Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிசாசுகளின் இராச்சியம்

Featured Replies

பிசாசுகளின் இராச்சியம்

தமிழீழத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வன்னிப் பிரதேசம் அது. அங்கே ஓங்கி உயர்ந்த பல வகைமரங்கள். அவற்றுக்கிடையே பல விழுதுகள் தாங்க, பரந்து, விரிந்த கிளைகளைத் தாங்கிய பல ஆலமரங்கள். ஆலமரங்களிலே கூடு கட்டி, உள்ளாசமாக கொஞ்சிக் குலாவி வாழும்; குருவிக் கூட்டங்கள். மரத்துக்கு மரம் தாவும் மந்திக் கூட்டங்கள். மரங்களுக்கிடையே துள்ளி ஓடும் மான் கூட்டம். சுழண்டாடும் மயில் கூட்டம். மந்தைகள் எங்கும் பரந்து மேயும். முல்லையும் மருதமும் இணைந்து வளங் கொழிக்கும். இப்பிரதேசம், 2009 மே மாதம் 18ம் திகதி, புகைமண்டலமாகக் காட்சி அளித்தது. அங்கே என்ன நடந்தது? அங்கே வாழ்ந்த மக்களுக்கு என்ன நேர்ந்தது? என, ஒருவராலும் அறிய முடியவில்லை. சிலநாட்களுக்குப்பின், அப் பகுதியை முற்று முழுதாக மூடிக்கிடந்த புகைமூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டிருந்தது. இதன் ஊடாக அங்கே நடந்த சில நிகழ்ச்சிகள் கண்ணுக்குப் புலப்படக்கூடியனவாக இருந்தன.

எங்கு பார்த்தாலும் ஆக்கிரமிப்பின் அட்டூழியச் செயல்கள்தான் புலப்பட்டன. செடி கொடி, மரங்கள், வீடுகள், தோட்டங்கள், வழிபாட்டுத் தலங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் எல்லாம் அழிக்கப்பட்டு, நெருப்பூட்டப்பட்டு கிடந்தன. சில இடங்களில் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. சில இடங்களில் எரிந்தும் எரியாததுமாக நின்ற மரங்களில் இருந்து தீப்பிழம்புகள் வெளியேறிக்கொண்டிந்தன. சில இடங்களில் இடிபாடுகளுக்கிடையில் இருந்து புகை கிளம்பிக்கொண்டிருந்தது. சிலபகுதிகள் சாம்பல் மேடாகக் காணப்பட்டன. அச் சாம்பல் மேடுகளுக்கு இடைக்கிடையே நெருப்புத் தணல்கள் மின்னி மின்னி, பார்ப்பதற்கு பயத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தன. மேலும் கூர்ந்து நோக்கினால், எரிந்தும் எரியாத நிலையில் பிணங்கள் குவியலாகவும் தனித்தனியாகவும் பரந்து கிடந்தன. மனிதன் வளர்த்த மிருகங்களும் பறவைகளும் கூட, அவற்றுடன் இறந்துபோய்க் கிடந்தன. வேறொரு மூலையில், இடிபாடுகளுக்கு இடையில் இறந்து கிடந்த ஒரு பெண்ணின் மார்பில் வாய் வைத்தபடி ஒரு குழந்தையும் கிடந்தது.

உலகம் இதற்குமுன் நேரடியாகப் பார்;த்திருக்க முடியாத கோரக் காட்சிகளுக்கு நடுவே பல பிசாசுகள், இரத்த வெறி தீராமல் அப் பகுதி எங்கும் அலைந்து திரிந்தன. உயிர் தப்பி, ஏதும் கிடக்குமா? என்ற சந்தேகத்தில் பிரேதங்களை ஒவ்வொன்றாகப் பிரட்டிப் பார்த்தன. கண்ணுக்குத் தெரிந்த, குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்தவற்றைக் கொன்று குவித்து, இரத்தம் உறிஞ்சி, இறுமாப்புடன,; ஆங்கிலப்படத்தில் வரும் 'கிங்கொங்" குரங்குபோல் வெறியுடன் திரிந்தன. அவற்றின் பற்களுக்கு நடுவே மனிதச் சதைகள் தொங்கிபடி கிடக்க, நாக்கிலிந்து இரத்தம் சொட்டச் சொட்ட, பெரிய சத்தத்துடன் ஏக்காளமிட்டுச் சிரித்துக்கொண்டு, இறுமாப்புடன் உடலங்களை மிதித்தவாறு, ஒன்றன்பின் ஒன்றாக அவை நகர்ந்து கொண்டிருந்தன.

பிசாசுகளின் சொந்தக்காரன் அதைப்பார்த்து ரசித்தவண்ணம் மகிழ்சி வெள்ளத்தில் துள்ளிக் குதித்தான். தான் கண்ட காட்சிகளை மற்றவர்கள் காணக்கூடாதென செயற்கையாக புகைபோட்டுத் தடுத்துக்கொண்டிருந்தான். பிசாசுகளின் சொந்தக் காரனுக்கு துணைநின்ற மந்திரவாதிகளில் மூவர், தாங்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்தது கைகூடிய நிலையில் உள்ளத்தில் உவகை பொங்கித்துள்ள, தங்களுக்குள்ளேயே பேசி, மகிழ்ந்துகொண்டு, அதை மற்றவர்கள் அறியாவண்ணம் பூசிமொழுகிக்கொண்டிருந்தார்கள். அவர்களைச் சேர்ந்த மாயமான் ஒன்று, பிசாசுகள் பக்கம் சேர்ந்து பிசாசுகள் சார்பாகவே செயல்பட்டது. இதனால் மேலும் உற்சாகமடைந்த பிசாசுகள், மந்திரவாதிகளின் கட்டுப்பாட்டை மீறி, கட்டுக்கடங்காமல் புதுப்புது உருவங்கள் எடுத்துக் கொண்டு துள்ளிக் கூத்தாடின. நான் அதைச் செய்தேன், நான் இதைச் செய்தேன் என்று ஒவ்வொன்றும் பெருமை பேசிக்கொண்டன.

பிசாசுகளின் கூத்துக்களையும் அட்டகாசங்களையும் கண்ட பிசாசின் சொந்தக்காரன் ஒரு சிங்கமாக மாறி, முதுகை நிமிர்த்தி, சிலிர்த்துக்கொண்டு நடைபயின்றான். அப்போது ஏற்கனவே கண்ட குழந்தை தள்ளாடித் தள்ளாடி நடந்து கொண்டிருந்தது, அதைக் கண்ட அந்த சிங்கம் அக் குழந்தையின் தலையைக் கௌவிக் கொன்றபின் அதன் உடலைச் சிதைத்து எறிந்தது. இதனைப் பார்த்த மந்திரவாதிகள் மூவர், புன்முறுவல் பூத்து, தாங்களும் சிங்;கங்களாக மாறி, அதனுடன் சேர்ந்து குதுகாலித்தார்கள். பிசாசின் சொந்தக்காரனும் மந்திரவாதிகள் மூவரும் சிங்கங்களாக மாறியதைப் பார்த்த மற்றொரு மந்திரவாதி, சிங்கங்கள் ஒன்று சோர்ந்தால் தனக்கு பாதிப்பு வந்துவிடக் கூடும் எனக் கருதி, 'ராக்கனாக" மாறினான். ஏனைய சில மந்திரவாதிகள் கழுகுகளாகவும் வேறு சில மிருகங்களாகவும் பல வடிவங்கள் எடுத்தன.

பிசாசுகள் ஏற்கனவே பலமுறை நரபலி எடுத்து, இரத்தம் குடித்து, ருசிகண்ட இரத்தப் பிசாசுகள் என்பதை மறந்த ஏனைய மந்திரவாதிகளுக்கு மனதிற்குள் ஒரு அச்சம் ஏற்பட்டது. தாங்கள் உசுப்பிவிட்ட பிசாசுகள் தங்களுக்கு எதிராக எழும்பி, தங்களையே அடித்தால் என்னாவது? என்று சிந்தித்தார்கள். அதனால் தாங்கள் இரகசியமாக, மாயக் கண்ணாடியால் பார்த்தவற்றை மற்றவர்களுக்கும் காட்டி, மந்திரக் கோல்களையும் மந்திரப் புத்தகங்களையும் கையில் தூக்கி, பிசாசுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தார்கள். அது முடியாமல் போகவே, மந்திரவாதிகளின் கூட்டணியில் இதை விசாரிக்க வேண்டுமென முடிவெடுத்தார்கள். அப்போது மந்திரவாதிகளின் மந்திரி, நரிபோல் பதுங்கிப் பதுங்கிக் கொண்டிருந்தான். அவன் அனுப்பிய மாயநரியும் பிசாசுகளுக்குத் துணையாக நின்று மக்களைக் கொன்றபின் மறைந்தது. இதனால் மந்திரவாதிகளுக்கிடையே சச்சரவு ஏற்பட்டது.

அப்போது சிங்கமாக மாறிய பிசாசுகளின் சொந்தக்காரன் அமைதியானான். தனது பிசாசுகள் எல்லாம் நல்லவை. அவை பால்தான் குடிக்கும் இரத்தம் குடிக்காதென்றான். அதற்கு பிசாசுகள் வளர்த்தவனின் பக்கத்து வீட்டுக்காரரான, மூன்று சிங்கங்களாக மாறிய மந்திரவாதிகள், ஒத்தாசை வழங்கி ஆமாப்; போட்டார்கள். இறுதியில் பக்கத்து வீட்டுக்கார மந்திரவாதிகளைச் சேர்ந்தவர்களையும் பிசாசுகள் பதம் பாhர்த்தன. இதனைப் பார்த்தும் சிங்கங்களாக மாறிய மூன்று மந்திhவாதிகளும் மௌனமாக நின்றார்கள். அதன்பின் பிசாசுகளை வளர்த்தவன், 'றக்;கனாக" மாறிய, மந்திரவாதி பக்கம் சேர்ந்தான். 'றக்கன்"; தனது நீண்ட உடலை நெளித்து எல்லாச் சிங்கங்களையும் வளைக்க முயற்சித்தபோது, தனிச் சிங்கம் றக்கனுடன் இணைய, சிங்கங்களாக மாறிய மூன்று மந்திரவாதிகளும் ஏங்கித் தவித்தார்கள். 'பிள்ளையார் பிடிக்க குரங்காகப் போச்சே" என்றெண்ணிய அவர்கள், ஏனைய மந்திரவாதிகளுடன் கலந்தாலோசித்தார்கள். இதனால் அவர்களும் உசார் அடைந்தார்கள். பிசாசுகள் எல்லாம் சேர்ந்து இராச்சியம் அமைத்தால் தங்களுக்கும் ஆபத்து ஏற்படும் என்று எண்ணி, பிசாசுகளின் சொந்தக்காரரிடம், ''பிசாசுகள் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும் இல்லையேல் கழுவேற்றப்படும்"" என்றார்கள். இதைக் கேட்ட பிசாசுள் ஆவேசமாகக் கத்திக் குழறி கூத்தாடின. அவற்றின் மந்திரவாதியும் மந்திரவாதிகளின் மந்திரியையே பயமுறுத்தினான். இதனால் கோபமடைந்த மந்திரவாதிகள் சிலரும் அவர்களின் மந்திரியும் மந்திரப் புத்தகத்தை கையிலெடுத்து, மெல்ல மெல்ல விரித்து, மந்திரத்தை உச்சாடனம் செய்தார்கள். இவ் உச்சாடனம் மக்களுக்கும் கேட்டது, உயிர் தப்பி வாழ்ந்த எஞ்சிய மக்கள், பிசாசுகள் ஓட்டப்படுமா? கழுவேற்றப்படுமா? என்ற சந்தேகத்தில் பயந்து பயந்து வாழத் தலைப்பட்டார்கள். இந் நிலையில் இயற்கையிலும் மாற்றம் ஏற்பட்டது. வானம் பொழிந்தது. எரிக்கப்பட்ட உடலங்களும் தாழ்க்கப்பட்ட உடலங்களும் அந்த நிலத்துக்கு உரமாக மாற, மரங்களும் செடிகளும் மீண்டும் தளிர் விட்டன. காத்திகைக் கொடிகளும் முகிழ்ந்தன. தப்பித்; தவறி எஞ்சிய, குருவிக் குஞ்சுகள் வசந்தத்தை நோக்கிச் சிறகடிக்கத் தயாராகின.

ஆம்!

2009 மே மாதம் 18 ந் தகதி என்னாலும் மறக்கமுடியாத ஒரு நாள் .

அன்பானவர்கள் தொலைந்து போன கொடிய நாள்-

ஆதரவற்று அனாதைகள் பலர் உருவான நாள்

திக்கற்ற மானிடம் திகைத்த ஓர் நாள்.

அருமையான ஒரு உருவகத்தை தந்நிருக்கின்றீர்கள் செம்பகன் . ஒரு உருவகத்தைச் சொல்வதற்கு தனித்திறமை வேண்டும் . அது எல்லோராலும் முடியாது . ஆனால் ,உங்களுக்கு கைவந்திருக்கின்றது . வாழ்துவதோடு இரண்டாவது பச்சை போட்டுள்ளேன் :) :) :) .

  • தொடங்கியவர்

உங்கள் பாராட்டுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு உவமானக் கதையைத் தந்ததற்கு நன்றிகள், செண்பகன்!

இதில் மறைத்திருக்கும் உண்மை என்னவெனில், பிசாசுகளுக்கும், பிசாசுகளை உசுப்பேத்தியர்வர்களுக்கும் குருவிகள் தேவை!

பல பிரச்சனைகளைக் குருவிகளின் தலையில் கட்டிவிட்டுப் பிசாசுகளின் தலைவர்கள் தப்பி விடுவது வழக்கம்!

இப்போது தான் பிசாசுகள் 'குருவிகளின்' தேவையை உணருகின்றன!

குருவிகளைக் குருவிகளே விற்கும் நிலை மாறினால், குருவிகளுக்கு விடிவு நிச்சயம்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு உவமானக் கதை...பராட்டுக்கள் செம்பகன்..

  • 10 months later...
  • தொடங்கியவர்

chinnavan

Advanced Member

  • photo-thumb-8002.jpg?_r=1334342229
  • கருத்துக்கள உறவுகள்
  • bullet_black.pngbullet_black.pngbullet_black.png
  • 1,280 posts

  • Gender:Male

Posted Today, 04:54 AM

இன்றைய அரசின் தூர நோக்கற்ற தன்மை காரணமாக எதிர்காலத்தில் உலக வரைபடத்தில் இலங்கை என்ற பெயர் அழிக்கப்பட்டு அந்தப் பெயருக்குப் பதிலாக சீனாவின் “யங்கிங்“ மாகாணம் என அந்த இடத்தில் எழுதப்படும் என வடமேல் மாகாண சபை உறுப்பினரான ஜயந்த கன்னங்கர தெரிவித்துள்ளார்.

சீனாவின் இன்றைய தேவையானது இலங்கைக்கு உண்மையாக உதவ வேண்டும் என்பது அல்ல.. தனது பொருளாதாரத்தை மேம்படுத்தி அதன் ஸ்திரத்தன்மையைப் பேணுவதேயாகும்.

இன்றைய அரசாங்கம் இன்று சீனாவை முழுமையாக நம்பியே தனது ஒவ்வாரு அடியையும் முன்வைக்கிறது. இதேவேளை, மேற்குலக நாடுகள் இன்று இலங்கையைப் புறந்தள்ளி விட்டன. இவற்றுக்கு எல்லாம் காரணம் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையே என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  • 7 months later...
  • தொடங்கியவர்

மந்திரவாதி, சிங்கங்கள் ஒன்று சோர்ந்தால் தனக்கு பாதிப்பு வந்துவிடக் கூடும் எனக் கருதி, 'ராக்கனாக" மாறினான். ஏனைய சில மந்திரவாதிகள் கழுகுகளாகவும் வேறு சில மிருகங்களாகவும் பல வடிவங்கள் எடுத்தன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.