Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெற்காசியப் பிராந்திய தலைவனான இந்தியாவே அரசியல் தீர்வுத் திட்டத்திற்கான அழுத்தத்தை கொடுக்க வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sumanasri_CI.jpg

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டப்பொதி தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொறுப்புவாய்ந்த அமைச்சர்கள் டில்லிக்கு வழங்கிய உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தவேண்டிய கடப்பாடு தெற்காசியப் பிராந்தியத்தின் தலைவன் என்ற அடிப்படையில் இந்தியாவிற்கு உள்ளது. இந்தியா அவ்வாறு செய்யும் பட்சத்தில் ஆமை வேகத்தில் நகரும் அரசியல் தீர்வுப் பயணம் துரிதமடையக்கூடும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் பொருளாதார விவகாரங்களைக் கையாளும் சிரேஷ்ட பேராசிரியர்களுள் ஒருவரான சுமனசிறி லியனகே தெரிவித்துள்ளார்.

அதிகாரப்பகிர்விற்கு அரசுக்குள் இருக்கும் இனவாதிகள் சிலர் கடும் எதிர்ப்பை வெளியிடுகின்றனர். அவர்களின் கருத்துக்கமைய அரசு செயற்படுமானால் தேசிய அரசியல் என்ற கோட்பாட்டை மீறி, அது இனவாத அரசியல் போக்கையே கடைப்பிடிக்கின்றது என்றே அர்த்தம் என்றும் பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காணும்பொருட்டு அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சு நடைபெற்று வருகின்றது. இந்தப் பேச்சில் இரு தரப்புக்குமிடையில் ஓர் இணக்கப்பாடு எட்டப்படவேண்டும். அவ்வாறு எட்டப்படும் இணக்கப்பாட்டையே தெரிவுக்குழு பரிசீலிக்கவேண்டும். இதுவே யதார்த்தபூர்வமான அரசியலாகும்.

தீர்வு விடயத்தில் சம்பந்தப்பட்ட தரப்புக்கிடையில் இரட்டை நிலைப்பாடு இருக்கக்கூடாது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் தீர்வு என்ற விடயம் சாத்தியப்படாது. புரிந்துணர்வு இதயசுத்தி ஆகிய விடயங்கள் தீர்வுப்பேச்சில் முதன்மை வகிக்கும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

இனப்பிரச்சினைக்கான தீர்வுப்பொதி தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொறுப்புவாய்ந்த அமைச்சர்கள் இந்தியாவிற்கு உறுதிமொழிகளை வழங்கியுள்ளனர். 13ஆவது அரசமைப்புக்கு அப்பால் சென்று தீர்வு வழங்குவோம் என ஜனாதிபதியே கூறியுள்ளார்.

எனவே, டில்லிக்கு இவர்கள் வழங்கிய உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவது இலங்கை அரசை வலியுறுத்தவேண்டிய கடப்பாடு தெற்காசியப் பிராந்தியத்தின் தலைவர் என்ற அடிப்படையில் இந்தியாவிற்கு உள்ளது. அந்நாடு அவ்வாறு செய்யுமானால், ஆமை வேகத்தில் நகரும் அரசியல் பயணம் சாதகமானதொரு திசையை நோக்கிப் பயணிக்கக்கூடும் எனவும் லியனகே கூறியுள்ளார்.

அரசுக்குள் இருக்கும் இனவாதிகள் சிலர் அதிகாரப்பகிர்வை எதிர்க்கின்றனர். இவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு அரசு செயற்படுமானால் அது தேறிய அரசியல் என்ற கோட்பாட்டை மீறிச் செயற்படுகின்றது என்றே அர்த்தம்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளமை சரியானதொரு முடிவாகும் என்பதையே அரசியல் பாடம் எமக்கு உணர்த்தும் உண்மை. எதிர்க்கட்சிகளின் முடிவை அரசியல் சாணக்கியம் என்றும் கூறலாம்.

அரசு இதுவரை எத்தனைக் குழுக்களை அமைத்து, எத்தனை அறிக்கைகளைப் பெற்றுள்ளது? அவற்றின் மூலம் கண்ட பயன்தான் என்ன?அரசின் கபடத்தனம் காரணமாகத்தான் எதிர்க்கட்சிகள் இவ்வாறானதொரு முடிவை எடுத்துள்ளன. ஆய்வு ரீதியாகப் பார்க்கப்போனால் இது சரியானதொரு முடிவாகும்.

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் அதிகாரப்பகிர்வு என்ற விடயமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, அதிகாரப்பகிர்வை அரசு எதிர்க்குமானால், நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை புறந்தள்ளிவிட்டது என்றே எண்ணத்தோன்றும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்திய பின்னரே அரசு ஏனைய குழுக்களைப் பற்றி சிந்திக்கவேண்டும். அரசு அவ்வாறு செய்யும் பட்சத்தில் எதிர்க்கட்சிகள் உட்பட மக்களின் மனங்களையும் வென்றெடுக்கலாம் எனவும் பேராசிரியர் சுமனசிறி லியனகே குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

தெற்காசியப் பிராந்திய தலைவனான இந்தியாவே அரசியல் தீர்வுத் திட்டத்திற்கான அழுத்தத்தை கொடுக்க வேண்டும்

sri-venkateswara.jpg

ஏலு குண்டல வாடா கோயிந்தோ!! கோயிந்தோ!!!

இவர் அயல்நாட்டு பிச்சைக்காரக் காட்டுமிராண்டிகளை சிங்களப் பயங்கரவாதிகளின் ஏமாற்று வலையில் சிக்கவைக்க முயலுகிறார்.

ஏமாந்து போவது அயல்நாட்டு பிச்சைக்காரக் காட்டுமிராண்டிகளின் இரத்தத்தில் ஓடுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தீர்வு விவகாரத்தில் இனவாத அரசியலுக்கு இடமல்லை

sumanasiri-liyanage.jpgஇலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் வழங்கிய உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டிய கடப்பாடு தென்னாசியப் பிராந்தியத்தில் முதன்மைப் பாத்திரத்தை வகிக்கும் இந்தியாவுக்கு உண்டு என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் பொருளாதார விவகாரங்களைக் கையாளும் சிரேஷ்ட பேராசிரியர்களுள் ஒருவரான சுமனசிறி லியனகே தெரிவித்துள்ளார்.

‘இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் இந்தியாவுக்கு உறுதிமொழிகளை வழங்கியுள்ளனர்.

இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை வழங்குவோம் என இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே தெரிவித்துள்ளார்.

எனவே, புதுடில்லிக்கு இவர்கள் வழங்கிய உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கததுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டிய கடப்பாடு தென்னாசியப் பிராந்தியத்தில் முதன்மைப் பாத்திரத்தை வகிக்கும் இந்தியாவுக்கு உண்டு.

இந்தியா இவ்வாறு அழுத்தங்களைப் பிரயோகிக்குமானால் மந்தகதியில் இடம்பெற்று வரும் அரசியல் தீர்வைக் காண்பதற்கான பயணம் சாதகமான ஒரு திசையை நோக்கிப் பயணிக்கும்’ என சுமனசிறி லியனகே கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

‘தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கு இலங்கையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இனவாதக் கட்சிகள் சில கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

இத்தகையோரின் கருத்துக்களைக் கேட்டு இலங்கை அரசாங்கம் செயற்படுமானால் தேசிய அரசியல் என்ற கோட்பாட்டை மீறி, அது இனவாத அரசியல் என்ற அர்த்தத்தையே பெறும்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்தப் பேச்சுவார்த்தைகளில் இரு தரப்பினருக்கும் இடையில் ஓர் இணக்கப்பாடு காணப்பட்டு, அந்த இணக்கப்பாட்டை நாடாளுமன்ற தெரிவுக்குழு பரிசீலிக்க வேண்டும். இதுவே யதார்த்தபூர்வமான அரசியலாகும்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் சம்பந்தப்பட்ட தரபபினருக்கு இடையில் இரட்டை நிலைப்பாடு இருக்கக்கூடாது. அவ்வாறு இருக்குமாயின் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு சாத்தியப்படாது.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் புரிந்துணர்வு மற்றும் இதயசுத்தி என்பன முன்மையான பாத்திரத்தை வகிக்க வேண்டும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கு இலங்கையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இனவாதக் கட்சிகள் சில கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.

இவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இலங்கை அரசாங்கம் செயற்படுமானால், அது தேசிய அரசியல் என்ற கோட்பாட்டை மீறிச் செயற்படுவதாகவே அமையும்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வைக் காண்பதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை இலங்கையி பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளமை சரியானதொரு முடிவாகும் என்பதையே கடந்தகால வரலாறு எமக்கு உணர்த்துகின்றது. எதிர்க்கட்சிகளின் இம்முடிவை அரசியல் சாணக்கியம் என்றும் கூறலாம்.

இலங்கை அரசாங்கத்தின் கபடத்தனம் காரணமாகவே எதிர்க்கட்சிகள் இத்தகையதொரு முடிவை எடுத்துள்ளன. வரலாற்று ரீதியாகப் பார்க்கப் போனால் இது சரியானதொரு முடிவாகும்.

உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் அதிகாரப் பகிர்வு என்ற விடயமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, அதிகாரப் பகிர்வை இலங்கை அரசாங்கம் எதிர்க்குமானால், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இது புறக்கணித்துள்ளது என்றே எண்ணத்தோன்றும்.

உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திய பின்னரே இலங்கை அரசாங்கம் ஏனைய குழுக்களைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

இலங்கையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் அவ்வாறு செய்யும் பட்சத்தில் எதிர்க்கட்சிகள் உட்பட மக்களின் மனங்களையும் வென்றெடுக்கலாம்’ எனவும் பேராசிரியர் சுமனசிறி லியனகே மேலும் தெரிவித்துள்ளார்.மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.