Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாவின் கனடிய விஜயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் குடிவரவு அமைச்சரிடம் கேள்வி எழுப்ப வேண்டுகோள்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Jim-Karygiannis_150news.jpg

இலங்கை அரசின் போர்க்குற்றங்களை நியாயப்படுத்திவரும் கருணா என்னும் விநாயகமூர்த்தி முரளிதரனின் கனடிய விஜயம் தொடர்பாக கனடியப் பாராளுமன்றத்தில் கனடிய குடிவரவு அமைச்சரிடம் கேள்விகள் நேரத்தில் கேள்விகளைக் கேட்டு விளக்கம் கோரும்படி ஜிம் கரிஜியானிஸ் பா.உறுப்பினரிடம் தமிழர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கை அரசின் போர்க்குற்றங்களை நியாயப்படுத்திவரும் கருணா என்னும் விநாயகமூர்த்தி முரளிதரனின் கனடிய விஜயம் தொடர்பாக கனடியப் பாராளுமன்றத்தில் கனடிய குடிவரவு அமைச்சரிடம் கேள்விகள் நேரத்தில் கேள்விகளைக் கேட்டு விளக்கம் கோரும்படி கனடாவின் ஸ்காபுறோ அஜின்கோர்ட் தொகுதியில் வாழும் தமிழ் அன்பர்கள் சிலர் மேற்படி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும் லிபரல் கனடிய லிபரல் கட்சியின் பல்கலாச்சார விவகாரங்களுக்கான பேச்சாளருமான கௌரவ ஜிம் கரிஜியானிஸ் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அண்மையில் இலங்கையின் அரசின் ஏற்பாட்டின்பேரில் ஜனாதிபதி மகிந்தாவின் ஆலோசகர் ஒருவரோடு சேர்ந்து மேற்படி கருணா என்னும் விநாயகமூர்த்தி முரளிதரனும் கனடாவிற்கு அனுப்பப்பட்டிருந்தார்.

இவரை கனடாவிற்கு அனுப்பி வைத்ததன் நோக்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் அழுத்தம் கொடுத்து பேசப்பட்டு வரும் வடக்கு- கிழக்கு இணைப்பு என்னும் நோக்கத்திற்கு எதிரான பிரச்சாரங்களை கனடாவின் அரச மட்டத்தில் மேற்கொள்ளுவதே என்று அறியப்பட்டது.

கனடிய அரசாங்கமும் தனது அண்மைக்கால அறிக்கைகளில் இலங்கையில் அமைதியும் சமாதானமும் தோன்ற வேண்டுமானால் வடக்கு கிழக்கு இணைந்த அரசியல் பகிர்வை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்கையில் மேற்படி கருணாவின் வருகையை கனடாவின் தமிழ் மக்கள் மிகவும் எதிர்க்கின்றார்கள். இந்தக் கருணா என்னும் முரளிதரன் இலங்கையின் அமைச்சர் அவையில் துணை அமைச்சர் பதவியைப் பெற்றுக்கொண்டு புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு எதிராகவும் இலங்கை அரசின் அண்மைக்கால போர்க்குற்றங்களை நியாயப்படுத்தியும் செயற்பட்டு வருகின்றார்.

விடுதலைப் புலிகளின் முக்கிய போராளியாக இருந்த கருணா பின்னர் அரசாங்கத்திற்கு தகவல்களை அனுப்புவராக மாறி அதன் பின்னர் அரசாங்கத்தின் நன்றிப் பரிசாக துணை அமைச்சர் பதவியைப் பெற்றுக்கொண்டு தொடர்ந்தும் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் நடத்தும் போராட்டங்களை இழிவு படுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றார்.

அத்துடன் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு செல்லும் தமிழ் மக்களை கடத்திச் சென்று அவர்களிடம் கப்பம் கோரும் குழுக்களையும் இவர் அமைத்துள்ளார். எனவே இவரது கனடிய பயணம் என்பது நியாய விரும்பிகளால் ஏற்றுக்கொள்ள முடியாதது.

இவர் கடந்த சில தடவைகளில் கனடாவிற்கு விசா பெற்று வர முயற்சித்த போது, கனடாவின் குடிவரவுத் திணைக்களம் அதனை நிராகரித்தது. ஆனால் தற்போது எவ்வாறு இவருக்கு கனடிய விசா வழங்கப்பட்டுள்ளது.

எனவே இந்த விடயத்தை கனடிய குடிவரவு அமைச்சரிடம் கேள்வியாகக் கேளுங்கள். கனடாவின் பாராளுமன்றக் கூட்டங்கள் தற்போது நடைபெற்றுவருகின்றன.

எனவே கேள்வி நேரத்தில் கருணாவின் கனடியப் பயணம் தொடர்பான கேள்விகளை எழுப்புங்கள் இவ்வாறு மேற்படி தமிழ் அன்பர்கள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜிம் கரிஜியானிஸ் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்தி்-கனடா உதயன்

http://www.seithy.co...&language=tamil

Minister of External Affairs

Hon. John Baird P.C., M.P.

House of Commons

Ottawa Ontario

K1A 0A6

Dear Minister

I am forwarding you a copy of an email which I received from a concern and respected member of the Tamil Community.

It is been brought to my attention that Muraleetharan Vinayagamoorthy a member of the Sri Lankan Government might be visiting Canada and is holding consultations with Canadian Officials. There are serious allegations of Human Rights violations one could find on the internet on the above individual such as:

“Colonel Karuna was the LTTE head of the Eastern province in 1990, when between 113 police officers who surrendered to the group were subsequently massacred.When Colonel Karuna was part of the LTTE, he was also implicated in the massacre of Muslims, including the Kattankudy and Erovar massacres in the eastern province. According to Sri Lankan military intelligence sources, "Karuna was not in the East province but in the Wanni during the time of the attacks on Kattankudy and Eravur Muslims. He was however intercepted giving orders to his cadres in the East in relation to various activities."

I am looking for verification if he is here in Canada. If he is indeed in Canada how did he obtain a visitor visa, why when there are serious allegations against this individual was he able to obtain a visa, what steps is your Government taking to remove him form Canada?

As this is an urgent matter it requires immediate action.

Hon. Jim Karygiannis P.C., M.P.

Scarborough-Agincourt

CC: Minister Jason Kenney

Citizenship, Immigration and Multicultularism

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

ராதிகா அவர்களும் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணா கனடா வந்ததற்கான தடயங்களும், ஆதாரங்களும் உறுதிசெய்யப்படவில்லை. கிளப்பிவிடப்பட்ட வதந்தியை வைத்து அரசியல் லாபம்தேடும் நபர்கள் இவ்விடயத்தை முதலில் உறுதிசெய்யாமல் எழுந்தமானத்தில் செயற்பட்டுள்ளார்கள். இது வருங்காலத்தில் எதையும் ஆணித்தரமாகக் கேட்கமுடியாத நிலையை உருவாக்கும். வந்ததென்று கூறப்படும் காலமும் பிழையானதே.

விடயத்தை முதல் ஆதாரப+ர்வமாக உறுதிப்படுத்துங்கள். பின் செயல்படுங்கள். அரசியல் லாபம்தேட முயற்சிக்காதீர்கள். பின்னர் தேர்தல் வரும்போது கருயா கனடா வந்ததை ஆட்சேபித்து முதல் முதல் கனடிய அரசாங்கத்தைக்கேட்டவர் என்று வாக்கு வங்கியை அபகரிக்கும் எண்ணமோ?

கருயா கனடா வந்திருந்தால் கருணாவின் கனடிய தமிழ் ஆதரவாளர்கள் அதை வெளிப்படுத்தியிருப்பார்கள். எனவே இது ஒரு கட்டுக்கதை

மேலே உள்ள செய்தி உண்மையா என உறுதிப்படுத்த முடியாவிட்டாலும் இவ்வாறான நடவடிக்கைகளில் சிங்களம் ஈடுபடலாம் என்பது உண்மை. அதற்கேற்ப எமது நடவடிக்கைகளும் அமையவேண்டும்.

களத்தில் எல்லாம் அறிந்த ஞான பண்டிதர்கள் ஏன்தானோ அகுதாவின் இந்த கருத்துக்கு இன்னும் ஒரு கருத்தும் எழுதவில்லை.

கருணா விவகாரம்! இலங்கையின் முன்னைநாள் தூதுவரும் இணைந்தே வந்தார்?

[ வெள்ளிக்கிழமை, 06 சனவரி 2012, 04:28.10 PM GMT ]

karuna1.jpgகருணாவே தனது விஜயம் பற்றிய செய்தியை மறுக்காத நிலையில், கனடாவில் சிறீலங்கா அரசை ஆதரித்து மறைமுகமாகச் செயற்பட்டு வரும் சக்திகள் கருணா கனடாவிற்கு வரவில்லை என்று பச்சோந்தித்தனமான செய்திகளை வெளியிட்டு மக்களைத் திசை திருப்பி வரும் நிலையில் கருணாவின் விஜயம் தொடர்பாக மேலதிக தகவல்கள் தெரியவந்திருக்கிறது.

கனடிய அரசோ, அதிகாரிகளோ இன்னமும் உத்தியோகபூர்வமாகக் கருத்துத் தெரிவிக்காத நிலையில், இன்றைய தினம், “கருணா கனடா வரவில்லை! கனடா மறுத்துள்ளது!” என்று மகுடமிடப்பட்டு பிரமையாக வெளியிடப்பட்ட இச் செய்தியின் பின்னணியில் உளவு முகவர்களின் பங்கு, குறிப்பாக சிறீலங்காவின் வெளியுறவுத்துறை சார்ந்த உளவுப்பிரிவின் பங்கு, பிரதானமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

பொதுவாக இந்த வகையான பயணங்கள், நாடுகளின் உளவுப் பிரிவுகள் மற்றும் இராஜதந்திர வட்டங்களினூடக நடைபெறும் சம்பவங்கள் வெளியே தெரியாமலிருக்க அவர்களிற்கு முகவர்களாக வேலை செய்பவர்களின் மூலம் பூசி மெழுகி மறைக்கப்படும் வழமை உலகில் உள்ளது. அது போலவே கருணாவின் வருகை தொடர்பான செய்தியை கருணா வரவேயில்லை என்ற வகையிலான செய்தியொன்று மிகவும் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது.

கனடாவிற்கு கருணா வந்தார் என்ற தகவலை எமது ஊடகவியளாலரின் கவனத்திற்கு கொண்டு வந்த நபர் கடந்த காலங்களில் பரிமாறிய தகவல்கள்; யாவுமே செய்திகளாக்கப்பட்ட போது அவை நூறு விழுக்காடு உண்மைத் தன்மையுடையனவாகவே இருந்தன.

அந்தவகையில் 2011ன் இறுதியில் இடம்பெற்றதாகக் கருதப்படும் கருணாவின் இந்த விஜயத்தின் போது சிறீலங்கா ஜனாதிபதியின் மிக நெருங்கிய ஆலோசகராகவும், ஐரோப்பிய நாடொன்றிற்கான முன்னைநாள் தூதுவராகவும் உள்ள பிரதானி ஒருவர் கனடாவில் இருந்ததாக மிகவும் நம்பகரமாகத் தெரியவருகிறது.

இந்நிலையில் கனடாவிற்கு கருணா வரவேயில்லை என்று வெளியிடப்பட்ட செய்தியில் கருணா கொழும்பில் நின்றார், மட்டக்களப்பில் இருந்தார் என கருணாவைப் போற்றி புகழ்ந்து பாடியதோடு மாத்திரமல்லமால் கருணா கனடா வந்தார் என்ற செய்தியைக் கேட்ட கன்சவேட்டி பாராளுமன்ற உறுப்பினர் வாய் விட்டுச் பெரிதாகச் சிரித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளதானது கனடியத் தமிழ் மக்களைத் திசை திருப்பும் வகையிலும், கனடியப் பாராளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சரிடம் எழுத்து மூலம் விளக்கம் கோரி நிற்கும் லிபரல் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜிம் கரிஜியானிஸைக் கொச்சைப்படுத்தும் வகையிலுமே திட்டமிட்டுத் திரிபுபடுத்தி வெளியிடப்பட்டுள்ளது.

அத்தோடு பெயர் குறிப்பிட விரும்பாக ஒரு கனடிய அதிகாரி இந்தச் செய்தியை மறுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ள அந்த விசமப் பிரச்சாரம் தமிழ்த் தேசியத்தை உளமார நேசிக்கும் மக்களை ஊடறுக்கும் பணிக்காக சிறீலங்காவின் நியமிக்கப்பட்ட ஒருவரால் “மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்” முடிச்சுப் போட முனையும் ஒரு விசமத்தனமான செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது.

தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவானவர் போன்று செயற்படும் ஒரு நபரே கருணாவிற்காக இப்போது வக்காளத்து வாங்கும் செய்தியை வெளியிட்டு கனடாவிற்கு கருணா வரவில்லை என்று செய்தியை வெளியிட்டிருக்கிறார். இவரே முள்ளிவாய்க்கால் அவலத்தின் போது அங்கே அப்படியொன்றும் நடக்கவில்லை 15,000 போராளிகள் காட்டுக்குள் இருக்கிறார்கள்.

வன்னி முழுவதும் மீண்டும் இராணுவத்திடமிருந்து கைப்பற்றப்படும் என கனடாவிலுள்ள தமிழ்த் தேசிய ஊடகங்களினூடாக மக்களைத் திசை திருப்பிப் ஈழத்தின் பேரழிவிற்கு பிரதான காரணியாக இருந்தவர் என்று நம்பப்படுகிறது.

கனடாவில் தமிழ்மக்களை மையப்படுத்தி இடம்பெற்று வரும் சம்பவங்களை மக்களின் கவனத்திற்கு கொண்டுவருவதே ஊடகங்களின், ஊடகவியலாளர்களின் கடமை. ஆனால் அவற்றின் நம்பகத்தன்மைய தெரிவிக்க வேண்டிய பொறுப்பு கனடிய அரசிற்கும், சம்பந்தப்பட்ட நபருக்கு இருக்கிறது.

இந்த இரண்டு தரப்பையும் தவிர கனடாவையும், கருணாவையும் துணைக்கு வைத்துக் கொண்டு செய்தி புனைவது தமிழ்த் தேசியத்திற்கு எதிரான செயற்பாடாகவும், கருணாவிற்கு ஆதரவான செயற்பாடாகவுமே அமையும்.

உத்தியோகபூர்வ மறுப்பு கனடாவில் வெளியிடப்படும் பட்சத்திலேயே இந்தச் செய்தியின் உண்மைத் தன்மை தெரியவரும். பாராளுமன்ற உறுப்பினர் ஜிம் கரிஜியானிஸின் கையிலே இந்த விவகாரம் தங்கியுள்ளது.

தமிழர்களிற்கு எதிரான ஒரு விவகாரம் 2011 டிசம்பரில் கனடாவில் அரங்கேறியுள்ளது என்பது உண்மை. அதில் கருணாவின் பங்கு பற்றிய விவகாரம் பற்றிய உண்மையை காலமே வெளிக் கொணர வேண்டும்

http://tamilwin.com/...e43oQj3023PLI32

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.