Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் கடற்பெருக்கு;சுனாமி அச்சத்தில் மக்கள் பதற்றம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

dangerous-sea_5568-150x150.jpg

முல்லைத்தீவுக் கடற்கரைப்பகுதியில் இன்று இரவு 9 மணியளவில் திடீரெனக் கடல்பெருக்கெடுத்து ஊர்மனைகளுக்குள் புகுந்து கொண்டதால் மக்கள் உயிரைக் கையில் பிடித்தபடி இடம் பெயர்ந்து வருகின்றனர்.

அலம்பில், உடுப்புக்குளம், சிலாவத்தை, கள்ளப்பாடு,செம்மலை, முல்லைத்தீவு நகரம் என்பன் இந்த்க் கடற்பெருக்கால் பாதிப்புற்றுள்ளன.திபு திபுவென இன்று மாலை கரையை நோக்கி வந்த கடலைப் பார்த்து மக்கள் அச்சம் கொண்டனர்.

அதுவும் ஆழிப்பேரலை ஏற்பட்டு ஏழாம் ஆண்டு நிறைவுநாளில் இவ்வாறு கடல் பெருக்கெடுத்ததால் மீண்டும் சுனாமி ஏற்பட்டு விட்டதாகப் பயந்து கையில் அகப்பட பொருள்களுடன பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து சென்றனர். இதனால் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப் பட்டுள்ளன. இவ்வாறு உட்புகுந்த கடல்நீர் நீர் வற்றாமல் முழங்கால் அளவுக்கு இன்னமும் அங்கேயே- கரையில் இருந்து சுமார் 250 மீற்றர் வரை உள்வந்து- நிற்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.saritham.com/?p=45428

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் பெருக்கெடுத்தது கடல்: சுனாமி அச்சத்தில் மக்கள் ஓட்டம்!!

ebfcc4e0f07185758111b28006856898.jpg

முல்லைத்தீவில் நேற்றிரவு கடல்நீர் பெருக்கெடுத்து ஊர்மனைக்குள் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்றிரவு 9 மணியளவில் முல்லைத்தீவை அண்டிய கடற்கரை பிரதேசத்தில் இருந்து கரையை அண்டிய பகுதிகளுக்கு திபு திபுவென கடல் நீர் திடீரென உட்புகத்தொடங்கியது

.

இதனால் ‘சுனாமி வந்துவிட்டது’ என மக்கள் அலறியடித்துக் கொண்டு கையில் அகப்பட்ட பொருள்களோடு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர்.கடற்கரையோரமாக நிறுத்தப்பட்டிருந்த படகுகளும் இதன்போது உள்ளிழுத்து வரப்பட்டன.ஏறக்குறைய முழங்கால் அளவுக்கு உயரமான கடல்நீர் ஊர்மனைக்குள் புகுந்திருந்தது.

செம்மலை, கள்ளப்பாடு,அளம்பில், முல்லைத்தீவு நகரை அண்டிய பகுதி, உடப்புக்குளம் என்பன இந்தக் கடற்பெருக்கின் போது பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.ஊர்மனைக்குள் புகுந்த கடல்நீர் இன்னமும் வற்றாமல் இருப்பதாகக் கூறப்படுகின்றது.இதன்போது உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத்தெரிகிறது.

ஆழிப்பேரலை ஏற்பட்டு ஏழு வருடங்கள் பூர்த்தியான நாளில் இது போன்று திடீரென கடற்பெருக்கு ஏற்பட்டதால் மக்கள் தொடர்ந்தும் அச்சத்திலேயே இருக்கின்றனர்.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=52188721027141819

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையன்னை கூடத் திரும்பத் திரும்ப, நொந்தவர் வீட்டுக் கதவுகளைத் தான் தட்டுகின்றாள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.