Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன்று ஸ்டார் 67

Featured Replies

இன்று கனடாவில் திரையிடப்படுகிறது ஸ்டார் 67

இன்று இல 300 Borogh Drive இல் உள்ள Cineplex தியேட்டரில்

நாம் உருவாகிய முழு நீளத்திரைப் படத்திற்கான vip காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது .

புலம்பெயர் சினிமாவின் வளர்ச்சிப்பாதையில் ஒரு முக்கிய வளர்ச்சிக்கட்டத்தை நாம் அடைந்துள்ளதாக நானும் எனது திரைப்பட குழு நண்பர்களும் நம்புகிறோம். எமக்கான ஒரு பலமான சினிமா அவசியம் என்பதை யாரும் மறுத்துவிட போவதில்லை .

எமது கதைகளை வேறு யாரும் எங்களை விட தத்ரூபமாக சொல்லிவிட முடியாது. வளமான ஒரு சினிமாவை நாம் அமைக்க உங்களின் முழுமையான ஆதரவினை எதிர்பார்த்து நிற்கிறோம். இன்றைய தொழில்நுட்பமானது உலக சினிமாவிற்கு மிக அருகில் எங்களை நிறுத்தியுள்ளது . இனி உலகம் அங்கீகரிக்கும் சினிமாவை உருவாக்கும் வேலை எமதானது . ஆனால் அந்த இமாலய முயற்சியானது உங்கள் அனைவரின் பங்களிப்பு இல்லாமல் சாத்தியமில்லை .

இந்த மடலில் சில வலைப்பின்னல் தொடர்புகளை அனுப்புகிறேன் அதன் மூலம் எங்களின் திரைப்படம் தொடர்பான தகவல்களை நீங்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். நீங்கள் புரிந்து கொண்டால் , அதை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துவதன் மூலம் புலம்பெயர் சினிமாவிற்கான ஒரு சந்தையை உருவாக்கும் சக்திவாய்ந்த கனவை அடைய உதவி செய்தவர்கள் ஆவீர்கள் .

இது தொடர்பான மேலதிக தகவல்கள் தேவையெனில் என்னை தொடர்புகொள்ளலாம். எனது தொலைபேசி இலக்கம் 647 -969 -6040 .

http://www.alaikal.com/news/?p=90222

  • தொடங்கியவர்

புலம்பெயர் பிரச்சினையை ஆராயும் 'STAR 67'

Wotar Sound Pictures இன் தயாப்பில் எதிர்வரும் 07-12-2011இல் கனடாவில் வெளிவருகின்றது ஸ்ரார் 67.

புலம்பெயர்ந்த எம்மவரிடையே பொதுவான பிரச்சினைகளில் ஒன்றே இலக்கமற்ற தொலைபேசி அழைப்புகள். இவ்விலக்கமற்ற தொலைபேசி அழைப்புகளினால் அல்லல்படும் ஒரு குடும்பத்தின் கதையே ஸ்ரார் 67.

முற்றுழுதாக கனடாவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் அனைத்துலகத்திற்கும் பொதுவான பிரச்சினையை ஆழ ஊடுருவி நிற்பது மெச்சத்தக்கது. இதன்மூலம் எங்கள் சமூகத்தின் சர்வதேசப் பிரச்சினையை கையிலெடுத்து தீர்வு கண்டிருக்கும் கதி.செல்வக்குமார் மற்றும் றைடன் வி.பாலசிங்கம் ஆகியோரின் சமூகப் பொறுப்புணர்வும் சமூகத்தின்மேல் குவிந்திருக்கும் அவர்களின் பரிந்துணர்வும் வெளிப்படும் திரைப்படமே ஸ்ரார் 67.

கனடாவில் ஏறக்குறைய நாற்பது திரைப்படங்கள் எம்மவர்களினால் தயாரிக்கப்பட்டிருந்த போதும் ஒருமுழுமையான திரைப்படத்திற்குரிய அம்சங்களை தாங்கிவந்தவை ஒரு சிலவே. எனினும் அவைகளாலும் மக்களின் கவனத்தை கவரமுடியவில்லை. ஏனையவை குறுந்திரைப்படங்களாகவும் பரீட்சார்த்த முயற்சிகளாகவுமே வெளிவந்திருந்தன.

இந்நிலையில் ஒரு முழுமையான திரைப்படத்திற்குரிய அனைத்து அம்சங்களையும் தாங்கி இன்றைய ஹொலிவூட்டின் நவீன தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது ஸ்ரார் 67.

கனடாவில் எம்மவன் திரைப்பட வரலாறு குழந்தைப் பருவத்தைக் கடந்து டீன்ஏஜ்(teenage) பருவத்தில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

அதற்கேற்ப இத்திரைப்படம் இளமையின் கனவுகளுடனும் அதற்குரிய வேகத்துடனும் நகர்ந்து செல்கிறது.

புலம்பெயர்ந்து புதிய இடத்தில் பதியம் வைக்கப்பட்ட எமது இளைஞர்கள் எப்படியாவது சாதித்துவிட துடிப்பதை அப்பட்டமான கதைவசனங்களுடன் காட்சிப்படுத்தி இருக்கும் ஸ்ரார் 67 எம்மவர் சிலரின் ஒருபக்க வாழ்க்கையை அப்படியே எங்களின் கண்முன்னே தருகின்றது.

இத்திரைப்படம் சமூகத்திற்கான படிப்பினையல்ல. சமூகத்தின் மீதான ஒரு பார்வையே. திரைப்படம் ஊடாக சாதிக்கத்துடிக்கும் கதி.செல்வக்குமாரின் தயாரிப்பில் வெளி வருகின்றது ஸ்ரார் 67.

கதி.செல்வக்குமார் இந்திய திரைப்படப்பாடலுக்கு அபிநயம் புரிந்த எம்மவரின் கனவுகளை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தியவர்.

1997இல் வெளிவந்த இவருடைய "மனோ ரஞ்சிதம்" எனும் பாடல்களின் ஒளித்தொகுப்பு முழுக்கமுழுக்க இவன் சொல்லாட்சியில் உருவான பாடல்களுடன் வெளிவந்திருந்தது. முற்றுழுதாக இந்தியதிரைப்பட பாடல்களை பிரதி செய்வதை தவிர்த்து பாடல், நடிப்பு, ஒப்பனை, ஒளிப்பதிவு, இயக்கம் என்பவற்றுடன் இந்திய இசையை மட்டுமே இணைத்து அவ்விசையை ஆழம் பார்த்த அளவுகோலாகவே "மனோரஞ்சிதம்" பாடல்தொகுப்பு அன்று வெளிவந்திருந்தது.

இந்திய இசையின் உயரத்தை அளந்து கொண்ட "மனேரஞ்சிதம்" பாடல்தொகுப்பின் பின் அதற்கும் சற்றும் குறையாத தரத்துடன் வெளிவந்தது இவருடைய இரண்டாவது பாடல்தொகுப்பான "முதல்நாள" பாடல்கள் வெளியீடாகும். பாடல்கள், நடிப்பு, ஒப்பனை, இயக்கம் இவைகளுடன் எம்மவர்களின் இசையினையும் இணைத்து முழுமையான ஒருதொகுப்பாக வெளிவந்திருந்தது "முதல்நாள்". கோடம்பாக்கத்தின் உயரத்தைத் தொட்ட இவ்விசைத்தொகுப்புகள் தந்த அனுபவத்துடன் இவரும் தனது அடுத்த பயணத்தினை ஆரம்பித்தார்.

குறுந்திரைப் படங்களில் காலடிவைத்த இவர் உபசாந்தி நிறங்கள் அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாள் என பதினாறு குறுந்திரைப்படங்களினை இவ்விடைக்காலத்தில் எழுதி இயக்கி தயாரித்துள்ளார். இவ்வாறு பதினாறும் தந்த பெருமையுடன் வாழ்ந்த இவன் நீண்டநாள் கனவின் வெளிப்பாடாக தயாராகி வெளிவருவது தான் ஸ்ரார் 67.

தொட்டுவிட்ட சிகரங்களை தூரத்தில் விட்டுவிட்டு புதியபுதிய சிகரங்களை தேடும் இவன் திரைப்பட கனவுகளிற்கு வானம் எலலையில்லை. அதற்கு அப்பாலும் பிரபஞ்சத்தை கடந்தும் ஏதோ ஒன்று? இந்த நிலையிலேயே ஹொலிவூட் சினிமாவின் தொழில் நுட்பங்களுடன் இவன் பரந்து விரிந்த கனவினையும் எம்கண்களின் முன்னால் கொண்டுவருகின்றது ஸ்ரார் 67.

இத்திரைப்படத்தின் திரைக்கதை இயக்கம் என்பவற்றை கதி.செல்வக்குமாருடன் இணைந்து உருவாக்கியவர் "றைடன்" வி. பாலசிங்கம் ஆவார். இலங்கையில் MTV எனப்படும் மகாராஜா தொலைக்காட்சி மற்றும் NEWS 1 என்பவற்றில் எடிட்டராக கடமையாற்றிய இவரே ஸ்ரார் 67 திரைப்படத்தின் படத்தொகுப்பினையும் மற்றும் சலனப்பொறியியலையும் முழுமையாக கையாண்டுள்ளார்.

இவரிடம் கைவரப்பெற்ற புதியபுதிய தொழில்நுட்பங்கள் இத்திரைப்படத்தினை முழுமையாக்குவதில் பெரும்பங்கை வகிக்கின்றன.

கதி. செல்வக்குமாரும் இவரும் இணைந்தது புலம்பெயர் சினிமாக்களிற்கு மட்டுமன்றி தமிழக சினிமாக்களிற்கும் சவாலாகியுள்ளதை உலகம் உணர்ந்துகொள்ள வெளிவரும் திரைப்படமே ஸ்ரார் 67.

புதினெட்டு நடிக நடிகையர் குறிப்பாக இமான் கண்ணன், ஹமில்ட்டன், "சத்தப்பண காய்" ரமேஸ் , கணபதி இரவீந்திரன், மலர்விழி, யசோதா என கனடாவின் புகழ்பெற்ற திரைமுகங்கள் போட்டிபோட்டு நடித்திருக்கும் அற்புதமான திரைப்படம் ஸ்ரார் 67.

இத்திரைப்படத்தின் ஒவ்வொரு பிரேமும் பார்ப்பவன் மனங்களில் பதியுமாறு ஒளிப்பதிவு செய்துள்ளார் கெமரா மேனாக கடமையாற்றி உள்ள குகேந்திரன்.

கனடாவில் பாடக ராக அறிமுகமாகி எல்லோரின் நெஞ்சங்களையும் தொட்ட "உணர்ச்சிப்பாடகர்" செந்தூரன் அழகையா இசையமைப்பாளராக உருவெடுத்திருக்கும் களமாக காட்சிதர வருகின்றது ஸ்ரார் 67.

Web Site: www.wotarsoundpictures.com

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.