Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தினரிடம் சரணடைந்த பாலகுமாரன், எழிலன் ஆகியோர் இருக்கின்றனரா? இல்லையா?! – சுரேஸ் பா.உ.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

balakumar.jpg

இராணுவத்தினரிடம் பொதுமக்கள் மட்டுமன்றி பாதிரியாருடன் அரசியல்துறையைசார்ந்த போராளிகளும் சரணடைந்தனர். பாலகுமாரன், எழிலன் போன்றவர்கள் இருக்கின்றனரா? இல்லையா? என்பதும் தெரியாமலே இருக்கின்றது. என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பினார்.அத்துடன், கைது செய்யப்பட்டோர், காணாமல் போனோர் மற்றும் சரணடைந்தோர் தொடர்பிலான விபரங்கள் உறவினர்களுக்கு இன்னுமே தெரிவிக்கப்படவில்லை. இவை ஆரோக்கியமான விடயங்களல்ல. எனவே தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்றும் அவர் கோரினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நீதி, புனர்வாழ்வு சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்புகள் அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிகால கட்டத்தில் ஆயிரக்கணக்ககான இளைஞர் யுவதிகள் சரணடைந்தமை சகலருக்கும் தெரிந்த விடயம்.

இதுதொடர்பில் திட்டவட்டமான தகவல்களை வெளியிடுமாறு ஜனாதிபதியிடமும் அமைச்சர்களிடமும் கேட்டோம். அந்த தரவுகள் கணினி மயப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். கணினி மயப்படுத்தப்பட்ட தகவல்களை எங்களுக்கோ, இன்றேல் கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்களின் உறவினர்களிடமோ காண்பிக்கவில்லை.

நல்லிணக்க ஆணைக்குழுவினர் வடக்கு கிழக்கில் மேற்கொண்ட விசாரணைகளின் போது 5000 ற்கு மேற்பட்ட தாய்மார் தங்களுடைய குழந்தைகளை, கணவர்மாரை காணவில்லை என்ற விபரங்களை தெரிவித்துள்ளனர்.

தங்களுடைய குழந்தைகள் இருக்கின்றனரா?, இல்லையா? என்று தேடியறிவது குடும்பத்தின் தேவையாகும். அத் தேவையை செய்து கொடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.

இதேவேளை, இராணுவத்தினரிடம் பொதுகள் மட்டுமின்றி போராளிகளும் சரணடைந்தனர். பாதிரியாருடன் அரசியல்துறையை சார்ந்தவர்களும் சரணடைந்தனர். பாலகுமாரன், எழிலன் போன்றவர்கள் இருக்கின்றனரா? இல்லையா? என்பதும் தெரியாமலே இருக்கின்றது.

குடும்ப உறவினர்கள், மனைவி மற்றும் பிள்ளைகள் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலையிலேயே இருக்கின்றனர்.

விபரங்கள் தெரியாமல் சில குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நிம்மதியின்றி வாழ்கின்றனர். விதவைகள் மட்டுமே வாழ்கின்ற குடும்பத்தை சேர்ந்தவர்கள் பெரும் அவஸ்தைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

கே.பி., கருணா போன்றோர் சுகபோகம் அனுபவிக்கின்றனர். சிறிய பிரச்சினைக்கு உள்ளானவர்களை சிறைச்சாலைகளில் தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது நியாயமானதா?

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் விடுவிக்கக் கூடியவர்களை விடுவிக்க முடியும். சிறைச்சாலைகளில் அதிகாரிகளுக்கு அப்பால் சிங்கள கைதிகளும் தமிழ் கைதிகளை தாக்குகின்றனர். சிறிய தவறுக்கேனும் தாக்கப்படுகின்றனர்.

தென் பகுதியிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை வடக்கு கிழக்கு சிறைச்சாலைகளுக்கு மாற்றலாம். அதன் மூலமாக? கைதிகள் முகம் கொடுக்கும் மொழிப் பிரச்சினையை தவிர்க்கலாம். உறவினர்கள் கைதிகளை சந்திக்கலாம்.

அவசரகாலச் சட்டம் அமுலில் இல்லை என்றாலும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பலரும் கைது செய்யப்படுகின்றனர். கைது எனும் பெயரில் வெள்ளை வேனிலேயே அழைத்து செல்லப்படுகின்றனர்.

ஜனாதிபதி இந்தோனேசியாவில் ஜனநாயகம் பற்றி பேசுகின்றார். யாழில் எங்களால் பேச முடியுமா? அளவெட்டியில் 5 எம்.பி. க்களுக்கு என்ன நடந்தது. துண்டு பிரசுரம் எவ்வாறானது என்பதனை விடவும் யாழ். பல்கலைக்கழகத்திற்குள் தலைகவசத்துடன் புகுந்து விளம்பர பலகைகளை உடைக்கின்றனர். அங்கு ஜனநாயகம் இருக்கின்றதா?

தலை கவசத்துடன் வந்தவர்கள் இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்கள் என்றே கூறப்படுகின்றது. தேர்தல் நடந்து விட்டால் ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதாக அர்த்தப்படாது என்றார்.

http://www.tamilthai...newsite/?p=1286

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை வெளியிடாவிடில் மக்கள் சக்திப் போராட்டம்: மாவை எம்.பி.

கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டுமெனவும் அவ்வாறில்லாவிடின் மாபெரும் மக்கள் சக்திப் போராட்டம்  ஜனநாயக ரீதியில் வெடிக்குமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் தினத்தையொட்டி காணாமல்ப் போன உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு கோரி காணாமல்ப் போனவர்களின் உறவினர்கள் யாழ். பஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட காணாமல்ப் போனவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்கிக் கதறியழுதனர். அவ்விடத்திற்கு சென்றபோதே நடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேற்படி தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இங்கு மேலும் தெரிவிக்கையில்...

இந்த அரசாங்கம் தமிழ் மக்களை அநாதைகளாக வீதியில் அலையவிடுகிறது. மக்கள் வீடுகளில் நிம்மதியாக வாழமுடியாதவர்களாக தவிக்கின்றார்கள்.

சிறைச்சாலைகளில் அல்லது இரகசிய முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் உண்மை நிலையை அரசாங்கம் வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிடத் தவறும் பட்சத்தில் நாடளாவிய ரீதியில் சாத்வீகப் போராட்டம் முடுக்கிவிடப்படும்' என்றார்.

-- காணாமல்ப் போனவர்களின் விபரங்களை வெளியிடு

-- தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை முன்வை

-- அரசியல்க் கைதிகளை விடுதலை செய்

-- ஜனநாயக உரிமைகளை நசுக்காதே

-- காணாமல்ப் போனவர்களின் பெற்றோரை வதைக்காதே

என்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தாங்கியிருந்தனர்.

இதேவேளை, இவ் ஆர்பாட்டத்தில் செய்திகளை சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களில் சிலர் -பொலிஸ் ஒருவரினால் தாக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸாருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையில் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.

இதன்போது தாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் நாங்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் அல்ல. செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளர்கள் என்று பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து யாழ்.பொலிஸ் தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா இவ்விடயத்தில் தலையிட்டு ஊடகவியலாளர்களை சமாதானப்படுத்தியுள்ளார்.

http://www.tamilmirr...0-10-06-40.html

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்குக்கு படை எடுக்கும் வெளிநாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள்,பிரமுகர்களிடம் அவர்களை சந்திப்பவர்கள் மகஜர் மூலமோ வாய்மொழி மூலமோ சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் போராளிகள் மற்றும் ஏனையோரின் விபரங்களை வெளிடவேண்டு என அரசை வலியுறுத்துமாறு வேண்டலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்குக்கு படை எடுக்கும் வெளிநாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள்,பிரமுகர்களிடம் அவர்களை சந்திப்பவர்கள் மகஜர் மூலமோ வாய்மொழி மூலமோ சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் போராளிகள் மற்றும் ஏனையோரின் விபரங்களை வெளிடவேண்டு என அரசை வலியுறுத்துமாறு வேண்டலாம்.

கட்டாயம் இதனை செய்வது நன்மை தரும். அத்தோடு வழக்கு தாக்கல் செய்யப்படாத விசாரணைக்கைதிகள் விடயத்தை முன்னிலைப்படுத்தி அவர்களுக்கான வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

நன்றி நுணா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.