ள விடத்தற்பளை - கரம்பகப் பிள்ளையார் இணைப்பு வீதியிலேயே இந்த மண் அகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த விவசாய வீதி நெடுங்காலமாக மணல் வீதியாகவே இருந்து வந்துள்ளது. பிரதேச விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்வதற்கு சிறந்த வீதியாக இதனையே பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், மண் அகழும் இயந்திரத்தின் உதவி கொண்டு  25க்கும் மேற்பட்ட டிப்பர் கனவளவு மண் அகழப்பட்டுள்ளதாக  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிற போதிலும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.   https://tamil.adaderana.lk/news.php?nid=197695  
    • சிரியாவை ஆப்கானாக மாற்றப்போவதில்லை – பெண்கள் கல்விகற்கவேண்டும் என விரும்புகின்றேன் - சிரிய கிளர்ச்சி குழுவின் தலைவர் 22 DEC, 2024 | 11:45 AM   சிரியாவால் அதன் அயல்நாடுகளிற்கோ அல்லது மேற்குலகிற்கோ பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் உருவாகாது என சிரியாவின் கிளர்ச்சிக்குழுவின் தலைவர் அஹமட் அல் சரா தெரிவித்துள்ளார். பிபிசிக்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் சிரியா மீதான தடைகளை மேற்குலகம் நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தடைகள் முன்னயை அரசாங்கத்தை இலக்காக கொண்டவை என தெரிவித்துள்ள அவர் ஒடுக்குமுறையாளனையும் பாதிக்கப்பட்டவர்களையும் ஒரே மாதிரி நடத்தக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார். இரண்டு வாரங்களிற்கு முன்னர் பசார் அல் அசாத்தின் அரசாங்கத்தை கவிழ்த்த தாக்குதல்களிற்கு அஹமட் அல் சரா தலைமை தாங்கியிருந்தார். ஹயட் தஹ்ரிர் அல் சலாம் அமைப்பின் தலைவரான இவர் முன்னர் அபு முகமட் அல் ஜொலானி என அழைக்கப்பட்டார். தனது அமைப்பினை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் தனது அமைப்பு பயங்கரவாத அமைப்பில்லை என தெரிவித்துள்ளார். எச்டிஎஸ் அமைப்பினை ஐநா அமெரிக்க பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நாங்கள் பொதுமக்களின் இலக்குகளை தாக்கவில்லை பொதுமக்களை தாக்கவில்லை மாறாக நாங்கள் அசாத் அரசாங்கத்தின் கொடுமைகளிற்கு பலியானவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். தான் சிரியாவை ஆப்கானிஸ்தானாக மாற்ற முயல்வதாக தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள சிரியாவின் பிரதான கிளர்ச்சிக்குழுவின் தலைவர்  எங்கள் நாட்டிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் வித்தியாசங்கள் உள்ளன பாரம்பரியங்கள் வித்தியாசமானவை ஆப்கானிஸ்தான் ஒரு பழங்குடி சமூகம் சிரியா வேறுவிதமான மனோநிலையை கொண்டது என அவர் தெரிவித்துள்ளார். பெண்கள் கல்விகற்கவேண்டும் என நான் நம்புகின்றேன் இட்லிப் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டவேளை அங்கு பல்கலைகழகங்கள் இயங்கின அங்கு கல்வி கற்றவர்களில் 60 வீதமானவர்கள் பெண்கள்  என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/201859
    • முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு - முப்படையினர் நீக்கம் December 23, 2024  08:36 am முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரையும் இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்றக் அமர்வில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரை நீக்கும் தீர்மானம் தொடர்பில்  பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால விளக்கினார். இதன்படி இன்று முதல் பொலிஸ் அதிகாரிகள் மாத்திரமே முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸாரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக போதியளவு பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு 6 மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்படும் எனவும், அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் எனவும் அரசாங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது. முப்படையினர் நீக்கப்பட்ட போதிலும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் எவ்வித பிரச்சினையும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் அதிக செலவு காரணமாக அவர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.   https://tamil.adaderana.lk/news.php?nid=197702  
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சொந்த கட்சிக்குள் இருந்தும் ட்ரூடோ பதவி விலகுவதற்கான அழுத்தம் அதிகரித்து வருகிறது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சர்வதேச அரங்கில் ஒன்றன்பின் ஒன்றாக நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், தற்போது உள்நாட்டு அரசியலிலும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார். அவரது அரசாங்கத்தை ஆதரித்து வந்த புதிய ஜனநாயகக் கட்சி (NDP), ஆதரவைத் தொடர மறுத்துவிட்டது. இந்த புத்தாண்டில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் தெரிவித்துள்ளார். மையவாத இடதுசாரி கட்சியான என்.டி.பி அதன் பொதுவான அரசியல் செயல் திட்டங்களை கொண்டிருந்ததால் ட்ரூடோவின் அரசாங்கத்தை ஆதரித்தது. ஆனால் என்.டி.பி கட்சி தலைவரின் சமீபத்திய அறிக்கை கட்சியின் நிலைப்பாட்டில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை பிரதிபலிக்கிறது. கனடாவுக்கு எதிராக டிரம்ப் எடுத்த முடிவு, சிக்கலில் ஜஸ்டின் ட்ரூடோ - இந்தியாவை பாதிக்குமா? உயிரையே பணயம் வைத்து 'அமெரிக்க வாழ்க்கை' கனவுக்காக புலம் பெயரும் இந்தியர்கள் கனடா: 1984 சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை குறித்து தீர்மானம் நிறைவேற்ற திட்டம் - இதன் விளைவுகள் என்ன?   ஜஸ்டின் ட்ரூடோ, ஏற்கனவே அனைத்து தரப்பிலிருந்தும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ள நிலையில் தற்போது மேலும் சிக்கல்களை எதிர்கொள்ளும நிலை ஏற்பட்டுள்ளது. ட்ரூடோவை குறிவைக்கும் பிரதான கட்சிகளில் தற்போது ஜக்மீத் சிங்கின் கட்சியும் சேர்ந்துவிட்டது. எனவே நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ட்ரூடோ அரசு தப்புவது கடினம். கடந்த இரண்டரை ஆண்டுகளாக ட்ரூடோ அரசுக்கு என்டிபி ஆதரவளித்தது. அதனால்தான் ட்ரூடோவால் தொடர்ந்து ஆட்சியில் இருக்க முடிந்தது. ஏற்கனவே இந்த வாரம் ட்ரூடோவுக்கு மிகவும் மோசமான வாரமாக இருக்கும் நிலையில் ஜக்மீத் சிங்கின் அறிவிப்பும் வெளிவந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை ட்ரூடோவின் அமைச்சரவையில் மிக மூத்த அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்தார். இதனையடுத்து அவரது சொந்த லிபரல் கட்சிக்குள்ளேயே அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மறுபுறம், அமெரிக்காவில் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின் அறிவிப்பு ட்ரூடோவுக்கு பெரிய பிரச்னையாக இருந்தது. கந்தஹார் விமான கடத்தல்: 25 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இந்தியா - நேபாள உறவில் நெருடல் ஏன்?21 டிசம்பர் 2024 'எனது உடல், ஆடை பற்றி சங்கடப்படுத்தும் வகையில் கேட்டார்' - பெண் உணவு டெலிவரி ஊழியர்களின் பிரச்னைகள்21 டிசம்பர் 2024 ஜக்மீத் சிங் என்ன சொன்னார்? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஜக்மீத் சிங் ஜக்மீத் சிங் எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டிருந்தார். "லிபரல் கட்சியினர் இரண்டாவது வாய்ப்புக்கு தகுதியானவர்கள் அல்ல. அடுத்த நாடாளுமன்ற அமர்வில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அழைப்பு விடுப்போம்" என்று பதிவிட்டிருந்தார். இந்தாண்டு செப்டம்பரில் ட்ரூடோ அரசுக்கு அளித்து வந்த தனது ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மீத் சிங்கின் கட்சி கடந்த பொதுத் தேர்தலில் 24 இடங்களில் வெற்றி பெற்று முக்கிய கட்சியாக இருந்தது. பல சந்தர்ப்பங்களில் ஜக்மீத் சிங் இந்தியாவை விமர்சித்து இருக்கிறார். டொராண்டோவில் உள்ள பிபிசி செய்தியாளர் நாடின் யூசுப், "கனடாவின் அடுத்த பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் அல்லது அதற்கு முன்னதாக நடைபெறும். லிபரல் கட்சியின் அரசாங்கம் கவிழும் பட்சத்தில் இந்த தேர்தல் முன்னதாகவே நடத்தப்பட வாய்ப்பிருக்கிறது" என்று கூறினார். கனடா நாடாளுமன்றத்தின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் அவை வரும் ஜனவரியில் மீண்டும் கூடும் நிலையில் 3 முக்கிய எதிர்க்கட்சிகளும் ட்ரூடோ அரசாங்கத்தை கவிழ்க்க விரும்புவதாக கூறியுள்ளன. இந்த வாரம் ட்ரூடோ அடுத்தடுத்து பல பின்னடைவுகளை சந்தித்துள்ளார். ட்ரூடோவின் அமைச்சரவையில் மிகவும் மூத்தவராக இருந்த துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் ராஜினாமா செய்தார். இப்படியான சூழலில், ஜக்மீத் சிங்கின் இந்த அறிவிப்பு அவருக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. திங்களன்று பொருளாதார அறிக்கையை வழங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு ஃப்ரீலேண்ட் ராஜினாமாவை அறிவித்தது அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தியாக இருந்தது. 'சிரியாவால் உலகிற்கு அச்சுறுத்தல் இல்லை' - கிளர்ச்சிக் குழுவின் தலைவர் அகமது அல்-ஷாரா பிபிசிக்கு பேட்டி19 டிசம்பர் 2024 கிசெல் பெலிகாட்: பாலியல் வன்புணர்வு செய்த 51 பேர் - முன்னாள் கணவருக்கு 20 ஆண்டுகள் சிறை19 டிசம்பர் 2024 கனடாவுக்கு எதிரான டிரம்பின் கருத்துகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றபோது, அவருக்கு ட்ரூடோ வாழ்த்து தெரிவித்தார் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் பாதுகாப்பை அதிகரிப்பதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றால், கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய இரு அண்டை நாடுகளின் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீதம் வரி (இறக்குமதி வரி) விதிப்பேன் என்று கடந்த மாதம் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்றவுடன் கனடா, மெக்ஸிகோ மற்றும் சீனாவுக்கு எதிராக வரிகளை விதிக்கும் உத்தரவில் கையெழுத்திடுவேன் என்று டிரம்ப் தனது `ட்ரூத்' சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டிருந்தார். "கனடா மற்றும் மெக்ஸிகோ எல்லைகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அமெரிக்காவுக்குள் நுழைகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. போதைப்பொருளை கொண்டு வருவது போன்ற பல குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். இப்படியெல்லாம் இதற்கு முன் நடந்ததில்லை." என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். டிரம்ப் வெற்றி பெற்ற உடனேயே ட்ரூடோ வாழ்த்து தெரிவித்த போதிலும் இது டிரம்பின் அணுகுமுறையை மாற்றவில்லை. டிரம்ப் மற்றும் ட்ரூடோ இடையேயான உறவு கசப்பானது மற்றும் சில சந்தர்ப்பங்களில் ட்ரூடோ மீது டிரம்ப் தனிப்பட்ட தாக்குதல்களை கூட செய்துள்ளார். கனடாவின் ஏற்றுமதியில் 75 சதவிகிதம் அமெரிக்காவிற்கு செல்கிறது. டிரம்பின் அறிவிப்பு கனடாவுக்கு சிக்கல்களை அதிகரிக்கக் கூடும். இந்த வரி விதிப்பு கனடாவின் பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் டிரம்ப் இத்தோடு நிற்கவில்லை, கனடாவைப் பற்றி மேலும் கடுமையான கருத்துகளை வெளியிட்டார். இரண்டு நாட்களுக்கு முன்பு, டிரம்ப் தனது `ட்ரூத்' சமூக ஊடகப் பக்கத்தில் "ஒவ்வொரு ஆண்டும் கனடாவுக்கு 100 மில்லியன் டாலர்களை மானியமாக ஏன் தருகிறோம் என்பதற்கு யாரிடமும் பதில் இல்லை. பெரும்பாலான கனடியர்கள் 51வது மாகாணமாக மாற விரும்புகிறார்கள். அதாவது, அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற கனடா நினைக்கிறது. இது அவர்களுக்கு வரி மற்றும் ராணுவ செலவுகளை மிச்சப்படுத்தும். இது ஒரு சிறந்த யோசனை என்று நான் நினைக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார். பிரான்சில் இருந்தபடியே, கென்யாவில் அதானி ஒப்பந்தத்தை ரத்தாகச் செய்த மாணவர் - எப்படி தெரியுமா?21 டிசம்பர் 2024 404 ஏக்கருக்கு உரிமை கோரும் வக்ஃப் வாரியம், 2 மாதங்களாக போராடும் கிராமம் - கேரளாவில் என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு21 டிசம்பர் 2024 ட்ரூடோ பதவி விலக வேண்டும் என அதிகரிக்கும் அழுத்தம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கனடாவில் பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன கனடா நிதியமைச்சராக இருந்த ஃப்ரீலாண்ட் தனது ராஜினாமாவில், டிரம்பின் அறிவிப்பு கனடாவுக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாகவும், பிரதமர் ட்ரூடோ நிதி நிலைமையை சரிசெய்வதற்குப் பதிலாக மலிவான அரசியலில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டினார். அப்போதிருந்து, ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்ற குரல் அவரது சொந்த லிபரல் கட்சிக்குள்ளேயே வலுத்துள்ளது. குளோப் அண்ட் மெயில் செய்தியின்படி, அக்கட்சியின் 153 எம்.பி.க்களில் இதுவரை 19 பேர் ட்ரூடோவை பதவி விலகுமாறு பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளனர். எவ்வாறாயினும், இந்த பொது முறையீடுகளுக்கு ட்ரூடோ இதுவரை பதிலளிக்கவில்லை. இந்த பிரச்னையை பரிசீலித்து அடுத்து என்ன செய்வது என்பது குறித்து முடிவு செய்வதாக தனது கட்சி உறுப்பினர்களிடம் கூறியதாக கூறப்படுகிறது. ட்ரூடோ வெள்ளிக்கிழமை அன்று தனது அமைச்சரவையை விரைவில் மறுசீரமைப்பதாகக் கூறினார். அடுத்த ஆண்டு தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்த பல அமைச்சர்கள் விட்டுச் சென்ற காலி இடங்களை நிரப்புவதற்காக இதனை அவர் தெரிவித்தார். கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ 2015 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளார். 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ட்ரூடோவின் கட்சி பெரும்பான்மை பெற முடியாமல் வேறு கட்சியின் ஆதரவுடன் ஆட்சியில் உள்ளது. புகைபிடித்தல், உடல் பருமனை தாண்டியும் 100 ஆண்டுகளுக்கு மேல் சிலர் உயிர் வாழும் ரகசியம் என்ன?22 டிசம்பர் 2024 விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?20 டிசம்பர் 2024 ஜக்மீத் சிங் யார்? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,ட்ரூடோவிற்கும் ஜக்மீத் சிங்கிற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், லிபரல் கட்சி நாடாளுமன்றத்திற்குள் முக்கியமான பிரச்னைகளில் என்.டி.பி கட்சிக்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில், பர்னாலா மாவட்டத்தில் உள்ள திக்ரிவால் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்தான் ஜக்மீத் சிங். அவரது குடும்பம் 1993இல் கனடாவுக்கு குடிபெயர்ந்தது. மார்ச் 2022 இல் ட்ரூடோவிற்கும் ஜக்மீத் சிங்கிற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், லிபரல் கட்சி நாடாளுமன்றத்திற்குள் முக்கியமான பிரச்னைகளில் என்.டி.பி கட்சிக்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டது. ஆனால், இதில் அதிகாரப் பகிர்வு பற்றிய விவகாரங்கள் இடம்பெறவில்லை. பெரும்பான்மை பெற முடியாவிட்டாலும், இந்த ஒப்பந்தம் காரணமாக ட்ரூடோவின் கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்தது. இதற்கு ஈடாக, என்.டி.பி கட்சியின் நோக்கங்களை நிறைவேற்ற ஜக்மீத் சிங்குக்கு ட்ரூடோ உதவ வேண்டியிருந்தது. ஜக்மீத் சிங் இந்தியாவை பல சந்தர்ப்பங்களில் விமர்சித்துள்ளார்.. ஏப்ரல் 2022 இல், ஜக்மீத் சிங், "இந்தியாவில் முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்படும் வன்முறை தொடர்பானப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்த்து கவலைப்படுகிறேன். முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டுவதை மோதி அரசு நிறுத்த வேண்டும். மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்" என்றார். இந்தியாவில் 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான நடந்த கலவரம் குறித்து ஜக்மீத் தொடர்ந்து தன் கருத்துகளை பதிவு செய்து வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக கனடாவில் சில இயக்கங்களின் செயல்பாடுகளுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. டிசம்பர் 2013 இல், அமிர்தசரஸ் வருவதற்கு ஜக்மீத் சிங்குக்கு இந்தியா விசா வழங்கவில்லை. "கட்சித் தலைவராவதற்கு முன்பு ஜக்மீத் சிங் காலிஸ்தான் பேரணிகளில் கலந்துகொள்வார்." என வாஷிங்டன் போஸ்ட் செய்தியில் குறிப்பிட்டிருந்தது. பரப்பளவில் உலகின் இரண்டாவது பெரிய நாடான கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் கணிசமாக வாழ்கின்றனர். கனடாவின் மக்கள் தொகையில் 2.1 சதவீதம் சீக்கியர்கள் வாழ்கின்றனர். கனடாவில் சீக்கிய மக்கள் தொகை கடந்த 20 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் கல்வி, தொழில், வேலைவாய்ப்பு போன்ற காரணங்களுக்காக இந்தியாவில் இருந்து கனடாவுக்கு சென்றுள்ளனர். வான்கூவர், டொராண்டோ, கல்கரி உட்பட கனடா முழுவதும் குருத்வாராக்கள் உள்ளன. ஜஸ்டின் ட்ரூடோ சீக்கியர்களுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறார். அவர் தனது முதல் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையை அமைத்த போது, அதில் நான்கு சீக்கியர்களை அமைச்சராக்கினார். கடந்த 2015-ஆம் ஆண்டு ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய அமைச்சரவையில் சீக்கியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இடங்களை விட தனது அமைச்சரவையில் அதிக இடங்கள் வழங்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தார். கடந்த சில மாதங்களாக இந்தியாவுடன் காணப்பட்ட கசப்பிற்கு ட்ரூடோவின் காலிஸ்தான் ஆதரவு கொள்கையே காரணம் என்று பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தேர்தல் அரசியலால் இரு நாட்டு உறவுகளை ட்ரூடோ ஆபத்தில் ஆழ்த்துவதாகவும், பிரிவினைவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாகவும் இந்தியா பலமுறை குற்றம்சாட்டியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cgl9gd1gdryo
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.