Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தமிழர்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்கு இந்தியா சிந்திக்க வேண்டும்: பார்த்தசாரதி

Featured Replies

இலங்கைத் தமிழர்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்கு இந்தியா சிந்திக்க வேண்டும்: பார்த்தசாரதி

இலங்கைத் தமிழ் மக்களின் புனர்வாழ்வுக்கான நிலையான தீர்வுக்காக இலங்கையிலுள்ள தமிழ் மக்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்த வேண்டியதைப் பற்றி இந்தியா ஆலோசிக்க வேண்டுமென முன்னாள் இந்திய இராஜதந்திர உத்தியோகத்தரான ஜி.பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

இலங்கையுடனான அனுபவங்கள் இந்திய அமைதிப்படையும் அதற்கப்பாலும் என்னும் தலைப்பில் கருத்தரங்கொன்றில் பேசியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இதற்காக வடக்கு, கிழக்கில் கைத்தொழில் பயிற்சி மற்றும் பொறியியல் நிறுவனங்களை அமைக்க வேண்டுமெனவும் ஜி.பார்த்தசாரதி குறிப்பிட்டுள்ளார். இதனால் இப்பகுதிக்கும் தமிழ் நாட்டுக்கும் பொருளாதார ஒன்றிணைவு ஏற்படுமென்றும் இது தனித்து தமிழர்களுக்கு மட்டுமன்றி இலங்கையில் யாவருக்கும் நன்மையளிக்குமென்றும் ஜி.பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

1987ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தம் பற்றி கருத்துத் தெரிவித்த ஜி.பார்த்தசாரதி, இந்திய அமைதிப்படை சமாதானத்தை பேணும் அதேவேளை புலிகளுடன் போராட வேண்டியிருந்ததால் ஒரு இக்கட்டான சூழலில் செயற்பட்டதாகவும் கூறினார். இரண்டும் தரப்பினருமே அத்துமீறலில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலட்சிய பிடிப்போடு ஈவிரக்கமின்றி செயற்பட்டதெனவும் தலைவரின் வார்த்தையே சட்டமாக இருந்ததெனவும் கூறிய அவர், வீரம் இருந்தளவுக்கு அவர்களுக்கு தூரப்பார்வை இருக்கவில்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை மீறல் தொடர்பில் இலங்கையை கண்டிப்பதில் பிரயோசனம் இல்லையெனவும் அவர் கூறினார். இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் இந்தியாவை ஆதரிக்கலாம். ஆனால் அமெரிக்கா ஒரு நிலைப்பாட்டில் இல்லை. பீஜிங், இஸ்லாமிய நாடுகள் ஏன் முழு ஆசிய நாடுகளுமே மனித உரிமை தொடர்பில் இலங்கையைத் தண்டிக்கும் எந்த நடவடிக்கையையும் எதிர்க்குமெனவும் அவர் கூறினார்.

http://www.tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/34064-2012-01-09-07-25-21.html

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழ் மக்களின் புனர்வாழ்வுக்கான நிலையான தீர்வுக்காக இலங்கையிலுள்ள தமிழ் மக்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்த வேண்டியதைப் பற்றி இந்தியா ஆலோசிக்க வேண்டுமென முன்னாள் இந்திய இராஜதந்திர உத்தியோகத்தரான ஜி.பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

இவங்களின் பழக்கமே இதுதான் பதவியில் இருக்கும்போது எதுவும் பேசமாட்டங்கள் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பே அது செய்யவேணும் இது புடுங்கவேனும் என்பார்கள் இதை சொல்லி என்ன பயன்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் ராஜதந்திரிகளின் கருத்துகளை உள்வாங்கி எமது அடுத்தகட்ட நகர்வுகளில் ஈடுபடுவது தப்பில்லையே..........

  • தொடங்கியவர்

பொதுவாக ஆட்சியில் இருக்கும் பொழுது பல அதிகாரிகளாலும் 'நல்லதை' செய்யமுடிவதில்லை, அதற்கு முழுமையான சுதந்திரமும் அதிகாரமும் இல்லை. மேலிடத்து கொள்கைகளை அமுல்படுத்தும் அதிகாரிகளாகவே இருந்துவிடுகிறார்கள்.

தற்கால கொலைவெறி ஹிந்திய அரச பயங்கரவாதிகள் யதார்த்தத்தை அறிந்த பார்த்தசாரதி போன்றவர்களின் கருத்துக்களை உள்வாங்க மாட்டார்கள்.

மேலும் பார்த்தசாரதி அவர்கள் தமிழர்கள் பொருளாதார ரீதியாக தம்மைத் தாமே வளப்படுத்தும் ஆற்றல் உள்ளவர்கள் என்பதை அறிந்து கொள்வது நல்லது.

தமிழர்களின் தேவை, தமது பொருளாதார வளங்களை தாமே நிர்வகித்து, தாமே மேம்படுத்தி, சிங்கள - ஹிந்திய - ஏனைய காட்டுமிராண்டிகளின் சுரண்டல்களில் இருந்து தம்மைத் தாமே பாதுகாக்கும் பொறிமுறையை ஏற்படுத்திக் கொள்வதே!

  • தொடங்கியவர்

இன்று இலங்கை தீவில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஒரு பொருளாதார சந்தைப்போட்டி நடக்கின்றது.

- வாகனங்கள் (துவிச்சக்கரவண்டி , உந்துருளி, மோட்டார் வண்டிகள், வாசு வண்டிகள்...)

- மின்சாரம் / எரி பொருள் துறை

- நிர்மாணத்துறை ( துறைமுகம், கட்டிடம் ..)

இவை அனைத்திலுமே உண்மையான முதலீடு இல்லை, மாறாக சுரண்டலே அதிகமாக உள்ளது.

திறமையான ராஜதந்திரி. இந்திரா காந்தி மாதிரி செயல்திறன் உள்ளவரால் பதவில் அமர்த்தப்பட்டவர்.J.R.உடன் பணமோசடி பாதுக்காப்பு ஒப்பந்தகளில் ஈடுபடுவதற்காக ரஜீவ் இவரை பதவிலிருந்து நீக்கினார். ரஜீவ் காந்தி பாதுகாப்பு தொடக்கம் சகலதிலும் ஊழலை விதைக்க ஆரம்பித்தார். இவர் பதவிலிருந்திருந்தால் இன்றைய இந்தியாவின் களுத்தைச் சுற்றிய முத்துமாலை என்ற சுருக்குக் கயிறு வந்து விழுந்திருந்திருக்காது.

எதற்கும் இப்போது அரசியல் தொடர்புகள் அறுந்து போய்விட்டதால் இந்திய என்ற குரங்குக்கு புத்திமதிகள் சொல்லாம் என்று நினைக்கிறார். கடைசிநாட்களில் தனது சொந்த விட்டில் குடியிருக்கட்டும். இத்தாலிக்கும் மலையாளத்தாருக்கும் புத்திமதி சொல்ல போய் தூக்கணாங்குருவி மாதிரி தன் கூட்டையும் இழந்துவிடுவார். இந்தியாவுடன் பாலா அண்ணை சமாதனம் செய்யலாம் என்று நினைத்ததால் புலிகள் இந்தியாவிடமிருந்த்து தம்மை பாதுகாக்க ஆயத்தங்கள் செய்ய வில்லை.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமை மீறல் தொடர்பில் இலங்கையை கண்டிப்பதில் பிரயோசனம் இல்லையெனவும் அவர் கூறினார். இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் இந்தியாவை ஆதரிக்கலாம். ஆனால் அமெரிக்கா ஒரு நிலைப்பாட்டில் இல்லை. பீஜிங், இஸ்லாமிய நாடுகள் ஏன் முழு ஆசிய நாடுகளுமே மனித உரிமை தொடர்பில் இலங்கையைத் தண்டிக்கும் எந்த நடவடிக்கையையும் எதிர்க்குமெனவும் அவர் கூறினார்.

http://www.tamil.dai...9-07-25-21.html

இதுதான் கொஞ்சம் இடிக்குது..! :rolleyes:

  • முதலில் நம்பியார் இருக்கிறார்.. ஒன்றுமே ஆகாது என்றார்கள்..! நிபுணர்குழு அமைக்கப்பட்டது..
  • பிறகு நிபுணர்குழு அறிக்கை வராது.. இந்தியா விடாது என்றார்கள்..! அறிக்கையும் வந்தது..
  • பிறகு அறிக்கையை வெளியிடமாட்டார்கள் என்றார்கள்.. அதுவும் வெளிவந்தது..
  • பிறகு நல்லிணக்க ஆணைக்குழுவை வைத்து சமாளிப்பார்கள் என்றார்கள்..! அதுவும் பிசுபிசுத்தது..

இப்பிடி எத்தினையோ.. இவர் யாரோ சொல்லச்சொன்னதை சொல்லுவதுபோல இருக்கு..! :wub:

மொத்தத்தில் நடக்காது என்பார்கள் ஆனால் நடந்துவிடும் என்கிறீர்கள், சரி பார்ப்போம் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.