Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மாணவர்கள் புலிப்பயங்கரவாதிகள்

Featured Replies

தமிழ் மாணவர்கள் புலிப்பயங்கரவாதிகள்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாராலும் இராணுவத்தினராலும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இன்று உயர்கல்வி அமைச்சர் யாழ் பல்கலைக்கழகத்திற்கு வருகை தரவிருந்த நிலையிலேயே இக் கெடுபிடி நடவடிக்கையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக ஆரம்ப நேரத்தில் இருந்து உயர்கல்வி அமைச்சர் பல்கலைக்கழகத்திற்குள் வரும் வரை பல்கலைக்கழகத்தில் உள்ள இரண்டு நுழைவாயில்களிலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் நின்று ஒவ்வொரு மாணவர்களாக சோதனைக்குட்படுத்தினர். மாணவர்களது பொக்கட் உட்பட மோட்டார் சைக்கிள் வரை சோதனையிடப்பட்டது. சோதனையின் பின்னரே அவர்களை உட்செல்லவும் அவர்கள் அனுமதித்தனர்.

இதுமட்டுமல்ல கைலாசபதி கலையங்கில் உயர்கல்வி அமைச்சுக்கும் முதலாம் வருட மாணவர்களுக்கும் நடைபெற்ற கலந்துரையாடலின் போதும் உட் செல்வதற்கிருந்த மாணவர்கள் ஒவ்வொருவரும் மீண்டும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

யுத்தம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் தமிழ் மாணவர்கள் அழுத்தங்களுடனேயே தமது கல்வியை தொடர்கின்றனர் என்பதற்கு இது ஒர் உதாரணமாகும்.

பல்கலைக்கழகம் பொலிஸாராலும் இராணுவத்தினராலும் நிரப்பப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.alaikal.com/news/?p=93588

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை கொழும்பில் நடந்த சம்பவம் ஒன்றை அடுத்து கொழும்பில் இருக்கும் பல்கலைக்கழகம் ஒன்றிற்கு வந்த சிறீலங்கா படையினரும்.. காவல்துறையினரும்.. உபவேந்தரின் அனுமதி பெற்று மட்டுமே உள்நுழைந்ததோடு.. ஆயுதம் தரித்த படையினர் பல்கலைக்கழகத்திற்கு வெளியில் நிற்க ஆயுதம் தரியாதவர்கள் மட்டுமே தமிழ் மாணவர்களை தேடித் தேடி சோதனை இட்டனர். அச்சோதனையின் போது.. அந்தப் பல்கலைக்கழகத்தில் நண்பர்களோடு மாட்டுப்பட்டு.. அப்புறம்.. பல சோதனைகளின் பின் வீடு வந்து சேர்ந்தது.. ஞாபகத்திற்கு வந்து போகிறது. அதேவேளை.. ஒரு குண்டு வெடிப்பை அடுத்து எங்களை எல்லாம் பத்திரமா வீடு வரை கொண்டு வந்துவிட்டிட்டு போன.. சில சிங்கள ஆசான்களையும் இந்த இடத்தில் நினைவு கூற வேண்டும். இருந்தாலும்.. சிங்கள மாணவர்கள் படிக்கும் பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்கள் மீதான சோதனைகள் யாழ்ப்பாணம்.. மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்படும் சோதனைகளிலும் வேறுபட்டது.. என்பதை இதன் மூலம் நாம் யதார்த்தமாக காண முடிகிறது.

இந்த சிங்களப் பயங்கரவாதியின் நிகழ்வை மாணவர்களும் பேராசிரியர்களும் புறக்கணித்திருக்க வேண்டும்.

மாணவ பேராசிரிய சங்கங்கள் குறைந்தது கண்டன அறிக்கைகளையாவது விடுவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக்கழக ஆரம்ப நேரத்தில் இருந்து உயர்கல்வி அமைச்சர் பல்கலைக்கழகத்திற்குள் வரும் வரை பல்கலைக்கழகத்தில் உள்ள இரண்டு நுழைவாயில்களிலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் நின்று ஒவ்வொரு மாணவர்களாக சோதனைக்குட்படுத்தினர். மாணவர்களது பொக்கட் உட்பட மோட்டார் சைக்கிள் வரை சோதனையிடப்பட்டது. சோதனையின் பின்னரே அவர்களை உட்செல்லவும் அவர்கள் அனுமதித்தனர்.

இமெல்டா அம்மா வாய் திறக்க மாட்டாவோ??.மாணவர்களிடம் ஏன் இப்படி கெடிபிடிகள் என டக்ளஸ் மாமாவும் ஒன்றும் கேட்க மாட்டாரா?.இவர்கள் தானே மகிந்த அரசுக்கு சாமரை வீசுபவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.