Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்து சமூத்திர தீவுகளிடையே தன் செல்வாக்கை விரிவுபடுத்தும் சீனா

Featured Replies

சீனாவானது தற்போது மாலைதீவு மற்றும் சீசெல்ஸ் ஆகிய நாடுகளில் தனது செல்வாக்கை மேற்கொள்வதன் மூலம் இந்து சமுத்திரத்தின் மேற்கு மற்றும் தென்மேற்குப் பிரதேசங்களிற்கும் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வருகின்றது.

இவ்வாறு 'இராணுவப் பாதுகாப்பு கற்கை மற்றும் ஆய்வு நிறுவனத்திற்காக' [institute for Defence Studies and Analyses] அதன் ஆய்வாளர் Sarabjeet Singh Parmar எழுதியுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

அதன் முழுவிபரமாவது,

இந்து சமுத்திரத்தின் கிழக்கு மற்றும் தெற்கிலுள்ள மியான்மார் மற்றும் சிறிலங்கா ஆகிய நாடுகளுடன் செல்வாக்கைச் செலுத்துவதன் மூலம் இப்பிராந்தியத்தில் தனது அதிகாரத்தை நிலைநிறுத்த ஆரம்பித்துள்ள சீனாவானது தற்போது மாலைதீவு மற்றும் சீசெல்ஸ் [Maldives and Seychelles] ஆகிய நாடுகளில் தனது ஈடுபாட்டை மேற்கொள்வதன் மூலம் இந்து சமுத்திரத்தின் மேற்கு மற்றும் தென்மேற்குப் பிரதேசங்களிற்கும் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வருகின்றது.

அடிக்கட்டுமான அபிவிருத்திகள் மற்றும் இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்துதல் போன்றவற்றைத் தளமாகக் கொண்டே சீனா தற்போது செயற்பட்டுவருகின்றது. இதன் மூலம் சீனாவானது தனது 'மேற்கை நோக்கிய கொள்கையை' இலகுவில் விரிவாக்கிக் கொள்வதற்கான வளங்களை உருவாக்கிக் கொள்ள முயல்கிறது.

இராணுவத் தளங்களை உருவாக்குதல் என்பது கொஞ்சம் கடினமான விடயமாகும். இன்றைய உலகப் போக்கில், மேலதிக பிராந்தியப் பிரசன்னம் மற்றும் பொருளாதார பலப்படுத்தல்கள் என்பன யதார்த்தமாகக் காணப்படவில்லை. வெளிநாட்டு இராணுவத்தை தனது நாட்டிற்கு வரவழைத்ததன் பின்னர் குறிப்பிட்ட அந்நாடு கூடுதலான அழுத்தங்களை எதிர்நோக்கும்.

இதேபோன்றே சீன இராணுவத் தளங்களை வேறு நாடுகளில் அமைப்பதானது பல நாடுகளுக்கு பலவிதமான அழுத்தங்களை உண்டுபண்ணலாம். அதாவது குறிப்பாக மேற்குலக மற்றும் பிராந்தியச் செல்வாக்குகளின் மூலம் தமது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகின்ற சிறிய தேசங்கள் இவ்வாறான சீனாவின் இராணுவ ரீதியான பிரசன்னத்தை தவிர்க்கவே விரும்புகின்றன.

மியான்மாரில் சீன இராணுவத் தளத்தை அமைப்பதற்கான சாத்தியம் தொலைவிலேயே உள்ளது. அண்மையில் அமெரிக்கா, மியான்மார் மீது தனது கவனத்தைச் செலுத்தியதானது இதற்கான எடுத்துக்காட்டாக உள்ளது.

எவ்வாறெனினும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனா தனது செல்வாக்கைச் செலுத்துவதற்காக மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாரிய விளைவுகளை ஏற்படுத்துவதாகவே அமையும். அத்துடன் இவை மூலோபாய தாக்கத்திலிருந்து பொருளாதார மற்றும் இராணுவச் சமநிலை வரை பல்வேறு கோணங்களில் ஆழமாக ஆராயப்பட வேண்டும்.

மியான்மாரின் கொக்கோஸ் தீவுகளில் கதிரலை [radar] வசதிகளை உருவாக்குவதற்கு சீனா உதவியுள்ளது. அதேபோல் பொருளாதார மற்றும் தொழினுட்பத் துறையில் Kyaukpyu ஆழ நீர்த் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காகவும் தனது உதவியை சீனா மியான்மாரிற்கு வழங்கியுள்ளது. இங்கிருந்து சீனா வரை எண்ணெய்க் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

கொக்கோஸ் தீவுகளானது அந்தமான் தீவுத் தொடரின் வடதுருவப் பகுதியுடன் இணைந்துள்ளன. இதனால் இத்தீவுகளில் சீன நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள கதிரலைக் கருவிகளின் உதவியுடன் அந்தமான் தீவுகளின் வடபகுதியைச் சூழ என்ன நடக்கின்றன என்பதைக் கண்காணிக்க முடியும்.

வங்களா விரிகுடாவிற்கு வடகிழக்கே உள்ள Kyaukpyu துறைமுகமானது, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைச் சூழவுள்ள பகுதிகளில் இடம்பெறும் நகர்வுகளைக் கண்காணிக்க சீனாவிற்கு உதவும்.

இதற்கும் மேலாக, இந்து சமுத்திரப் பிராந்தியத்திற்கான பாதுகாப்புத் தடுப்பாக உள்ளதும், சீனாவின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகளைக் குறிப்பாக எண்ணெய் வர்த்தகத்தைப் பாதுகாப்பதில் பிரதான இடம் வகிக்கும் மலாக்கா நீரிணையில் இடம்பெறும் நடவடிக்கைகளில் செல்வாக்குச் செலுத்துவதற்கும் மியான்மார் மீதான சீனாவின் நாட்டம் துணையாக அமையும்.

சீன நிதியுதவியுடன் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் சிறிலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுகமானது எரிபொருள் நிரப்புவதற்கு சீனாவிற்கு பெரும் வசதியாக அமைந்திருக்கும்.

மலாக்கா நீரிணையிலிருந்து இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் வடமேற்கே உள்ள ஏடென் விரிகுடா, பப் -எல்-மண்டெப், சுயஸ் கால்வாய், கொர்மஸ் நீரிணை போன்ற பிரதான இடங்கள் வரை சீனக் கப்பல்கள் தமது வழங்கல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் சிறிலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுகம் சீனாவிற்குப் பெரிதும் துணைபுரியும். அத்துடன் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனா அகலக் கால் பரப்பவும் அம்பாந்தோட்டைத் துறைமுகம் துணையாக அமையும்.

நீர்மூழ்கிக் கப்பற் தளம் ஒன்றை அமைப்பதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளடங்கலாக ஏனைய அடிக்கட்டுமான அபிவிருத்திகளை மாலைதீவில் மேற்கொள்தல் மற்றும் சீனத் தூதரகம் ஒன்றை மாலைதீவில் நிறுவுதல் போன்ற சீனத் திட்டங்கள், எதிர்காலத்தில் சீனூவானது அரேபியக் கடலில் தனது பிரசன்னத்தை அதிகரிப்பதற்கான திறவுகோலாக அமைந்திருக்கும்.

அத்துடன் சிறிலங்காவிலிருந்து மேலே குறிப்பிடப்பட்ட இந்து சமுத்திரத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய கப்பற் தரிப்பிடங்கள் வரையான தனது வர்த்தகச் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கும் மாலைதீவின் மீதான சீனாவின் ஈடுபாடு உதவியாக அமைந்திருக்கும்.

கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சீனாவின் கப்பல்களிற்கு வசதி வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதற்காக சீனா, சீசெல்சுடன் தொடர்புகளைப் பேணிக் கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் கூட, இதில் சில முக்கிய விடயங்களும் உள்ளடங்கியுள்ளன.

அதாவது யூன் 2011ல் சீனா இரு Y12 வான்கலங்களை சீசெல்சிற்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தது. இதில் ஒன்று கடற் கொள்ளையை முறியடிப்பதற்காகவும் ஏனைய சில ரோந்து நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படலாம். சீசெல்ஸ், இந்து சமுத்திரத்தின் தென்மேற்கே வடக்குப் புறமாக அமைந்துள்ளது.

இங்கே polymetallic sulphides ஆராய்ச்சி மற்றும் வளப்படுத்தலுக்காக 10,000 சதுர கிலோமீற்றர் பிரதேசம் அனைத்துலக கடற்படுக்கை அதிகாரசபையுடன் மேற்கொண்ட உடன்படிக்கையின் கீழ் 15 ஆண்டு காலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மொறிசியசில் சிறப்பு முயற்சியாண்மை வலயம் ஒன்றை உருவாக்குவதற்காக சீனா ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிடுவதற்கான திட்டங்களைத் தீட்டிவருகின்றது. இயற்கை வளமற்ற, சிறிய தொழிலாளர் படையைக் கொண்ட, முக்கியத்துவமற்ற உள்நாட்டுச் சந்தையைக் கொண்ட ஒரு நாட்டில் பெருமளவில் சீனா முதலீட செய்ய உத்தேசித்துள்ளது.

தென்மேற்கு இந்து சமுத்திரப் பகுதிக்கு அண்மையாக இத்தீவு அமைந்தள்ளதால் சீனாவான தனது பூகோள நிலையைப் பலப்படுத்திக் கொள்வதற்கான இடமாக இதனைத் தெரிவுசெய்துள்ளது. மொறிசியஸ் தீவானது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக உள்ளது.

சீனாவின் செயற்பாடுகள் அனைத்துலகச் சட்ட மற்றும் உறவுகளிற்குக் கட்டுப்பட்டுவையாக உள்ளபோதிலும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள தீவுக் கூட்டங்களில் பெருமளவு முதலீடுகளை மேற்கொள்வது மற்றும் பாதுகாப்பு இராஜதந்திர உறவுகளைப் பேணுவது தொடர்பாக இந்தியா தனது கொள்கையை பரிசீலித்துக் கொள்ள வேண்டும் என இந்திய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இத்தீவுக்கூட்டங்களுடனான இந்தியாவின் பாதுகாப்பு இராஜதந்திரம் மற்றும் பொருளாதாரம் போன்ற செயற்பாடுகளை சீனாவின் இந்த எட்டுக்கோட்டு நொண்டி விளையாட்டுக்காக [Hop Scotch] குறைத்துக் கொள்ள முடியாது எனவும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் உறுதி தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20111218105228

அதாவது யூன் 2011ல் சீனா இரு Y12 வான்கலங்களை சீசெல்சிற்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தது. இதில் ஒன்று கடற் கொள்ளையை முறியடிப்பதற்காகவும் ஏனைய சில ரோந்து நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படலாம். சீசெல்ஸ், இந்து சமுத்திரத்தின் தென்மேற்கே வடக்குப் புறமாக அமைந்துள்ளது.

இங்கே polymetallic sulphides ஆராய்ச்சி மற்றும் வளப்படுத்தலுக்காக 10,000 சதுர கிலோமீற்றர் பிரதேசம் அனைத்துலக கடற்படுக்கை அதிகாரசபையுடன் மேற்கொண்ட உடன்படிக்கையின் கீழ் 15 ஆண்டு காலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மாற்றங்கள் பல நிகழ உள்ளன.

மேற்குலகம் இந்த சீனாவின் நகர்வை (சீசெல்ஸ் ) தெரிந்துதான் அவுஸ்திரேலியாவில் தனது இராணுவ தளத்தை அமைக்க முனைந்ததுடன், இவ்வாறு மற்றைய நாடுகளில் நகர்வுகளை தடுக்க விரும்புகிறது.

இதில் இந்தியாவும் மேற்குலக நகர்வுகளுக்கு அமைய ஆப்கானிஸ்தானிலும், பர்மாவிலும், வியட்நாமிலும் நகர்வுகளை மேற்கொள்ளுகின்றது. பதிலுக்கு சீனாவும் பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, மாலைதீவு ஊடாக நகர்வுகளை மேற்கொள்ளுகின்றது.

சீனாவின் விஸ்தரிப்பு ஒன்றும் ஆபத்தானவையல்ல. இந்திய மேற்குலகங்கள் தமது நலனுக்காக பிராந்தியங்களில் காணப்படும் எதிர் சக்திகளைப் பயன்படுத்தி பெரிய அழிவுகளை ஏற்படுத்தியிருப்பது நமது வரலாற்றிலும் நடைபெற்றுவிட்டது. சீனா அவ்வாறு எங்கும் நடக்கவில்லை. அதனால் சீனாவின் நகர்வுகளை இல்லாதொழிப்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.