Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தமிழருக்கு எதுவும் தரப்போவதில்லை! -வலம்புரி

Featured Replies

வன்னியில் இடம்பெற்ற போர் தொடர்பில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வினால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

உண்மைகளைக் கண்டறியும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்ட எல்லா விடயங்களும் உண்மையானவையா என்பதை கண்டறிவதற்காக இன்னொரு ஆணைக் குழு தேவையென்று எவரும் கேட்க மாட்டார்கள்.

அதேநேரம் நல்லிணக்க ஆணைக்குழு அரசிற்கும் படைத்தரப்பிற்கும் எதிராக அல்லது பாதகமாகவும் தனது அறிக்கையை தயாரிக்க முடியாது.

அவ்வாறானதொரு அறிக்கை வெளியிடப்படுமாக இருந்தால், நல்லிணக்க ஆணைக்குழுவில் இடம்பெற்றவர்களுக்கு நடந்தது என்ன? விசாரணை வேண்டும். பக்க சார்பற்ற ஆணைக்குழு அமைக்க வேண்டும் என்ற கோசங்கள் ஒரு பக்கத்தில் எழும்.

ஆக, ஆணைக்குழுவில் இடம் பெற்றவர்கள் முதலில் தங்களைப் பாதுகாக்கக் கூடியதான எல்லைக்குள் நின்று கொண்டே அறிக்கையை தயாரிக்க முடியும்-தயாரிக்க வேண்டும். மாறாக, தங்கள் தொடர்பில் இன்னொரு ஆணைக்குழு ஏற்படுவதை அவர்கள் ஒரு போதும் விரும்பமாட்டார்கள்.

நம்மை பொறுத்தவரை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை எமக்கு நீதியை பெற்றுத்தருமென்றோ அல்லது பாராளுமன்றத்தில் ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் விவாதிப்பதோ அர்த்தமற்றது. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை.

மூன்று இலட்சம் தமிழ் மக்கள் முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டார்கள் என்று யாரேனும் கற்பனைக்கதை சொல்லியிருந்தால், வன்னிப் போரில் அப்பாவித் தமிழ்மக்கள் கொல்லப்பட்டார்கள் என்று கனவு கண்டிருந்தால் தமிழ் இளைஞர், யுவதிகள் காணாமல் போனார்கள் என்று சாத்திரம் சொல்லியிருந்தால் மட்டுமே ஆணைக்குழு தேவைப்பட்டிருக்கும்.

மாறாக வன்னிப் போரில் நடந்தது அத்தனையும் நிஜம். சிறுவர்கள், முதியவர்கள் பெண்கள் என பல்லாயிரக்கணக்கானோர் துடிதுடித்து பலியானது உண்மை.

மூன்று இலட்சம் தமிழ்மக்களை முட்கம்பி வேலிக்குள் அடைத்து அவர்களை படாப்பாடு படுத்தியது சத்தியம். இதை செய்தவர்கள் யார் என்பதும் தெரிந்த உண்மை.

நிலைமை இதுவாக இருக்கும்போது நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையில் ஒரு புதிய செய்தியை எங்களுக்கு கூறப்போவதில்லை என்பதும், உயிரிழந்த-காணாமல் போனவர்களை அந்த ஆணைக்குழு மீட்டுத்தரப்போவதில்லை என்பதும் தெரிந்ததே.

இவற்றைத்தான் செய்ய முடியாது. ஆனால் ஆணைக்குழு தமிழ் மக்களுக்கு உரிமையைப் பெற்றுத்தரும் என்றால் கூட பரவாயில்லை. ஆனால் இவை எதுவுமே நடக்கப்போவதில்லை.

ஆணைக்குழுவின் அறிக்கையை அரசு வெளிப்படுத்தி இதோ! வன்னிப்போர் குற்றச்சாட்டுத் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை பெற்றுள்ளோம். சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று உலகுக்கு கூறும் அவ் வளவுதான்.

ஆணைக் குழுவில் இடம் பெற்றவர்களை பொறுத்தவரை நிகழ்காலத்தில் வருமானம், எதிர்காலத்தில் அவர்களின் அந்திமத்தின் போது நல்லிணக்க ஆணைக்குழுவில் இடம்பெற்ற பெரியார்கள் என்ற புகழ் உரை அவ்வளவு தான்.

மற்றும்படி ஆணைக்குழுவின் அறிக்கையால் எதுவுமே எங்களுக்கு கிடைக்காது.

வலம்புரி ஆசிரியர் தலையங்கம்

http://www.eelampres.../2011/12/45314/

கூட்டமைப்பு சர்வதேச பொறிமுறையை கோரியுள்ளது. அதற்கு ஆதரவாக நாடு கடந்த அரசும் அதே பாணியில் கூறி சர்வதேச அளவில் முன்னெடுப்புக்களை மேற்கொள்ள உள்ளது.

நாமும் ஒத்தாசையாக இருப்போம்.

TNA wants accountability mechanism for Sri Lanka

Calling upon the international community to establish a “mechanism for accountability” to bring to book the perpetrators of war crimes during the last stages of the Eelam War that ended in May 2009, the Tamil National Alliance on Monday said the Lessons Learnt and Reconciliation Commission report “categorically fails to effectively and meaningfully deal with issues of accountability”.

http://www.thehindu.com/news/international/article2729067.ece

உண்மைகளைக் கண்டறியும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்ட எல்லா விடயங்களும் உண்மையானவையா என்பதை கண்டறிவதற்காக இன்னொரு ஆணைக் குழு தேவையென்று எவரும் கேட்க மாட்டார்கள். அதேநேரம் நல்லிணக்க ஆணைக்குழு அரசிற்கும் படைத்தரப்பிற்கும் எதிராக அல்லது பாதகமாகவும் தனது அறிக்கையை தயாரிக்க முடியாது.

அவ்வாறானதொரு அறிக்கை வெளியிடப்படுமாக இருந்தால், நல்லிணக்க ஆணைக்குழுவில் இடம்பெற்றவர்களுக்கு நடந்தது என்ன? விசாரணை வேண்டும். பக்க சார்பற்ற ஆணைக்குழு அமைக்க வேண்டும் என்ற கோசங்கள் ஒரு பக்கத்தில் எழும்.

ஆக, ஆணைக்குழுவில் இடம் பெற்றவர்கள் முதலில் தங்களைப் பாதுகாக்கக் கூடியதான எல்லைக்குள் நின்று கொண்டே அறிக்கையை தயாரிக்க முடியும்-தயாரிக்க வேண்டும். மாறாக, தங்கள் தொடர்பில் இன்னொரு ஆணைக்குழு ஏற்படுவதை அவர்கள் ஒரு போதும் விரும்பமாட்டார்கள்

மிகவும் உண்மையோடு ஒட்டிபோன கருத்து. பலர் அறிக்கையை விமர்சித்துதான் இதுவரையில் கருத்து எழுதியிருக்கிறார்கள். வலம்புரியார் இங்கே அதை செய்ய வில்லை. அவரின் நிலை விமர்சிப்பதற்கு முதல்அதில் எதை எதிபார்த்தோம் என்ற ஒரு தெளிவான நிலைக்கு நாம் வரவேண்டும் என்பதே. அதில் எதை எதிர்பார்த்தோம் என்று நம்மில் யாரும் கைவிரல்களை மடித்து எண்ணி கூறமுடியுமா? எல்லோரும் சிங்கள அறிக்கை அவர்கள் பக்கம் தான் சாயும் என்று எதிர் பார்த்தோம். அதில் நாம் பிழை விடவில்லை. ஆனால் வேதனைகளில் சிக்கி தவித்த ஏழைமனங்களில் நீதிக்காக ஏங்கிய நப்பாசையின் நிழல் கிரணங்கள் மெல்ல விழுந்து மங்கியதை மட்டும் நாம் மறுக்க முடியாது. கொடூர சிதிரவதை செய்து துன்பத்தில் வரும் வேதனைகளைகண்டு ரசித்த சிங்கள ஆமி கூட ஒரு நிலையில் போகட்டும் விட்டுவிட்டுவொம் என்று போக விட்டு விடுவார்கள் என்று தான் எதிர்பார்த்தோம். அதில்த்தான் எல்லோரும் பிழை விட்டோம். அதில் என்ன பிழை என்பதைத்தான் வலம்புரியார் விளங்கபடுத்துகிறார்.

ஆக, ஆணைக்குழுவில் இடம் பெற்றவர்கள் முதலில் தங்களைப் பாதுகாக்கக் கூடியதான எல்லைக்குள் நின்று கொண்டே அறிக்கையை தயாரிக்க முடியும்

மகிந்தாவை தனது நண்பன் என்று கூறித்திரிந்த லசந்தா மகிந்தா தன்னை கொல்ல போவதாக பத்திரிகைகளில் எழுதித்தான் பார்த்தாரே. மகிந்தாவுக்காக கொலைகள் செய்த பரத் லக்ஸ்மன் தன்னை கொல்ல போகிறார்கள்(கொல்ல வேண்டாம்) என்று மகிந்தாவிடம் கெஞ்சினாரே. மகிந்தாவின் பெருமைக்காக தனது உயிரக்கூட துச்சமாக மதியாமல் போரை நடத்தி வென்ற பொன்சேகாவிற்கு என்ன நடந்தது? இவர்கள் மகிந்தாவின் மிகப்பெரிய சேவையாளர்களாக இருந்தாலும் கூட அற்ப விடையங்களில் மகிந்தா மீது குற்றம் கண்டவர்கள். இவர்களுக்கே இந்த பாடென்றால் எதோ சில்லறை காசுகளான அந்த ஆணைக்குழு அங்கத்வர்கள் எந்த தைரியத்துடன் மகிந்தா மீது குற்றம் கண்டு அறிக்கை விடுவார்கள். அவர்கள் மறுக்கவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் ஆணக்குழுவில் அங்கத்துவம் வகித்திருந்திருக்கலாம். இப்போது உண்மை தெளிவு. இறந்த தமிழர் மீது இரக்கம் வந்தாலும் அவர்களுக்கு அவர்கள் உயிர் மீதும் பிடிப்பு உண்டு. இதனால்த்தான் ஆணைகுழு இலங்கை ஆட்சியாளர்கள் மீது குற்றம் காணவில்லை. நமது கடமை இதை வெளிகொணர்வதுதான்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.