Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாருஸ்மன் அறிக்கையை நிராகரிக்கின்றோம் - ஐ.தே.க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Rejected_CI.jpg

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால்நியமிக்கப்பட்ட தாருஸ்மன் தலைமையிலான குழுவினரின் இறுதி அறிக்கையை நிராகரிப்பதாக ஐக்கியதேசியக் கட்சி அறிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கியநாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால், தாருஸ்மன் தலைமையிலான மூவர் அடங்கிய குழுநியமிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை நிராகரிப்பதாக அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

அறிக்கை வெளியிடப்பட்டு பல மாதங்கள் கடந்த நிலையிலும் ஐக்கியதேசியக் கட்சி தமது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளியிடவில்லை.

குறித்த அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் சிரேஸ்டஅரசாங்க உத்தியோகத்தரும், ரணில் விக்ரமசிங்க பிரதமராக ஆட்சி செய்த காலத்தில்அவரின் செயலாளராக கடமையாற்றிய பிரட்மன் வீரக்கோன் தலைமையில் குழுவொன்றுநியமிக்கப்பட்டுள்ளது.

தாரூஸ்மன் அறிக்கையை நிராகரிப்பதாக தற்போது ஐக்கிய தேசியக்கட்சி அறிவித்துள்ளது.

பிரட்மன் வீரக்கோன் தலைமையிலான குழுவினர் அறிக்கைசமர்ப்பித்தார்களா என்பது பற்றி அறிவிக்கப்படாத நிலையில், அறிக்கையை நிராகரிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

தாருஸ்மன் அறிக்கை அரசாங்கத்தின் குழந்தை என கட்சிசுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் லக்ஸ்மன் கிரியல்ல போன்ற சிலபாராளுமன்ற உறுப்பினர்கள் தாருஸ்மன் அறிக்கையின் சில விடயங்களை வரவேற்பதாக கடந்தகாலங்களில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.globaltam...IN/article.aspx

குணத்தை காட்டிவிட்டான் சிங்களவன்

இந்த குணம் இல்லாமையினால்.. இன்று தமிழினம் செத்து.. அழிந்து.. முடிந்து.. அந்திரட்டிக்கும் போயிட்டு வந்தாச்சு..

(அங்கையும் இங்கையுமா திரியிர தமிழ் ஆவி, பேய், பிசாசுகளை கணக்கெடுக்கத்தேவைய்யில்லை)

  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்திக்கு இங்கே வீற்றிருந்து ஆலோசனைகளை அள்ளி வழங்கும் மாற்றுக்கருத்தாளர்களின் நிலைப்பாடு என்ன? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சனத்திற்கு அம்னீசியா அதிகம்.. என்றது சிங்களவனுக்கு நல்லா தெரியும்.

ஐக்கிய தேசியக் கட்சி.. சுதந்திரக் கட்சி.. ஜே வி பி.. கெல உறுமய.. என்ன தமிழ் மக்களுக்காக உழைக்கும் கட்சிகளா..??! முழுச் சிங்கள தேசியவாத தேசக் கட்சிகள். ஐக்கிய தேசியக் கட்சி.. ஐநா அறிக்கையை எதிர்க்காமல் இருந்தது தான் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்ததே தவிர... இது எதிர்பார்த்த ஒன்று தான்..!

தமிழின அழிப்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மிகப் பெரிய பங்களிப்புகள் உண்டு. அதேபோல் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் உண்டு. ஜனநாயகப் போர்வை போர்த்துக் கொண்டு.. சிங்கள இராணுவ இயந்திரத்தை ஏவி.. தமிழ் மக்கள் மீதான இன அடக்குமுறையும் அழிப்பையும் சிங்களம் சர்வதேசத்தின் கண்களில் சட்டங்களில் மண்ணைத் தூவி விட்டு செய்து வருகிறது.

ஈராக்கில் 160,000 பேரைக் கொன்ற அமெரிக்க கூட்டுப் படைகள் வெளியேறி விட்டன. ஆனால் 60 ஆண்டுகளாக எம்மை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கும் சுமார் 240,000 தமிழர்களைக் கொன்ற சிங்களப் படைகள் நிரந்தர குடியிருப்பமைத்து குடியிருக்க எம்மவர்களே மாற்றுக் கருத்தென்று சிங்கள ஆட்சியாளர்கள் வலுவாக தம்மை தமிழர் நிலத்தில் கால் பதிக்க அனுமதிக்கின்றனர்.

நாம் சிங்களப் படைகளை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையைக் கூட ஒரு மனதாக சர்வதேசத்திடம் ஆணித்தரமாக வைத்ததை நான் காணவில்லை. இந்த நிலையில் எப்படி எமக்கு உருப்படியான தீர்வுக்காக சர்வதேசம் குரல் கொடுக்க முன் வரும்..?????!

எம்மில் சிங்களவனுக்கு இனத்தை காட்டிக் கொடுத்து அரசியல் நடத்த ஆட்கள் உள்ளவரை எமது உரிமைக்கான.. விடுதலைக்கான குரல்களை ஒடுக்க சிங்களவன் அவசியமில்லை. எம்மவர்களே அதை கச்சிதமாக மாற்றுக் கருத்து மண்ணாங்கட்டிக் கருத்து.. சனநாயகச் சூழல் என்று செய்து கொண்டிருப்பார்கள்.

வட அயர்லாந்துக் கிளர்ச்சியை அடுத்து.. 1998 ஈஸ்ரர் உடன்படிக்கை உருவாகிய பின்.. அங்கு பிரித்தானியப் படைகள் தமது இருப்பை வெகுவாகக் குறைத்துக் கொண்டுள்ளதோடு படைகளை முகாம்களுக்குள் முடக்கிக் கொண்டுள்ளது. ஆனால் எம்மவர்களோ.. இன்றும் சிங்களப் படைகளின் இருப்பில் தங்கள் பாதுகாப்பு இருப்பதாகச் சொல்லி ஆயுதம் ஏந்திய சன நாயகக் கட்சிகளை கொலையும் கொள்ளையும் செய்யும் கப்பமும் பெறும்.. கட்சிகளாக வளர்த்து வருகின்றனர்.

அவன் ஒருத்தன்.. இத்தனை ஆயிரம் போராளிகளையும் சாகக் கொடுத்த மட்டக்களப்பில் இருந்து போய்.. சிங்களத்திகளை கட்டிப்பிடிச்சு கும்மாளம் அடிச்சுக் கொண்டிருக்கிறான். பிழைப்புக்கு பிரதேச வாதம் பேசிய அவரால்.. மட்டக்களப்பு மண் சிங்களத்திடம் பறிபோவது தெரியாமல் இருப்பது தான் வியப்பாக இருக்கிறது.

வலையிறவு விமானப்படை தளத்தை விரிவாக்க பல நூறு ஏக்கர் காணிகளை சிங்கள அரசு கையகப்படுத்தி உள்ளது. இப்படிப் பல வழிகளில் கிழக்கு மண் சிங்கள நிலமாகி வருகிறது.

இதனை எல்லாம் எந்த தமிழ் கட்சியாவது.. கண்டிச்சிருக்கா.. சுட்டிக்காட்டி இருக்கா...??! சர்வதேசத்தின் முன் இதனை கொண்டு வந்து நியாயம் கேட்டிருக்கா..??! இதனை தடுக்க சர்வதேச நடைமுறைகள் பற்றி ஆராயப்பட்டிருக்கா..???! என்றால் எல்லாம் இந்தியா பார்த்துக்கும் என்று கொண்டு தூங்கிக் கிடக்கிறார்கள். ஹிந்தியனோ.. தனது தென்மண்டல இராணுவ வலயப்ப பாதுகாப்புக் கருதி எங்களை சிங்களவனுக்கு அடைமானம் வைத்துக் கொண்டு திரிகிறான்.

தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்திருந்த ஒரு கட்சியான.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு புடுங்குப்பாட்டுக்குப் பெயர் போன கட்சியாக மாறி.. தமிழ் மக்கள் அதனிடம் நம்பி ஒப்புவித்த கடமைகளைக் கூட செய்ய முடியாத கந்தறு நிலையில் நிற்கிறது.

சரி.. புலம்பெயர் தமிழர்கள் தான் உருப்படியா ஏதாவது செய்வார்கள் என்றால்.. அவர்களும் சிங்களவனோடு சேர்ந்து இன ஐக்கிய பெருவிழாக்களை சிங்களத் தூதரகங்களில் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இதைத் தான் இராமநாதனும் செய்தார்.. பொன்னம்பலமும் செய்தார்.. தொண்டமானும் செய்தார்.. அமிர்தலிங்கமும் செய்தார்.. நீலன் திருச்செல்வமும் செய்தார்.. சங்கரியும் செய்தார்.. டக்கிளஸ் என்ற ஆயுத சன நாய் அகத்தின் பிதாமகனும் செய்கிறார்.. மற்றவர்களும் செய்கிறார்கள். கிடைத்த பலன்... பிரதேச சபைகளிலும்.. சிங்கள AGA க்களின் பெருக்கமே அன்றி வேறல்ல.

இந்த நிலையை.. உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சியும் பெரும்பாடுபட்டுள்ளது. பண்டா - செல்வா ஒப்பந்தத்தை கிழித்துப் போட்ட பெருமை உட்பட 1998 இல் சந்திரிக்கா கொண்டு வந்த அரைகுறைத் தீர்வுப் பொதியை கொழுத்திய பெருமை உட்பட பல பெருமைகள் ஐக்கிய தேசிய கட்சியின் வசம் உள்ளது. அதேபோல் 1983 இனக்கலவரத்தை தூண்டியமை.. கிளாலிப் படுகொலைகள்.. கொக்கட்டிச் சோலை படுகொலைகள்.. உட்பட பல படுகொலைகளுக்கு சொந்தக்காரர்களாகவும் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளது. அப்படியான ஒரு கட்சி எப்படி.. ஐநா அறிக்கையை ஏற்கும் என்று தமிழர்கள் சிலர் எதிர்பார்க்கின்றனரோ தெரியவில்லை. அதுவும் இல்லாமல் ஏதோ ஐக்கிய தேசியக் கட்சி நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாக வேறு சிலர் கதை அளக்கின்றனர்.

உண்மையில்.. ரணிலின் திட்டத்தை.. ராஜபக்ச செயற்படுத்த நினைக்க... கோத்தா கட்டளை இட.. சரத் பொன்சேகா செய்து முடித்ததே முள்ளிவாய்க்கால் படுகொலை. பின்னணியில் இருந்து அதற்கு உதவியது.. அன்னை சோனியாவும்.. தந்தை கருணாநிதியும்.. உலக வல்லரசுகளும்..! இதனை ஏற்றுக் கொண்டு அடுத்த கட்டம் நோக்கி புதிய சூழலில் மாற்றங்களோடு.. உரிமை நோக்கிய தேச விடுதலையைப் பெற நகர்வதற்கு வழியைப் பார்க்காமல்.. அடுத்தவன் தருவான் என்று எதிர்பார்த்து ஏமாறனும்.. ஏமாற்றனும் என்றிருந்தால் 40,000 மாவீரர்களையும் 200,000 மக்களையும் பலிகொடுத்திருக்கத் தேவையில்லை..! இதனால் அழிந்தது தமிழினமும்.. தமிழர் தேசமுமே அன்றி.. சிங்கள தேசமோ.. சிங்களவர்களோ.. மாற்றுக் கருத்து பேசி ஆயுத அரசியல் செய்யும் தமிழ் தேச விரோத சக்திகளோ அல்ல..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சனத்திற்கு அம்னீசியா அதிகம்.. என்றது சிங்களவனுக்கு நல்லா தெரியும்.

ஐக்கிய தேசியக் கட்சி.. சுதந்திரக் கட்சி.. ஜே வி பி.. கெல உறுமய.. என்ன தமிழ் மக்களுக்காக உழைக்கும் கட்சிகளா..??! முழுச் சிங்கள தேசியவாத தேசக் கட்சிகள். ஐக்கிய தேசியக் கட்சி.. ஐநா அறிக்கையை எதிர்க்காமல் இருந்தது தான் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்ததே தவிர... இது எதிர்பார்த்த ஒன்று தான்..!

கட்சிகள் என்றுமே மக்களின் எண்ணங்களைத்தான் பிரதிபலிக்கின்றன..! அவ்வாறு பிரதிபலிக்காத கட்சிகளின் நிலை என்ன என்பதற்கு விக்கிரமபாகுவின் கட்சியே சாட்சி..! :lol:

எங்களில் சிலரின் வியாக்கியான வசனம், பெரும்பாலான சிங்களவர்கள் நல்லவர்கள் என்பதே..! இதை வாசிக்கும்போது, கேட்கும்போதெல்லாம் சிரிப்புத்தான் வரும்..! சிங்களவர்கள் வெளியே என்ன தேன் ஒழுகப் பேசினாலும் ஆட்சிக்குத் தெரிவு செய்வது இனவாதிகளைத்தான்..! :rolleyes:

அதுபோல கலவரங்களை உருவாக்கும் ஆட்சியாளர்களைத் தெரிவு செய்வதும் அவர்களே..! பின்னர் அச்சமயத்தில் தமிழர்களைத் தாமே காப்பாற்றினோம் என்று கதை விடுவதும் அவர்கள்தான்..! அடுத்த தேர்தலில் அதே ஆட்சியாளர்களை மீண்டும் தெரிவு செய்வதும் அவர்களே..! :rolleyes:

மக்கள் எவ்வழி.. அரசியல்வாதி அவ்வழி..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எங்களில் சிலரின் வியாக்கியான வசனம், பெரும்பாலான சிங்களவர்கள் நல்லவர்கள் என்பதே..! இதை வாசிக்கும்போது, கேட்கும்போதெல்லாம் சிரிப்புத்தான் வரும்..! சிங்களவர்கள் வெளியே என்ன தேன் ஒழுகப் பேசினாலும் ஆட்சிக்குத் தெரிவு செய்வது இனவாதிகளைத்தான்..! :rolleyes:

இப்படிக் கருத்துச் சொல்பவர்களில் பலர் யாழ்ப்பாணம்.. மட்டக்களப்பு.. திருமலை.. அம்பாறையில் இருந்து.. நேராக கட்டுநாயக்காவுக்குள்ளால வந்து சிங்களவனை.. புலியை திட்டி.. அசைலம் அடிச்சிட்டு.. இப்ப கொலிடேக்கு தென்பகுதி உல்லாச விடுதிகள் புக் செய்து போய் வருபவர்களே..! அல்லது தேச விரோத சக்திகளோடு சேர்ந்து நின்று கொண்டு தேசத்தைக் காட்டிக் கொடுத்து சிங்களவனோடு அண்டிப் பிழைத்தவர்களே..!

தென்பகுதியில் சிங்களப் பெரும்பான்மை பள்ளிகளில்.. பல்கலைக்கழகங்களில்.. வேலையிடங்களில்.. அல்லது.. ஒரு 10 ஆண்டுகளாவது சிங்களப் பகுதிகளில்.. அல்லது சிங்களக் குடியேற்றக் கிராமங்களில்.. அதற்கு அருகில்.. சிங்களவர்களோடு.. (வெள்ளவத்தை.. கொட்டகேன.. பம்பலப்பிட்டி.. தெளிவளை.. முகத்துவாரம்.. வத்தளை.. இதெல்லாம் சிங்களவர்கள் வாழும் பகுதிகளாக கருதவே முடியாது..!) வாழ்ந்திருந்தால்.. தெரியும்.. ஒவ்வொரு சிங்கள சாமானியனுக்குள்ளும் ஊறி இருக்கும் சிங்கள இன வெறியை. அது பல ரூபங்களில் வெளிப்படுவதை அனுபவித்தவர்கள்.. இதனைச் செய்யமாட்டார்கள்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

ஐ.தே.க.வுக்கு நன்றிகள்.

ஐ.தே.க. ஐ.நா. அறிக்கையை நிராகரித்துள்ளமை கூட்டமைப்புக்கும் அது முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைகளுக்கும் சிங்களத்தின் உண்மை முகத்தை கூறவும் இவர்கள் எந்த நியாயமான தீர்வையும் தரமாட்டார்கள் எனக்கூறவும் உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததாக முஸ்லீம் கட்சிகளும் இந்த அறிக்கையை

எதிர்க்கலாம். எல்லாம் நன்மைக்கே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.