Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசியான் : அமெரிக்கா - சீனா - இந்தியா

Featured Replies

ஒபாமாவையும் சீனப் பிரதமரையும் சந்தித்தார் மன்மோகன்

இந்தோனேஷியா, பாலித் தீவில் நடைபெறும் ஆசியான் மற்றும் கிழக்காசிய நாடுகளின் உச்சி மாநாட்டின் போது, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் சீனப் பிரதமர் வென் ஜியாபோவோ ஆகியோரை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசினார்.

சிவில் அணுசக்தி உலை விபத்து இழப்பீட்டுப் பிரச்சினை தொடர்பாக, அமெரிக்க நிறுவனங்களின் கவலையை, இந்தியச் சட்டத்துக்குட்பட்டு தீர்க்க இந்தியா தயாராக இருப்பதாக ஒபாமாவிடம் மன்மோகன் எடுத்துரைத்தார்.

ஒபாமாவுடன் நடந்த சந்திப்புக் குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட மன்மோகன் சிங், இந்தியாவில் அணுசக்தி உலை விபத்து இழப்பீடு தொடர்பாக சட்டம் இயற்றப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ஒபாமாவிடம் விளக்கியதாகவும் அமெரி்க்க நிறுவனங்களின் கரிசனைகளைத் தீர்க்க இந்திய சட்டத்துக்கு உட்பட்டு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை அடுத்து, இழப்பீடு தொடர்பான சட்டத்தை இந்தியா இயற்றியது. ஆனால், அந்த சட்டம் வெளிநாட்டு நிறுவனங்கள், இந்திய அணுசக்தித் திட்டங்களில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் இல்லாமல், எதிர்மறையாக இருப்பதாக அமெரிக்கத் தரப்பில் கவலை வெளியிடப்பட்டது.

ஆனால், இன்னொரு புறம் இந்திய அரசு எதிர்க்கட்சிகளின் கடும் சவாலையும் சமாளிக்க வேண்டிய நிலையில் இருந்தது. இந்த நிலையில், அணு உலை விபத்து இழப்பீடு தொடர்பான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, கடந்த புதன்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த விதிமுறைகளின்படி, அணு உலை விபத்து ஏற்பட்டால், அந்த விதிகளில் குறிப்பிட்ட காலவரையறைக்கு அப்பாற்பட்டு நடக்கும் விபத்துக்களுக்கு, அந்த நிறுவனங்கள் இழப்பீடு தர வேண்டிய அவசியம் இல்லை.

இந்தப் பிரிவுக்கு, இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவி்த்திருக்கின்றன. அவ்வாறு கால வரையறை செய்யக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. வரும் 22-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் இந்தப் பிரச்சினை எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், வெளிநாட்டு நிறுவனங்களின் கவலைகள் நியாயமானவை என்றும், எந்த ஒரு இழப்பீடும், எல்லையற்றதாகவோ, காலவரையறை இல்லாமலோ இருக்க முடியாது என்றும் இந்திய அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள்.

எனவே, ஒபாமாவுடன் நடந்த சந்திப்பின்போது, அமெரிக்காவின் கவலைகளைத் தீர்க்க இந்தியா மேற்கொண்டுள்ள முயற்சிகளை மன்மோகன் சிங் விளக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

மன்மோகனுடன் நடந்த சந்திப்பின்போது, ஜனாதிபதி ஒபாமா பேசுகையில், இரு நாடுகளும் பரஸ்பர மேம்பாட்டில் மட்டுமல்லாமல், அணு ஆயுதப்பரவல் தடை, பயங்கரவாதம் உள்பட சர்வதேச பிரச்சினைகளிலும் இணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்க இது மிகப் பொருத்தமான நேரமாக இருந்ததாகத் தெரிவித்தார்.

சீனப் பிரதமருடன் சந்திப்பு

இதனிடையே, சீனப் பிரதமர் வென் ஜியாபாவோவையும் சந்தித்துப் மன்மோகன் சிங் பேசினார். தென் சீனக் கடலில் வியட்நாமின் ஒத்துழைப்புடன் எண்ணெய் துரப்பணப் பணியில் இந்தியா ஈடுபடுவதற்கு சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

சீனப் பிரதமர் அந்தப் பிரச்சினையை எழுப்பியபோது, தென் சீனக் கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பணப் பணியில் இந்தியாவின் ஈடுபாடு முழுக்க முழுக்க வர்த்தக நோக்கக் கொண்டது என்று மன்மோகன் சிங் எடுத்துரைத்ததாக கிழக்காசிய நாடுகளுக்கான இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் சஞ்சய் சிங் தெரிவித்தார்.

பாலி உச்சிமாநாட்டின் போது, இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்து பரஸ்பர முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க முடிவெடுக்கப்பட்டது, இரு நாடுகளும் நல்லெண்ணத்துடனும் நட்புடனும் இணைந்து செயல்படுவதற்கு எந்த அளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதையே எடுத்துக் காட்டுவதாக வென்ஜியாபாவோ தெரிவித்தார்.

http://www.bbc.co.uk/tamil/india/2011/11/111118_manmohanobama.shtml

  • கருத்துக்கள உறவுகள்

வர்த்தக சமமின்மை: வென் ஜியாபாவோ - மன்மோகன் பேச்சு

இந்தியா - சீனா இடையிலான இரு தரப்பு வர்த்தகத்தில் நிலவும் சமமின்மையை நீக்குவது பற்றி அந்நாட்டுப் பிரதமர் வென் ஜியாபாவோவுடன் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்தோனேசியத் தலைநகரில் நடைபெற்றுவரும் ஆசியான், கிழக்காசிய மாநாட்டில் கலந்துகொண்ட இரு தலைவர்களும் தனியே சந்தித்துப் பேசியபோது, சீனாவின் ஏற்றுமதிக்கு இணையாக இந்தியாவின் ஏற்றுமதிக்கு சீனா அனுமதிப்பதே இந்த சமமின்மையை போக்குவதற்கான வழி என்று மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவிற்கும், சீனத்திற்கு இடையிலான இரு தரப்பு வர்த்தகம் 2010ஆம் ஆண்டில் 60 பில்லியன் டாலர்களாக இருந்துள்ளது. இது இந்த ஆண்டில் 70 பில்லியன் டாலர்களாகவும், 2015ஆம் ஆண்டில் 100 பில்லியன் டாலர்களாக உயரும் என்றும் கூறப்படுகிறது.

2010ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி, சீனா 40 பில்லியன் டாலர்கள் அளவிற்கு இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவின் ஏற்றுமதியோ 20 பில்லியன் டாலர்களாக மட்டுமே உள்ளது. இந்தியாவில் இருந்து சேவைத் துறைகளை சீனா அனுமதிப்பதில்லை, இதனால்தான் இந்த வர்த்தக சமமின்மை நிலவுகிறது என்று கூறப்படுகிறது.

http://tamil.webduni...111118025_1.htm

டிஸ்கி:

உலக பொருளாதார நிபுணர் தோழர் அகூதா ..

அவர்களின் ஆய்வுக்காக இது இங்கே இணைக்கபடுகிறது :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்

புரட்சி,

இந்த ' வர்த்தக சமமின்மை ' பொதுவாக சீனாவுடன் வர்த்தகம் செய்யும் செய்யும் எல்லா நாடுகளிலும் உள்ளது. சிக்கல் என்னெவென்றால் சீனா 'மலிவாக' உற்பத்தி செய்வதே.

ஆனால், அமெரிக்கா / ஐரோப்பிய நாடுகள் இந்த பிரச்சனையை வேறுவிதமாக அணுகுகிறனர். அதாவது, ' எமது கடனில் 30-50 வீதத்தை மன்னித்து விடுங்கள்' என்று. சீனாவுக்கும் தனது மக்களுக்கு வேலையும் பொருளாதார வளர்ச்சியும் தேவை. எனவே, சீனாவும் உடன்பட வேண்டிய தேவை உள்ளது.

Edited by akootha

  • தொடங்கியவர்

அமெரிக்க அதிபருடன் பிரதமர் மன்மோகன் சந்திப்பு

இவர்கள் இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஏற்கனவே கையெழுத்தாகியுள்ள ஆக்கப்பூர்வ அணுசக்தி ஒப்பந்தத்தை தீவிரமாக அமுல் படுத்துவது குறித்து தாங்கள் பேசியதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். மேலும் வர்த்தகம், அணுசக்தி பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் குறித்து தாங்கள் விவாதித்ததாகவும் அவர் கூறினார். இந்த சட்டம் இந்தியாவின் சூழ்நிலைக்கு ஏற்ப ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் இது தொடர்பான சில கவலைகளை ஒபாமாவிடம் தாம் தெரிவித்துள்ளதாகவும் சிங் கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால், அமெரிக்கா / ஐரோப்பிய நாடுகள் இந்த பிரச்சனையை வேறுவிதமாக அணுகுகிறனர். அதாவது, ' எமது கடனில் 30-50 வீதத்தை மன்னித்து விடுங்கள்' என்று. சீனாவுக்கும் தனது மக்களுக்கு வேலையும் பொருளாதார வளர்ச்சியும் தேவை. எனவே, சீனாவும் உடன்பட வேண்டிய தேவை உள்ளது.

http://www.youtube.com/watch?v=VqsPqYID1X8

கொடுக்கல் வாங்கலில் சிக்கல் வரலியா தோழர் அகூதா :) :)

புரட்சி,

இந்த ' வர்த்தக சமமின்மை ' பொதுவாக சீனாவுடன் வர்த்தகம் செய்யும் செய்யும் எல்லா நாடுகளிலும் உள்ளது. சிக்கல் என்னெவென்றால் சீனா 'மலிவாக' உற்பத்தி செய்வதே.

ஆனால், அமெரிக்கா / ஐரோப்பிய நாடுகள் இந்த பிரச்சனையை வேறுவிதமாக அணுகுகிறனர். அதாவது, ' எமது கடனில் 30-50 வீதத்தை மன்னித்து விடுங்கள்' என்று. சீனாவுக்கும் தனது மக்களுக்கு வேலையும் பொருளாதார வளர்ச்சியும் தேவை. எனவே, சீனாவும் உடன்பட வேண்டிய தேவை உள்ளது.

சீனா ஒரு பொது உடமை நாடு என்பதால் மலிவு என்ற பதத்தை சீனாவின் பக்கத்திலிருந்து விளங்கவைப்பது கடினம்.

1. உலகிலேயெ அதி வேகமான கணனியை சீனர்கள் உருவாக்கினாலும் அதை உபயோக்கிக்க அவர்களிடம் தேவை இல்லாதிருப்பதாக கூறப்படுகிறது. இது அரசாங்க பணத்தில் ஊக்குவிக்க பட்ட முதலீடு.

2. உலகத்திலேயே பெரிய சொப்பிங் சென்ரர் சீனாவில் உள்ளது. இதில் 15% தான் பாவிக்கப்படுகிறது. இப்படி ஒரு முதலீட்டை பெயருக்காக மேலைநாடுகளில் செய்ய முடியாது.

3. வேலை பயணிகளுக்கான வசதிகளில் சீனா பின்தங்கியிருக்கையில் உலகில் எந்த நாடும் எட்டிப்பிடிக்க முடியாதளவுக்கு 40 அதிவேக நீண்டதூர தண்டவாளங்களை அமைத்து வருகிறது. இது உள்நாட்டு பாவனைக்கு இறக்குமதி செய்ய வேண்டிய விமானங்களின் தொகையை குறைக்கும்.

எனவே இந்த கொள்கை விசையங்களைச்சரி செய்யாமல் உற்பத்திபொருள்களின் செலவீனத்தை சீனாவில் கணிப்பது கஸ்டம். இதை தொடர்ந்தால்,நாளடைவில், யப்பான் போன்று, மிஞ்சிபோகும் உற்பத்தி திறனால் 10-15 வருட பொருளாதார விழுக்காட்டை சந்திக்க நேரலாம்.

ஆனால் இந்திய அரசியலில் ஊழலும், அதிகார வர்க்கம் தான் பதவிக்கு வரலாம் என்றிருப்பதும். யப்பான் போருக்கு பின் அடைந்த மாதிரி ஒரு முந்னேற்றம் வருவதை தடுக்கும்.( லிங்கன், கிலின்ரன், ஒபாமா போன்றவர்களின் குடும்பங்கள் அமெங்க்காவிலேயெ மதிப்புகளைப்பெற்றிருக்காத குடும்பங்கள்) இந்த நிலமை ஊழல் மேலே போவதை கட்டுப்படுத்தும். இது இந்தியாவில் நடமுறைச்சாத்தியம் இல்லாதது. அதுமட்டுமல்ல இந்தியாவில் யார் பண்த்தை பெற்றலும் உடனே அதிகார வர்க்கம் போல ந்டந்து கொள்ளவும் முடியும். இது இந்தியா ஜனநாயகத்தில் மட்டும் இருக்கும் தாழ்வு நிலை.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

இந்தியாவுக்கு சீனா மறைமுக எச்சரிக்கை

தென் சீன கடல் பகுதியிலிருந்து வெளிநாட்டினர் வெளியேற வேண்டும் என சீனா கூறியுள்ளது.இது தங்கள் நாட்டு இறையாண்மையை பாதிக்கும் செயல் எனவும் கூறியுள்ளது. சீனாவின் இந்த கருத்து இந்தியாவை மறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிஜிங்கில் மீடியாக்களுக்கு பேட்டியளித்த சீனா வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், தென் சீனா கடல் பகுதியில் யாரும் நுழையக்கூடாது என்பதை நாங்கள் பல முறை தெளிவுபடுத்தியுள்ளோம். தென் சீன கடல் பகுதியிலிருந்து அந்நிய சக்திகள் வெளியேற வேண்டும். இந்த பகுதியில் வெளியாட்கள் வருவது சீனாவின் நலனையும், இறையாண்மையையும் பாதிக்கும் வகையில் அமைந்து விடும் என கூறியுள்ளார்.

மேலும் அவர், தென் சீன கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை தீர்ப்பதற்கு ஏசியான் மாநாடு நல்ல இடமல்ல என பிரதமர் வென் ஜியாபோ தெளிவுபடுத்தியுள்ளார். சீனாவின் நிலை தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளது. இந்த பிரச்னையை ‌தொடர்புடைய நாடுகள் நட்பு ரீதியில் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ளலாம், வெளிநாட்டு நபர்கள் இதில் நுழைய தேவையில்லை என சீனா கருதுவதாக கூறியுள்ளார்.

பாலியில் சீனா மற்றும் இந்திய பிரதமர்கள் சந்திப்பு குறித்து கூறிய அவர், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை சீர்குலைக்கு எந்த சக்திகளாலும் முடியாது. இந்த சந்திப்பின் போது, இரு த‌ரப்பு உறவுகளை முன்னெடுத்து செல்லவும், நட்பு ரீதியில் உறவுகளை மேம்படுத்தவும் இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா இந்தியாவிடம் விருப்பம் தெரிவித்துள்ளது. வர்த்தக ரீதியில் இரு நாடுகளும் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இது வருங்காலத்திலும் தொடரும். சீனாவின் இந்த கருத்து இந்தியா வியட்நாம் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தையை மறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

China warns India: Foreign companies shouldn't engage in South China Sea

China's foreign ministry spokesman Liu Weimin was asked today if the issue was raised in Dr Singh's meeting with Premier Wen at Bali. In his reply the spokesman said, "As for the discussion on the South China Sea issue, China has expounded its positions many times. We don't hope to see outside forces involved in the South China Sea dispute and do not want to see foreign companies to engage in activities that will undermine China's sovereignty and interests."

http://www.ndtv.com/...hina-sea-151772

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

1973ம் ஆண்டை நோக்கி இந்திய ரூபாயின் மதிப்பு; 2073ம் ஆண்டை நோக்கி விலைவாசி!

22-rupee1a-300.jpg

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது.

அனைத்து நாடுகளின் கரன்சிகளும், அமெரிக்க டாலருடன் ஒப்பிடப்பட்டே மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. இதன்படி ஒரு அமெரிக்க டாலருக்கு எத்தனை இந்திய ரூபாய்கள் என்பதை வைத்தே ரூபாயின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.

உதாரணத்துக்கு, ஒரு டாலருக்கு 48 ரூபாய் என்றால் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகம் என்று அர்த்தம். அதே நேரத்தில் ஒரு டாலருக்கு 52 ரூபாய் என்றால், இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துவிட்டது என்று அர்த்தம்.

இப்போது ஐரோப்பாவில் நிலவும் பொருளாதாரப் பிரச்சனைகள் காரணமாக, அந்த நாடுகளின் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதை வங்கிகளும், முதலீட்டாளர்களும் தவிர்த்து வருகின்றன. இதையடுத்து தங்கத்திலும், டாலர்களிலும் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர்.

இதனால் சர்வதேச அளவில் தங்கத்தின் விலையும் டாலரின் மதிப்பும் அதிகரித்து வருகின்றன. மேலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வாங்க டாலரில் தான் பணப் பரிமாற்றம் செய்ய வேண்டும். ஆனால், டாலரில் மற்ற முதலீட்டாளர்கள் பணத்தை முதலீடு செய்து அதை போட்டி போட்டி வாங்க ஆரம்பித்திருப்பதால், அதன் விலை உயர்ந்து வருகிறது.

இந்த விலை மேலும் உயர்வதற்கு முன் நாமும் அதை வாங்கிக் குவிப்பதே நல்லது என்று கச்சா எண்ணெய் இறக்குமதியாளர்களும் பணத்தை டாலர்களில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனால் டாலருக்கு திடீரென டிமாண்ட் அதிகமாகிவிட்டது. எந்தப் பொருளுக்கு டிமாண்ட் அதிகமாகிறதோ அதற்கு தட்டுப்பாடும், இதனால் அதன் மதிப்பும் உயர்வது அதிகம். இது தான் டாலர் விஷயத்திலும் நடந்துள்ளது.

டாலரின் மதிப்பு உயர்ந்துவிட்டதால், ஒரு டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்துவிட்டது. அதே போல ஐரோப்பிய கரன்சியான யூரோ, சீன கரன்சியான யென் ஆகியவற்றின் மதிப்பும் சரிந்துவிட்டது.

நேற்று மட்டும் டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு 81 காசு வரை குறைந்தது (அதாவது 0.8% வீழ்ச்சி). இன்று காலை நிலவரப்படி 1 அமெரிக்க டாலரைத் தந்தால், ரூ. 52.56 கிடைக்கும். இது கடந்த வாரத்தில் ரூ. 51 ஆகவே இருந்தது.

இதற்கு முன் 1973ம் ஆண்டில் தான் இந்திய ரூபாயின் மதிப்பு 52.72 என்ற அளவுக்குச் சரிந்தது. 38 ஆண்டுகளுக்குப் பின் கிட்டத்தட்ட அதே கீழ்மட்ட அளவை இந்திய ரூபாயின் மதிப்பு எட்டியுள்ளது. (இந்த ஆண்டில் மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பு 17 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.)

இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவதைத் தடுக்க தனது கையிருப்பில் உள்ள டாலர்களை சந்தையில் புழக்கத்தில் விட வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. மேலும் தன்னிடம் உள்ள அமெரிக்க டாலர்களை விற்பனை செய்யவும் ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.

ரிசர்வ் வங்கியால் முழுவதும் தடுக்க முடியாது:

ஆனாலும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதை முற்றிலுமாக தடுக்கும் சக்தி ரிசர்வ் வங்கியிடம் இல்லை என்று மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் செயலாளர் கோபாலன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், டாலருக்கு எதிரான ரூபாயின் வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதில் ரிசர்வ் வங்கியிடம் ஒரு அளவுக்குத் தான் சக்தி உண்டு. மதிப்பு சரிவதைத் முற்றிலும் தடுக்கும் ஆற்றல் அதனிடம் இல்லை என்றார்.

ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால், இந்தியாவில் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் கூடுதலாக செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படுத்துள்ளது. அதே நேரத்தில் ஏற்றுமதியாளர்களுக்கு ஓரளவு அதிக லாபம் கிடைக்கும்.

இறக்குமதி செய்யும் செலவு அதிகமாவதால், பெட்ரோலிய கச்சா எண்ணெய் வாங்க அதிக பணத்தை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் செலவழிக்க வேண்டி வரும் (மீண்டும் பெட்ரோல் விலை உயரும்?!). அதே போல மருந்துகள், ரசாயணம் (உரம் விலையும் மேலும் உயரலாம்), எலெக்ட்ரானிக் பொருட்கள், எண்ணெய் வித்துக்கள், ரப்பர் ஆகியவற்றை இறக்கமதி செய்ய நாடு அதிக பணத்தை செலவு செய்ய வேண்டி வரும்.

அதே நேரத்தில் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு லாபம் கிடைக்கும். ஜவுளி, நகைககள், நவரத்தினக் கற்கள் போன்ற இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிகளுக்கு போன வாரத்தில் கிடைத்ததை விட அதிகமான பணம் கிடைக்கும்.

ஆனால், மொத்தத் தேவையில் 80 சதவீத பெட்ரோலிய எண்ணெய்யை இறக்குமதி செய்யும் தேசம் இந்தியா. இந் நிலையில் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்தால், பெட்ரோல், டீசலின் விலை மேலும் உயர்ந்து, அது பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. பணவீக்கம் உயர்ந்தால் விலைவாசி மேலும் அதிகரிக்கும் (தமிழக மக்களுக்கு 'போனஸாக' பால் விலை, பஸ் கட்டணம் ஆகியவை வரலாறு காணாத அளவுக்கு ஏற்கனவே உயர்த்தப்பட்டுவிட்டது. இதனுடன் சேர்ந்து மேலும் மற்ற விலைகளும் உயர்ந்து வாட்டி எடுக்கும்)

இந் நிலையில் சர்வதேச அளவில் நிலைமை சரியாகாவிட்டால், அடுத்த சில ஆண்டுகளில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு 54 ரூபாய் வரையில் கூட சரியலாம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். ஆக, இதற்கு முந்தைய பாராவில் சொல்லியிருப்பது நடக்கலாம்.

மேலும் டாலரில் அதிகமாக முதலீடு செய்வதற்காக பங்குச் சந்தைகளில் போட்டு வைத்துள்ள பணத்தையும் பல முதலீட்டாளர்கள் எடுக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால், இந்திய பங்குச் சந்தையிலும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

http://tamil.oneindia.in/editor-speaks/2011/11/indian-rupee-falls-all-time-low-against-us-dollar-aid0090.html

டிஸ்கி:

பொருளாதார நிபுணர் தோழர் அகூதா அவர்களின் ஆய்வுக்கு இங்கே இணைக்கபடுகிறது..

  • தொடங்கியவர்

ஊரிலேயே பெரிய பணக்காரன் - அமெரிக்கா. அவனுடன் வியாபார உறவை வளர்க்க, உள்ளதை பேண ஊரில் எல்லோருக்கும் இடையில் சண்டை. இது முதலாளிக்கும் நன்றாகவே தெரியும். அவனோ அதை வைத்து தமக்குள் அடிபடும் ஊரில் உள்ளவர்களை மேலும் போட்டிபோட வைத்து தனது வளத்தை பெருக்குகிறான்.

BRIC -ப்ரிக் : பிரேசில், உருசியா,இந்தியா, சீனா - என்பன உண்மையாக ஒற்றுமையாக செயல்பட்டால் பெரிய பணக்காரனை ஏதாவது செய்யமுடியும். ஆனால் அவர்கள் ஒற்றுமையாக செயல்பட முடியாமல் இருக்க அவர்களுக்குள்ளும் பல பிரச்சனைகள் உள்ளன, அப்படியே அவர்கள் ஒற்றுமைப்பட்டால், அதை அமெரிக்கா தகர்த்துவிடும்.

  • தொடங்கியவர்

சரிந்துவரும் உலக பொருளாதாரத்தில் தமது ஏற்றுமதிகளை அதிகரிக்க பல நாடுகள், இந்தியா - இலங்கை உட்பட, நாணயத்தின் பெறுமதியை குறைக்கின்றன. அதுவே இந்தியாவின் ரூபாயின் பெறுமதியும் இலங்கையின் பெறுமதியும் குறைந்தன.

அதேவேளை அதிகளவில் அமெரிக்க டாலரை கையிருப்பில் கொண்டுள்ள நாடுகள், அவற்றின் ஒரு பகுதியை தங்கமாக மாற்றிவருகின்றன. சிலவேளைகளில் அமெரிக்க பொருளாதராம் மேலும் சறுக்கினால் தமது பொருளாதராத்தை பாதுகாக்க இந்த அணுகுமுறை.

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.