Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொது மக்கள் உயிர்ச் சேதங்கள் பற்றி இன்னர் சிற்றி எழுப்பிய கேள்விகளுக்கு - நவனீதம்பிள்ளை பதிலளிக்க மறுப்பு! ஆனால் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென்றார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Navaneetham-Pillai150HH.jpg

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென நவனீதம்பிள்ளை பிள்ளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும் வரையில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளும் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கையும், ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையும் மனித உரிமைப் பேரவையில் விவாதிக்கப்படுவதனை தாம் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஏற்பட்ட பொது மக்கள் உயிர்ச் சேதங்கள் பற்றி எழுப்பிய கேள்விகளுக்கு, நவனீதம்பிள்ளை பதிலளிக்க மறுத்துவிட்டார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் பதவிக்காக இரண்டாது தடவையாக போட்டியிடும் திட்டம் தொடர்பான கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.co...&language=tamil

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை வெளியாகும்வரை நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் ஒத்திவைப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தனது இலங்கைக்கான விஜயத்தினை ஒத்திவைத்ததாக அறிவித்துள்ளார்.

இலங்கையின் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கண்டறிவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டதன் பின்னரே இலங்கைக்கான விஜயம் எப்போது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வாசிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இம்மாதம் அது நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/32360-2011-12-10-08-22-32.html

நம்பியார் போய்வந்த இடம்.

நவநீதம்பிள்ளை பிள்ளை பதவிக்காலத்தில் ஒருதடவையாவது போய் வந்துவிட்டா என்றால்...!

ஐ.நா இப்போது இறப்பு சரியாக கணிக்க வேண்டியது ஒன்று என்ற கருத்துக்கு வந்திருக்கிறது போல் உள்ளது. ஆனால் அதற்காக எதாவது முயற்சிகள் எடுக்குமா என்பது கேள்வியே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.