Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக அமைச்சரவையில் மாற்றம்

Featured Replies

தமிழக அமைச்சரவையில் மாற்றம்

தமிழக அமைச்சரவையிலிருந்து வெள்ளியன்று செய்யப்பட்டுள்ல மாற்றங்களில் அமைச்சர்கள் ஆறு பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ள்னர். அவர்களுக்கு பதிலாக வேறு ஆறு பேர் அமைச்சர்களாகின்றனர்.

அமைச்சர்கள் சிலரது இலாக்காக்களும் மாற்றப்பட்டுள்ளன.

முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து வெள்ளி மாலை வெளியான செய்திக் குறிப்பின்படி, ஊரகத் தொழிற்துறை அமைச்சர் சி.சண்முகவேலு , தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் , அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் கால்நடை பராமரிப்பு அமைச்சர் என்.ஆர்.சிவபதி, செய்தி மற்றும் சட்ட அமைச்சர் ஜி.செந்தமிழன் , ம்ற்றும் உணவு அமைச்சர் புத்திசந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுகின்றனர்.

கிணத்துக்கடவு எஸ்.தாமோதரன் விவசாய அமைச்சராகவும், நன்னிலம் ஆர்.காமராஜ் உணவு அமைச்சராகவும், பரமக்குடி டாக்டர் எஸ்.சுந்தர்ராஜ் கைத்தறி அமைச்சராகவும், அண்மையில் திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் வென்ற எம்.பரஞ்சோதி அறநிலையத்துறை அமைச்சராகவும் மாதாவரம் வி.மூர்த்தி பால் வளத்துறை அமைச்ச்சராகவும் மற்றும் சிவகாசி கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தித்துறை அமைச்சராகவும் நியமிக்கப்படுகின்றனர்..

வேறு சில அமைச்சர்களின் துறைகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

மூத்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

மு.சி. சம்பத் திட்ட அமலாக்கத்திலிருந்து ஊரகத் தொழிலுக்கு மாற்றப்படுகிறார்.

டி.கே.எம்.சின்னையா சுற்றுச்சூழலிலிருந்து கால்நடை பராமரிப்பிற்கும், பி.வி.ரமணா கைத்தறியிலிருந்து சுற்றுச்சூழலுக்கும் மாற்றப்படுகின்றனர்.

சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயத்திடமிருந்து சத்துணவுத்துறை சம்பத்திற்கு மாற்றப்படுகிறது.

மாற்றங்களுக்கான காரணங்கள் எதுவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

http://www.bbc.co.uk...reshuffle.shtml

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சரவையில் மாற்றம் செய்வது என்பது முதலமைச்சரை பொறுத்ததது.

அதுகும் இந்த ஆட்சி 100 நாள் நிறைவேற முன்னம் 6 அமைச்சரை மாற்றியது அதிசயமல்ல.

முன்னைய ஆட்சியிலும், இதையே... செய்தார்.

அவர்களை அமைச்சராக நியமித்ததும் அவர் தான். கேலிக்கூத்து விளையாட்டு இது.

பழைய குருடி, கதவை திறடி என்ற மாதிரி இருக்கு.

தோழர் தமிழ்சிறி ஆண்டவன் சொத்து ஆளுக்கொரு குத்து.. இங்கே மண்டையன் கருநா போல குடும்பத்திற்காக சேர்ப்பவரில்லை.. எல்லோரும் சம்பாதிக்க வேண்டும் என்ற பரந்த மனதுடையவர் (?) ஜெ. இந்த குறுகிய காலத்தில் 6 மாதம்.. கிடைக்கவேண்டியதை சிக்கல் இல்லாமல் சுருட்டவேண்டும் கட்சிக்கு கமிசன் போக மீதி அமைச்சருக்குத்தானே ? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

01.jpg 13.11.11 கவர் ஸ்டோரி

ரு தவறு செய்தால்... அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்...’’

எம்.ஜி.ஆரின் இந்தப் பாடல் வரிகளுக்கு உயிரோட்டம் கொடுத்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.

இது அ.தி.மு.க.வில் மட்டுமே சாத்தியம். தி.மு.க.வில் ஒன்றியச் செயலாளரை நீக்குவதற்குக் கூட ஆயிரம் தடவை யோசிப்பார்கள். தவறு செய்யும் அமைச்சரை நீக்குவது பற்றி யோசிக்கவே மாட்டார்கள். ஆனால், அம்மாவின் அதிரடியில் ஓர் அர்த்தம் இல்லாமல் இருக்காது என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு மூன்றாவது முறையாக கடந்த வெள்ளியன்று அமைச்சரவையை மாற்றி அமைத்திருக்கிறார் ஜெயலலிதா. கடந்த ஆறு மாத கால செயல்பாடுகள், உள்ளாட்சித் தேர்தலில் உள்ளடி வேலை, கட்சிக்கும், ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்தியது போன்ற காரணங்களை வைத்தே ஆறு அமைச்சர்களை முதல்வர் ஜெயலலிதா களை எடுத்திருக்கிறார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

அடிக்கடி அமைச்சர்களை மாற்றுவதால் நிர்வாகம் தடுமாறும் என்ற விமர்சனம் ஒரு பக்கம் இருந்தபோதும், இந்த நடவடிக்கை இருந்தால்தான் கட்சியிலும் ஆட்சியிலும் கட்டுப்பாடு இருக்கும் என்று தி.மு.க.வில் உள்ள சில சீனியர் தலைவர்களே மனம் விட்டுப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆறு அமைச்சர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட செய்தியை விட, ஆறு பேர் நீக்கப்பட்டதுதான் தலைப்புச் செய்தியாகிப் போயிருக்கிறது. அமைச்சரவையில் நீக்கலும், சேர்த்த லும் குறித்து கோட்டை வட்டாரத்தில் நமக்குக் கிடைத்த தகவல்கள் இதோ...

செந்தமிழன்

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் 2-வது முறையாக வெற்றி பெற்றவர் செந்தமிழன். இவருக்கு செய்தித்துறையும், சட்டத்துறையும் கொடுக்கப்பட்டிருந்தது. நு ங்கம்பாக்கத்தில் இரவில் உணவருந்திக் கொண்டு இருந்த அ.தி.மு.க. நிர்வாகிகளை தி.நகர் துணை கமிஷனர் பிடித்துச் சென்றார். அங்கு அமைச்சர் சென்றது பரபரப்பானது.

இதையடுத்து, அப்போதைய துணை கமிஷனர் மாற்றப்பட்டார். இது அதிகாரிகள் மத்தியில் அமைச்சர் மீது கோபத்தை ஏற்படுத்தியதாக சொல்கிறார்கள். அதிகாரிகளுடன் செந்தமிழன் அரசியல் எதிரிகளும் சேர்ந்து அவரை வீழ்த்திவிட்டனர். செந்தமிழன் நீக்கப்பட்டதால் சென்னைக்கு ஒரே ஒரு அமைச்சராக கோகுல இந்திரா மட்டும் உள்ளார். இவ்வளவு பெரிய சென்னைக்கு ஒரு அமைச்சர்தானா? என்று கட்சிக்காரர்கள் வருத்தப்படுகின்றனர்.

என்.ஆர்.சிவபதி

கால்நடைத்துறை அமைச்சராக இருந்தார். ஆறு மாத காலம் இவரது செயல்பாடுகள் திருப்தியாகவே இருந்தது. இருந்தாலும், இவருக்கு திருச்சி இடைத்தேர்தல்தான் வில் லனாக வந்தது. இடைத்தேர்தலில் இவர் சரியாக பணியாற்றவில்லை என்ற குற்றச்சாட்டு பலமாகவே ஒலித்தது. அதைவிட, முதல்வரின் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட 3 நகராட்சிகளை அ.தி.மு.க. கோட்டை விட்டதற்கான தண்டனைதான் அவரிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதற்குக் காரணம் என்கிறார்கள்.

ஆர்.பி.உதயகுமார்

இவரது செயல்பாடுகள் முதல்வருக்கு திருப்தி அளிக்கவில்லை. விசுவாசத்தைக் காட்டுவதாக நினைத்துக் கொண்டு அம்மா இருக்கும் பூமியில் செருப்பு அணியமாட்டேன்... என்பது போன்ற சென்டிமெண்ட் விஷயங்களில் இவர் ஆர்வம் காட்டியது முதல்வர் முகம் சுளிப்பதற்குக் காரணமாகியிருக்கிறது. அதோடு, பலமுறை முதல்வரின் கோப த்துக்கும் ஆளாகியிருக்கிறார்.

google_protectAndRun("render_ads.js::google_render_ad", google_handleError, google_render_ad);

இடைத்தேர்தல் பிரசாரத்துக்குச் சென்றிருந்த முதல்வரை வரவேற்க எட்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு ட்யூப்லைட்டுகளைக் கட்டி முதல்வரின் கோபத்துக்கு ஆளானார். ஆர்வக்கோளாறே இவரது பதவிக்கு வேட்டு வைத்துவிட்டது.

சண்முகவேலு

அமைச்சர் பதவி கட்டாயம் பறிபோகும் என்று எதிர்பார்த்தே நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தவர் சண்முகவேலு. ஊரகத் தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட இவரது துறை ரீதியான செயல்பாடுகளில் எந்தக் குறையும் இல்லை. திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவு பிரச்னையில் இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தாதது, செங்கல் சூளையை கமிஷன் அடிப்படையில் முக்கிய வி.ஐ.பி.களுக்கு வழங்கியது போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர். இதோடு உள்ளாட்சித் தேர்தலில் அவர் சரியாக பணியாற்றவில்லை என்றும் புகார் வர, இவரது அமைச்சர் பதவிக்கு உலை வைத்துவிட்டது.

உள்ளாட்சித் தேர்தலில் பல்லடம் நகராட்சியை தே.மு.தி.க. கைப்பற்றியது. கோவையில் நடக்கும் உள்கட்சிப் பிரச்னையும் இவரது பதவி பறிபோகக் காரணமாகியிருக்கிறது.

எஸ்.பி.சண்முகநாதன்

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் எஸ்.பி. சண்முகநாதன் பதவியை இழப்பது புதிதல்ல. கடந்த 2001-2002-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது, இதே போல் பாதியிலேயே கழற்றி விடப்பட்டார். இவருக்கும், அமைச்சர் பதவிக்கும் ராசியில்லை என்கின்றனர் அ.தி.மு.க.வினர். கட்சிக்காரர்கள் மட்டுமல்ல, அதிகாரிகள் மத்தியிலும் இவருக்கு நல்ல பெயர் இல்லை.

புத்திசந்திரன்

உணவுத்துறை அமைச்சர் புத்திசந்திரன் மீது குற்றச்சாட்டுக்கள் ஏதும் இல்லை. இருந்தாலும், அவர் அமைச்சராக அவரது துறையில் பெரிதாக சோபிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. பலமுறை அவருக்கு எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால், தனது துறை ரீதியான விவகாரங்களில் இவர் பூஜ்யமாகவே இருந்தார். இதுவே, அவரிடம் இருந்து பதவியைப் பறிக்க முக்கிய காரணமாகிவிட்டது.

அமைச்சர்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் இப்படி சுவாரஸ்யமாக நீண்டுகொண்டே போகிறது. அதேபோல், புதிய அமைச்சர்கள் ஆறு பேருக்கும் அடித்த ஜாக்பாட் டுக்கும் கதை இருக்கிறது.

பரஞ்சோதி

அமைச்சர் மரியம்பிச்சை விபத்தில் இறந்ததால் நடந்த திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பரஞ்சோதி. இவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது பம்பர் பரிசுதான். ஜெயலலிதா போட்டியிட வசதியாக ஸ்ரீரங்கம் தொகுதியை விட்டுக் கொடுத்தவர். இது ஒன்றே அவருக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பைக் கொடுத்தது. இவர் இந்து சமய அறநிலையத்துறை, சட்டத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் வேட்புமனு தாக்கல் செய்த போதே ஏகப்பட்ட சர்ச்சைகள் எழுந்தன. இவருக்கு பதில் வேறு யாராவது நியமிக்கப்படுவார்கள் என்று வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் வரை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எல்லா சோதனைகளையும் தாண்டி வெற்றி பெற்று அமைச்சராகவும் ஆகிவிட்டார் பரஞ்சோதி.,

எஸ்.சுந்தர்ராஜ்

கைத்தறித்துறை மற்றும் ஜவுளித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.சுந்தர்ராஜ் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அமைச்சர் கருப்பசாமியின் மறைவுக்குப் பிறகு அந்த இடத்தை நிரப்பும் வகையிலும் சுந்தர்ராஜுக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. பரமக்குடி பிரச்னைக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தலைச் சந்தித்தது அ.தி.மு.க. இதனால் அ.தி.மு.க.வுக்குத் தோல்வி உறுதி என்று கணக்குப் போட்டார்கள் எதிர்க்கட்சியினர். இதையும் மீறி பரமக்குடி நகராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றியது. இதற்கு பரிசாகவே சுந்தர்ராஜுக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது.

கே.டி.ராஜேந்திர பாலாஜி

தகவல் மற்றும் சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேந்திர பாலாஜி ஆசாரி சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் கட்சிப் பணிகளில் மிக ஆர்வமுடனும், ஈடுபாட்டுடனும் செயல்பட்டதே இவருக்கு அமைச்சர் பதவியைப் பெற்றுத் தந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் இவர் சிறப்பாக பணியாற்றியதும் அமைச்சர் பதவி தேடி வந்துள்ளது.

இதுதவிர, அமைச்சர் செங்கோட்டையன், சின்னையா ஆகியோரது இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பதவி இழந்தவர்களுக்கு துக்கத்தையும், புதியவர்களுக்கு மகிழ்ச்சியையும் கொடுப்பதாக அமைந்துள்ளது அமைச்சரவை மாற்றம். சிறு தவறு செய்தால் கூட, பதவி இருக்காது என்பதை அனைத்து அமைச்சர்களுக்கும் புரிய வைத்திருக்கிறார் முதல்வர்.

அமைதிப்படுத்திய முதல்வர்!

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா ஞாயிறன்று கவர்னர் மாளிகையில் நடந்தது. கவர்னராகப் பொறுப்பேற்ற பின் அவர் செய்து வைக்கும் முதல் பதவிப் பிரமாணம் நிகழ்ச்சி இது. பத்து நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த விழாவில் பதவி இழந்த ஆறு அமைச்சர்களும் ஆஷரானார்கள். பதவிப் பிரமாணத்தின் போது, தொலைக்காட்சி கேமராமேன்கள் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

இதனால் அமைச்சர் தாமோதரன் பதவியேற்கும் போது இடையூறாக இருந்தது. இதனைக் கவனித்த முதல்வர் ஷெயலலிதா, அமைதியாக இருக்குமாறு, அவர்களைப் பார் த்து சைகை செய்தார். அதன்பிறகும், அவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தனர். அவர்கள் பேச்சை நிறுத்துவதற்குள் ஆறு அமைச்சர்களும் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் எடுத்துக் கொண்டனர். இதனால், கவர்னர் மாளிகையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

படங்கள்: ம. செந்தில்நாதன்

ரிப்போர்ட்டர் டீம்

01a.jpg

சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த சின்னையாவை கால்நடைத் துறைக்கு மாற்றி பதவியிறக்கம் செய்திருக்கிறார் முதல்வர். தாம்பரம் நகரச் செயலாளராக இருந்த சின் னையாவை எம்.எல்.ஏ., இரண்டு துறைகளுக்கு அமைச்சர், என உயர்த்தி மாவட்டச் செயலாளர் பதவியும் கொடுத்தார் ஷெயலலிதா.

தாம்பரம் நகரத் தேர்தலில் வெற்றி பெற்றுத் திரும்பும்போது உடன் வந்த சின்னையாவை வானளாவ வாழ்த்தி, அவரின் ஆதரவாளர்கள், போட்ட கோஜம் அவர் பதவியை தூக்கும் அளவுக்கு விவகாரமானதாம். அதுமட்டுமின்றி சட்டசபையில் ஷெயலலிதாவுக்கு நேராக பின்வரிசையில் சின்னையாவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சின்னையாவின் ஆதரவாளர்களோ, ‘‘அம்மாவைக் காட்டும்போதெல்லாம் எங்க அண்ணனையும் காட்டித்தான் ஆகவேண்டும்’’ என்பதாக கமெண்ட் அடித்திருக்கிறார்கள். எனவேதான் ஷெயலலிதா சின்னையாவை அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலர் பதவிகளிலிருந்து நீக்க முடிவு செய்தாராம். ஆனாலும், இப்போது பதவியிறக்கத்தோடு சின்னையாவை அவர் விட்டுவிட்டார்.

ஆனால், சின்னையாவின் ஆதரவாளர்களோ, அவரை நிச்சயமாக ம01b.jpgந்திரி பதவியிலிருந்து நீக்கமாட்டார் என்கிறார்கள். காரணம், சின்னையா நாயுடு சமுதாயத்தைச் சேர்ந் தவர். அதேபோல் பக்கத்திலுள்ள திருவள்ளூர் மாவட்டத்திலும் அமைச்சராக இருக்கும் ரமணாவும் நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான். அடுத்தடுத்துள்ள மாவட் டங்களில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை அமைச்சர்களாகப் போட்டிருப்பது ஆரம்பத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. காரணம் காஞ்சிபுரம் மாவட்டத்திலும், திரு வள்ளூர் மாவட்டத்திலும், வன்னியர்களின் எண்ணிக்கையே அதிகம். எனவே, யாராவது வன்னியரைத்தான் அடுத்து அமைச்சராக்குவார்கள் என்று பேசப்பட்டது. அதற்கேற்றாற்போல் திருவள்ளூரில் வன்னியரான மாதவரம் மூர்த்தியை ஷெயலலிதா இப்போது அமைச்சராக்கிவிடவே அது ரமணாவுக்குத்தான் சிக்கலை ஏற்படுத்தும். அதுவும் ஒரே நேரத்தில் இரண்டு நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கமுடியாது என்கிறார்கள் அவர்கள்.

எப்படியோ இப்போதைக்கு தப்பிப் பிழைத்திருக்கிறார் சின்னையா!

- புஷ்கின்

- - குமுதம் ரிப்போட்டர்

புஷ்கின்

- - குமுதம் ரிப்போட்டர்

http://www.youtube.com/watch?v=Y1sZIZeZEEM

ஏண்டா ஏன் ? இந்த மாதிரி காமெடி பண்ணுகிறீர்கள்.. புஸ்கின்.. புஸ்கின்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.