Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேச்சு மேசையில் இருந்து வெளியேறி உரிமைக்காக கூட்டமைப்புப் போராடட்டும்; அதற்கான காலம் வந்துவிட்டது

Featured Replies

பேச்சு மேசையில் இருந்து வெளியேறி உரிமைக்காக கூட்டமைப்புப் போராடட்டும்; அதற்கான காலம் வந்துவிட்டது என்கிறார் விக்கிரமபாகு இடதுசாரிகளின் ஆதரவு அதற்கு உண்டு எனவும் தெரிவிப்பு

12345.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு மேடையிலிருந்து உடன் வெளியேறித் தமிழ் மக்களின் உரிமைக்காகத் தேசிய, சர்வதேச ரீதியில் பெரும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்குத் தயாராக வேண்டும்.

இடதுசாரிகள், கூட்டமைப்பின் எந்தவொரு முடிவுக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராகவே உள்ளனர். உரிமைகளுக்காகப் போராடும் இளைஞர் அமைப்புகளை ஒன்றுதிரட்டும் நடவடிக்கையையும் கூட்டமைப்பு, உடன் ஆரம்பிக்க வேண்டும். இவ்வாறு நவசமசமாஜக் கட்சி வலியுறுத்தி உள்ளது.

அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பாக "உதயனு'க்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே நவசமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளரும் தெஹிவளை கல்கிஸை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:

வெளிநாடுகளில் நகரசபைகளுக்குக்கூட பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் உட்பட முக்கியமான அதிகாரங்களை வழங்குவதற்கு மஹிந்த அரசு மறுப்புத் தெரிவிக்கின்றது.

ஜனாதிபதி நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவே அதிகாரப் பரவலை வலியுறுத்தியுள்ளது. நிலைமை அப்படியிருக்கையில், அரசு மழுப்பல் போக்கைக் கடைப்பிடிப்பது ஏன்?

13ஆவது அரசமைப்பில் திருத்தம் செய்யவுள்ளோம் என அரசு கூறுவது அபத்தமானது. இதனை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இனவாதம் என்ற கொடூர அரக்கன் சிறுபான்மையினத்தவரின் உரிமைகளை விழுங்கி ஏப்பம் விடுகின்றான். பிரதான எதிர்க்கட்சியில் இனவாதப் போக்குடையவர்கள் இருப்பதும் மஹிந்த அரசுக்குச் சாதகமாகவே அமைந்துள்ளது. சக்திவாய்ந்த எதிர்க்கட்சி ஒன்று அவசியம். அதனைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் முயற்சிக்க வேண்டும். இல்லையேல் நாடு படுபாதாளத்தை நோக்கிப் பயணிக்கும்.

அதைத் தரமாட்டோம்; இதைத் தரமாட்டோம் எனக் கூறிக்கொண்டு பேச்சைத் தொடர்பவர்களுடன் பேசுவதில் எந்தப் பயனுமில்லை.

கூட்டமைப்பு, உடன் பேச்சு மேடையிலிருந்து வெளியேற வேண்டும். அவ்வாறு வெளியேறி தேசிய, சர்வதேச ரீதியில் பெரும் உரிமைப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

உள்நாட்டிலுள்ள சிங்கள மக்களுக்குத் தமிழர்களின் பிரச்சினையைத் தெளிவுபடுத்தும் வகையில் கூட்டமைப்பு பெரும் கூட்டங்களைத் தெற்கில் நடத்தவேண்டும். அதற்கு நாம் பூரண ஒத்துழைப்பையும் வழங்குவோம் என்றார்.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=39924715124445021

எங்கிருந்து?

  • தொடங்கியவர்

சிவில் சமூகத்தின் விண்ணப்பம் தொடர்பில் மன்னார் ஆயருக்கு சம்பந்தன் கடிதம்

வடக்கு-கிழக்கு சிவில் சமூகத்தின் விண்ணப்பம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களோடு கலந்துரையாடுவதற்குத் தயாராக உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்புக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தின் விபரம் வருமாறு,

தமிழ் மக்களின் ஒரு சில பிரச்சினை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தாங்களும் இன்னும் சிலரும் அனுப்பிய கடிதத்திற்கு பதிலாக இக்கடிதத்தை எழதுகிறேன். அதிக வேலைப்பளுவின் நிமித்தம் பதில் எழுதுவதில் ஏற்பட்ட தாமதத்திற்காக வருந்துகிறேன்.

எனக்கு கிடைக்கப்பெற்ற கடிதத்தில அநேகர் கையெழுத்தாளர்களாக குறிப்பிடப்பட்டிருந்தாலும் எவரும் அக்கடிதத்தில் கையெழுத்திட்டிருக்கவில்லை. எனினும் தங்களின் பெயர் முதன்மையாக இருந்தபடியினால் இப்பதிலைத் தங்களுக்கு எழுதத் தீர்மானித்தேன். தாங்கள் அனுப்பிய கடிதமானது ஊடகங்களிலும் முக்கியத்துவம் பெற்றிருந்ததை அவதானித்தேன். எனவே இப்பதில் கடித்தையும் ஊடகங்களுக்கு தெரியப்படுத்துவேன் என்பதை தங்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன்.

அரசாங்கத்திற்கும் எமக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் இடம்பெறும் எல்லா விடயங்களையும் பொது மக்களுக்கு வெளியிடுவது சாத்தியமற்றதாகும். எனினும் ஏற்றுக்கொள்ளக் கூடியதும் நடைமுறைச் சாத்தியமானதும் நிலையானதும் பெரும்பான்மையான எமது மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடியதுமான அரசியல் தீர்வை நோக்கியதாக எமது பேச்சுவார்த்தை கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகிறேன்.

தங்கள் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் குறித்து தங்களோடும் ஏனையவர்களோடும் கலந்துரையாடுவதற்கு நாம் தயாராக உள்ளோம்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=35771

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.