Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழம் - நாணயமாற்று

Featured Replies

குறிப்பு: இக்கருத்து தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களம் எனும் கருத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்தலைப்பாக்கப்பட்டுள்ளத

நன்றாக சொன்னாலும் உறைக்கிறமாதிரி சொன்னீர்கள்

ஐயா இப்ப போக வேண்டாம்....! இங்கு வந்தபின் நாட்டுக்குப் போவது நல்லதல்ல... நீங்கள் ஊருக்கு அனுப்பும் பணம் இலங்கை அரசின் அன்னியச் செலவாணியைத்தான் அதிகரிக்கும்..... அங்கு நீங்கள் வாங்கும் பொருட்கள் வரியாகப் போய் திரும்பவும் ஊரில் குண்டுகளாய் விழும்....!

உங்கள் பணத்தை தமிழீழத்துக்கு கொண்டு போங்கள் போகும் போது உங்கள் பணம் வங்கிக்கு போனாலும் பொருட்களை வாங்கினாலும் தமிழீழம் பயன் பெறும்....!

கொழும்பில் தமிழர்கள் இருக்க சிங்களவன் விடுகிறான் எண்றால் முக்கிய காரணம் அன்னியச்செலவாணி....!

தலை அவர்களே, காசுகளை நாங்கள் இலங்கை வங்கிகளுக்கு அனுப்பிறதை விட தமிழீழ வைப்பகத்துக்கு நேரடியாக அனுப்ப ஏலாதோ??

தலை அவர்களே, காசுகளை நாங்கள் இலங்கை வங்கிகளுக்கு அனுப்பிறதை விட தமிழீழ வைப்பகத்துக்கு நேரடியாக அனுப்ப ஏலாதோ??

தற்பொழுது பணத்தை நேரடியாக தமிழீழ வங்கிக்கு அனுப்பமுடியாது.

தற்பொழுது பணத்தை நேரடியாக தமிழீழ வங்கிக்கு அனுப்பமுடியாது.

ஏன் அனுப்பிட முடியாது? அனைத்து புலம்பெயர் தமிழ் மக்களும் ஒருமித்து முடிவெடுத்தால் இது சாத்தியம்.

இருவிழி நீங்கள் சில நடைமுறை விடயங்கள் தெரியாமல் எழுதுகின்றீர்கள் என்று நினைக்கின்றேன். அருவி எழுதியது போல் தற்போது சாத்தியமில்லையென்பதே உண்மை.

அது எவ்வகையில் சாத்தியம் சாத்தியமில்லை என விரிவாக விளக்கினால்த்தானே எமக்கும் விளங்கும். அதனை விடுத்து சாத்தியமில்லை என்னும் ஒரு வார்த்தையில் முடிக்கின்றீர்களே...

இருவிழி எழுதியது:

அது எவ்வகையில் சாத்தியம் சாத்தியமில்லை என விரிவாக விளக்கினால்த்தானே எமக்கும் விளங்கும். அதனை விடுத்து சாத்தியமில்லை என்னும் ஒரு வார்த்தையில் முடிக்கின்றீர்களே...

நீங்களும் சாத்தியம் என்று எழுதும்போது எவ்வகையில் சாத்தியம் என்பது பற்றி விரிவாக எழுதவில்லையே?? எனவே எவ்வகையில் சாத்தியம் என்பதை விரிவாக முதலில் நீங்கள் தாருங்கள் நானும் எவ்வகையில் சாத்தியமில்லை என்பதை இணைக்கின்றேன்.

தற்பொழுது பணத்தை நேரடியாக தமிழீழ வங்கிக்கு அனுப்பமுடியாது.

அப்படியாயின் தமிழீழ நிதித்துறை நாணைய மாற்று பட்டியலை அண்மையில் வெளியிட்டிருந்ததன் பொருள்தான் என்ன?

இருவிழி:

நீங்கள் எவ்வித விளக்கமும் இல்லாமல் வெறும் வீம்புக்காகவே எழுதுகின்றீர்கள் என்பது நன்கு புரிகின்றது. அதனால் சாத்தியமில்லை என்பதைப் பற்றிய விளக்கத்தையும் மற்றும் நாணய மாற்றுப் பட்டியல் பற்றிய தங்களின் வினாவிற்கும் விடையையும் தருகின்றேன்.

1) வெளிநாட்டிலிருந்து இன்னொரு நாட்டின் எந்த வங்கிக்கு பணம் அனுப்பினாலும் முதலில் அந்நாட்டின் மத்திய வங்கிக்குத் தான் பணம் சென்றடையும். பின்பு அந்தப் பணத்தை குறிப்பிட்ட அந்த வங்கிக்கு ( அரசினால் அங்கீகரிக்கப்பட்ட வங்கியாயின் ) மத்திய வங்கி அனுப்பி வைக்கும்.

2) நாணைய மாற்றுப் பட்டியலை யார் வேண்டுமானாலும் வெளியிடலாம். நீங்கள் இலங்கையில் சில தனியார் கடைகளிலும் நாணைய மாற்றுப் பட்டியல் வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவர்களிடம் நீங்கள் வெளிநாட்டு நாணயங்களை கொடுத்து இலங்கை நாணயத்தை பெற்றுக் கொள்ள முடியும். அதுபோல் தற்பேர்து தமிழீழ வைப்பகம் நாணைய மாற்றுப் பட்டியலை வெளியிட்டு இருப்பதன் நோக்கமும் அவர்களிடமும் நீங்கள் அங்கு செல்லும் போது வெளிநாட்டு நாணயங்களை மாற்றிக் கொள்ள முடியும் என்பதற்காகவே.

தற்போது உங்களுக்கு போதிய விளக்கம் கிடைத்ததா ??

  • தொடங்கியவர்

அப்படியாயின் தமிழீழ நிதித்துறை நாணைய மாற்று பட்டியலை அண்மையில் வெளியிட்டிருந்ததன் பொருள்தான் என்ன?

அது நீங்கள் விடுமுறையில் போகும்போது கொண்டு செல்லும் அன்னியப்பண மாற்றத்திற்காக அலகு அது...!

தமிழீழ வைப்பகத்தில் நீங்கள் வேண்டுமானால் பணம் வைப்பில் இடலாம் ஆனால் இங்கிருந்து பணம் அனுப்ப உண்டியலில்த்தான் அனுப்பவேண்டும்.... அப்படி அனுப்பினாலும் அந்தப்பணத்தால் வாங்கப்படும் பொறுட்களின் வரி இலங்கை அரசுக்குப் போய் சேரும்.

1) வெளிநாட்டிலிருந்து இன்னொரு நாட்டின் எந்த வங்கிக்கு பணம் அனுப்பினாலும் முதலில் அந்நாட்டின் மத்திய வங்கிக்குத் தான் பணம் சென்றடையும். பின்பு அந்தப் பணத்தை குறிப்பிட்ட அந்த வங்கிக்கு ( அரசினால் அங்கீகரிக்கப்பட்ட வங்கியாயின் ) மத்திய வங்கி அனுப்பி வைக்கும்.

2) நாணைய மாற்றுப் பட்டியலை யார் வேண்டுமானாலும் வெளியிடலாம். நீங்கள் இலங்கையில் சில தனியார் கடைகளிலும் நாணைய மாற்றுப் பட்டியல் வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவர்களிடம் நீங்கள் வெளிநாட்டு நாணயங்களை கொடுத்து இலங்கை நாணயத்தை பெற்றுக் கொள்ள முடியும். அதுபோல் தற்பேர்து தமிழீழ வைப்பகம் நாணைய மாற்றுப் பட்டியலை வெளியிட்டு இருப்பதன் நோக்கமும் அவர்களிடமும் நீங்கள் அங்கு செல்லும் போது வெளிநாட்டு நாணயங்களை மாற்றிக் கொள்ள முடியும் என்பதற்காகவே.

கடந்த வருடம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட பாதுகாப்பான வங்கிகளில் தமிழீழ வங்கியும் உள்ளடக்கப்பட்டிருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. ஆனால் தமிழீழ வங்கி ஒரு நாட்டில் பதிவுசெய்யப்பட்ட வங்கியல்ல. அது தமிழீழ நிழழரசாங்கத்தின் தேசிய வங்கியாகச் செயற்படுகிறது. எந்த வொரு வங்கிக்கும் வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்ப வேண்டியிருந்தால் அது ஒரு நாட்டில் பதியப்பட்டிருக்கவேண்டும். அதாவது ஒரு நாட்டின் சட்டதிட்டங்களிற்கு ஏற்ப அது ஒரு வங்கியாக கணிக்கப்படவேண்டும். நீங்கள் இலங்கைக்கு எவ்வகையினால் பணம் அனுப்பினாலும் அதனால் இலங்கை அரசாங்கம் வரி அறவிடுகிறது. உண்டியலில் அனுப்பினாலும் சரி வங்கிமூலம் அனுப்பினாலும் சரி. இன்று இலங்கைக்கு வெளிநாட்டு செலவானியைப் பெற்றுத்தருபவர்களாக தமிழர்களே இருக்கிறார்கள்.(மலையகத்தில் பெருந்தோட்டங்களிலும் தமிழர்கள், புலம் பெயர்ந்து இல்கைக்கு பணம் அனுப்புவர்களும் தமிழர்கள்:P) :idea:

மற்றும் வெளிநாட்டு நாணயமாற்று விகிதத்தினை யாரும் வெளியிட முடியாது. யாராயினும் வைத்திருக்க முடியுமே தவிர யாரும் வெளியிட முடியாது. அத மத்திய வங்கியினால் வெளியிடப்படுகிறது. 2000ம் ஆண்டிற்கு கிட்டிய ஆண்டு ஒன்றில் (ஆண்டை தெளிவாக குறிப்பிட முடியவில்லை) மத்திய வங்கி வெளிநாட்டு நாணயங்களைக் கட்டுப்படுத்தும் பணியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டுள்ளது. அதாவது அன்றிலிருந்து அமெரிக்க நாணயத்தின் சந்தைப் பெறுமதியைக் கொண்டு நாணய மாற்று விகிதம் கணிக்கப்பட்டு மத்திய வங்கியினால் வெளியிடப்படுகிறது. :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றும் வெளிநாட்டு நாணயமாற்று விகிதத்தினை யாரும் வெளியிட முடியாது.

நாணயமாற்று பட்டியலை இலங்கையில் யாரும் வெளியிடமுடியும்.

அதாவது உதாரணத்திற்கு இலங்கை மத்தியவங்கி இன்றைய வெளிநாட்டு நாணயமாற்று விகிததின்படி ஒரு யுஎஸ் டாலருக்கு 150 ரூபாய் என்று அறிவிக்கின்றது என வைத்துக்கொள்வோம் ... உடனே ஒரு சில வர்த்தகர்கள் தங்கள் கடைகளில் மாற்றினால் ஒரு டாலருக்கு 155 ரூபாய் தருவதாக அறிவித்து பட்டியல் தொங்கவிடுவார்கள். இவர்கள் அப்படியே டொலர்களை மேலதிகபணம் கொடுத்து வாங்கி சேர்த்துவிட்டு எப்ப மத்திய வங்கியில் டொலரின் விலை பெருமளவில் கூடுகின்றதோ அப்போது இவர்களிடம் உள்ள டொலரை மாற்றி லாபம் சம்பாதிப்பார்கள். இந்த தொழிலுக்கு கொஞ்ச பணம் முதல் வேண்டும்.

அது வெளிநாட்டு நாணய விகிதம் அல்ல. அது ஒரு வியாபாரம். கொஞ்சம் சிரமம் எடுத்து செய்யப்படும் வியாபாரமாகும். அதற்கும் நாணய மாற்று விகிதத்திற்கும் தொடர்பு இல்லை. இலங்கையின் நாணயத்தினை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் நிறுவனம் மத்திய வங்கியாகும். உண்டியல் மூலம் அதிக மாற்றீடு பெற்றுக் கொள்வது இப்படியான வியாபாரம் மூலமே. எவ்வாறு பொருட்களைப் பதுக்கி வைத்திருந்து தட்டுப்பாடான காலப்பகுதியில் விற்பார்களோ கிட்டத்தட்ட அதே போன்ற ஒர வியாபாரமே இதுவாகும். :idea:

கொழும்பு நகர வீதிகளில் நீங்கள் சென்றீர்களானால் உங்களிற்கு அன்றைய நாணைய மாற்றுவிகிதத்திலும் கூடிய விகிதத்தில் அமெரிக்க டொலரினை மாற்றக் கூடியவாறு இருக்கும். அதிலும் குறிப்பாக நாணயத்தாளின் பெறுமதி அதிகரிக்க அதிகரிக்க அதாவது ஒரு தாளாக இருக்கும் $20 இனைவிட ஒரு தாளாக இருக்கும் $100 இனை மாற்றினீர்களானால் அதிக விகிதத்தில் மாற்றுவார்கள். :wink: :P (5 $20 தாளினை மாற்றும் போது ஒரு $100 தாளினை மாற்றுவதனைவிடக் குறைந்த தொகையையே பெறமுடியும்:lol:)

இங்கே பலருக்கு நாணயப் பரிமாற்றம் சம்பந்தமாகக் குழப்பம் இருப்பதாகத் தெரிகிறது. நாணயப் பரிமாற்றத்தை (money market) நிர்ணயிப்பது நாணயப் பரிமாற்றுச் சந்தை.இப் பரிமாற்றுச் சந்தையில் ஒரு குறிப்பிட்ட நாணயம் தமது தேசிய நலங்களுக்கு, அதாவது நிதிக் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளுக்கு முரணாக அமைந்தால், அந்தக் குறிப்பிட்ட நாணயத்தை நாணயச் சந்தயில் வாங்கியோ விற்றோ மத்திய வங்கிகள் நாணயப் பெறுமதியை ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் வைத்திருக்க(managed currency ) முயற்ச்சிக்கும்.அதற்கு அந்த மதிய வங்கியிடம் தேவயான டொலர்கள் கையிருப்பில் இருக்க வேண்டும். அரசுகள் இவ்வாறே நாணயச் சந்தையில் தலயிட்டு நாணய விகிதத்தைக் கட்டுப் படுதுகின்றன.ஆனால் சில நாடுகள் நாணயப் பெறுமதியை தாமாக நிர்ணயிக்கின்றன(fixed currency ).ஆனால் இந்த விலை நிர்ணயமானது சந்தைப் பெறுமதியை விடக் கூடவோ குறயவோ இருக்கும்.

ஆனால் மற்றய நாடுகள் கொடுக்கல் வாங்கல்கள் செய்யும் போது டொலரில் அல்லது யுரோவில் ,அதாவது சந்தை நிர்ணயம் செய்யும் ஸ்திரமான நாணயப் பெறுமதியயே பாவிக்கின்றன(hard currencies). நாடுகளுகிடயேயான பரிமாற்றம் சர்வதேச நாணய நிதியத்தால் நிர்வகிக்கப்பட்டு சவரின் ரேட்டிங்(souverign rating) என்னும் அலகினால் நிர்ணயிக்கப்பட்டு கொடுக்கல் வாங்கல்கள் தீர்க்கப் படுகின்றன.ஆகவே ஒரு மத்தியவங்கியோ அல்லது பொருளாதார, நிதிக் கொள்கைகளயோ ஏற்படுதுவதற்கும் நிர்வகிப்பதற்கும் சர்வதேச ரீதியிலான இறமை என்னும் அங்கீகாரம் அவசியமாகிறது. அல்லது இன்னொரு நட்பு நாடொன்றினூடாக இதனை அந்த நாட்டு இறமையினூடாகவும் நடைமுறைப் படுத்தலாம்.அதாவது அந்த நாட்டுடன் ஒரு உடன் படிக்கயின் கீழ் நாம் எமது நாணயப் பெறுமதியை அந்த நாட்டு நாணய்த்திற்கு ஒரு நிர்ணயித்த பெறுமதியின் அடிப்படயில் கொடுக்கல் வாங்கல்களைச் செய்யலாம்.

மேலும் வங்கிகள் தாம் வாங்கும் நாணயங்களை ஈற்றில் மதியவங்கியினூடாகவே கொடுக்கல் வாங்கல்களைச் செய்ய வேணும்.அப்போதே மத்திய வங்கி தனக்கு அந்த நாட்டில் இருக்கும் இறமை என்னும் அதிகாரத்தைக் கொண்டு விலயை நிர்ணயிக்கிறது.மத்தியவங்கி தான் தோன்றித் தனமாக இதனைச் செய்ய முடியாது ,காரணம் அது அந்த நாட்டின் நிதி மற்றும் பொருளாதார நிலமைகளுக்கு ஏற்பவே செயற்பட முடியும்.அவ்வாறு செய்யாமல் அது அதிகப் படியானா உள்ளூர் நாணயங்களை அச்சடித்தாலோ அது விலைவாசியைக் கூட்டி,அந்த நாணயத்தின் சர்வதேச ரீதியான பெறுமதியைக் குறைத்து விடும்.இது அந்த நாட்டின் சவரின் ரேட்டிங்கில் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

மொத்ததில் நாம் எமது கட்டுப் பாட்டுப் பகுதியில் ஒரு விலையை நிர்ணயித்தாலும் சர்வதேச ரீதியாக பணப் பரிமாற்றம் செய்வது சர்வதேச முறமைகளுக்கு அமைவாக என்றால் அது சிறி லங்கா மத்திய வங்கிக் குள்ளாகவே அமையும்.ஆனால் அவ்வாறல்லாமல் இலங்கயில் உள்ள அன்கீகரிக்கப்பட்ட வங்கி நடைமுறைகளுக்குள்ளாக காசை அனுப்பாவிட்டால் அது இலங்கை அரசாங்கத்திற்கு நேரடியான அன்னியச் செலாவணியாகக் கிடைக்காது.ஆனால் எமது கட்டுப் பாட்டுப் பிரதேசத்தில் இன்றும் நாம் இலங்கை அரசாங்கத்தின் நாணயத்தைப்பயன்படுதுவதால் நாணயப் பரிமாற்றம் இலங்கை ருபாவில் நிகழும் போது அது மறைமுகமாக இலங்கை அரசாங்கத்தின் நாணயமான ரூபாவைப் பலப்படுதுகிறது.

ஆகவே எமது நாணயப் பரிமாறத்தை நாம் கட்டுப் படுத்த எமக்கு ஒரு நாணயம் முதலில் அவசியம்,அத்தோடு சர்வதேச ரீதியாக அதனை மாற்றவும் எமது இறமை சார்ந்த சவரின் ரேட்டிங்க்கை ஏற்படுத்தவும் சர்வதேச உடன்படிக்கை அங்கிகாரம் வேண்டும்.அல்லது இன்னொரு நாட்டு நாணயத்துடன் எமது நாணயத்தை(dependent currency ) ஒருங்கிணைப்பதால் நாம் எமது இறமையை அந்த நாட்டிற்கூடாகப் பெற்றுக் கொண்டு,சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபடலாம்.

இவயே நான் விளங்கிக் கொண்டவை,மேலும் யாருக்காவது விளக்கம் இருந்தால் அறியத் தரவும்.

அருவி எழுதியது:

மற்றும் வெளிநாட்டு நாணயமாற்று விகிதத்தினை யாரும் வெளியிட முடியாது. யாராயினும் வைத்திருக்க முடியுமே தவிர யாரும் வெளியிட முடியாது. அத மத்திய வங்கியினால் வெளியிடப்படுகிறது. 2000ம் ஆண்டிற்கு கிட்டிய ஆண்டு ஒன்றில் (ஆண்டை தெளிவாக குறிப்பிட முடியவில்லை) மத்திய வங்கி வெளிநாட்டு நாணயங்களைக் கட்டுப்படுத்தும் பணியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டுள்ளது. அதாவது அன்றிலிருந்து அமெரிக்க நாணயத்தின் சந்தைப் பெறுமதியைக் கொண்டு நாணய மாற்று விகிதம் கணிக்கப்பட்டு மத்திய வங்கியினால் வெளியிடப்படுகிறது.

தமழீழ வங்கி வெளியிட்டுள்ளதாக இருவிழி எழுதிய கருத்திற்கு தான் நான் பதில் எழுதியுள்ளேன். அன்றைய நாணய மதிப்பீட்டை மத்திய வங்கி அறிவிக்க அவற்றையே மற்றவர்களும் அறிவிக்கின்றனர். ஒரு விடயம் கட்டித் தொங்கவிடப்பட்டால் அது ஒரு அறிவிப்பே. அந்த அறிவிப்பை வெளியிடுகின்றனர் என்ற அடிப்படையிலேயே அதை எழுதியுள்ளேன். அப்படித் தமிழில் திருத்தம் செய்ய முயற்சிப்பதென்றால் இருவிழி எழுதிய தமிழீழ வங்கி வெளியிட்டுள்ளதே என்பதையே சுட்டிக்காட்டியிருக்கலாமே. விடயத்தைவிட யார் எழுதினார் என்பது தான் உமக்கு முக்கியமாகப் போய்விட்டது.

வசம்பு இங்கு யார் கருத்து எழுதினார்கள் என்று பார்த்து அவர்களிற்கு ஏற்றதுபோல் கருத்து எழுத வேண்டிய அவசியம் இதுவரை ஏற்படவில்லை. உங்களிற்கு தமிழ் படிப்பிக்க அத்தகவல் எழுதப்படவில்லை.நீங்கள் ஏதோ எண்ணிக்கொண்டு எழுதுவதற்கெல்லாம் பதிலெழுத முடியாது. மற்றவர்களை கருத்து வைக்கும் போது சிந்தித்து கருத்து வைக்குமாறு கோரும் நீங்கள் இந்த சின்னவொரு விடயத்திற்கு இவ்வாறு கூறுவதன் காரணம் புரியவில்லை(ஊருக்கு உபதேசம் ........ :wink: :lol: ) தெரியாத ஒரு விடயத்தை ஒருவர் கேட்கும் போது அது பற்றிய சரியான தகவலை அளிக்கவேண்டிய பொறுப்பு அதற்கு பதில் எழுதுவபரிற்கு இருக்க வேண்டும். அவ்வாறு எழுதப்படும் பதிலில் தவறு நேருமாயிருந்தால் அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் வேண்டும். அவ்வாறு இல்லை நான் சொல்வதுதான் சரி என்று பிடிவாதம் பிடிக்கும் பழக்கம் எமக்கு இல்லை. நீங்கள் கூறியதில் ஓர் கருத்துப்பிழை இருந்தது. அதை சுட்டிக்காட்ட வேண்டிய தேவையும் இருந்ததனால் அதனை சுட்டிக்காட்டினேன்.

அதிலும் நான் எழுதிய பதிலின் முதற்பந்தியில் உங்கள் பதிலிற்கான விளக்கம் தான் அளித்திருந்தேன். அடுத்த பந்தியிலேயே நாணய மாற்று விகிதம் பற்றிய எனது அறிவிற்கு எட்டியவற்றைக் கூறியிருந்தேன். என்னைத் தொடர்ந்து கருத்துப் பகிர்ந்திருக்கும் நாரதரின் கருத்தின் மூலமும் தெளிவு பெறவில்லையெனின் உங்களிற்கு எவ்வாறு தெளிவுபடுத்துவது என்பது எனக்குப் புரியவில்லை. எதற்கும் நானும் நீங்களும் எழுதியவற்றை மீண்டும் படித்துப் பாருங்கள்.

இருவிழி:

நீங்கள் எவ்வித விளக்கமும் இல்லாமல் வெறும் வீம்புக்காகவே எழுதுகின்றீர்கள் என்பது நன்கு புரிகின்றது. அதனால் சாத்தியமில்லை என்பதைப் பற்றிய விளக்கத்தையும் மற்றும் நாணய மாற்றுப் பட்டியல் பற்றிய தங்களின் வினாவிற்கும் விடையையும் தருகின்றேன்.

1) வெளிநாட்டிலிருந்து இன்னொரு நாட்டின் எந்த வங்கிக்கு பணம் அனுப்பினாலும் முதலில் அந்நாட்டின் மத்திய வங்கிக்குத் தான் பணம் சென்றடையும். பின்பு அந்தப் பணத்தை குறிப்பிட்ட அந்த வங்கிக்கு ( அரசினால் அங்கீகரிக்கப்பட்ட வங்கியாயின் ) மத்திய வங்கி அனுப்பி வைக்கும்.

2) நாணைய மாற்றுப் பட்டியலை யார் வேண்டுமானாலும் வெளியிடலாம். நீங்கள் இலங்கையில் சில தனியார் கடைகளிலும் நாணைய மாற்றுப் பட்டியல் வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவர்களிடம் நீங்கள் வெளிநாட்டு நாணயங்களை கொடுத்து இலங்கை நாணயத்தை பெற்றுக் கொள்ள முடியும். அதுபோல் தற்பேர்து தமிழீழ வைப்பகம் நாணைய மாற்றுப் பட்டியலை வெளியிட்டு இருப்பதன் நோக்கமும் அவர்களிடமும் நீங்கள் அங்கு செல்லும் போது வெளிநாட்டு நாணயங்களை மாற்றிக் கொள்ள முடியும் என்பதற்காகவே.

தற்போது உங்களுக்கு போதிய விளக்கம் கிடைத்ததா ??

கடந்த வருடம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட பாதுகாப்பான வங்கிகளில் தமிழீழ வங்கியும் உள்ளடக்கப்பட்டிருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. ஆனால் தமிழீழ வங்கி ஒரு நாட்டில் பதிவுசெய்யப்பட்ட வங்கியல்ல. அது தமிழீழ நிழழரசாங்கத்தின் தேசிய வங்கியாகச் செயற்படுகிறது. எந்த வொரு வங்கிக்கும் வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்ப வேண்டியிருந்தால் அது ஒரு நாட்டில் பதியப்பட்டிருக்கவேண்டும். அதாவது ஒரு நாட்டின் சட்டதிட்டங்களிற்கு ஏற்ப அது ஒரு வங்கியாக கணிக்கப்படவேண்டும். நீங்கள் இலங்கைக்கு எவ்வகையினால் பணம் அனுப்பினாலும் அதனால் இலங்கை அரசாங்கம் வரி அறவிடுகிறது. உண்டியலில் அனுப்பினாலும் சரி வங்கிமூலம் அனுப்பினாலும் சரி. இன்று இலங்கைக்கு வெளிநாட்டு செலவானியைப் பெற்றுத்தருபவர்களாக தமிழர்களே இருக்கிறார்கள்.(மலையகத்தில் பெருந்தோட்டங்களிலும் தமிழர்கள், புலம் பெயர்ந்து இல்கைக்கு பணம் அனுப்புவர்களும் தமிழர்கள்:P) :idea:

மற்றும் வெளிநாட்டு நாணயமாற்று விகிதத்தினை யாரும் வெளியிட முடியாது. யாராயினும் வைத்திருக்க முடியுமே தவிர யாரும் வெளியிட முடியாது. அத மத்திய வங்கியினால் வெளியிடப்படுகிறது. 2000ம் ஆண்டிற்கு கிட்டிய ஆண்டு ஒன்றில் (ஆண்டை தெளிவாக குறிப்பிட முடியவில்லை) மத்திய வங்கி வெளிநாட்டு நாணயங்களைக் கட்டுப்படுத்தும் பணியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டுள்ளது. அதாவது அன்றிலிருந்து அமெரிக்க நாணயத்தின் சந்தைப் பெறுமதியைக் கொண்டு நாணய மாற்று விகிதம் கணிக்கப்பட்டு மத்திய வங்கியினால் வெளியிடப்படுகிறது. :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ வைப்பகத்தில் சேமிப்பு கணக்கில் வைப்பிலிடும பணத்திற்கு;; 6 வீதம் வட்டி வழங்குகிறார்கள்.

கள உறவுகளுக்கு வைப்பிலிடும் நோக்கமிருந்தால் அதற்குரிய வழிகளை ஏற்படுத்தலாம்.

  • 2 months later...

தமிழீழத்தின் பொருளாதார நடவடிக்கைகள் சிறீலங்கா ரூபாய்களில் நடைபெறும் வரை புலத்திலிருந்து அனுப்பப்படும் பணம் அனைத்தும் அன்னியச் செலாவணியாக சிறீலங்காவிற்கு வலுச்சேர்க்கிறது. இது தற்பொழுது ஒரு தவிர்க்க முடியாத பக்க விழைவு. புலத்திலிருந்து செல்லும் பணம் வெளிநாட்டு நாணயமாக தமிழீழ பிரதேசத்துக்குள் செல்வதை ஊக்குவிக்க வேண்டும். தற்பொழுது பலர் தென்னிலங்கையில் மாற்றிச் செல்கிறார்கள். இதை முற்றாக தவிர்த்தால் எமது நடவடிக்கைகளால் தமிழீழ வைப்பகத்திற்கு அதிக பொருளாதார அதிகாரம் கிடைக்கும்.

அதாவது சிறீலாங்காவிற்கு அன்னியச் செலாவணியாக மாறுவதை தவிர்க்க முடியாது ஆனால் அதை எமது கட்டுப்பாட்டிலுள்ள நிர்வாக கட்டமைப்பினூடாக ஒருமித்துச் செய்தால் அதை எமக்கு சாதகமாகவும் மாற்றிக் கொள்ளலாம். இது இடைநிலை தீர்வாக இருக்கும்.

தமிழீழ வைப்பகத்தின் விரிவாக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் அதன் பொருளாதார வலு சிறீலங்கா ரூபாயின் பெறுமதியை நிர்ணயிக்கும் சிறீலாங்கா மத்திய வங்கியின் பங்காளியாக மாற்றும். தமிழீழ வைப்பகம் நாணயமாற்றுச் சேவையை ஆரம்பித்து உலகின் முக்கிய நாணயங்கள் பற்றிய ஆய்வுகளை நடத்தி அதன் பொறுமதியை அவதானிக்கும் பிரிவை உருவாக்க வேண்டும். சிறீலங்கா ரூபாயின் volatility கட்டுப்படுத்த அது உதவும்.

கிராமிய அபிவிருத்தி வங்கி என்று ஒன்றும் உள்ளது. அது சுய தொழில் ஊக்குவிப்பு கடனுதவிகளை வழங்கிறது, பள்ளிச் சிறுவர்களிடைய சேமிப்பு பழக்கங்களை ஊக்குவிக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ வைப்பகத்தில் சேமிப்பு கணக்கில் வைப்பிலிடும பணத்திற்கு;; 6 வீதம் வட்டி வழங்குகிறார்கள்.

கள உறவுகளுக்கு வைப்பிலிடும் நோக்கமிருந்தால் அதற்குரிய வழிகளை ஏற்படுத்தலாம்

ஹிஹி.. போகும் வரைக்கும் வீட்டையே புலிகளின்ர கையில குடுக்க பின்னிற்கிறவை.. நல்லாத்தான் காசைக் குடுப்பினம்..

ஈழமகன் எல்லாரும் வாசிக்கக்கூடிய முறையில் எழுதுவதில் சிக்கல்கள் இருக்கா?

www.bankoftamileelam.net

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.