Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடும்பபாரத்தை தனியே சுமக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு கைகொடுங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பபாரத்தை தனியே சுமக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு கைகொடுங்கள்.

இலங்கையின் பல்வேறு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் நீண்டகாலமமாக இழுபறி நிலமையில் இருக்கிறது. குடும்பங்களை தலைமை தாங்கிக் கவனிக்க வேண்டிய ஆண்கள் சிறைகளில் வாட குடும்பத்தின் தலைமைப்பொறுப்பினை பெண்கள் தனித்துச் சுமக்கின்ற அவலத்தில் உள்ளார்கள். அனேக குடும்பங்களில் அடிப்படை பொருளாதார ஆதரவுகள் இல்லாது குடும்பங்கள் சிதைவுற்று பல்வேறு வகையான நெருக்கடிகளைப் பெண்களும் குழந்தைகளும் சந்திக்கின்றனர். இக்குடும்பங்களினை நெருக்கடிகளிலிருந்து காத்து சுயபொருளாதாரத்தை மேம்படுத்தி சமூகத்தோடு ஒன்றிணைத்து வாழ்விக்க வேண்டிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களிடமே தங்கியுள்ளது.

எமக்குக் கிடைக்கப்பெறுகிற குடும்பங்களின் விபரங்களை பகுதிபகுதியாக எடுத்து வருகிறோம்.

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 6குடும்பங்களின் விபரங்கள்:-

1) பெருமாள் வேலாயுதம் (47வயது) முன்னாள் போராளி.

முகவரி :-இல – 310 படிவம் 3 மெனிக்பாம் செட்டிகுளம்.

பெருமாள் வேலாயுதம் கைதுசெய்யப்பட்ட திதகி – 08.10.2010

மனைவி – வேலாயுதம் இராஜலக்சுமி (44வயது)

பிள்ளைகள் :–

1) வினோசா 20வயது

2) டயசி 19வயது

3) தயகன் 16வயது

4) சர்மிலா 11வயது

5) ரயிதா – 8வயது

6) ரயீனா 6வயது.

மிகுந்த வறுமை நிலமையில் வாழ்கிற குடும்பத்தின் வாழ்வாதரத்தை மேம்படுத்த வேலாயுதம் இராஜலக்சுமி பசுமாடு வளர்ப்பதற்கான உதவியாக 45ஆயிரம்(300.00€) ரூபாவினை வேண்டுகிறார்)

2) கட்டையன் லோகேஸ்வரன் ( வயது 40)

இவர் ஒரு முன்னாள் போராளி. இறுதியுத்தத்தின் முடிவில் சரணடைந்து புனர்வாழ்வழிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர். பின்னர் 18.01.2010 அன்று குற்றத்தடுப்புப் புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது வவுனியா சிறையில் இருக்கிறார்.

முகவரி :- காந்திநகர் , செட்டிகுளம் வவுனியா

மனைவி – வசந்தி 38வயது

பிள்ளைகள் :-

1) மயூரன் 14வயது

2) தினேஸ் 10வயது

3) குட்டி 8வயது

4) தங்கா 5வயது

மனைவி வசந்தி தனது குடும்ப வாழ்வாதாரத்தை மே்படுத்த ஆடுவளர்க்க விரும்புகிறார். ஆடுவளர்க்க உதவி யாக 30ஆயிரம் ரூபா(200.00€) உதவியினை எதிர்பார்க்கிறார்.

3) முத்தையா பிரசாத் (38வயது)

முகவரி :- பட்டைக்காடு வவுனியா

கைது செய்யப்பட்ட திகதி – 31.08.2008

மனைவி- அருட்செல்வி (35வயது)

பிள்ளைகள் :-

1) எடிசன் 9வயது

2) டினுசன் 7வயது

3) அயந்தன் 5வயது

4) டினுசா 4வயது

4பிள்ளைகளுடன் வாழ்கிற அருட்செல்வி வருமானம் எதுவுமற்ற நிலமையில் தனது வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாடுவளர்ப்புச் செய்ய 45ஆயிரம்ரூபா (300.00€) உதவியினை வேண்டுகிறார்.

4) சாந்தன் (41வயது)

முகவரி :- அந்தோனியார்புரம் , இலுப்பைக்கடவை , மன்னார்.

கைதான திகதி – 25.11.2010

மனைவி – பிரகாசிகா (வயது 36)

பிள்ளைகள் :-

1) றொசானி 17வயது

2) றோசின் 13வயது

3) செபஸ்ரின் றொசான் 10வயது

4) றொசாந்தினி 7வயது

5) சமர்வாணன் 4வயது

5பிள்ளைகளுடன் வறுமையில் வாழும் பிரகாசிகா ஒரு தையல் இயந்திரத்தினை வாழ்வாதார உதவியாக வேண்டுவதோடு பிள்ளைகளின் கல்வியுதவியினையும் எதிர்பார்க்கிறார்.

தையல் இயந்திரத்தின் விலை – 33ஆயிரம் ரூபா (220.00€)

5) லக்ஸ்மன் விக்னேஸ்வரன் (வயது 38வயது)

கிறிஸ்தவகுளம் செட்டிகுளம் வவுனியா

கைதான திகதி:- 08.07.2010

மனைவி – தனலட்சுமி (36வயது)

பிள்ளைகள் :-

1) சந்தோஸ்குமார் 17வயது

2) றீகா 11வயது.

தனலட்சுமி தனது வாழ்வதாரத்தை மேம்படுத்த ஆடுவளர்க்க உதவியாக 30ஆயிரம்(200.00€) எதிர்பார்க்கிறார்.

6) வேலாயுதம் கவிதா (34வயது) வெலிக்கடை பெண்கள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

முகவரி – புதுக்குளம் றோட் , கனகராஜன் குளம்

கைதான திகதி:- 2010.2ம் மாதம்

தாயார் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கிறார். தகப்பனர் 63வயது. தந்தையாரும் நோயாளி. சகோதரி யசோதா முள்ளந்தண்டில் பாதிப்பு உள்ளவர். திருமணம் முடிக்கவில்லை தாயாரும் தந்தையாரும் யசோதாவின் பொறுப்பில் தான் உள்ளார். கூலிவேலை செய்துதான் குடும்பத்தைக் கவனிக்கிறார். இவர்களது குடும்ப வாழ்வதாரத்தை மேம்படுத்த உதவியைக் கோரியுள்ளார்கள். கவிதாவுக்கான வழக்கு உதவியினையும் கோரியுள்ளார்கள்.

7) வரதராஜா இதயகுமாரி வெலிக்கடை பெண்கள் பிரிவு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

முகவரி – சாவகச்சேரி

கைதான திகதி:- 12.08.2009

இதயகுமாரியின் அக்கா ஜெயகுமாரி 11வயதுக் குழந்தையுடனும் பெற்றோருடன் வாழ்கிறார். அவரது கணவர் 2009 வட்டுவாகலில் வைத்து காணாமல் போய்விட்டார். உயிருடன் இருப்பதற்காக எவ்வித தடயங்களும் இதுவரை கிடைக்கவில்லை. இவர்கள் கோழிவளர்ப்பிற்கு 30ஆயிரம் ரூபா (200.00€) உதவியினையும் இதயகுமாரியின் வழக்குதவியினையும் எதிர்பார்க்கின்றனர்.

தர்மலிங்கம் சத்தியலிங்கம் (36வயது) அனுராதபுரம் சிறைச்சாலையில் இருக்கிறார்.

கைதான திகதி:- 08.07.2009

இவர்மீது சுமத்தப்பட்ட வழக்கு வவுனியா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

மனைவி :- லோஜினி

பிள்ளைகள் :-

1) நிதுஷன் 6வயது

2) துர்க்கா 3வயது

வாழ்வதார உதவியாக 30ஆயிரம் ரூபா (200.00€) உதவியை எதிர்பார்க்கிறார்கள்.

9) அன்ரன் பிரசன்னா (கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை)

கைதான திகதி:- 03.01.2008

முகவரி :- கல்கிசை

4வருடதண்டனை வழங்கப்பட்டுள்ளது. உதவிக்கு உறவுகள் யாருமில்லை. மனைவி ராஜினி 2குழந்தைகளுடன் தனியே வாழ்ந்து கொண்டிருக்கிறார். வாழ்வாதார உதவாக கோழிவளர்க்க விரும்புகிறார். கோழிவளர்ப்புக்காக 30ஆயிரம்ரூபா (200.00€) உதவியினை எதிர்பார்க்கின்றார்.

10) தங்கவேல் சிவகுமார் (36வயது)

புதியமகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கைதான திகதி:- 03.08.2006

மனைவி :- சுமதி

பிள்ளைகள் :-

1) அனுசா 14வயது

2) யுவராஜ்

3) ஜஸ்மின்

குடும்ப உறவுகளின் எவ்வித ஆதரவுமற்று வாழ்கிறார்கள். பிள்ளைகளின் கல்வி உணவு செலவுகளைச் சமாளிக்க முடியாது தவிக்கிற சுமதி ஆடுவளர்க்க விரும்புகிறார். ஆடுவளர்க்க 30ஆயிரம்ரூபா(200.00€) உதவியினை வேண்டுகிறார்.

11) மு.சந்திரமோகன் (36வயது)

அம்பகோட்டை , கண்டி

கைதான திகதி:- 06.04.2008

மனைவி – தயாமணி

பிள்ளைகள் :-

1) மேனுசா 13வயது

2) மதுசா 10வயது

தயாமணி தனது வாழ்வாதாரத்தை மேம்படுத்த 30ஆயிரம் ரூபா (200.00€) உதவியினை எதிர்பார்க்கிறார். ஊரில் உறவுகள் எல்லோராலும் கைவிடப்பட்டுத் தனித்துப் போயுள்ளார்கள். பிள்ளைகளின் கல்வி அன்றாட வாழ்வைச் சமாளிக்க எவ்வித ஆதரவும் அற்ற நிலமையில் வாழ்கிறார்கள்.

12) கோமதி (52வயது)

கணவர் 56வயது. 07.11.2008 அன்று கைது செய்யப்பட்டார். 3வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு பிள்ளைகள் மாவீரர்கள்.

முகவரி :- கிளிநொச்சி

2பிள்ளைகள் இருக்கிறார்கள். தனது வாழ்வாதாரத்தை மேம்படுத்த 30ஆயிரம் ரூபா உதவியை வேண்டுகிறார். அண்ணளவாக 200.00€.

13) மேரிலூசியா (39வயது)

கணவர் 26.10.2006 அன்று கைது செய்யப்பட்டவர். 6வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

3பிள்ளைகள் இருக்கிறார்கள். மேரிலூசியாவின் இரு சகோதரிகளும் கணவர்மாரும் முள்ளிவாய்க்காலில் இறந்துவிட்டனர். அவர்களுடைய 4 பிள்ளைகளையும் மேரிலூசியாவே கவனிக்கிறார்.

தனது வாழ்வாதாரத்தை மேம்படுத்த 30ஆயிரம் ரூபா உதவியை வேண்டுகிறார். அண்ணளவாக 200.00€.

14) ரேணுகா வயது(32)

21.10.2008 அன்று கணவர் கைது செய்யப்பட்டவர்.

முகவரி :- பீற்றூட் தோட்டம் , சின்னக்காடு , நுவரெலியா.

1பெண்பிள்ளை இருக்கிறது. வாழ்வாதாரத்தை மேம்படுத்த 30ஆயிரம் ரூபா உதவியை வேண்டுகிறார்.அண்ணளவாக 200.00€.

15) ஜெனிற்றா (30வயது)

16.09.2006 சந்தேகத்தின் பெயரில் கணவரை இராணுவம் கொண்டு சென்றது.

முகவரி – சிலாவத்துறை

3பிள்ளைகள். ஜெனிற்றாவின் சகோதரர் நேவியால் சுட்டுக் கொல்லப்பட்டவர்.

வாழ்வாதார மேம்பாட்டு உதவியாக ஆடு மாடு வளர்க்க உதவி கோருகிறார்கள். (30ஆயிரம் ரூபா உதவியை வேண்டுகிறார்.அண்ணளவாக 200.00€)

16) சுமதி (34வயது)

36வயதான இவரது கணவர் 11.11.2008 வவுணதீவு சந்தைக்குப் போய் திரும்பும் போது காணாமல் போனவர்.

முகவரி :- ஈச்சந்தீவு நாவற்காடு , மட்டக்களப்பு.

2பிள்ளைகள் இருக்கிறார்கள். இரண்டாவது குழந்தை தாய் வயிற்றில் 6மாதக்கருவாக இருந்த தகப்பன் காணாமற்போனார். வாழ்வாதாரத்தை மேம்படுத்த கோழிவளர்க்க 30ஆயிரம் ரூபா உதவியை வேண்டியுள்ளார். அண்ணளவாக 200.00€.

உதவ விரும்புவோர் நேரடியான தொடர்புகளைப் பேணிக் கொள்வதோடு உதவிகளையும் நேரடியாக வழங்கலாம். உங்களுக்கு எந்தக் குடும்பத்தின் விபரம் தேவையென்பதனை தெரிவு செய்து அறியத்தாருங்கள் விபரங்களைத் தந்துதவுவோம்.

எங்களுக்காக தங்கள் வாழ்வை இழந்து சிறைகளில் வாடும் அல்லது காணாமல் போனகணவர்களின் மனைவியர்களுக்கு வாழ்வாதார உதவியை வழங்கி அவர்களை நிமிர வைப்போம்.

ஒரு குடும்பத்திற்கு உதவி கொடுத்து ஒளியேற்றுங்கள்.

இவர்களுக்கு நேசக்கரம் கொடுக்க தொடர்பு கொள்ள :-

முகவரி:-

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany – 0049 6781 70723

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Vereinsregister:

AZ- VR 20302

Amtsgericht 55543 Bad Kreuznach

Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

Edited by shanthy

குறிப்பிட்டவர்களை நேரடியாக தொடர்புகொண்டு நேரடியாக உதவி செய்யவசதிசெய்து கொடுத்தால் உதவி விரைவாககிடைக்கும் என்பது எனது அபிப்பிராயம்....

.. இதை உங்களுக்கு போன் பண்ணிச்சொல்லலாம் எண்டு நினைத்தேன்...... ஆனால் அதை நீங்கள் ரெக்கோர்ட் பண்ணித்துலைத்தாலும் எண்ட பயத்தில் இங்கு எழுத்துகிறேன்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பிட்டவர்களை நேரடியாக தொடர்புகொண்டு நேரடியாக உதவி செய்யவசதிசெய்து கொடுத்தால் உதவி விரைவாககிடைக்கும் என்பது எனது அபிப்பிராயம்....

வளமையான ஒழுங்கு நேரடியாக உதவி செய்ய விரும்புகிறவர் நேரடியான தொடர்பாடல் உதவி வழங்கல் தான் செய்கிறார்கள். நேரடியாக செய்ய முடியாத விரும்பாதவர்களின் உதவி மட்டும்தான் நேசக்கரம் வங்கியூடாக போகிறது.

விரைவாக கிடைப்பதனையும் விட பயனாளியும் உதவிசெய்வோரும் நேரடியான தொடர்பாடலை பேணுதல் பயனாளிகளுக்கு மனரீதியான தென்பையும் கொடுக்கிறது.

உங்கள் அபிப்பிராயத்துக்கு நன்றிகள் பனங்காய்.

.. இதை உங்களுக்கு போன் பண்ணிச்சொல்லலாம் எண்டு நினைத்தேன்...... ஆனால் அதை நீங்கள் ரெக்கோர்ட் பண்ணித்துலைத்தாலும் எண்ட பயத்தில் இங்கு எழுத்துகிறேன்..

எக்குத்தப்பா எங்கையோ மாட்டீட்டீங்கள் போல. :icon_idea:

ரெலிபோனிலயெல்லாம் மினக்கெட்டு பயப்பிடுறதை விட மெயிலிலும் தெரிவிக்கலாம் உங்கள் ஆலோசனைகள் அறிவுரைகள் ஐடியாக்கள்.

மருண்டவன் கண்ணக்கு என்னவோ எல்லாம் என்ற பழமெதாழிதான் பனங்காய் ஞாபகம் வருது. :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.