Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலவியல் தேர்வு...தொடர் 2 ...

Featured Replies

பதினெட்டு வயசு நிரம்பாதோருக்கும் கலாச்சார காவலர்கள் என்று தம்மை அழைத்து கொள்வோருக்கும் இக்கட்டுரை ஏற்புடையது அல்ல அவர்கள் மேற்கொண்டு படிக்காமல் இப்பிடியே விலகி செல்லவும் ... :)

sexual selection, கலவியல் தேர்வு என்கிற முறையில் தான் ஆண்களை எல்லாம் சலித்து, புடைத்து, தரம் பிரித்து, சிறந்த மரபணுக்களை மட்டுமே தேர்ந்தெடுத்து, அடுத்த தலைமுறைக்கு பாக் அப் செய்கிறார்கள் பெண்கள்.

இதை பெண்கள் தான் செய்ய வேண்டுமா, ஏன் ஆண்கள் செய்தால் ஆகாதா? என்றால், சபாஷ் சரியான கேள்வி தான். இதற்கு உண்டான பதிலுமே ரொம்ப விவகாரமானது தான்.

• ஆண் பெண் இருவருமே கலவியல் பங்கேற்பில் ஈடுபட்டாலும், இதில் பெண்ணின் பங்கு தான் அதிகம். கலவியல் செல்கள், என்பவை இரண்டு பாலினருக்குமே பொது, இரண்டிலுமே 23 குரோமோசோம்கள் தான் இருக்கின்றன, என்றாலும், இவற்றின் எண்ணிக்கையிலும், வடிவமைப்பிலும் எக்கசெக்க வித்தியாசங்கள் உள்ளன.

ஒரு ஆண் ஒரு நாளைக்கு கிட்ட தட்ட எண்பது முதல் நூறூ மில்லியன் வரை விந்தணுக்களை உற்பத்தி செய்கிறான். அவன் வயதிற்கு வந்த அந்த கணம் முதல் அவன் வாழ்நாள் முழுவதுமே இப்படி மில்லியன் கணக்கில் விந்தணுக்களை உற்பத்தி செய்யவல்லவன் ஆண்.

ஆனால் பெண், ஒரு மாதத்திற்கு ஒரே ஒரு கருமுட்டையை தான் உற்பத்தி செய்கிறாள். அதுவும் வயதிற்கு வந்த பிறகு ஆரம்பித்து, மெனோபாஸ் ஆகும் வரை. கூட்டி கழித்து பார்த்தால் கிட்ட தட்ட 30 – 35 ஆண்டுகளுக்கு மட்டும். வருடத்திற்கு 12 கருமுட்டைகள், என்றால் தன் வாழ்நாள் முழுவதுமே சேர்த்து ஒரு பெண் உற்பத்தி செய்வது, மொத்தமே நானூற்று சொச்ச கருமுட்டைகள் தான்!

கருமுட்டையின் சைஸ்சையும் விந்தணுவின் சைஸையும் ஒப்பிட்டு பார்த்தால், விந்தணு ஒரு சின்ன புள்ளி மாதிரியும் கருமுட்டை அதை விட ஆயிரம் மடங்கு பெரிதாய், ஒரு உலக உருண்டை மாதிரியும் இருப்பதை நாம் காணலாம். காரணம், வந்தணுவில் வெறும் 23 குரோமோசோம்களும், அவற்றை நீந்த வைக்க ஒரு வாலும், அந்த வாலுக்கு நீந்து சக்தியை தர ஒரு குட்டி எஞ்சினும் தான் உள்ளன. கருமுட்டையிலும் அதே 23 குரோமோசோம்கள் என்றாலும், அந்த குரோமோசோம்களை சுற்றி, நிறைய கொழுப்பும், புரதமும் சக்தி கொடுக்க திரண்டு இருக்கும். காரணம் கருமுட்டை என்பது ஒரு சக்தி பிளம்பு. கருவுக்கு போஷாக்களிக்க வேண்டிய அளவு எரிபொருளும், ஆற்றலும், அதில் நிறைந்திருக்கிறது.

Gene economics, மரபணு பொருளாதாரத்தின் அடிப்படையில் பார்த்தால், ஆணின் விந்தணுவை தயாரிக்க அதிக செலவு ஆவதில்லை, அதனால் ஒரே நாளில் பல மில்லியன்களை உற்பத்திசெய்து தள்ள முடியும். ஆனால் பெண்ணின் கருமுட்டையோ, ரொம்பவே costlyயான ஒரு படைப்பு, அதனால் தான் அது மாதத்திற்கு ஒன்று என்று தயாராகிறது. அதனால் எரிபொருளை இருப்பை வைத்து மதிப்பிட்டால், விந்தணு மலிவானதகவும், கருமுட்டை விலை உயர்வானதாகவும் ஆகிவிடுகிறது.

• ஆணின் விந்தணுக்களுக்கு செய்கூலி மிக குறைவு. அதனால் அது விரையம் ஆனாலும் பெரிய நஷ்டம் ஏற்பட்டுவிட போவதில்லை. அதனால் தான் ஆண் மிருகங்கள், பெண்ணின் சாயலில் இருக்கும் பிற வஸ்துக்களை கண்டாலும், உடனே விந்தணுக்களை வெளியேற்றி விடுகின்றன. அதனால் அம்மிருகத்திற்கு எந்த பெரிய இழப்பும் இல்லை. ஆனால் பெண் தயாரிப்பதே மாதத்திற்கு ஒரே ஒரு கருமுட்டை என்பதினால், அதை விரையம் செய்யும் பேச்சுக்கே இடமில்லை. அதனால் பெண் தன் காஸ்ட்லியான முதலீட்டை மிகுந்த எச்சரிக்கையுடனே அணுகுகிறது

• தன் மரபணுக்களை பரப்பிக்கொள்ள ஆண் அதிகம் மெனக்கெட வேண்டி இருப்பதில்லை. ஒரு தகுந்த பெண்ணை தேடி பிடித்து, அவளை இசைய வைத்து, உடல் பாகங்களை பொருத்தி, விந்தணுக்களை முதலீடு செய்துவிட்டால் போதும் - சில நிமிட அசைவுகள், சில துளி விந்தணுக்கள் - இந்த சொர்ப்ப முதலீட்டிலேயே அவன் மரபணுக்கள் எளிதாக பரவிவிடும். அதன் பிறகு அந்த பெண் இருக்கும் திசை பக்கமே இவன் வரவில்லை என்றாலும், இவன் மரபணுக்கள் மிக ஷேமமாய் பரவித்தான் இருக்கும்.

ஆனால் பெண் தன் மரபணுக்களை பரப்பிக்கொள்வது இத்தனை சுலபமல்ல. இவள் மாதம் முழுக்க முயன்று, எத்தனையோ கிலோ ஜூல் எரிபொருளை கொட்டி குவித்து, ஒரே ஒரு கருமுட்டையை உருவாக்குகிறாள். அந்த கருமுட்டையை விந்தணுக்களோடு கலந்து கருவை தன் உடம்பிலேயே உருவாக்குகிறாள். இந்த கருவை மாதக்கணக்கில் தன் உடலில் தக்க வைத்து, போஷாக்களித்து, பிரசவத்தின் பெரும் துயர்களை எல்லாம் அனுபவித்து, குட்டியை ஈன்றும் புறம் தந்து அதற்கு பாலூட்டி, பத்திரப்படுத்தி, வாழ்வியல் வித்தைகள் சொல்லி தந்து……….ஆக பெண் தன் ஒட்டு மொத்த உடலையும் வாழ்வையும் பணயம் வைத்தாலே ஒழிய, அவளுடைய மரபணுக்கள் செம்மையாக பரவாது.

ஆக இனபெருக்க ஆட்டத்தில் ஆணின் முதலீடு மிக சொர்ப்பமே. ஆனால் பெண் செய்யும் முதலீடு மிக மிக அதிகம். இவ்வளவு அதிகமான முதலீட்டை எல்லாம் சும்மா ஏதோ ஒரு சோப்லாங்கியின் மரபணுக்களை பரப்பித்தர செலவழித்தால் அதை விட முட்டாள் தனம் வேறு என்ன இருக்க முடியும்? இதே சிரமங்களை ஏதோ ஒரு சூப்பர் மேனின் மரபணுக்களை பெற்று தர மேற்கொண்டால் அதில் இருக்கும் அர்த்தமே அலாதி தானே!

அதனால் தான் ஆண்களை எடைபோட்டு, இவன் தேருவானா, மாட்டானா? இவன் மரபணுக்கள் தேருமா? தேராதா? என்று மிக துல்லியமாக கணக்கிடும் ஆற்றலை இயற்க்கை பெண்களுக்கு பிறவியிலேயே படைத்திருக்கிறது. எல்லா ஜீவராசியிலும் பெண்பால் மிக மிக கறாராகத்தான் துணையை தேர்வு செய்கிறது.

மனிதர்களிலும் பெண்கள் எப்போதுமே மிக கணக்காய் தான் துணை தேர்வு, mate selectionனில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் வாழும் காலம், பருவம், சூழல் எல்லாவற்றையும் சரி பார்த்து, எந்த மரப்பணுக்கள் இருந்தால் தன் குட்டி சுலபமாக பிழைக்க முடியும் என்பதை உணர்ந்து, அம்மரபணுக்களை சுமக்கும் ஆண்களாக தேர்வு செய்து புணர்கிறார்கள்.

இந்த செக்‌ஷுவல் செலக்‌ஷனை பெண்கள் செய்யும் விதமே ரொம்பவே ஸ்வாரசியமானது. மனித வரலாற்றின் வெவ்வேறு காலநிலைகளில் வெவ்வேறு தேர்வு வரையறைகளை வைத்து ஆண்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் பெண்கள். இப்படி மாறிக்கொண்டே வரும் அவள் ரசனையை புரிந்துக்கொண்ட புத்திசாலிமனித ஆணும் காலத்திற்கு ஏற்ப தன்னை தானே மாற்றிக்கொண்டே வந்திருக்கிறான். அதனால் தான் மானுடம் மற்ற எல்லா ஜீவராசிகளையும் முந்தி வந்திருக்கிறது. மாறாமல் பின் தங்கி போன மக்கு ஆண்களையும் அவர்களது மரபணுக்களையும் பெண்கள் வடிகட்டிக்கொண்டே வந்திருக்கிறார்கள். இப்படி ஆணும் பெண்ணுமாய் மனிதர்கள் ஆடிய இந்த மரபணு ஆட்டங்களை பற்றி எல்லாம் அடுத்த இதழில்………

Dr.N.shalini

ஆனந்த விகடன் தொடர்...2010-

Edited by pirasan

மனித வரலாற்றின் வெவ்வேறு காலநிலைகளில் வெவ்வேறு தேர்வு வரையறைகளை வைத்து ஆண்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் பெண்கள். இப்படி மாறிக்கொண்டே வரும் அவள் ரசனையை புரிந்துக்கொண்ட புத்திசாலிமனித ஆணும் காலத்திற்கு ஏற்ப தன்னை தானே மாற்றிக்கொண்டே வந்திருக்கிறான். அதனால் தான் மானுடம் மற்ற எல்லா ஜீவராசிகளையும் முந்தி வந்திருக்கிறது. மாறாமல் பின் தங்கி போன மக்கு ஆண்களையும் அவர்களது மரபணுக்களையும் பெண்கள் வடிகட்டிக்கொண்டே வந்திருக்கிறார்கள்.

ஒப்பீட்டளவில் தமிழர்கள் முப்பது வயதுகளிலேயே திருமணம் செய்கிறார்கள். பல மேலை நாட்டவர்கள் இருபதுகளிலேயே மணம் முடிக்கின்றனர். இதனால் ஒரு நூறுவருட காலத்தில் நாம் மூன்று தலைமுறைகளை காணுகிறோம். அவர்கள், ஐந்து தலைமுறைகளை கண்டுவிடுகிறார்கள். எனவே இந்த 'வடிகட்டல்' முறையில் நாம் மேலும் பின்தங்கி விடுகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒப்பீட்டளவில் தமிழர்கள் முப்பது வயதுகளிலேயே திருமணம் செய்கிறார்கள். பல மேலை நாட்டவர்கள் இருபதுகளிலேயே மணம் முடிக்கின்றனர். இதனால் ஒரு நூறுவருட காலத்தில் நாம் மூன்று தலைமுறைகளை காணுகிறோம். அவர்கள், ஐந்து தலைமுறைகளை கண்டுவிடுகிறார்கள். எனவே இந்த 'வடிகட்டல்' முறையில் நாம் மேலும் பின்தங்கி விடுகிறோம்.

அகூதா அவன் 30 வயதில் 300 பேருடன் உடலுறவு வைத்திருப்பான், நாங்கள் உரசிக்கூட இருக்கமாட்டம், அவன் 30 வயதில் 3தரம் டிவோர்ஸ் எடுத்திருப்பான்,

அகூதா அவன் 30 வயதில் 300 பேருடன் உடலுறவு வைத்திருப்பான், நாங்கள் உரசிக்கூட இருக்கமாட்டம், அவன் 30 வயதில் 3தரம் டிவோர்ஸ் எடுத்திருப்பான்,

அதை மறுக்கவில்லை உடையார்.

ஆனால் ஒரு நூற்றாண்டு காலத்துக்குள் அவர்கள் ஐந்து தலைமுறையையும் நாம் மூன்று தலைமுறையையும் காணுகிறோம். அதனால், எமது பரிணாம வளர்ச்சி பல நூற்றாண்டுகளில் பல தலைமுறைகள் பின்தங்குகிறதா?, என்பதே.

Edited by akootha

  • தொடங்கியவர்

தொடர் 2 ...

பெண்வழி சமுதாயமும், ஆண்குறி போட்டியும்

பெண்கள் காலத்திற்கேர்ப்ப வரையறைகளை மாற்றி கலவியல் தேர்வு செய்தார்கள், இதை அணுசரித்து கெட்டிக்கார ஆண்களும் தங்கள் தன்மையை மாற்றிக்கொண்டே வந்தார்கள். இப்படி மாறி வந்த ஆண்களின் மரபணுக்கள் பரவின, மாறாத ஆண்களின் சுடவே மறைந்து போனது. இதெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் இதற்கெல்லாம் ஆதாரம்? என்கிறீர்களா? அதில் தான் ஸ்வாரஸ்யமே இருக்கிறது………..

குரங்கில் இருந்து மனிதர்கள் தோன்றிய அந்த ஆரம்ப காலத்தில், பெண்கள் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிந்தார்கள். பெண்கள் வேட்டைக்கு போனார்களா? அது ஆண்களின் வேலையல்லவா என்று ஆட்சரியப்படாதீர்கள்? எல்லா விலங்குகளிலும் ஆணை விட பெண் தான் அதிக வேட்டுவ தன்மை கொண்டிருக்கும். கொசுவை எடுத்துக்கொள்ளுங்கள், ஆண் அனோஃபிலீஸ் அப்புராணி, கடிக்காது, ஆனால் பெண் துரத்தி துரத்தி நம்மை கடித்து மலேரியாவை பரப்பும். காரணம், பெண்ணுக்கு தான் தன் குட்டிகளை கட்டிக்காக்க வேண்டிய கடமை இருக்கிறது. இதனாலேயே இயற்கை பெண்களுக்கு அதிக மோப்பத்திறன், அதிக பார்வை கூர்மை, அதிக சுவை உணர்வு, அதிக கூரான செவித்திறன், அவ்வளவு ஏன் துரித கதியின் ஸ்பரிசத்தை உணரும் தன்மை ஆகியவற்றை தகவமைத்திருக்கிறது. இந்த புலன் நுணுக்கத்தினாலேயே ஆணை விட பெண் அதிக திறம்பட வேட்டையாடவல்லதாகிறது.

மனிதர்களிலும் இந்த பொது விதி இயங்கியதால், ஆதி கால மானுட பெண்களும் வேட்டையில் சிறந்து விளங்கினார்கள். மக்கள் எல்லோருமே நாடோடிகளாய் இறை தேடி அலைந்தார்கள். இப்படி அலைந்த மானுட கூட்டங்களை பெண் தலைவிகளே வழி நடத்தி சென்றார்கள். ஆக பெண்கள் ஆண்களை எதற்குமே நம்பி வாழாத காலமது.

இப்படி ஒரு காலம் இருந்ததா? இதற்கு என்ன ஆதாரம்? என்கிறீர்களா?

ஆதாரம் ஒன்று: காங்கோ நதிக்கரையோரமாய் இன்றும் வாழ்ந்து வருகிறது பொனோபோ என்கிற வானர இனம். இந்த பொனோபோக்கள் அச்சு அசல் அப்படியே மனிதர்களை போலவே நடந்துக்கொள்பவை. இவை தமக்குள் பேசிக்கொள்கின்றன. பயிற்றுவித்தால் செய்கை மொழியில் மனிதர்களுடனும் சம்பாஷிக்கின்றன. இவற்றுக்கு சிரிப்பு, அழுகை, வேடிக்கை, விளையாட்டு எல்லாமே உண்டு. இவை எல்லாவற்றையும் விட விசேஷம்: இவை கலவி கொள்ளும் விதம் அப்படியே மனிதர்களை போலவே இருக்கிறது.

மனிதர்களை போலவே என்றால் என்ன அர்த்தமாம்? மிருக கலவிக்கு மனித கலவிக்கும் பல முக்கியமான வித்தியாசங்கள் உண்டு. எல்லா மிருகங்களும் முகமே பாராமல், முன்னுக்கு பின் தான் கூடி புணரும். அதுவும் இனபெருக்க காலத்தில் மட்டும். எந்த வித சுகமுமே உணராமல், வெறுமனே குட்டி போட மட்டும் நடக்கும் ஒரு உப்பு சப்பில்லாத சம்பிரதாயமாய். ஆனால் முகம் பார்த்து, இன்னாருடன் புணருகிறோம் என்று அறிந்து, பருவகாலம் மட்டுமல்லாமல், தனக்கு பிடிக்கும் போதெல்லாம் ஆசைக்காக புணரும் தன்மை, இந்த உலகில் இரண்டே ஜீவராசிகளுக்கு தான் உண்டு. ஒன்று மானுடம், இன்னொன்று பொனோப்போ. நடத்தையிலும், மரபுகளிலும், இத்தனை ஒற்றுமை இருக்கிறதென்றால், மரபணுக்களில்? என்று பரிசோதனை செய்து பார்த்தால், ஆட்சர்யம் ஆனால் உண்மை…..பொனோப்போக்களின் மரபணு புரதங்கள் கிட்ட தட்ட 98% மனிதர்களை போலவே இருப்பதை கணக்கிட்டார்கள் விஞ்ஞானிகள். மரபணு நெருக்கத்தில் பார்த்தால் மனிதர்களும் பொனோப்போக்களும் சகோதர இனங்கள். இவற்றுக்குள் இனகலப்பு செய்தால், குழந்தைகள் பிறக்க கூட வாய்ப்பிருக்கிறதென்றால் பாருங்களேன்.

ஆனால் இதை எல்லாம் விட மிக பெரிய ஆட்சர்யம் என்ன தெரியுமா? இந்த பொனோப்போக்கள் இன்றும் தாய் வழி சமூக அமைப்பில் தான் வாழ்கின்றன. இவை மட்டும் அல்ல, நமக்கு அடுத்து நெருங்கிய சகோதர இனமான சிம்பான்ஸீகளும் தாய்வழி சமூக அமைப்பில் தான் வாழ்கின்றன. அப்படியானால் மனிதர்களும் ஆரம்ப காலத்தில் தாய் வழி சமூக முறையை கடைபிடித்திருப்பார்கள் என்று தானே அர்த்தம்.

ஆதாரம் இரண்டு: இன்றும் மனிதர்களுக்கு அம்மா செண்டிமெண்ட் தான் பலமாக இருக்கிறது. அப்பா செண்டிமெண்ட் அத்தனை பலமானதாய் இருப்பதில்லை.

ஆ 3: தொல்காப்பியம் மாதிரியான பண்டைய இலக்கண நூல்களும் மனிதர்கள் ஆரம்ப காலத்தில் தாய் வழி சமூகமாய் தான் வாழ்ந்தார்கள் என்கிறது.

ஆ 4: தொண்மையான எல்லா கலாச்சாரங்களிலும் ஆரம்பகாலத்தில் தாய் தெய்வங்களே இருந்துள்ளன…..இவற்றுக்கு நிகரான தந்தை தெய்வங்கள் இருந்ததில்லை…..உதாரணத்திற்கு தமிழர்களின் ஆரம்ப கால தெய்வமான கொற்றவை. இவள் வன தெய்வமாகவும், வேட்டுவ தெய்வமாகவும் வழங்கப்பட்டாள். சிலப்பதிகார காலம் வரை இவள் தான் பிரதான கடவுளாக இருந்திருக்கிறாள். அதன் பிறகு இவள் வனகாலியாக மாறி, வேலனுக்கு தாயாகி, அப்புறம் சிவனின் மனைவியாகி போனதெல்லாம் காலப்போக்கில் ஏற்பட்ட பரிணாமம்.

அதெல்லாம் சரி, நம்ம சங்கதிக்கு வருவோம். கொற்றவை காலத்து பெண் ஒருத்தியை உதாரணமாய் எடுத்துக்கொள்வோம். இவள் வேட்டைக்கு தானே போய்க்கொள்வாள். பெண் வழி சமூகமாய் வாழ்ந்ததால் இவள் பாதுகாப்பிற்கு எந்த பிரச்சனையும் இல்லை. இவளுக்கு சொத்துக்கள் எதுவும் கிடையாது. ஆக எதற்க்காகவும் ஓர் ஆணை அண்டிப்பிழைக்க வேண்டிய நிர்பந்தத்தில் இவள் இல்லை. இப்படி வாழும் இந்த பெண் எதற்க்காக ஒரு ஆணை நாடுவாள்?

சிம்பிள்…..அந்த ஆணினால் அவளுக்கு ஏற்படும் கலவியல் கிளர்ச்சிக்காக மட்டுமே. அந்த காலத்தில் தனி சொத்து என்கிற சமாசாரமே இல்லை, அதனால் கற்பு என்கிற நம்பிக்கையே ஏற்பட்டிருக்கவில்லை. அதனால் பெண்கள் தமக்கு பிடித்த ஆண்கள் பலரோடு கூடி மகிழ்ந்துக்கொண்டிருந்தார்கள். இப்படி ஒரு பெண் பல புருஷர்களோடு கூடிக்கொள்ளும் இந்த முறையை தான் பாலிஆண்டரி, polyandry என்போம்.

இப்படி பாலிஆண்டிரி புரியும் போது, பல ஆண்களோடு கூடி, தனக்கு அதிக சுகத்தை தருகிறவன் யார் என்பதை கண்டுகொள்ள வாய்ப்பு பெண்களுக்கு இருந்ததால், அவளை மகிழ்விக்க தெரிந்தவனையே அவள் மீண்டும் மீண்டும் நாடி கூடினாள். இதனால் பெண்களை மகிழ்விக்க தெரிந்தவனின் மரபணுக்கள் மட்டுமே பரவின. மகிழ்விக்க தெரியாதவர்கள் மரபணு ஆட்டத்திலிருந்த நீக்க பட்டன. ஆனால் ஒரு கூட்டத்தில் பல ஆண்களுக்கு பெண்ணை மகிழ்விக்க தெரிந்திருந்தால், இவர்களுக்குள் போட்டி ஏற்படுவது இயல்பு தானே. அதனால் ஒருவரை அடுத்தவர் மிஞ்சிட ஆண்கள் முயல், இதனால் காலப்போக்கில் மனித ஆண்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.....

அவற்றை பற்றி எல்லாம் அடுத்த உயிர் மொழியில்

ஆனந்த விகடன் தொடர்

Dr N Shalini

Edited by pirasan

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு ஆக்கம் பிரசன்!

சிந்து வெளி நாகரிக காலத்திலும், பெண் தெய்வங்களே வழிபடப் பட்டன)

பின்பு எங்கே சறுக்கல் ஏற்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை!

திடீரென இந்திரனும், விஷ்ணுவும் வந்து விட்டார்கள்!

தொடருங்கள், உங்கள் பதிவுகளை! வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: :rolleyes: :rolleyes:
  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரை நல்லாத் தான் போய்க்கிட்டு இருக்குது. ஆனால் நிறைய ஆதாரங்கள் மிஸ்ஸிங்..!

வீரகேசரியில் நான் எழுதிய கட்டுரை ஒன்றிற்கு.. பதிலாக இலங்கைச் சேர்ந்த தமிழ் பேராசிரியை ஒருவர் பதில் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். அதில்.. இந்த தாய் வழிச் சமூகம் குறித்து அதிகம் பேசி இருந்தார்.. அதற்கு பதிலாக எழுதி அனுப்பிய கட்டுரையை வீரகேசரி.. போடல்ல..! அதில் நிறையக் கேள்விகளை உள்ளடக்கி ஆதாரங்களை வினவி எழுதி இருந்தன். நான் நினைக்கிறன்.. வீரகேசரி.. அந்த பேராசிரியையின் இரத்தக் கொதிப்பை ஏன் அதிகரிப்பான் என்று நினைச்சு போடமால் விட்டிருக்கலாம். சிறிது காலத்தின் பின்னர் வீரகேசரி அந்த பெண்களின் பகுதியையே இல்லாமல் செய்து விட்டிருந்தது. அதற்கு அந்தக் கட்டுரையோ அல்லது வேறு காரணங்கள் இருந்தனவோ என்பது பற்றி எனக்கு உறுதிபடத் தெரியவில்லை. மேற்படி நான் எழுதிய கட்டுரை தாயகத்தில் பத்திரமாக இருக்கும் என்று நம்புறன். அதை லமெனேட் செய்து வைச்சிருந்தனான். அதுவே பெண்ணிலைவாதிகளின் குருட்டுத்தனமான எழுத்துக்களுக்கு எதிரான எனது முதலாவது ஆய்வுத் தன்மை கொண்ட கட்டுரையாகவும் அமைந்திருந்தது. பள்ளியில் இருந்து பல்கலைக்கழகம் செல்லக் காத்திருந்த காலத்தில் எழுதியது.

அறிவியலில்.. ஒரு குறிப்புண்டு.. ஒருவர் பி எச் டி எடுத்திருக்கிறார் என்பதற்காக அவர் சொல்வதை எல்லாம் நம்ப வேண்டும் என்ற அவசியமில்லை. இக்கட்டுரை சார்ந்த விடயங்கள்.. பிற வழிகளிலும்.. ஆய்வுகளிலும்.. சரிபார்க்கப்பட்டோ.. ஆராயப்பட்டோ.. சான்றுப்படுத்தல் செய்யாவிடத்து ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கும். வாசிச்சு.. பொழுது போக்கலாம்.. அது தவறல்ல..! :lol::icon_idea::)

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.