Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்பட்டோரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமா?

Featured Replies

வீரகேசரி இணையம் 12/17/2011 2:06:46 PM

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்.

16.12.2011.

முற்பகல் 11 மணி.

வழமையான பரபரப்போடு காட்சியளித்தது விமான நிலையம்.

ஊடகவியலாளர்கள் சிலர் குழுமியிருந்ததால் ஏதோ முக்கியமானதொரு நிகழ்வு இடம்பெறப்போகிறது என்பதை ஊகித்துக் கொண்டவர்களாய் பலர் எம்மை உன்னிப்பாகக் கவனித்தவண்ணம் நகர்ந்துகொண்டிருந்தனர்.

'எய் மெத்தென இன்னே? (ஏன் இந்த இடத்தில் இருக்கிறீர்கள்?)?" சகோதர மொழியில் ஒருவர் கேட்டார். "பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் சிலர் இன்று வருகிறார்கள். அவர்களைச் சந்திப்பதற்காக வந்திருக்கிறோம்" என்றேன்.

"தெமல கட்டியத?(தமிழர்களா?)" - அவர் கேட்டார்.

"தெரியாது" என்றேன்.

"ரட்டென் பெனல கிய கொட்டி எனவாலு. ஏக்கய் மே... (நாட்டிலிருந்து தப்பிச்சென்ற புலிகள் வருகிறார்களாம். அதுதான்...) " என அருகிலிருந்த தனது சகாவிடம் பேசியவாறே அவர் நடந்து சென்றார்.

விமான நிலைய உயர் அதிகரிகளிடம் அனுமதி பெற்று பிரயாணிகளின் வெளிவருகை இடத்தில் காத்திருந்தோம். அங்கு தமிழர்கள் பலரும் காத்திருந்தனர்.

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டோரை அழைத்துவரும் விமானம் இலங்கை நேரப்படி 11.25 மணிக்குத் தரையிறங்கியிருக்க வேண்டும். எனினும் மணி 1.30 ஆகியும் அவர்களைக் காணவில்லை.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக எமக்குத் தகவல் கிடைத்தது.

"நாடுகடத்தப்பட்ட 55 இலங்கையர்கள் விமான நிலையத்தை வந்தடைந்திருக்கிறார்கள். அவர்களிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டோர், விசா காலாவதியான பிறகும் தங்கியிருந்தோர் என 48 ஆண்களும் 7 பெண்களும் விசேட விமானத்தின் மூலம் அனுப்பப்பட்டுள்ளனர்.

இவர்களில் தமிழர்கள் 39 பேரும் முஸ்லிம்கள் 9 பேரும் சிங்களவர்கள் 7 பேரும் அடங்குவர்.

இவர்கள் யாழ்ப்பாணம், பதுளை, மட்டக்களப்பு, வவுனியா, திருகோணமலை, மன்னார், வத்தளை, கண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தோர். இலங்கைக்கு வருகை தந்த ஒரு நபருக்கு இரு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என்ற ரீதியில் நூற்றுக்கும் அதிகமான பிரித்தானிய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வருகை தந்துள்ளனர்" என்ற செய்தியை நாம் அறிந்துகொண்டோம்.

பிற்பகல் 3.30 மணி ஆனபோதுதான் ஒவ்வொருவராக வெளியில் வந்தனர். சிலர் எம்மோடு பேசுவதற்குத் தயங்கினர். சிலர் யாருடைய முகத்தையும் பாராமல் அவசர அவசரமாக வெளியேறினர்.

அவர்களுடைய முகத்தில் ஒருவித அச்ச உணர்வும் விரக்தியும் காணப்பட்டதை எம்மால் அவதானிக்க முடிந்தது.

பத்துப் பதினைந்து நிமிட இடைவேளையில் ஒவ்வொருவராக வெளியில் வருவதை அவதானித்த உறவினர்கள் அனைவரும் எழுந்து நின்று ஆவலுடன் வாயிற்கதவுகளைப் பார்த்தவண்ணம் இருந்தனர். அவர்களில் சிலருடைய கண்களை கண்ணீர் நனைத்திருந்தது.

உறவினர்களை நோக்கி வந்த சுகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பயந்த சுபாவத்துடன் எம்மோடு பேசினார்.

"கொஞ்சம் பயந்தான். உயிருக்குப் பயந்துகொண்டுதான் இருக்கிறம். பார்ப்போம்" என்றார் வடக்கைச் சேர்ந்த ஒருவர்.

"எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நாடு பழையபடி சீராயிற்று என்றதாலயும் என்னோட மனைவி பிள்ளைகள் இங்க இருக்கிறதாலயும் நான் சொந்த நாட்டுக்கே வந்திட்டன்" என்றார் மற்றுமொருவர்.

மேலும் சிலர் எம்மோடு பேச மறுத்து, "தயவு செய்து எங்களிடம் எதையும் கேட்காதீர்கள்..." என்று கூறியவாறே விடைபெற்றுச் சென்றுவிட்டனர்.

மணி 5.15 ஆகியிருந்தது. ஆயினும் சிலர் மாத்திரமே விசாரணைகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர். மேலும் பலருக்காக உறவினர்கள் காத்திருந்தனர். அதிகாலை 7.20 இற்கு விமானம் இலங்கையில் தரையிறங்கும் என்ற தகவலின் அடிப்படையில் விமான நிலையத்துக்கு வந்த அவர்கள் பல மணிநேரம் கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருந்தனர்.

கல்வித் தேவைகளுக்காகப் பிரித்தானியாவுக்குச் சென்று குறிப்பிட்ட காலப்பகுதிக்கு மேல் அங்கு தங்கியிருந்தோரும் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர். குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிலரும் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்புத் தரப்பினர் குறிப்பிட்டனர்.

நாடு திரும்பிய பலரும் தமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமா என்பதில் சந்தேகம் கொண்டவர்களாகவே காணப்பட்டனர். இது அவர்களின் கண்களில் அப்பட்டமாகவே தெரிந்தது.

காரணம், அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது உள்ள சூழ்நிலையையும் தற்போதைய நிலைமையையும் ஆராய்ந்து பார்ப்பதில் உள்ள சிக்கலும், நாடு கடத்தப்பட்டவர்கள் என்பதால் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படலாம் என்ற அச்சமும் தான்.

எது எவ்வாறாயினும், தாய்நாடு திரும்பிய எமது தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பும் பேராவலுமாகும்.

-இராமானுஜம் நிர்ஷன்

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=35650

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஒருவர் கூறுகையில் தான் 2007 இல் லண்டன் போனதாகவும் தற்போது நாட்டில் சமாதானம் ஏற்பட்டிருப்பதனால் தானே விரும்பி நாடு திரும்புவதாக கூறி இருந்தார்

ஒரு யாழ்பாணத்தமிழன் தனக்கு இப்போது சிறீலங்காவில் பாதுக்கப்பு இருக்கின்றது என வாய் முறைப்பாட்டை கொடுக்கின்றார் இப்படியிருக்கையில் திருப்பி அனுப்பப்பட்டவர்களின் பாதுகாப்பை பற்றி பேசினால் மேலே குறிப்பிட்டவரை சுட்டிகாட்டி பிரித்தானியா போன்ற நாடுகள் தப்பிக்கொள்ளும்.

http://youtu.be/rY0JE4gIY8A

விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதை போல் தான் உள்ளது. அவரை விடுங்கோ,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுயவிருப்பத்தில் நாடு திரும்புதல் என்ற பயண வகைக்குள் அடங்காத நிலையிலும், இப்படிக் கூறி இருப்பதால். இலங்கையிலே நிலவுகின்ற மனித சுத்ந்திரத்திற்கு தக்கதாக தன்னை மாற்றிக் கொள்ள முற்படுகின்றார் என்பது மட்டும் தெளிவாகின்றது!

இவர்கள் சிங்களத்தின் சினத்தில் இருந்து தப்ப, கருணையை எதிர்பார்க்கும் நிலை, தமிழன் என்ற பிறப்பால் வந்தது என்பது உலகே அறிந்த விடயம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.