Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பினரை பிரித்தானிய பிரதமர் கெமரூன் ஏன் சந்திக்கவில்லை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

david_cameron.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரித்தானிய பிரதமர் கெமரூனைச்சந்திப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரித்தானிய பிரதமரைச் சந்திப்பதற்கு அதிக விருப்பம் கொண்டிருந்த போதும் அதற்கான நேரத்தை பிரதமர் அலுவலகம் ஒதுக்காமை காரணமாகவே இந்தச் சந்திப்பு இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானிய பிரதமரைச் சந்திப்பது தொடர்பான கூட்டமைப்பின் வேண்டுகோள் பிரித்தானிய பிரதமர் அலுவலகத்துக்கு நேர காலத்துடன் கூட்டமைப்பினால் தெரிவிக்கப்பட்டடிருந்த போதும் அதற்கான நேரத்தை ஒதுக்குவதில் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் அசிரத்தையுடன் செயற்பட்டது என்ற தகவலும் தற்போது வெளிவந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்புக்கு நேரம் ஒதுக்குவது குறித்து மிகவும் கால தாமதப்படுத்தியே பிரதமர் கெமரூனிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் அதன் காரணமாக இந்தச் சந்திப்புக்கான நேரத்தை அவரால் ஒதுக்க முடியாது போயுள்ளதாகவும் நம்பகமான வட்டாரங்கள் எமது இணையத்துக்குத் தெரிவித்தன.

அத்துடன் பிரித்தானிய பிரதமர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திக்க விரும்பவில்லையா? என்ற கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துள்ள பிரித்தானிய பிரதமரின் நெருங்கிய வட்டாரங்கள், அவ்வாறு எதுவும் இல்லை. காலதாமதமான கோரிக்கையே இந்தச் இந்திப்பு இடம்பெறாமைக்குக் காரணம் என தெரிவித்தது.

http://www.tamilthai.com/?p=30034

கமரூன் அரசு நாட்டுக்கு வரவழைத்து வெளிவிவகார அதிகாரிகளை சந்திக்க வைத்ததே பாரிய வெற்றி.

அடுத்தடுத்த நகர்வுகளின் மூலம் நாம் தான் கமரூனின் சந்திப்பை சாத்தியமாக்க வேண்டும்.

எல்லோரையும், எல்லா நேரமும் சந்திக்கவேண்டும் என எதிர்பார்ப்பது பேதைமை.

இந்த விஜயத்தின் போது, கூட்டமைபினரின் தயாரிப்புக்கள் போதாது என்பதை அவர்கள் நன்கு புரிந்து கொண்டிருப்பார். குறிப்பாக அமெரிக்க விஜயத்தின்போது வளவள என்று கதை எழுதாமல், ரத்தினச் சுருக்கமாக ஆதாரங்களுடன் ஆவண தயாரிப்புகள் இருக்கவேண்டும் என்று கற்ற பாடத்தை மறக்க முன்னர் சக இளம் தமிழ் அரசியல்வாதிகளிடமும் பரிமாறி, தமிழர் தரப்பின் தகவல் பரிமாற்ற திறனை பல மடங்கு அதிகரிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம்பிரஸ் இணையத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவை நம்பி ஏமாந்தோர் பட்டியல் நீளமானது

இராஜவரோதயம் சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ. சுமந்திரன் ஆகிய நால்வர் சென்ற மாதம் அமெரிக்கா சென்றனர். பயணத்தை ஒழுங்கு செய்த துணை இராஐங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் எதிர்பார்த்த சந்திப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.

வெறும் இடைநிலை அதிகாரிகளுடன் ஏனோ தானோ என்று பேசிவிட்டு நால்வரும் விலகி விட்டனர். பத்திரிகையாளர்களுடன் பேசும் போது ‘பயணம் பயனுள்ளதாக அமைந்தது” என்று சொல்லித் தப்பினர். ஹிலாரி அம்மையார் சம்பந்தன் குழுவினருக்குத் தரிசனம் கொடுக்க மறுத்து விட்டார். இது பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் அரசியல் சித்துக்களில் சம்பந்தனைப் பந்தாடியதை மிக முக்கியமானதாக கருதலாம். தமிழர் பிரச்சனையில் அக்கறை காட்டும் தோற்றத்தைக் காட்டினாலும் அமெரிக்க அரசு சிங்கள அரசுடன் மிக இரகசியமான அரசியல் நகர்வுகளை மேற்கொள்கிறது. இதற்காக பொருளாதார இழப்புக்களைச் சந்திப்பதற்கும் அமெரிக்கா தயாராகி விட்டது.

2011 நவம்பர் 05ம் நாள் தொடக்கம் முன்பு நடைமுறையில் இருந்த இலங்கைக்கான அமெரிக்கா வழங்கிய வர்த்தகச் சலுகைகள் மீண்டும் செயற்படத் தொடங்குகின்றன. சலுகைகள் வழங்கியே பெரும் இழப்புக்களைச் சந்திக்கும் அமெரிக்காவைப் பொறுத்தளவில் இது பெரும் விட்டுக் கொடுப்பாகக் கருதப்படுகிறது.

ஜீ எஸ் பி (GSP) என்ற மூன்றெழுத்தால் அறியப்படும் (Generalised System of Preferences) என்ற வரிச் சலுகை 2011 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் நிறுத்தப் பட்டிருந்தது. இதனால் இலங்கை ஏற்றுமதியாளர்கள் அமெரிக்காவுக்கு வரிப்பணம் செலுத்த வேண்டி இருந்தது.

2011 ஜனவரி 01ம் திகதி தொடக்கம் 2011 நவம்பர் 05ம் நாள் வரை வசூலித்த வரிப் பணத்தையும் அமெரிக்க அரசு இலங்கை ஏற்றுமதியாளர்களுக்குத் திருப்பிக் கொடுக்க முன்வந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்கா இழப்புக்களையும் இலங்கை இலாபத்தையும் அடைய இருக்கின்றன.

சோனியன் குடும்பி சும்மா ஆடாது. அமெரிக்கா இலங்கையிடம் இருந்து எதையோ எதிர்பார்க்கிறது. இலங்கை அரசைத் தாஜா பண்ணுவதற்காக அமெரிக்க அரசு சம்பந்தன் குழுவினரின் முகத்தில் கரியைப் பூசி அனுப்பியிருக்கிறது. ஒபாமாவையும் றொபேட் ஓ பிளேக்கையும் நம்பி ஏமாந்தோர் பட்டியல் மிகவும் நீளமானது.

சம்பந்தன் குழுவினரின் அமெரிக்க பயணத்தை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியீட்டன. நடந்தது என்ன? போர்க் குற்ற விசாரணைக்கு என்ன நடக்கும்?. மகிந்த ராஜபக்சவின் நண்பர் பிளேக் இருக்கும் வரை தமிழீழ மக்களுக்கு எந்த தீர்வும் கிடைக்கபோவது இல்லை.

-eelampress

ஈழம்பிரஸ் இணையத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவை நம்பி ஏமாந்தோர் பட்டியல் நீளமானது

ஹிந்திய காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளுடன் ஒப்பிடும்போது, அமெரிக்காவை 10,000 மடங்குக்கு அதிகமாக நம்பலாம்.

தமது கைப்பொம்மையின் தமைமையிலான அமெரிக்க விஜயத்தால் ஹிந்திய அரச பயங்கரவாதிகள் கடுமையாக குழம்பிப் போயுள்ளார்களாம்.

Edited by ஆராவமுதன்

பிளேக் ஒரு நரி என்பதில் சந்தகமில்லை. ஆனால், அந்த நரியையும் சிங்களம் என்ற ஹையினா (Hyena) ஏமாற்ற முனைவதாகவே தெரிகின்றது. முன்பு புலிகள் இருந்தனர் நரியும் ஹையினாவும் ஒன்று சேர்ந்திருந்தன. இப்பொழுது சீனா என்ற ஒட்டுண்ணியை வைத்தே அரசியல் இருவரும் செய்யவேண்டும். இதில் கூட்டமைப்பு ஒரு சிறு துரும்பே. ஆனால் மாற்றங்கள் என்றும் நடக்கலாம்.

தமிழர் தரப்பு ஒற்றுமையாகவும் ஒரு பொருளாதார சக்தியாகவும் மாறினால் மட்டுமே எம்மை நோக்கிய பார்வை அதிகரிக்கும்.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.