Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா? (யாழ் காணொளி)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

yarl-music-100x100.jpg

கொலை வெறிப்பாடல் வெளிவந்ததை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலைஞர்களும், ரசிகர்களும் பல்வேறுபட்ட பாடலின் பதிப்புக்களை வெளியிட்டவண்ணம் உள்ளனர்.

அதன் புதிய வடிவமாக தற்போது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள “என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா” இவ் இசைக் காணொளியில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி நகரின் தோற்றத்தினை காண்பிக்கும் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதுடன் யாழில் முதன் முதலாக அதி உயர் வடிவத்தில் (1080p HD)தயாரிக்கப்பட்டுள்ளது.

கொலவெறிப்பாடலின் வரிகளை முற்றிலுமாக மாற்றியமைத்து இசைக்கு மேலும் மெருகூட்டிய பாடலின் பரிணாமம் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இளம் இசையமைப்பாளர் எஸ்.ஜே.ஸ்ரலின் அவர்கள் பாடல் வரிகளை எழுதி, பாடலையும் பாடியுள்ளார். அண்மையில் இவர் இசையமைத்த ‘தண்ணீர்’ குறும்படம் 2011ற்கான சிறந்த குறும்பட இசை விருதை வெண்றமை குறிப்பித்தக்கது.

இப்பாடல் காணொளியை ‘யாழ் மியூசிக்’ நிறுவனம் தயாரித்துள்ளதுடன் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட இவ் இசை நிறுவனம் தொடர்ந்தும் எம்மவர் படைப்புக்களையும், கலைஞர்களையும் அடையாளப்படுத்தும் படைப்புக்களை தாயாரித்து வருகின்றது.

http://www.saritham.com/?p=46185

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொலைவெறியா்களிற்கு நல்ல பதில். புலத்திலுள்ள நாங்கள் கொலைவெறிப்பாடலை கேட்கின்றோம்(இரசிக்கின்றோம்).கொலைகளத்திலுள்ள உறவுகள் கொலைவெறிப்பாடலை கேட்கின்றார்கள் (கேள்வி)

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க என்ன தான் தமிழ் தமிழ் என்று மாரித் தவளை போல கத்திக்கிட்டு திரிஞ்சாலும்.. உலகம்.. ஆங்கில மொழி கலந்து வரும் பாட்டைத் தான் அதிகம் விரும்புகிறது.. ஏன் ரசிக்கக் கூடச் செய்கிறது.. ஏன் அதையே நாகரிகமாகவும் கருதுகிறது...! தனுசின் கொலைவெறி 2011 ம் ஆண்டில் உலகில்.. யு ரி யுப்பில் அதிகம் பார்க்கப்பட்ட பாடலானது இதனாலேயே ஆகும்.

தனுசின் கொலைவெறி என்ற தமிழ் சொல் இன்று.. உலகம் பூராவும் உச்சரிக்கப்படுவதில்.. அது என்ன சொல் என்று அறிய தேடல் செய்யும் பலரிடம் அட தமிழ் என்று ஒரு மொழி இருக்கா என்ற கேள்வியும் எழுவதைக் காண்கிறோம்.

வெறுமனவே எமக்குள்.. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த குடி.. மொழி... வள்ளுவன்.. இளங்கோ.. பாரதி என்று இவ்வளவு காலம் பேசிக்கிட்டு இருந்தது உலகில் எமது மொழி பற்றிய அறிதலை ஏற்படுத்தியதை விட.. தனுசின் கொலைவெறி உலகின் மூலை முடுக்கெல்லாம்.. தமிழை.. ஒரு மொழியாக அறிய.. இனங்காணச் செய்துள்ளமை.. அந்தக் கொலைவெறியில் கிடைத்த எதிர்பாராத நன்மை எனலாம். :):icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

post-4635-0-17077700-1325518264_thumb.jp

தமிழன்ட ஊர் பேரை சிங்களத்தில் முதலாவதாக போட்டிருக்கும் படத்தை பெரிய பந்தாவாக காட்டுறத்திலும் பார்க்க தனுஷின் பாடல் ஒண்டும் தமிழுக்கு பெரிய கெடுதல் செய்யவில்லை.

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் வரிகள்

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?

என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா…

கல் தோன்றி மண் தோன்றா முன்வந்த தமிழ்மொழிடா…

நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா…

செம்மொழி போற்றும்

செந்தமிழ் நாட்டில்

தமிழிற்கேன் பஞ்சம்?

தமிழை விற்று

பதக்கம் வாங்கும்

தமிழா கேள் கொஞ்சம்…

கம்பனின் வரிகள்…

வள்ளுவன் குறள்கள்…

பாரதி கவிகள் எங்கே?

தொன்று தொட்டு…

பழமை பாடும்…

தமிழர் பெருமை எங்கே?

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா…? – தமிழா

என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா

யேசு, புத்தன்,

காந்தி சொன்ன

அகிம்சை வழியைக் கேளு – தினம்

தமிழின் செழுமை

படித்து வந்தால்

தணியும் கொலவெறி பாரு..!

ஆச்கார் வாங்கிய

தமிழன் சபையில்

பெருமை சேர்த்தான் தமிழில்..

செம்மொழி பாடிய

புரட்சிக் கவிஞன்

தன்னுயிர் கலந்தான் தமிழில்..!

தமிழை வாழவை இல்லை வாழவிடு

இன்னும் தாங்காதடா மனசு

தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு

நமக்கு அதுமட்டுந்தான் இருப்பு

தமிழுக்காக உழைத்தவனெல்லாம்

வாய்ப்பைத் இழந்து நின்றான்…

தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்

நான் தான் கலைஞன் என்றான்…

பணத்திற்காக படைப்பவன் எவனும்

உண்மைக் கலைஞனில்ல – அவன்

கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்

அவனும் ரசிகனில்ல

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா – தமிழா

என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா

யாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா – தமிழா

எம் தாய் மொழி காப்பது தமிழன் உன் கடமையடா…

வரிகள்: எசு.சே.தாலின்

ஒளிப்பதிவு: வர்ணன் & அமலன்

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க என்ன தான் தமிழ் தமிழ் என்று மாரித் தவளை போல கத்திக்கிட்டு திரிஞ்சாலும்.. உலகம்.. ஆங்கில மொழி கலந்து வரும் பாட்டைத் தான் அதிகம் விரும்புகிறது.. ஏன் ரசிக்கக் கூடச் செய்கிறது.. ஏன் அதையே நாகரிகமாகவும் கருதுகிறது...! தனுசின் கொலைவெறி 2011 ம் ஆண்டில் உலகில்.. யு ரி யுப்பில் அதிகம் பார்க்கப்பட்ட பாடலானது இதனாலேயே ஆகும்.

இப்பாடல் புகழ் பெற்றதற்காக காரணம் -குமுதம் ரிப்போட்டர் (22.12.11 )சிங்கிள் ட்ராக் பாடலை திருட்டுத்தனமாக ஹிட் ஆக்குவதுதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஸ்டைல். இதன்படி முக்கியமான படங்களின் ஆடியோ உரிமையை பெரிய நிறுவனங்களில் ஒன்று வாங்கி விடுமாம். பிறகு சம்பந்தப்பட்ட நிறுவனமே அந்தப் படத்தின் பரபரப்பான பாடல் ஒன்றை இணையதளத்தில் ஏற்றிவிடுமாம். பிறகு, அவர்களே பாடல் யூ ட்யூப்பில் லீக் ஆகிவிட்டதாக செய்தியைக் கிளப்பி விடுவார்களாம். அது என்ன பாட்டு என்று ஆர்வத்தோடு பல பேர் அதை டவுன் லோட் செய்யச் செய்ய, பாட்டும் ஹிட்டாகிவிடுகிறதாம். ‘அட தேவுடா.. ஒய் திஸ் கொலவெறி?’

தமிழ் கட்டும் கோவணம்

Sri-Lanka_534659a.jpg

idp-211x300.jpg

16_03_09_wounded_01.jpg

SRI_LANKA_WAR_REFUGE_13539f.jpg

எஞ்சியது வெறுமை மட்டும்

அதை எனது தொடர்புக் கருவியான

தமிழில் எழுதுகின்றேன்

இந்தக் கருவி மட்டும்

கர்வத்துடன் இருக்கின்றது

எனது உணர்ச்சிகளுக்கும்

இந்தக் கருவிக்கும்

தொடர்பில்லாமல் போய்விட்டது

நான் அம்மணமாக நிற்கின்றபோதும்

நான் பேசும் மொழி கோவணத்துடன் நிற்கின்றது

பணமும் அதிகாரமும் உள்ளவர்கள்

எனது கோவணத்தை உருவி

நான் பேசும் மொழிக்கு கட்டுகின்றார்கள்

அதைப் பார்த்து

எம்மை கைகொட்டி ஆரவாரம்

செய்ய வற்புறுத்துகின்றார்கள்

ஆனால் எனது பிறப்புறுப்பை

எனது இருகைகளால் பொத்தவேண்டியிருக்கின்றது

என்பதை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்

நான் எப்ப சிரித்தேன் என்று நினைவில்லை

அழுகைகள் தான் என்னுடன் கூட வருகின்றது

நான் தமிழில் அழவில்லை

ஆங்கிலம் பிரஞ்சு யேர்மன் எந்த மொழியிலும் அழவில்லை

அதற்கு மொழி இல்லை

கோவணத்துடன் நிற்கும் இந்த மொழியால் அதை புரிந்துகொள்ள முடியாது

எமது காதில் கேட்ட வெடிச்சத்தங்களும் மொழிக்குள் அடங்காது

எமது காதில் கேட்ட கதறல்களும் ஒப்பாரிகளும் மொழியற்றவை

அதற்கு எந்த கெளரவமும் தேவை இல்லை

ஏனெனில் அவை என்னுடன் நிர்வாணமாய் இருக்கின்றது

அழுவதற்கு எந்த மொழியும் தேவையில்லை

http://agk91.blogspot.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் கட்டும் கோவணம்

Sri-Lanka_534659a.jpg

idp-211x300.jpg

16_03_09_wounded_01.jpg

SRI_LANKA_WAR_REFUGE_13539f.jpg

எஞ்சியது வெறுமை மட்டும்

அதை எனது தொடர்புக் கருவியான

தமிழில் எழுதுகின்றேன்

இந்தக் கருவி மட்டும்

கர்வத்துடன் இருக்கின்றது

எனது உணர்ச்சிகளுக்கும்

இந்தக் கருவிக்கும்

தொடர்பில்லாமல் போய்விட்டது

நான் அம்மணமாக நிற்கின்றபோதும்

நான் பேசும் மொழி கோவணத்துடன் நிற்கின்றது

பணமும் அதிகாரமும் உள்ளவர்கள்

எனது கோவணத்தை உருவி

நான் பேசும் மொழிக்கு கட்டுகின்றார்கள்

அதைப் பார்த்து

எம்மை கைகொட்டி ஆரவாரம்

செய்ய வற்புறுத்துகின்றார்கள்

ஆனால் எனது பிறப்புறுப்பை

எனது இருகைகளால் பொத்தவேண்டியிருக்கின்றது

என்பதை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்

நான் எப்ப சிரித்தேன் என்று நினைவில்லை

அழுகைகள் தான் என்னுடன் கூட வருகின்றது

நான் தமிழில் அழவில்லை

ஆங்கிலம் பிரஞ்சு யேர்மன் எந்த மொழியிலும் அழவில்லை

அதற்கு மொழி இல்லை

கோவணத்துடன் நிற்கும் இந்த மொழியால் அதை புரிந்துகொள்ள முடியாது

எமது காதில் கேட்ட வெடிச்சத்தங்களும் மொழிக்குள் அடங்காது

எமது காதில் கேட்ட கதறல்களும் ஒப்பாரிகளும் மொழியற்றவை

அதற்கு எந்த கெளரவமும் தேவை இல்லை

ஏனெனில் அவை என்னுடன் நிர்வாணமாய் இருக்கின்றது

அழுவதற்கு எந்த மொழியும் தேவையில்லை

http://agk91.blogspot.com/

எஞ்சிய அவன் கோவணத்தையும் பிடுங்கி மகிந்தாவுக்கு தலைப்பாகை கட்டுகின்ற அந்தக் கரங்கள்தானாம், அவைகளுக்குத்தானாம் எல்லா உரிமையும் அவர்களைப் பற்றிப் பேச இருக்கின்றதாம்!

கண்களைப் பிடுங்கி பிச்சை ஏந்தும் பாத்திரங்களாக சிறார்களை மாற்றிய கயவர்களே மக்களுக்குச் சொல்கின்றார்கள்! "கருணை கொண்ட உள்ளங்களாக வாழுங்கள் மக்கள்ளே!"

பாவத்தை விதைத்தவனே, கருணைக்கு கம்பளம் விரிக்கின்றான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.