Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜ் ராஜரட்ணத்துக்கு 9கோடியே 28 லட்சம் டொலர்கள் அபராதம் விதிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிறுவனங்களின் இரகசிய தகவல்களை பெற்று சட்ட விரோதமாக வணிகத்தில் ஈடுபட்டதற்காக 11வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட அமெரிக்க வணிக முகாமையாளரான ராஜ் ராஜரட்ணத்திற்கு 9 கோடியே 28 லட்சம் டொலர்களுக்கும் அதிகமான அளவு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க நிதி ஒருங்குபடுத்துனர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க பங்கு வர்த்தக மற்றும் பணப்பரிமாற்ற ஆணையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட தனக்கு எதிரான இந்த சிவில் வழக்கில், தான் மேலும் எந்த விதமான அபராதமும் செலுத்த வேண்டியதில்லை என்று ஒரு காலத்தில் பெரும் கோடிஸ்வரராக இருந்த ராஜ் ராஜரட்ணம் வாதாடியிருந்தார்.

தனக்கு எதிராக அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட கிரிமினல் வழக்கு காரணமாக தான் படாத பாடுபட்டுவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

கிரிமினல் வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு மேலாக ஒரு கோடி டொலர்கள் அபராதம் செலுத்துமாறும், முறைகேட்டின் காரணமாக சம்பாதித்த 5 கோடியே 40 லட்சம் டொலர்களை திரும்ப செலுத்துமாறும் ராஜரட்ணம் ஏற்கனவே கேட்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தனது தீர்ப்பில் அமெரிக்க மாவட்ட நீதிபதி ஜெட் ரக்கோஃப் அவர்கள், அமெரிக்க நிதி ஒருங்குபடுத்தினர்களுக்கு சாதகமாக முடிவு செய்துள்ளார்.

ஒரு தனி நபருக்கு எதிராக வழங்கப்பட்ட மிகவும் பெரிய அபராதமான இந்த தண்டனையை வழங்கி தீர்ப்பளித்த நீதிபதி, இந்தத் தொகையை விட ராஜரட்ணம் சம்பாதித்தது மிகவும் அதிகம் என்று கூறியுள்ளார்.

சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளுக்கான அபராதமாக ராஜரட்ணம் தற்போது ஒட்டு மொத்தமாக 15 கோடியே 60 லட்சம் டொலர்களுக்கும் அதிகமாக செலுத்தியாக வேண்டும்.

உட் தகவல்களை பெற்று சட்டவிரோதமாக செய்யும் வணிகம் குறித்து தண்டிக்கப்பட்டவர்களில் மிகப்பெரிய அந்தஸ்தில் இருந்தவர்களில் ராஜ் ராஜரட்ணமும் ஒருவராவார்.

http://www.tamilthai.com/?p=30024

  • 1 year later...

Rajaratnam agrees to pay $1.5 M in SEC case

 

U.S. hedge fund manager Raj Rajaratnam has agreed to pay disgorgement of about $1.5 million in a civil lawsuit filed by the Securities and Exchange Commission, and to waive his right to appeal the judgment, court papers showed.

 

Rajaratnam would make the payment, representing the profits obtained by unlawful means, to the SEC within 90 days after the entry of the final judgment in court records, according to a filing.

 

Rajaratnam, currently serving a 11-year prison term, was convicted of securities fraud and conspiracy in May 2011. He was accused of running a network of friends and associates who leaked corporate secrets to him for years.

 

Former Goldman Sachs Group Inc director Rajat Gupta, a former chief of consulting firm McKinsey & Co, has also been charged with leaking tips to Rajaratnam. Gupta denies the charges.

 

Rajaratnam, the founder of Galleon Group, has already paid $63.8 million in criminal penalties, and a judge had earlier ordered him to pay $92.8 million in a civil case brought by the SEC.

 

The case is SEC vs Rajaratnam et al, U.S. District Court for the Southern District of New York, No. 11-07566.

 

http://www.reuters.com/article/2012/12/27/us-rajaratnam-seclawsuit-idUSBRE8BQ01B20121227

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.