Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருஷ்ணா! என்ன சொல்லப்போகிறார்.

Featured Replies

நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியாவின் மௌனம் கலைந்துள்ளது. இலங்கையை எவ்வாறு கையாள்வது என்பதே டில்லிக்கு காணப்பட்ட மிகப்பெரிய சவாலாகும். ஏனெனில் இலங்கை அரசாங்கம் அண்மைக்காலமாக கடும் போக்குடனும் தமது தீர்மானங்களில் உறுதியுடனும் உள்ளது. அத்தோடு உள்நாட்டில் சீனாவை உள்வாங்கிக் கொண்டு மிக நெருங்கிய உறவைக்கட்டியெழுப்புவதுடன் மறுபுறம் இந்தியாவையும் தன்னுடன் அணைத்துக் கொண்டு மிகவும் நுட்பமான முறையில் அழுத்தங்கள் வரக்கூடிய வாயில்களை இலங்கை அரசு மூடிவிட்டுள்ளது.

இந்தியாவை பொறுத்தவரையில் மிக நீண்ட நாட்களாக சீனாவுடன் வெளிப்படாதவகையில் பனிப்போர் ஒன்றை முன்னெடுத்து வருகின்றது. இரு நாடுகளுமே தமது முரண்பாடுகளை நேரடியாகவோ வெளிப்படையாகவோ காட்டிக் கொள்ளா விட்டாலும், முரண்பாடுகள் காணப்படுகின்றமை ஊர் அறிந்த உண்மையாகும். இதனால்தான் தமது நாடுகளின் எதிர்கால வியூகங்களை மையப்படுத்தி இந்தியாவும் சீனாவும் இலங்கைக்கு போட்டிபோட்டுக் கொண்டு உதவிகளைச் செய்கின்றன.

எவ்வாறாயினும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் காணப்படுவது மிக அந்நியோன்யப்பட்ட உறவாகும். இலங்கை 1948ஆம் ஆண்டில் சுதந்திரம் அடைந்ததன் பின்னர் இலங்கையில் தமிழ் மக்களுக்கும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டுமென்ற நோக்குடனான போராட்டங்கள் மெதுவாக தலைதூக்க ஆரம்பித்தன. இக் காலம் தொட்டே இந்தியா இலங்கை விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தி வந்தது. இதன் பிரதிபலனாக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பல்வேறு ஒப்பந்தங்களும் கைச்சாத்தாகின.

இதில் ஒன்றுதான் 1987ஆம் ஆண்டின் இலங்கை இந்திய ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தின் ஊடாக தமிழ் மற்றும் சிங்கள இன முரண்பாட்டை தவிர்க்க மாகாணசபைக்கு அதிகாரம் வழங்கக்கூடிய வகையிலான 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இது நாட்டின் தேசிய பிரச்சினைக்கான தீர்வாக அப்போது தொட்டே தமிழ்சிங்கள தலைமைத்துவங்கள் பரஸ்பரமாக ஏற்றுக் கொண்டாலும் மாகாண சபைக்கு பொலிஸ் மற்றும் காணி உள்ளிட்ட முக்கிய அதிகாரங்களை வழங்குவதில் காலா காலமாக ஆட்சி நடத்திய அரசாங்கங்கள் விரும்பவில்லை.

இதனால், தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக 13ஆவது திருத்தச் சட்டம் அரசியலமைப்பில் காணப்பட்டாலும் அதன் நடைமுறைப்படுத்தல் ஏற்றுக் கொள்ளப்படாத விரும்பாத நிலையாகவே காணப்பட்டன. இந்நிலையே இன்றும் தொடர்ந்து நாட்டில் காணப்படுகின்றது. கடந்த முப்பதாண்டு காலமாக நாட்டில் பாரிய அழிவுகளை ஏற்படுத்திய இனவாத யுத்தம் முடிவடைந்துள்ள நிலையிலும் அதன் முரண்பாட்டிலிருந்து விலக முடியாத நிலையே காணப்படுகின்றது. இலங்கையின் தற்போதைய சூழலானது நிலையான சமாதானத்திற்கானதும் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கானதுமான சிறந்த சூழலாகவே அனைத்து தரப்புகளாலும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதனையே இந்தியா உள்ளிட்ட ஏனைய சர்வதேச நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. யுத்தம் முடிவடைந்தன் பின்னர் இலங்கை விவகாரங்களில் இந்தியா ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தலையிடவில்லை. தமிழகம் இலங்கை தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து கடுமையாக முற்படுகையில் டில்லி சாக்குப்போக்கு கூறியே வந்தது. இதற்கு டில்லிக்கும் இலங்கை அரசிற்கும் இடையில் நடைபெற்ற இணக்கப்பாடுகளே பிரதான காரணமென இராஜதந்திர வட்டாரங்கள் கூறியிருந்தன. எவ்வாறாயினும் தற்போது டில்லியின் மௌனம் கலைக்கப்பட்டுள்ளதாக தெரியப்பட்டாலும் அந்நிலையில் சந்தேகங்களும் தோன்றுகின்றது. இதற்கு பல காரணங்களை கூறலாம். குறிப்பாக இலங்கை அரசு தற்போது கடைப்பிடிக்கும் கடும் போக்கினை பிரதான காரணமாக கொள்ளலாம்.

அதிகாரப் பகிர்வு தொடர்பாக இலங்கை உறுதிமொழி வழங்கியுள்ளதாக இந்தியா கூறினாலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் அரசியல் தீர்வில் இடம்பெறாது என்றும் 13ஆவது திருத்தச் சட்டத்திலிருந்து அவ்விரு அதிகாரங்களையும் ரத்துச் செய்வதற்கான புதிய திருத்தச் சட்ட மூலம் ஒன்றை கொண்டுவர உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே வெளிவிவகார அமைச்ர் எஸ்.எம்.கிருஷ்ணாவை இந்தியா இலங்கைக்கு அனுப்புகின்றது. வெளிப்படையாக இந்தியாவின் மத்தியஸ்தத்துடன் இடம்பெறும் வடக்கு மற்றும் கிழக்கு புகையிரத வீதிகள் உட்பட ஏனைய அபிவிருத்தி பணிகளை ஆராயவே கிருஷ்ணா இலங்கை வருவதாக இந்தியாவும் இலங்கையும் மாறிமாறிக் கூறிக் கொண்டாலும் அதற்கு அப்பால் சென்ற விடயங்கள் பேசப்படவும் ஆராயப்படவும் உள்ளதாகவே உள்நாட்டின் பல தரப்புகளும் சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்ர் பேராசிரியர் ஜி.எல். பீரீஸ் அண்மையில் இந்தியா சென்றிருந்தபோது அந்நாட்டு வெளிவிவகார அமைச்ரான எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் இணைந்து கூட்டறிக்கையொன்று வெளியிட்டிருந்தார்.

இதில் அரசியல் தீர்வு குறித்து மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்குவது மற்றும் 13ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்துவது போன்ற முக்கிய விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன. இதனால் இலங்கையில் பெரும் குழப்பகரமான சூழலும் தோன்றின. இவ்வாறு இந்தியா தொடர்ந்தும் இலங்கை மீது 13ஆவது திருத்தச் சட்டத்திலான அரசியல் தீர்வொன்றுக்கு நகருமாறு கூறுகையில், உள்நாட்டில் அவை பாரிய விமர்சனங்களுக்கு உள்ளாகின்றன. இந்நிலையே இன்றும் தொடர்கின்றது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் கிருஷ்ணாவின் வருகையானது எவ்வகையான மாற்றங்களை ஏற்படுத்தப் போகின்றது என்ற எதிர்பார்ப்புடனேயே தமிழ் மக்கள் உள்ளனர். இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளாகும். அதிலும் இந்தியாவின் மத்திய வெளிவிவகார அமைச்ர் எஸ்.எம்.கிருஷ்ணா அடுத்த வாரத்தில் இலங்கை வரவுள்ளார்.

அச்ந்தர்ப்பத்தில் தான் அரசிற்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவுள்ளன. அதாவது எதிர் வரும் 16ஆம் திகதி அல்லது அதற்கு ஓரு தினங்களுக்கு முன்பு இந்திய வெளிவிவகார அமைச்ர் எஸ்.எம். கிருஷ்ணா இலங்கை வந்து விடுவார். அதற்கு அடுத்த தினங்களான 17, 18 மற்றும் 19 ஆகிய தினங்களில் கூட்டமைப்பு மற்றும் அரசிற்கு இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.

இப்பேச்சு வார்த்தைகளில் பெரும்பாலும் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் தொடர்பாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில் அரச தரப்பின் சிரேஷ்ட அமைச்ர்கள் சிலர் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பாக அரசு பேசத்தயார் என ஊடகங்கள் வாயிலாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் இந்தியா ஏற்கனவே தெரிவித்துள்ளதன் பிரகாரம் அதிகாரப் பகிர்வு அல்லது 13ஆவது திருத்தச் சட்டத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இலங்கை வழங்கியுள்ள உறுதிமொழிகள் உண்மையெனில் அதன் வெளிப்பாடுகள் தெரியவரும் நிலையும் உள்ளது.

எவ்வாறாயினும் இந்திய வெளிவிவகார அமைச்ர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் வருகையினால் எந்தளவிற்கு மாற்றங்கள் ஏற்படப்போகும் என்றும் கூற இயலாது. ஏனென்றால் இலங்கையின் நகர்வுகள் முன்பைவிட பாரியளவில் மாற்றமடைந்துள்ளன. இந்நிலையில் இந்தியாவின் தூது எந்தளவிற்கு சாத்தியப்படும் என்று கூற முடியாது.

உள் நாட்டிலும் இந்தியாவின் தலையீடு தொடர்பாக பலத்த எதிர்ப்புகள் வெளிவந்த வண்ணமே உள்ளது. அதேபோன்று தேசிய அரசியலில் வடக்கு கிழக்கை மீள இணைப்பது மற்றும் மாகாண சபைக்கு முழு அதிகாரங்கள் வழங்குவது எந்தளவிற்கு சாத்தியப்படும் என்றும் கூற இயலாது. அரசாங்கம் இந்தியாவின் ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டு தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நிலையிலிருந்து முற்றாக மாறிவிட்டுள்ளது. இலங்கையில் இனப்பிரச்சினை என்று ஒன்றும் இல்லை என்றளவிற்கு கருதுக்கள் வெளிப்பட ஆரம்பித்துள்ளன.

தீர்வுக்கான முக்கியத்துவம் வெளிப்பட்டப்@பாதிலும் அதற்கான நகர்வுகள் மிகவும் மந்தகதியிலேயே உள்ளன. இந்நிலையில் இந்தியாவின் விருப்பம் மத்திய வெளிவிவகார அமைச்ர் எஸ். எம். கிருஷ்ணாவின் இலங்கை விஜயம் எந்தளவிற்கு தமிழர் பிரச்சினையை ஈடு செய்யப்போகின்றது என்பது தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும். எதிர்வரும் நாட்கள் இலங்கைக்கு மிகவும் முக்கியமானதான ஒன்றாகவே அமையப்போகின்றது.

ஏனென்றால் அரசியல் தீர்விற்கான அழுத்தங்கள் சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அதே போன்று இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விவகாரம் மற்றும் மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேகம் மீண்டும் தலையிடக் கூடிய வகையிலான சூழலும் காணப்படுகின்றது.

எனவே, நாட்டின் முன் உள்ள சூழல் நாம் எதிர்பார்ப்பது போல் அல்ல என்பதே உண்மை. அரசியல் தீர்விற்கான நகர்வுகள் காலகாலமாக முக்கியத்துவம் பெற்றிருந்தாலும் அதன் எல்லைகளை அணுகுமுறைகளை சம்பந்தப்பட்ட தரப்புகள் அடையவில்லை. அவ்வாறு அடைந்திருந்தால் இன்று அரசியல் தீர்வு குறித்தோ, தேசிய இனப் பிரச்சினை குறித்தோ பேச வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. யுத்தம் முடிந்ததன் பின்னர் நாட்டில் நிலையான மாதானம் உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு மிகவும் முக்கியமான விடயமாகும்.

இத் தீர்விலேயே நாட்டின் ஏனைய அபிவிருத்தி துறைகளும் தங்கியுள்ளன. இம்முறை இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய மத்திய வெளிவிவகார அமைச்ர் எஸ்.எம். கிருஷ்ணா இலங்கைக்கும் இந்தியாவிற்கும் என்ன சொல்லப் போகின்றார்? வழமைப்போல் இலங்கை அரச உறுதிமொழி அளித்துள்ளது என்று காலத்தை சமாளிக்க பதிலளிப்பாரா? அல்லது அரசுக்கான அழுத்தங்களை பிரயோகிப்பாரா என்ற கேள்விகள் அனைத்து தரப்புகளினதும் இதயங்களில் உதித்துள்ளன.

--லியோ நிரோஷ தர்ஷன்---

http://akkinikkunchu.com/new/

இலங்கையின் வெளிவிவகார அமைச்ர் பேராசிரியர் ஜி.எல். பீரீஸ் அண்மையில் இந்தியா சென்றிருந்தபோது அந்நாட்டு வெளிவிவகார அமைச்ரான எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் இணைந்து கூட்டறிக்கையொன்று வெளியிட்டிருந்தார். இதில் அரசியல் தீர்வு குறித்து மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்குவது மற்றும் 13ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்துவது போன்ற முக்கிய விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன. இதனால் இலங்கையில் பெரும் குழப்பகரமான சூழலும் தோன்றின.

கிருஸ்ணாவுடனான பழைய சந்திப்பை இங்கே வெளிவிடுவதைப் பார்த்தால் இலங்கை அரசுக்கு அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டிய கடமை இருப்பதாக ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்துகிறது. இந்த 13ம் திருத்தமே ரஜீவுடன் செய்த ஒப்பந்தமொன்றிலிருந்துதான் வருகிறது. இரண்டு நாட்டுத் தலைவர்களும் இலங்கை வந்து கையெழுத்திட்ட அந்த ஒப்பந்ததிற்கு என்ன ஆயிற்று என்று கேட்க இந்தியாவுக்கு வக்கில்லை. இப்போ சிங்கள அடிமை பீரிசும், தடுமாற்றக்காற கிறுஸ்ணாவும் கையெழுத்திட்ட அறிக்கையை பற்றி எதோ இந்தியாவால் செய்துவிடமுடிமா?.

முன்பெல்லாம் போல அல்லாமல் இப்பொழுது வரும் பயணம் நான்கு நாட்கள் என நீடிக்கின்றது!

தமிழரின் ஆயுத போராட்டத்தையும் அதற்கு தார்மீக ஆதரவை தந்த ஈழ மக்களையும் அழிக்கும் இனப்படுகொலையின் போது சிங்களம் அடிக்கடி டெல்லி சென்று வந்தது. இன்று, டெல்லி கொழும்புக்கு அடிக்கடி வருகின்றது. ஏன்??

டெல்லி கையில் ஒரு துரும்பும் இல்லாமல் நிற்கிறது, அது சிங்களத்திற்கும் தெரியும். இல்லை இருக்கும் சர்வதேச போர்குற்ற விசாரணையை ஆதரிக்கவேண்டும் அதையும் முன்னெடுக்க தயக்கம்.

இப்படியே போனால் எதில் முடியும் இந்திய தூர நோக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

கிருஷ்ணா! என்ன சொல்லப்போகிறார்.

அப்படியென்ன புதிதாக சொல்லப்போகிறார் இந்த முறையும் கீதோபதேசம் தான் ...

  • கருத்துக்கள உறவுகள்

கிருஷ்ணா! என்ன சொல்லப்போகிறார்.

சுரைகாய் கறியில உப்பு இல்லன்னுதான்.. சும்மா டமாஸ் பண்ணாதீங்கப்பா... :icon_mrgreen: :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.