Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோர்வே அறிக்கை- உருத்ரகுமாரன் கருத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

இங்கு இடம்பெற்ற விவாதங்கள், பொது சிந்தனைப் போக்கை உணர எனக்கு ஓரளவுக்கு உதவி இருக்கு.

கஸ்றோ தொடர்பான் விமர்சனங்களை திடீரென இப்போ வைக்கவில்லை. எனக்கும் அவருக்கும் இடையிலான மோதல் 2004ல் தீவிரமாக இருந்தது. அவர் மேற்க்கு நாட்டு அரசுகளின் நிலைபாடு தொடர்க இயக்கத்தை தவறாக வழிநடத்துகிறார் என்று சொன்னேன்.

2004ல் என கிளிநொச்சி இலக்கிய நண்பர்களால் . கிளிநொச்சி மாவித்தியாலயத்தில் கருணாகரனின் கவிதைத்தொகுதி வெளியீடு ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது. தோழன் மு. திருநாவுக்கரசுவும் நிலாந்தனும் கந்தையா சிறீகணேசனும் வந்திருந்தார்கள். இன்று கனடாவில் இருக்கும் கவிஞர் அகிலனும் வந்திருந்ததாக நினைவு. தோழன் பாலகுமார் உட்பட தலைமையில் உள்ளவர்களும் பெருமழவு போராளிகளும் மக்களும் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில் நானும் பேசினேன். என்னுடைய பேச்சில் நந்தவனத்தை கடுமையாக விமர்சித்தேன். என்னை யாரும் தடுக்கவில்லை. பேசி முடிந்ததும் திருநாவுக்கரசு என்னிடம் ஓடிவந்து நீபேசிவிட்டுப் போய்விடுவாய். உனக்கொன்றும் நடக்காது ஒழுங்கு செய்தவர்களுக்கல்லா பிரச்சினை என்று என்னைக் கடிந்துகொண்டார். கிழே வந்தபோது பாலகுமாரன் “நீ பேசியது உண்மையென்றால் சரி” என்றுவிட்டு அவசரமாக விடைபெற்றுச் சென்றுவிட்டார். வன்னியில் அப்படி ஒரு சம்பவம் அதற்க்குமுன்னர் நடைபெற்றதில்லை என்றார்கள்.

இதுபற்றி பின்னொரு சமயம் கருத்துத் தெரிவித்த கவிஞர் கருணாகரன் “நான் உட்ப்பட பலரும் பயந்திருந்தார்கள். ஜெயபாலன் வெளிநாட்டுக்குப் போயிரும் இங்க இருக்கிற எங்களுக்குத்தான் கரைச்சல் என்று எல்லோரும் சொன்னர்கள்” எனக்குறிப்பிட்டார்.

இந்த பின்னூட்டத்தை கருணாகரனோ திருநாவுகரசுவோ நிலாந்தனோ அல்லது கிழிநொச்சி இலக்கிய நண்பர்களின் அங்கத்தவர்களோ அல்லது அங்கு வந்திருந்த வேறுயாரோ வாசித்தால் அங்கு என் பேச்சில் நினைவிருக்கும் பகுதியை எனக்கு எழுதி அனுப்பி உதவுங்கள்.

அமரர் தமிழ்செல்வன்போன்றவர்கள் எடுக்கும் risk பற்றி கேனல் சங்கரின் மரணத்துக்கு பின்னர் நியூட்டனுடனும் சிறீயுடனும் இன்று ஐரோப்பிய நாடு ஒன்றில் இருக்கும் புலனாய்வு பிரிவின் முக்கியஸ்தரொடும் விரிவாக விவாதித்திருக்கிறேன்.

சங்கர் எனது நெடுங்கால தோழன். அவரது மரணம் இடம்பெற்ற இடம் மற்றும் ஆழ ஊடுருவியவர்கள் பயன்படுத்திய பாதை. அவர்கள் தண்ணீர் சாப்பாடு திருடிய முகாம் என்பவற்றுக்கு நியூட்டனும் சிறீயும் என்னை அழைத்துச் சென்றனர். அன்றிரவு கபிலம்மானின் முகாமில் நடந்த சந்திப்பில் நான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தேன். விரிவாக பின்னர் எழுதுவேன்.

என்னுடைய ஒரு விமர்சனம் தினசரி எதிரி விமானப் படங்களை எடுத்து வருகிற சூழலில் பதவி அடிப்படையில் பஜிறோ போன்ற வாகனங்களை வளங்கி இருப்பதும் ஒரே வாகனத்தை ஒருவரே தொடர்ச்சியாக பயன்படுத்துவதும் ஆபத்து என்றேன். நான் கூறிய உதாரணம் தமிழ்செல்வனின் வாகனம் சிறு பிள்ளைக்கும் தெரியும் அந்த வாகனத்தின் நடமாட்டத்தை விமான படங்களில் தொடர்ந்து பதிவு செய்தாலே எதிரிக்கு குண்டு வீசவேண்டிய இலக்கு நேரம் என்பவை தெரிந்துவிடும் என்றேன்.

வன்னியில் உள்ள எல்லா வாகனங்களும் குட்டி அவர்களின் தலைமையில் ஒன்று சேர்க்கப்பட்டு பதவி வாரியாக இல்லாமல் சுழல்முறையில் நாளாந்தம் வளங்கப் படவேண்டும் என்று வலியுறுத்தினேன். இதனை பின்னர் பல இடங்களில் வலியுறுத்தியபோதும் நடைமுறைப் படவில்லை. உண்மையில் இது ஒரு கோட்பாட்டுப் பிரச்சினை. நான் கோட்பாட்டு ரீதியாக இயக்கம் அடிப்படையில் இன்னும் கெரிலா அமைப்பு என்றேன். அரச நிர்வாகம் அற்ற/குறைந்த பகுதிகளை கட்டுப் படுத்துகிறது என்கிறது என்பது எனது கோட்பாட்டு விவாதமாக இருந்தது. ஆனால் அவர்கள் இயக்கம் ஒரு அரசு என்கிற கருத்தில் உறுதியாக இருந்தார்கள். நேரடி இராணுவம் அரசின் அடிப்படை. நேரடி இராணுவத்தை கெரிலா அமைப்பாக மீழ் பயிற்ச்சி கொடுத்து ஒரு பகுதியை கெரிலா அணிகளாகப் பிரித்துக் காடுகளுக்கு அனுப்ப வேண்டும். காடுகளை மீழக் கைப்பற்ற வேண்டும் என்கிறதாக எனது நிலையாக இருந்தது. எதிர்கால சந்ததிக்காக பதிவு செய்யவேண்டிய விவாதங்கள் அவை.

இத்தோடு எனது எழுத்துப் பணிகளுக்காக யாழில் தொடரும் எனது விவாதங்களை முடித்துக் கொள்ள விரும்புகிறேன்.

யாழில் என்னுடைய விவாதங்கள் பயனுள்ளது என்று கருதுகிறவர்கள் பச்சை குத்தவும். உங்கள் பச்சைகள் எனக்கு தொடர்ந்து எழுதுவது தொடர்பாகத் தீர்மானிக்க உகந்த FEED BACK ஆக அமையும்.

Edited by poet

  • Replies 85
  • Views 6.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விடை பெறுகிறேன் தேன்மொழி,

எப்போதாவது ஒரு பொது வேலைத் திட்டத்தில் சந்திப்போம் என்கிற நம்பிக்கையை விட்டுச் செல்கிறேன்.

ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். நீங்கள் என்னைப் பற்றி எழுதும்போது ‘உங்களை இங்கு அதிகமானவர்களுக்கு தெரியாது.அப்படியான உங்களை ஏன் விளம்பர படுத்துவான்.’ என எழுதியிருக்கிறார். நான் உலக தமிழர் மத்தியில் ஒரு அனோமோதயம் என்கிற உங்கள் கூற்றில் எவ்வளவு உண்மை இருக்கோ அவ்வளவு உண்மை உங்கள் கருத்துக்களிலும் உள்ளது. உண்மையே வெல்லும். நன்றி

Edited by poet

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களின் வீரப்பிரதாபங்களுக்கு சின்னப்பொடி சாட்சியா???? :lol:

சிரித்து சிரித்து வயிறு நோவுது.பிளீஸ்.வேணாம். என்று நீங்கள் இப்படிச் சொல்வது சாதி வெறியர்களின் குரல்போல தொனிக்குது.

எனக்கு மற்றவர்கள் எழுதிய பதில் கருத்துகளை விட்டுவிட்டு எனது பதிலை மட்டும் வெட்டிவிட்டது யாழ் யாழ் நிர்வாகம்.நன்றி

பொய்யட்,நீங்கள் இவ்வளவு நேரமும் அவித்த பானை சோற்றில் ஒரு பருக்கை இதுதான்.சாம்பிள்.ஒருசோறு பதம்

சிவாசின்னப்பொடியை எழுதியவுடன் சாதியை தூக்கிப்பிடித்த உங்கள் அறிவுக்கு என் மெச்சுதல்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி

என்னுடைய ஒரு விமர்சனம் தினசரி எதிரி விமானப் படங்களை எடுத்து வருகிற சூழலில் பதவி அடிப்படையில் பஜிறோ போன்ற வாகனங்களை வளங்கி இருப்பதும் ஒரே வாகனத்தை ஒருவரே தொடர்ச்சியாக பயன்படுத்துவதும் ஆபத்து என்றேன். நான் கூறிய உதாரணம் தமிழ்செல்வனின் வாகனம் சிறு பிள்ளைக்கும் தெரியும் அந்த வாகனத்தின் நடமாட்டத்தை விமான படங்களில் தொடர்ந்து பதிவு செய்தாலே எதிரிக்கு குண்டு வீசவேண்டிய இலக்கு நேரம் என்பவை தெரிந்துவிடும் என்றேன்.

வன்னியில் உள்ள எல்லா வாகனங்களும் குட்டி அவர்களின் தலைமையில் ஒன்று சேர்க்கப்பட்டு பதவி வாரியாக இல்லாமல் சுழல்முறையில் நாளாந்தம் வளங்கப் படவேண்டும் என்று வலியுறுத்தினேன்.

பெரிய தோல்வியில் உளவியல் பாதிப்புகள் ஏற்பட்டதால் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மனச்சிதைவுதான்களின்

வெளிப்பாடுதான் இங்கு எழுதப்படும் புனைவுகளும் ஆதாரடற்ற அறிக்கைக கதைகளும்.ஒரு கெரில்லா அமைப்பு அதனைவிட பலமிக்க பெரிய எதிரிப்படையணியை சந்திக்கும்போது பிரிந்து சிறுசிறுகுழுக்களாக மாற்றம்கொண்டு போராட்ட்த்தை முன்னெடுப்பது என்பது சிறுபிள்ளைக்கும் தெரிந்த புரிந்த

போரியல் முறை.இதைத்தான் இந்தியப்படை வந்திருந்தபோது விடுதலைப்புலிகள் செய்தார்கள்.

இதனையும் நான்தான் அவர்களுக்கு சொல்லி அவர்கள் செய்தார்டகள் என்று கூறுவது எவ்வளவு மடமை.

கொழும்புக்கும் தென்னிலைக்கும் பொறுப்பான கேணல் சாள்ஸ'வீரச்சாவு அடைந்தபோது பொட்டர் சொன்ன கருத்துகள் இப்போதும் youtube இலும் பத்திரிகைகளிலும் இருக்கிறது போய்பார்க்கலாம்.

சாள்ஸ் மன்னார் போகபோகிறார் என்றவுடன் தலைவர் எழுதி அனுப்பிய ஒரு குறிப்பில் சாள்ஸ்சின் வாகனத்தை பாவிக்காமல் வேறு வண்டியில் அலடலது போகும்படி சொல்லியிருந்தாராம்.

தொடர்ந்து ஒரே வாகனத்தில் வருகின்ற எதிரியை அழிக்கின்ற அமைப்புக்கு தெரியாதா தாங்கள் எந்தநேரமும்ஒரே வாகனத்தை பாவித்தால் இலக்கு வைக்கப்படுவோம் என்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரதி தமிழ்செல்வனை நான் காட்டிக்கொடுக்கவேண்டியதில்லை காரணம் பேச்சு வார்ததை காலத்தில் அவரிற்கும் வேறு முக்கியமானவர்களிற்கும் நோர்வேதான் கைத்தொலைபேசிகளை அன்பளிப்பு செய்திருந்தது.

விடுதலைப்புலிகள் இல்லாத இந்த வெளி நிறைய கற்பளைக்கதைக்காரர்களுக்கும் புனைவு எழுத்தர்களுக்கும் வாய்ப்பாக போய்விடடது.

வந்து இறங்குகிற ஆயுதங்களை முழுதாக கழற்றி அதற்குள் எங்காவது யாராவது electronic device வைத்து அனுப்பி இருக்கிறார்களா என்று பார்த்த பிறகே பாவனைக்கு விடுவதை வழமையாக கொண்டி அமைப்பில் யாரோ ஒரு வெளிநாடு குடுத்த கைத்தொலைபேசியை பாவித்து கொண்டே அழிந்தார்கள் என்பது அதிஉச்ச கற்பனை.

88லை சூசை இந்தியபடை மோதலில் காயப்பட்டு சென்னைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தபோது வெளிநாட்டிலிருந்து

வந்திருந்த நண்பர் ஒருவர் ஒரு காசியோ (casio) வாட்ச் கொடுத்தார்.அதில் பெயர்களும் தொலைபேசி இலக்கங்களும் பதிந்து வைக்கும் முறையும்,குரலில் பெயரை சொல்லி இலக்கத்தை பதிந்துவைக்கும் முறையும் இருந்தது.

சூசை அதனையே எங்கும் கட்டிக்கொண்டு திரிவார்.அவருக்கு பிடித்த வாட்ச் அது.

ஆனால் திரும்ப மணலாறுபோய் அவர் மணலாறு வழங்கல்முகாமாகிய காமதேனுவில் தங்கி நின்றார்.அங்கிருந்துதான் பிறகு

தலைவரின் இடத்துக்கு கொண்டுபோவார்கள்.தலைவரலின் இடத்தில் இருந்துவந்த முதல்கேள்வி 'அந்த வாட்ச் யார் தந்தது.அதை கழற்றிவைத்துவிட்டே வரவும்' .என்பதுதான்

nஐயபாலன் தான் வாழும் நாட்டில் எந்தவகையான அரசியலைச் செய்தவர் என்ற கதையை ஒரு அறிக்கையிடுவாரா?

;

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனால் நான் காட்டிக்கொடுத்தாவது அழித்துவிடவேண்டும் என நினைத்த ஒருத்தர் கஸ்ரோவை மட்டும்தான்

சாத்திரி எல்லாருக்கும் நினைப்பு இருக்கும்தான் யாரையாவது கொல்ல வேணும் என்று.ஆகக்குறைந்தது அவர் உயிரோடு இருக்கும்போது தன்னும் அதனை எங்காவது ஒரு இடத்தில் எழுதி இருக்கவும் வேணும்.

அப்படி எழுதி இருந்தால் அந்த நினைப்பின் உண்மை தெரிந்திருக்கும்.

வேறெங்கும் போகவேண்டாம். இப்ப என்னையே பாருங்கள்.எனக்கும் சில நினைப்புகள் இருக்கிறது.சலரை அவர்களின் குடும்பத்துடனேயே போட்டு தள்ளினால்தான் வருங்கால சந்ததிகள் நிம்மதியாக வாழும் என்று.

நாளைக்கே அவர் செத்துப்போன பிறகு நான் எங்கையாவது கணணிக்கு முன்பாக குந்தி இருந்து ஐயோ இவனை நான் போட்டு தள்ள நினைத்திருந்தேன் என்று எழுதுவது எந்த ரகம்.????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

. காரணம் அவனும் அவனது செயற்பாடுகளும் இயக்கத்தை அழிவிற்கு கொண்டுபோனதால்தான்.

இயக்கம் இல்லாமல் போனதுதக்கு காரணம் காஸ்ரோ என்று எழுதுவது சுத்த அபத்தம்.நந்தவனத்தில் காத்திருந்த காழ்ப்பு அதில் தெரிகிறது.

இப்ப உதாரணத்துக்கு 'ஐரோப்பாவிலே இப்போ ஏற்பட்டிருக்கிற பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் சாத்திரி சும்மா குந்தி இருந்துகொண்டு ஓசியிலே உதவிப்பணத்தில் சாப்பிடுவதால்தான் என்று நான் காரணம் எழுதினால் எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் இயக்கத்தின் அழிவுக்கு ஒற்றை வரியில் காரணம் எழுதுவது.

Edited by thenmozi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது 1991 ஆரம்பத்தில் ஏப்பிரலாக இருக்கலாம் யாழ் முற்றவெளியில் தேனிசைச் செல்லப்பாவின் இசை நிகழ்ச்சி நடந்த வேழையில் நிகழ்ந்தது. அதற்க்கு சில நாட்கலுக்கு முன் என்னுடன் தொடர்புகொண்ட புதுவை - நான் வடகிழக்கில் சுதந்திரமாக ஆய்வுகளை மேற்கொள்ளல்லாம் என்றும் தங்க்களுக்கும் ஆய்வறிக்கை பிரதி வேண்டுமென்றும் தலைவர் சொல்வதாக சொன்னார். நான் இசை நிகழ்ச்சியைக் கேட்டுக்கொண்டு இருந்தபோது என்னை விசாரிக்கவரும்படி ஒற்றைக்கண் சிவராசா அழைத்து நான் மறுத்து தகராறானது. நான் புதுவையை கேட்டு முடிவெடுக்குமாறு சொன்னேன். பிறகு கொஞ்ச நேரத்தின் பின்னர் ஒற்றைகண் சிவராசா தவற்றுக்கு மன்னித்துக்கொள்ளுங்கள் என்று என்னை விட்டுவிட்டார்.

பொயட்,நீங்கள் எழுதியதை பற்றி சில விளக்கங்கள் தரமுடியுமா??

சிவராசன் உங்களை பிடிக்கும்போது தன்னை சிவராசன் என்றே அறிமுகப்படுத்தி கொண்டாரா???

அது 1991 ஏப்ரலா???

பொதுவாகவே சிவராசன் என்ற பெயர் ராஜீவ்காந்தி மரணவிசாரணை அதிகாரி கார்த்திகேயன் குழுவால்தான் பாவனைக்கு வந்தது.சிவராசன் எப்போதும் தன்னை தனது இயக்க பெயரான ரகுவரன் என்ற பெயரில்தான் அறிமுகம்ஆவார்.

பத்மநாபா அழித்தொழிப்புக்கு பிறகு சிவராசனும் டேவிட்டும் பகிரங்கமாக தலைகாட்டுவதில்லை.அப்படிஇருக்கும்போது உங்களை அவர்தான் விசாரித்தார் என்பது எங்கையோ இடிக்கு.

இதனை ஆதாராத்துடன் உங்களுக்கு விரும்பின இந்திய வாக்குமூலத்திலேயே பார்க்கவேணும் என்றால் இந்திய சிபிஐ பொறுப்பு அதிகாரி கார்த்திகேயன் எழுதிய வாய்மையே வெல்லும் புத்தகத்தை பாருங்கள்.

Edited by thenmozi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சந்திப்போம்.

வேலைக்கு போகவேணும்.

ஈரானுக்கு அடித்து அதனை அழிக்க போகிறார்கள் அமெரிக்காவும் இஸ்ரேலும்.

யாராவது கணணிக்கு முன்பாக இருந்து அறிக்கைகள் ஏதும் தயார் செய்து ஈரான் அகமதினியாட்டுக்கும் அயதொலாவுக்கும்

அனுப்பி வையுங்கள்.save them!!

ஒருபக்கம் சமாதானச் செயற்பாடு. மறுபக்கம் விடுதலைப்புலிகளைப் பலவீனமாக்குவதற்கான முயற்சி. குழைகொடுத்து ஆட்டைவிட்டுவதுபோல்… நோர்வே மட்டும் சமாதானப் பூஞ்சாண்டி. மற்றையநாடுகள் எல்லாம் சிறீலங்காவுக்கு ஆயுதமும் ஆலோசனையும் வழங்கி விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கான செயற்பாடுகள். திரு உருத்திரகுமார் அவர்கள் சொல்கைமின் அறிக்கையைக் கண்டித்தது சரியே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.