Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செங்கடல்: தமிழர் துயரங்களின் துளி!

Featured Replies

- நீரை.மகேந்திரன்

படம் : செங்கடல்

ஆண்டு : 2011

மொழி : தமிழ் - ஆங்கிலம் - சிங்களம் - தெலுங்கு

இயக்கம்: லீனா மணிமேகலை.

24senkadaaal.jpgசெங்கடல்... நீண்ட சட்ட மற்றும் தணிக்கைப் போராட்டங்களை சந்தித்த திரைப்படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது. ஏற்கெனவே சென்னையில் சில முறை திரையிடப்பட்ட பொழுது (இரண்டு தடவை என நினைக்கிறேன்) பார்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையாததால் இந்த முறை தவற விட்டுவிடக்கூடாது முதல் நாளே முடிவு செய்து விட்டேன்.

இந்தப் படம் குறித்து ஏற்கெனவே ஊடகங்கள் வழி கேள்விப்பட்டிருந்த தகவல்கள், தணிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்ததாக வெளியான செய்திகள், தமிழின் முக்கியமான ஆவணப்பட இயக்குநர் இயக்கிய படம் என்பதும் இந்த எதிர்பார்ப்புக்கு கூடுதல் காரணங்கள். மேலும் திரைப்பட விழாக்களில் தணிக்கை செய்யப்படாத காட்சிகளோடுதான் திரையிடுவார்கள் என்பதாலும் என எதிர்பார்ப்புக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கலாம்.

பல்வேறு உலகயத் திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டுள்ள இந்தப் படத்தை 9-வது சென்னை திரைப்பட விழாப்வுக்கு தேர்ந்தெடுக்கப்படாததால் திரைப்பட விழாவின் தொடக்க நாளன்று படத்தின் இயக்குநர் லீனா மணிமேகலை, எடிட்டர் - இயக்குநர் லெனின் மற்றும் இந்தப் படக்குழுவினர் எழுப்பிய எதிர்ப்புக்குரல் மற்றும் கோரிக்கை காரணமாக, பனோரமா பிரிவில் திரையிட எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இலங்கை ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்படும் ராமேஸ்வரம் மீனவர்கள் வாழ்க்கை குறித்தும், இலங்கையின் உள்நாட்டு யுத்தம் காரணமாக அகதிகளாக ராமேஸ்வரம் வந்து இறங்கும் இலங்கை தமிழர்கள் பற்றிய பதிவுகளும் கதைக் களம்.

படத்தின் தொகுப்பை இப்படி பிரித்துக்கொள்ளலாம்...

ஒன்று: இலங்கை பிரச்னை

புலிகளுடனான இறுதிச் சண்டைகளில் பிடிக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை கண்களை கட்டி கொத்து கொத்தாக இலங்கை ராணுவம் சுட்டுகொன்ற சம்பவங்களின் காட்சி தொகுப்புகள், தொடர்ந்து நடைபெற்ற சண்டைகளால் புலம்பெயர்ந்து அகதிகளாக ராமேஸ்வரம் மணற்திட்டுகளில் வந்து இறங்குவதும், வருபவர்களின் அனுபவங்கள் வழி இலங்கையில் அப்பாவி தமிழர் குடியிருப்புகளில், மருத்துவமனை, கல்விகூடங்கள், பாதுகாப்பு வளைய பகுதிகளில் இலங்கை ராணுவம் குண்டுகளை வீசி கொல்வது, தமிழ் பெண்களை கற்பழிப்பது, தமிழர் சொத்துக்களை சேதப்படுத்துவது, சண்டையில் பிடிக்கப்பட்ட போராளிகளை சுட்டுக்கொள்வது போன்ற மனித உரிமை மீறல்களையும், போராளி குழுக்களிடையே இருந்த முரண்பாடுகள், புலிகளுக்கும் ராணுவத்துக்குமான சண்டைகளில் பாதிக்கப்படும் அப்பாவி தமிழர்கள் என இலங்கையின் போர்கள சூழலின் காட்சிகளாகவும், வாய்மொழி பதிவுகளாகவும் பதிவாகிறது.

இரண்டு: தமிழக மீனவர்கள்

தமிழக மீனவர்கள் குறிப்பாக ராமேஸ்வரம் மீனவர்கள் அடிக்கடி இலங்கை ராணுவத்தால் பிடித்துச் செல்லப்படுவதும், நடுக்கடலில் சுட்டுகொள்ளப்படுவதும் அடிக்கடி நடைபெறும் சம்பவங்களாகிவிட்டது. இதைத் தடுப்பதற்கான நிரந்தர வழிகளை மெற்கொள்வதில் தமிழக அரசோ, இந்திய அரசோ அக்கறையோ முயற்சிகளோ செய்யாமலிருப்பதால், இந்திய கடல் எல்லையும் இலங்கை கடல் எல்லையும் சங்கமிக்கும் ராமேஸ்வரம் கடற்பகுதி மீனவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கிறது.

தமிழர்கள் என்பதால் மட்டுமே மீனவர்கள் சுடப்படுகிறர்கள், அதாவது விடுதலை புலிகளுக்கு இங்குள்ள மீனவர்கள்தான் உதவுகிறார்கள் என்கிற காரணத்தால் அவர்கள் சுடப்படுகிறார்கள். ராமேஸ்வரம் மீனவர்கள் கடத்தல் தொழிலும் செய்கிறார்கள் என்று இங்குள்ள காவல்படைகளும் மீனவர்கள் வாழ்க்கையில் அத்துமீறுகிறார்கள். கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகும், அன்றாடம் மரணத்தை கையில் பிடித்துக்கொண்டுதான் மீன்பிடிக்க செல்லும் வாழ்க்கை நிலைமை.

மூன்று: அரசியல் ஆட்டங்கள்

ஈழப்போரை முடிவுக்கு கொண்டுவந்ததில் இந்திய அரசாங்கத்தின் கணிசமான பங்கையும், சண்டை உச்சமடைந்த காலகட்டங்களில் தமிழக அரசியல் கட்சிகளில் இரட்டை நிலைபாடுகளும், இலங்கை பிரச்னைகளில் முன்னுக்குப்பின் முரணான அவர்களின் முன்னெடுப்புகளையும், பல்வேறு ஊடகங்களுக்கு அளித்த செய்திகள் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன.

அதேபோல தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்திலும் இங்குள்ள தலைவர்கள் சரியான முடிவுகளை முன்வைப்பதில்லை என்பதும், அந்தந்த நேரத்து அரசியல் ஆதாயத்துக்காக மீனவர் பிரச்னைகளை பேசுகிறார்கள் என்பதையும் முன்வைக்கிறது. முக்கியமாக மீனவர்களின் தங்கள் வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் அரசியல்வாதிகள் மீது விமர்சனங்களை வைக்கிறார்கள்.

நான்கு: குழப்பமான குறியீடுகள்

படம் நெடுக வரும் குறியீடுகள் முக்கியமான பல விஷயங்களை பேசுகிறது. ஆனால், இந்த குறியீடுகள் எல்லாமே ஒரு தேர்ந்த பார்வையாளனை முன்வைத்து நகர்கிறது என்று குறிப்பிடலாம். குறிப்பாக, ரேடியோவும் கையுமாக, மனப்பிறழ்வோடு அலையும் அந்த புலம் பெயர்ந்த இளைஞர், ஆகப் பெரும் குழப்பத்தின் குறியீடு. தன் நிலமும், தன் மக்களும் சாகும் நிலையில் அந்த இளைஞர் 'செந்தாழம்பூ' பாட்டு கேட்கிறார். ஈழப்போர் முடிவுக்கு வந்ததாக அறிந்ததும் ஒரு வித துயர மனதோடு ரேடியோவை விட்டுவிட்டு எங்கோ மறைகிறார்.

இரண்டாவதாக, மணிமேகலை தன்னோடு வைத்திருக்கும் ஆமை. சாதாரணமாக ஆமை என்பது 'விளங்காத' ஒன்றின் குறியீடாகத்தான் எடுத்துக்கொள்ளப்படுகிறது நமது சமூகத்தில். இந்தப் படத்தின் மையமான மணிமேகலை பாத்திரம் வளர்ப்பதும், ராமேஸ்வரத்திலிருந்து ஊருக்கு திரும்ப வேண்டிய பொழுது, ஆமையை கடலுக்குள் விடுவதும் மிக நுட்பமான ஒரு அரசியலை சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம். இந்த நேரத்தில் இறுதிப்போர் முடிந்துவிட்டதாகவும், பிரபாகரன் மரணமடைந்துவிட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது.

ஐந்து: வெற்றிபெறும் வசனங்கள்; தோல்வியடையும் உணர்ச்சிகள்

பெறும் துயரங்களை காட்சிப்படுத்தும் இந்தப் திரைப்படம் உண்மையான உணர்ச்சிகளை தூண்டவில்லை என்பதுதான் உண்மை. அகதிகளாக வருபவர்களின் உள்ளாடை வரை உருவி சோதனைபோடும் காட்சியும், அவர்கள் தங்களது தாய்மண்ணை மூட்டை கட்டி எடுத்துவரும் காட்சியையும் அப்படி குறிப்பிடலாம். அதேபோல மீனவர்களை சோதனை இடுவதாக சொல்லிக்கொண்டு அத்துமீறும் காவல்துறையினரின் காட்சிகளும் பார்வையாளளை 'தேமே' என்றுதான் இருக்க வைக்கிறது.

அதேசமயத்தில் வசனங்கள் ஒவ்வொன்றும் கூர்மையான அரசியல் விமர்சனங்கள் என்று சொல்லலாம். "இந்திய அரசாங்கம் கொடுத்தா இலங்கை அரசாங்கம் தமிழர்கள் மீது ரசாயான குண்டு போடும்", ''ஒரு ஐநூறு பக்கத்துல எல்லா பிரச்னைகளுக்கு தீர்வு வெச்சிருக்கீங்க", "அரசாங்கத்துகிட்டதான் முதல்ல ஆயுதங்கள களையணும்" போன்றவை முக்கிய கவனம் பெறக்கூடியது

ஆகமொத்தத்தில் ஒரே மொழி எனும்போது இரு நாடு, இரு நாடு என்றால் ஒரு மொழி என்கிறது செங்கடல். உண்மைதான் ஈழத்தமிழனின் துயரமும், தமிழக மீனவனின் துயரமும் ஒரே புள்ளியில் மையங்கொள்வதும் இங்குதான். இலங்கை அரசுக்கு இந்திய அரசு சகல உதவிகளையும் செய்திருக்கிறது. தமிழக மீனவன் தாக்கப்படும் போதும் கண்டுகொள்வதில்லை என்பது இன்றளவும் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்கிறார்கள் இந்த பிரச்னைகளில் அக்கறையான குரல் கொடுப்பவர்கள். இந்தப் படம் அந்த வகையான முயற்சி என்று சொல்லலாம்.

இது மாதிரியான முயற்சிகளில் வணிக சாத்தியங்களுக்கு இடமில்லை என்பது சரியானதுதான். அதேசமயம் இரத்தமும் சதையுமான இந்த வாழ்க்கையை அதே உணர்ச்சியோடு பார்வையாளனுக்கு கடத்த முடியாமல் காட்சிகள் தேங்குகின்றன. சில இடங்களில் எந்த உணர்ச்சிகளுமற்று நீளும் ஓர் ஆவணப்பட உணர்வை தருகிறது.

தமிழர் அல்லாத பார்வையாளர் இந்தப் படத்தைப் பார்க்கும்போது, 'இது திரைப்படமா?' அல்லது 'ஆவணப் படமா?' அல்லது 'இரண்டும் கலந்த டாக்கு-டிராமா வகையறாவா?' என்றக் குழப்பம் வரலாம்.

இலங்கைத் தமிழ் அகதிகளின் நிலை, தமிழக மீனவர்கள் பிரச்னைகளை நேரடியாக ஆவணப்படமாக மட்டுமே காட்டியிருந்தால், அதன் வீரியம் இன்னும் வலுவாகியிருக்கக் கூடும்.

இல்லையேல், ஒரு கதையினூடே உண்மைகளை ஆவணப்படுத்தியிருந்தால், அதன் தாக்கம் இன்னும் மிகுதியாகியிருக்கும் என்றே தோன்றுகிறது.

என்றாலும், தமிழ் சினிமாவின் பிரலங்களும் மூத்தப் படைப்பாளிகளும் ஒரு காட்சியாகக் கூட வைப்பதற்கு தயங்கும் தமிழர்களின் துயரத்தை, தனக்குத் தெரிந்த வடிவில் வெளிக்கொணர்ந்துள்ள லீனா மணிமேகலையின் முயற்சியாலும் தைரியத்தாலும் இப்படத்தின் குறைகள் தானாக கறைந்துபோகின்றன

-VIKATAN.COM

நன்றி தகவலுக்கு. பார்க்கவேண்டிய வண்ணத்திரைப்படம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தில் சோ.சக்தி நடித்திருக்கிறார் தானே :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.