Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழர்கள் அமைப்பு அன்பளிப்பு

Featured Replies

யாழ்.ஆஸ்பத்திரிக்கு இதய இயக்கிகள் உட்பட ரூ.60 லட்சம் பெறுமதியான உபகரணங்கள் புலம்பெயர் தமிழர்கள் அமைப்பு அன்பளிப்பு

5446aefb06341be326c6eba529fb8e0a.jpg

யாழ்.போதனா வைத்தியசாலை இருதய சத்திர சிகிச்சைப் பிரிவுக்கு 60 இலட்சம் ரூபா பெறுமதியான நிரந்தர இருதய இயக்கி மற்றும் உபகரணங்கள் நேற்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி பவானி பசுபதிராஜா தெரிவித்தார்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழர்களின் அமைப்பான சுகாதார அமைப்பு அவற்றை வழங்கியுள்ளது. இதன்மூலம் இருதய நோயாளிகள் பயனடைவர் என்று போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சை நிபுணர் பூ.லக்ஷ்மன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: இந்தச் சத்திர சிகிச்சையின்போது ஒருவருக்கு மட்டும் பொருத்தப்படும் இதய இயக்கியின் பெறுமதி மூன்று லட்சம் ரூபாவாகும். இந்த அமைப்பின் உதவியின் மூலம் 20 பேருக்கு இங்கு சிகிச்சையளிக்கமுடியும்.

நிரந்தர இதய இயக்கி பொருத்தும் சிகிச்சை முறை யாழ்ப்பாணத்தில் போதனா வைத்தியசாலையில் 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 64 பேருக்கு அந்தச் சிகிச்சை அளிக்க சுகாதார அமைச்சு உதவியிருந்தது. ஆனால் இன்று வரை 70 இதுக்கும் மேற்பட்டோருக்கு அவ்வாறு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் செலவிலேயே அவர்களுக்கான இந்த நிரந்தர இதய இயக்கி கொள்வனவு செய்யப்பட்டு வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மூலம் பொருத்தப்படுகின்றது. தற்போது 20 பேருக்கு சிகிச்சையளிக்க இந்த அமைப்பு உதவி செய்துள்ளது என்றார் வைத்திய நிபுணர் லக்ஷ்மன்.

http://184.107.230.1...328679702248189

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு செய்தி

இதை முன்நின்று செய்துமுடித்தவர்களை வாழ்த்தி வணங்குகின்றேன்

உதவியவர்களுக்கு நன்றிகள்.

  • தொடங்கியவர்

ஒரு நியாயமான அரசியல் தீர்வை சிங்களம் தரும்பொழுது இவ்வாறான உதவிகள் அதிகளவில், பரந்துபட்டு மேற்கொள்ளப்படும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவமனை நடத்தும் சிங்கள அரசு மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுக்காதோ? கே.பி. முன்னாள் போராளிகளுக்கு உதவுங்கள் என்று கேட்கும் போது குய்யோ முறையோ என்று கத்துபவர்கள் எங்கே போய்விட்டீர்கள்?

கே.பி. உதவுமாறு கேட்கின்ற போது பணத்தினை கொடுத்தால் சிங்கள அரசு எடுத்துவிடும் என்றால் அந்த முன்னாள் போராளிகளுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் பொருள் உதவியாக ஏதும் செய்யலாமே.

யாவற்றுக்கும் மனம்தான் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலன்

கேபி மூலமாகச்செய்யவேண்டாம் என்று என்றுமே சொல்லவில்லை. செய்பவர்கள் செய்யுங்கள்

எங்களுக்கு வேறு வழிகள் இருக்கின்றன.

யார் குற்றியும் அரிசியானால் சரி என்பதுதான் எனது கொள்கை

பிரான்சிலிருந்து கொழும்பு சென்று முதன்முதலில் கேபியைச்சந்தித்து திரும்பியவர் எனது நண்பர்தான். அவரும் என்னிடம் உதவி செய்யுங்கள் என்று கேட்டபோது இப்படித்தான் சொன்னேன். அவர் அதை மதித்தார். இன்றும் நண்பர்களாகவே இருக்கின்றோம்.

  • தொடங்கியவர்

அமெரிக்காவில் புலிகள் மீது உள்ள தடையை சிங்களம் அகற்றினால் அமெரிக்க மக்கள் உதவலாம்.

1. அமெரிக்காவில் உள்ள உறவுகள் மேலே உள்ள பெரிய மருத்துவ உதவியை

செய்துள்ளனர். அங்கே விடுதலைப்புலிகள் இன்றும் தடை செய்யப்பட்ட அமைப்பு

2.. கே.பி., இன்றும் விடுதலைப்புலிகளின் தலைவராகவும், சர்வதேச காவல்துறையாலும் தேடப்படும் ஒருவராக உள்ளார். அவர் மூலமாக அமெரிக்காவில் வாழ்பவர்கள் பகிரங்கமாக உதவ முடியாது என எண்ணுகிறேன்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் புலிகள் மீது உள்ள தடையை சிங்களம் அகற்றினால் அமெரிக்க மக்கள் உதவலாம்.

1. அமெரிக்காவில் உள்ள உறவுகள் மேலே உள்ள பெரிய மருத்துவ உதவியை

செய்துள்ளனர். அங்கே விடுதலைப்புலிகள் இன்றும் தடை செய்யப்பட்ட அமைப்பு

2.. கே.பி., இன்றும் விடுதலைப்புலிகளின் தலைவராகவும், சர்வதேச காவல்துறையாலும் தேடப்படும் ஒருவராக உள்ளார். அவர் மூலமாக அமெரிக்காவில் வாழ்பவர்கள் பகிரங்கமாக உதவ முடியாது என எண்ணுகிறேன்.

கே.பி. என்கிற தனிநபரின் பெயருக்கு பணமோ காசோலையோ அனுப்பத் தேவையில்லையே. அவர் நடத்துகின்ற நெர்டோ அமைப்பின் ஊடாகவோ அல்லது பிறர் நடத்திக் கொண்டிருக்கக் கூடிய அமைப்புக்கள் ஊடாக அனுப்பலாமே.

மீண்டும் தெளிவாகக் கூறுகின்றேன். போருக்கு முண்டுகொடுத்த வன்னி மக்களுக்கும் கைவிடப்பட்ட முன்னாள் போராளிகளுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் உதவுங்கள்.

அண்மையில் கிளிநொச்சி, யாழ். சென்று வந்த நண்பர்கள், கிளிநொச்சி நகரில் சிறார்கள் கையேந்தி பிச்சை கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை அறிந்து மிகவும் வேதனையாக இருந்தது.

  • தொடங்கியவர்

நிர்மலன்

கேபி மூலமாகச்செய்யவேண்டாம் என்று என்றுமே சொல்லவில்லை. செய்பவர்கள் செய்யுங்கள்

எங்களுக்கு வேறு வழிகள் இருக்கின்றன.

யார் குற்றியும் அரிசியானால் சரி என்பதுதான் எனது கொள்கை

பிரான்சிலிருந்து கொழும்பு சென்று முதன்முதலில் கேபியைச்சந்தித்து திரும்பியவர் எனது நண்பர்தான். அவரும் என்னிடம் உதவி செய்யுங்கள் என்று கேட்டபோது இப்படித்தான் சொன்னேன். அவர் அதை மதித்தார். இன்றும் நண்பர்களாகவே இருக்கின்றோம்.

ஆமென் !

ஐயா நிர்மலன் கேபி விடுதலைப்புலிகளின் வெளிநாடுகளிலுள்ள சொத்துக்களை தனது சிங்கள் எஜமானர்களுக்கு (கூட்டி ......) காட்டி கொடுக்கும் போது அதில் 10 வீதத்தை நெர்டோவிற்கு மாற்ற சொல்லுங்கள்.

ஏன் உதயன் இந்த அமைப்பின் பெயரை சரியாக குறிப்பிடவில்லை?

அமெரிக்காவைத் தளமாகக் கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழர்களின் அமைப்பான சுகாதார அமைப்பு அவற்றை வழங்கியுள்ளது

TRO இல்லை.

நாடு கடந்த அரசின் சுகாதார அமைச்சா இது?

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.